ஆகாசம் நீலநிறம் – விக்ரமாதித்யன்

கிழக்கு வந்து
கூப்பிட்டுப் போகும்;
சிந்திச் சீரழித்ததை
சேர்த்து விடலாமென்று
நம்பிக்கை தரும்;
நல்ல புத்தி சொல்லும்.

மேற்கு
கொஞ்சம் ஆறுதலாக
காத்திருக்கச் சொல்லும்;
“முடியாதென்றால்
போய்த் தொலை”யென்று கோபிக்கும்.

தெற்கு
மனத்துக்குள் நினைக்கும்;
”வரவேண்டிய இடந்தப்பி
போவதுதான் முடியுமோயினி”யென்று
நிச்சயத்துடன் எதிர்பார்த்திருக்கும்.

வடக்கு
திரும்பத் திரும்ப அழைத்து
தொந்தரவு செய்யும்;
“இப்போதைக்கு
என்னிடம் வந்து இரு”வென்று
கட்டாயப்படுத்தும்.

திசைமுடிவுக்கு
தெரிவதெல்லாம்
ஆகாசம்
நீலநிறம்.

– விக்ரமாதித்யன் [அம்மைக்கு]

**

நன்றி : விக்ரமாதித்யன் , தேடல் (ஜூன் 1978)

**

’முகவரி: மாறிக்கொண்டே இருப்பது’ என்று சொல்லும் அண்ணாச்சியின் ’குறுக்குத்துறை’யைப் பார்த்துவிட்டு கீழேயுள்ள சுட்டிகளை சொடுக்குங்கள். நன்றி.

அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்கு ஒரு திறந்த கடிதம் – பிரம்மராஜன்

விக்ரமாதித்யன் கவிதைகள் – சுகுமாரன்

விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன் 
எஸ்.ராமகிருஷ்ணன் 

விக்கிக்கு விளக்கு – ஜெயமோகன்

விக்ரமாதித்யன் கவிதைகள் – ஜ்யோவ்ராம் சுந்தர்

இலக்கில்லாத பயணம் –  வித்யாஷ‌ங்கர் கட்டுரை