கந்தா.. குகா … – மஹாராஜ சங்கீதம்

கூகுள் ப்ளஸ்ஸில் வாசுபாலாஜி சார் போஸ்ட் :

ராத்திரி யூ ட்யூப்ல சஞ்சய் கச்சேரி அப்லோடிருக்குன்னு மெசேஜ் வந்தா க்ளிக்கி ஒரிஜினலா டுபாக்கூரான்னு பாக்கலாம்னா கெளவி அய்ய்யய்ய..மனுஷா அலுத்து சலுத்து தூங்க வேணாமா..இந்த தரனன்னா எளவ ஹெட்ஃபோன் போட்டுண்டு கேட்டா என்னான்னு கத்துவா.

சரி பிசில கேக்கலாம்னு வச்சா ‘யப்பா! கொல்லாதப்பா..சைன்னு’ கதவ டமால்னு போட்டு போவா மொவ.

தூங்குனாமேரியுமாச்சு, ஆளு எஸ்ஸாவாம பாத்துக்கிட்டா மேரியுமாச்சுன்னு வாசப்படில தல வச்சி கொர்ரிட்டிருந்துச்சு கோவாலுபக்கி.

இந்த பாட்ட வச்சா எழுந்து நின்னு, நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா? ராத்திரியெல்லாம் தூங்கி டயர்டாகி, காலைல தூங்கி அலுத்து ஒரு நாயி நிம்மதியா தூங்க முடியுதாய்யா இந்த ஊட்லன்னு எழுந்து போய் பெட்ல தூங்குது எச்ச நாயி..

Virutham-Kanda Guha-Ragamalika..Brindavani,Darbarikannada,Hamsanandi


Thanks to : Shobana Prakash
*

ஆபிதீன் பதில் :
அதிகாலை நேரத்தில் ஆல் இந்தியா ரேடியோவைத் திருகி சங்கீதம் கேட்கும் வாப்பாவைப் பார்த்து உம்மா சொல்வார்கள்: “களிச்சல்லபோறஹலுக்கு நேரம்காலம் கிடையாது.” பாடுகிறவர்களைச் சொல்கிறார்களாம்!