ஹத்தம் ஸ்பெஷல் : கூடு வருது பாருங்கடி!

நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் மர்ஹூம் சேத்தநானாவுடன் பாடியது…

Download Mp3

போனஸ் :

கவிஞர் இஜட். ஜபருல்லாவின் கவிதை , நண்பர் இதயதாசன் தொகுத்த கந்தூரி சிறப்பு மலரிலிருந்து…

நாகூரின் நாயகரே…!
நாதனொளி மெய்ச்சுடரே…
நம்பிவரும் மக்களுக்கு
நலமளிக்கும் தூயவரே…

பாகூறும் புகழனைத்தும்
பத்தியத்து வாழ்க்கையினால்
நாகூறும் நன்னெறியாய்
நாட்டுக்குத் தந்தவரே..!

“ஆதிபிதா ஆதத்தின்
வழிவந்த மக்கள் எல்லாம்
சோதரர்கள்” என்ற நபி
சொல்லுக்கு நிரூபணமாய்
சாதிமத இனபேதம்
சாய்த்த உங்கள் சமத்துவத்தால்
மேதினியே உங்களிடம்
தேடி வந்து சூழ்கிறது…!

MP3 : தொழுதிடுவோம் துன்பம் இல்லை… – சேத்தநானா

பள்ளியை இடித்துவிட்டால் எப்படித் தொழுவது? என்று கேட்காதீர்கள். இது ’சேத்தநானா’ என்று நாங்கள் செல்லமாக அழைத்த மர்ஹூம் M.காதர் அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடல்.  பர்வீன் சுல்தானாவை நாடும் பக்குவமுள்ளவரகள் இதைக்கேட்டு பரவசப்பட இயலாததுதான். என்ன செய்வது, பக்தி இருக்கிறதே… எந்த இஸ்லாமியர்கள் ‘உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்’ என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடுவதையும் உள்ளமுருக கேட்பார்களோ அவர்கள் மட்டும் இதைக் கேட்கட்டுமாக, ஆமீன்.  குறிப்பு : டிரம்ஸ் அடிப்பவர் அன்று வரவில்லையாதலால் பக்கத்திலிருந்த டேபிளில் ‘டண்டக்கடட்டக்’ என்று வாசித்திருக்கிறார்கள். அதுமட்டும்தான் சங்கடம் . மற்றபடி பாட்டு டாப்! – ஆபிதீன்

தொழுதிடுவோம் துன்பம் இல்லை…

***

நன்றி : அசனா மரைக்கார்

« Older entries