நில் ! – பி.கே. சிவகுமார்

pks-fb1

கல்வி தேவைப்படாத
மனிதர் உண்டு
அவர்கள் முன்
பாமரனாய் நில்

செல்வம் தேவைப்படாத
மனிதர் உண்டு
அவர்கள் முன்
ஏழையாய் நில்

காதலும் காமமும் தேவைப்படாத
மனிதர் உண்டு
அவர்கள் முன்
நண்பனாய் நில்

கடவுள் தேவைப்படாத
மனிதர் உண்டு
அவர்கள் முன்
நாத்திகனாய் நில்

கவிதை தேவைப்படாத
மனிதர் உண்டு
அவர்கள் முன்
கதை கேட்பவனாய் நில்

அறம் தேவைப்படாத
மனிதர் இல்லை
அவர்கள் முன்
அவர்கள் அறத்தை
அறிய விரும்புகிறவனாய் நில்

(ஆகஸ்ட் 13, 2023)
*
நன்றி : பி.கே. சிவகுமார்