TOTTO-CHAN : The Little Girl at the Window

டெட்சுகோ குயோயாநாகி  (Tetsuko Kuroyanagi) எழுதிய நூலின் தமிழாக்கமான ’ஜன்னலில் ஒரு சிறுமி’யை  இங்கே சென்று டவுன்லோட் செய்யலாம்.

***

View this document on Scribd

”போங்க போங்க போயி புள்ளைங்கள படிக்க வைங்க“

தொந்தரவு தாங்க இயலாத நண்பர் ஒருவர் நேற்று எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல் இது. ஏதோ ஒரு குழுமத்துக்கு 🙂 அனுப்பி வைத்தாராம். எதற்கு ? சிந்திப்பீராக !

***

சிந்திப்பீராக. உலகம் இல்லை, உலகங்களைத் தவிர. இனியாவது இமெயில்களை பார்வேர்ட் செய்வதையே ஒரு மார்க்க கடமையாக எண்ணி மகிழ்ச்சி அடையாதீர்கள். பிறரை மனம்போனபடி வெறுப்பதில் பயனில்லை. அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.  வசனங்கள் வாழ்க்கையை தராது. வெறுப்பைதான் விதைக்கும். உலகம் இல்லை எண்ணற்ற உலகங்கள் உண்டு என்பதை உணருங்கள். உங்கள் வழிகள் மட்டுமே உயர்ந்தது என்று மற்றவர்களின் வழியை அடைக்காதீர்கள். வழி அடைக்கும் அந்த வேதனைமிக்க செயலால், படிப்பறிவற்ற மூடர்களாக நமது குழந்தைகளை வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்காக மறைக்கப்பட்டிருக்கும் பல உலகங்களில் ஒன்று கல்வி என்பது உஙகளக்கு புரியவில்லையா? இறைஞானமும் மறைஞானமும் தராத வெற்றியை கல்வி இன்று அவர்களக்கு தந்துள்ளது. இதில் நீங்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம் உள்ளது.  மாறி மாறி செல்களைப்போல பிளந்துகொண்டும், குறுந்தகடுகளில், பணம்போட்டு காட்டப்படும் தொலைக்காட்சிகளில் தங்களது தகிடுதத்தங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதும் வீண் விரயமாக உங்களுக்கு தெரியவில்லையா?  சிந்திப்பீராக.

உங்களது சுவனம் பற்றிய கனவில் வயிற்றிற்கு சோறின்றியும், பலங்கொண்டவர்களால் கொல்லப்படும் குழந்தைகள் வருவதில்லையா? சிந்திப்பீராக. கல்விதான் செல்வங்களில் சிறந்ததாக சொல்லப்பட்ட கருத்துக்களைக் கேட்காமல் காதுகளுக்கும் கண்களுக்கும் முத்திரையிட்டது யார்? சிந்திப்பீராக.

உங்கள் சுவனத்தின் கதவுகள் மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பில்தான் தனது திறவுகோலைக் கொண்டுள்ளது. மற்றவர்க்கு நீங்கள் செய்யும் உதவியில்தான் தனது வழியைக் வைத்துக் கொண்டுள்ளது. அன்பினால் உலகை வெல்வதைவிடவும் உங்களுக்கு சிறந்த ஒரு வழி உண்டா? சிந்திப்பீராக. ” 

No only read at least make your children to read the world. இதையும் படியுங்கள்…

***