எம்.ஐ.எம். றவூப் சிறுகதைகள்

இதுவும் பி.டி.எஃப்தான்! ப்ளஸ்-ல் வாழ்த்தினேன் என்று தம்பி ரிஷான் ஷெரீஃப் அன்பளிப்பாக அனுப்பியிருந்தார், மின்னஞ்சலில் – றவூப் அவர்கள் பற்றிய குறிப்புடன். சிறு உரையாடலுடன் அதை இங்கே பதிவிடுகிறேன். பி.டி.எஃப்-ஐ இணைக்கப் போவதில்லை; சுட்டி மட்டும் கீழே இருக்கிறது. ‘வெளிநாட்டில் இருப்பதனால் PDF நூல்களே கதி’ என்று சொல்லும் ரிஷான், உங்கள் கதைகளை பி.டி.எஃப்-ஆக போட்டால் என்ன  நானா? என்று கேட்டார். கை உடைந்திருக்கிறது என்றேன்! – ஆபிதீன்

***

அன்பின்  நானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். நலமா?  +இல் பதிவிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி. எனது வெறும் வாழ்த்துக்களை வைத்து நீங்கள் என்ன செய்வது? அதனால் ஒரு சிறு அன்பளிப்பை இணைத்திருக்கிறேன். இணைப்பில் இருப்பது ‘கனவும் மனிதன்’ எனும் எழுத்தாளர் எம்.ஐ.எம் ரஊப் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. எம்.ஐ.எம் ரஊப், புகழ்பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர் மருதூர்க் கொத்தனின் மூத்த மகன்.  தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இச் சிறுகதைகள் 30 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டவை. (நீங்கள் சிறுவனாக இருந்த அந்த நிலாக் காலம்.) 🙂

‘கனவும் மனிதன்’ என்றால் இலங்கைச் சோனகத் தமிழில் கனவு காணும் மனிதன், கனவிலேயே வாழும் மனிதன் என அர்த்தம் கொள்ளலாம். சிறுகதைகள் அருமையாக இருக்கின்றன. குறும்படங்கள் இணைந்து ஒரு முழுத் திரைப்படமாக வண்ணம் பெறும் அண்மைய மலையாளத் திரைப்படங்களைப் போல 12 சிறுகதைகள் இணைந்து ஒரு முழு நாவலாகியிருக்கிறது எனலாம்.

வாசித்துப் பாருங்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

***

ஆஹா, இதல்லவா அன்பளிப்பு! வாழ்க. அன்பின் ரிஷான் ,  றஊப்-ஐ வாசிக்கிறேன். நூலகம் தளத்திலிருந்து pdfஐ எடுத்திருக்கிறீர்கள் போலும். இயன்றால் ஓரிரு கதைகளை தட்டச்சு செய்து என் பக்கத்தில் இணைக்கிறேன், இன்ஷா  அல்லாஹ். தகவலுக்கு : எம்.ஐ.எம்.றஊப்-ன் ‘கடலது அலையது‘ சிறுகதையை ஏற்கனெவே என் பக்கத்தில் (ii) இணைத்திருக்கிறேன் (ஹனீபாக்கா அனுப்பியிருந்தார்கள்). சுட்டி : http://abedheen.blogspot.ae/2012/05/blog-post_13.html (+ நண்பர் றியாஸ் குரானாவின் குறிப்பும் உண்டு)

ஆபிதீன்

***

அன்பின் நானா, இப்பொழுது நான் வெளிநாட்டில் இருப்பதனால் PDF நூல்களே கதி.  நூலகம் இணையத்தளம் மட்டும் இல்லையெனில் பல பழைய சிறந்த நூல்கள் எனக்குக் கிடைத்திருக்கவேயாது. அவ்வப்போது தேடி, பதிவிறக்கி வாசித்து வருகிறேன். நல்லவற்றையன்றி வேறெதைச் சேமித்து வைக்கப் போகிறோம் காலாகாலத்துக்கும்?! 🙂

நல்ல சிறுகதைகளை உங்கள் வலைத்தளத்திலும் தவறாமல் வாசித்துவிடுகிறேன். நல்ல பணியைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றியும் ! சிறுகதைகளை வாசித்துப் பார்த்து, உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள்.

பலருக்கும் போய்ச் சேரட்டும்.

ஹனீபாக்காவுக்கு நான் ஸலாம் சொன்னதாகச் சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

***

ravoof1

Download : ‘கனவும் மனிதன்’ – எம்.ஐ.எம். றவூப்  சிறுகதைகள் (pdf)

*

நன்றி : நூலகம், எம்.ரிஷான் ஷெரீப்