ஜெய் ஜென்ஷி! : 22 நாவல்கள் இலவசம்

ஷார்ஜாவில் அலையும் ஒரு ஜென்முனியின் கிருபையால் , கீழ்க்கண்ட 22 அற்புத நாவல்கள்  கிடைக்கின்றன. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டவை. சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் வாசிக்க / டவுன்லோட் செய்ய முடியும்.  செய்யும்போது ’ஜெய் ஜென்ஷி!’ என்று கத்தினால் படு வேகமாக இறங்கும், கோப்பு.  அனுபவத்தில் கண்டது. இந்த ஜென்முனி பயங்கர அடக்கம் எளிமை… ’தங்களுக்கு சிலை வைக்கவா ஐயா?’ என்று நேற்று கேட்டதற்கு , ’தயவுசெய்து தங்கத்தில் மட்டும்’ என்று சொன்னது! – ஆபிதீன்

***

Note : All pdf files are available here (updated on 28.07.2019)

***

1. அக்னி நதி (Aag ka Daryah) –  உருது :  குர்அதுல்ஐன் ஹைதர் (தமிழாக்கம் : சௌரி)

2. அரை நாழிகை நேரம் மலையாளம் : பாறப்புறத்து (தமிழாக்கம் : கே. நாராயணன்)

3. அழிந்த பிறகு (Alida Mele)கன்னடம் : சிவராம காரந்த் (தமிழாக்கம் : எம். சித்தலிங்கய்யா)

4. தர்பாரி ராகம் (Raag Darbari) – இந்தி : ஸ்ரீலால் சுக்ல (தமிழாக்கம் : சரஸ்வதி ராம்நாத்)

5. ஃபாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும் (Pathummavude Adum Baliyakala Sakhiyum) – மலையாளம் : வைக்கம் முகம்மது பஷீர் (தமிழாக்கம் :  சி எஸ் விஜயம்)

6. ஜன்னலில் ஒரு சிறுமி (Totto-Chan) ஜப்பான் : டெட்சுகோ குயோயாநாகி (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம் , சொ.பிரபாகரன்)

7. கருப்பு மண் (Nalla Regadi)தெலுங்கு : பாலகும்மி பத்மராஜு (தமிழாக்கம் : பா பாலசுப்ரமணியன்)

8. கிராமாயணம்கன்னடம் : ஆர்.பி. குல்கர்னி (’ராவ் பகதூர்’) (தமிழாக்கம் : எஸ் கெ சீதாதேவி)

9. கோயில் யானை (Thevarutu Aana)மலையாளம் : ஓம்சேரி என்.என்.பிள்ளை ( தமிழாக்கம் : இளம்பாரதி)

10. முதலில்லாததும் முடிவில்லாததும் (Anadi Anantha) கன்னடம் :  ஸ்ரீரங்க. (தமிழாக்கம் : ஹேமா ஆனந்த தீர்த்தன்)

11. நான் (Mee) மராத்தி : ஹரிநாராயண் ஆப்தே (தமிழாக்கம் : மாலதி புணதாம் பேகர்)

12. நீலகண்டப் பறவையைத் தேடி (Neelakanth Pakhir Khonje) வங்காளம் : அதீன் பந்த்யோபாத்யாய (தமிழாக்கம் : எஸ். .கிருஷ்ணமூர்த்தி)

13. ஒரு குடும்பம் சிதைகிறது (Griha Bhanga) கன்னடம் : எச்.எல். பைரப்பா (தமிழாக்கம் : எச்.வி.சுப்ரமணியம்)

14. பகல் கனவு (Divasapna)குஜராத்தி : ஜிஜூபாய் பதேக்கா (தமிழாக்கம் : சங்கரராஜுலு)

15. பன்கர்வாடி (Bangarwadi) மராத்தி : வெங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழாக்கம் : உமாசந்திரன்)

16. சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto)வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி)

17. துளியும் கடலும் (Boond aur Samudra)இந்தி : அம்ரித்லால் நாகர் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

18. உம்மாச்சு மலையாளம் : உரூப் (தமிழாக்கம் : இளம்பாரதி)

19. உயிரற்ற நிலா (Mala Janha)ஒரியா : உபேந்திர கிஷோர் தாஸ் (தமிழாக்கம் : பானுபந்த்)

20. வாழ்க்கை ஒரு நாடகம் (Manaveni Bhavai)குஜராத்தி : பன்னாலால் பட்டேல் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

21. விடியுமா (Jagari)வங்காளம் : ஸதீநாத் பாதுரி (தமிழாக்கம் : என். எஸ். ஜகந்நாதன்)

22. விஷக்கன்னி (Visha Kanyaka)மலையாளம் : எஸ்.கே. பொற்றேகாட் (தமிழாக்கம் : குறிஞ்சிவேலன்)

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

35 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  20/12/2012 இல் 16:32

  ஜெய் ஜென்ஷி! ……
  கட்டாயமாக தங்கத்திலேயே செய்யுங்கள்.
  ஆங்காங்கே வைர வைடூரியத்தைப் பதித்து
  அழகும் படுத்துங்கள்.
  -தாஜ்

 2. சாதிக் said,

  20/12/2012 இல் 17:05

  ஜெய் ஜெய் ஜெய் ஜென்ஷி தங்கத்தில் அல்ல பிளாட்டினத்தில் செய்து அழகு பார்க்க வேண்டும், யாரும் சொந்தம் கொண்டடாமல் கண்கொத்தி பாம்பு போல் பாதுகாக்க வேண்டும் தாஜ் அண்ணே

 3. 21/12/2012 இல் 11:00

  தாஜ் & சாதிக்கின் அபிப்ராயங்களை ஜென்முனியிடம் சொன்னபோது ‘தாஜண்ணே சொல்றமாதிரி ஒரு சிலையும் சாதிக்பாய் சொல்றமாதிரி ஒரு சிலையும் சென்ஷிடுங்க..’ என்றார்.

  ‘ஷார்ஜால ஒண்ணும் துபாய்ல ஒண்ணும் வைக்கவா குரு?’

  ‘அப்படியில்லே தம்பி.. ரெண்டையும் ஊருக்கு கொண்டுபோவணும் – விக்கிறதுக்கு!’

 4. என். சொக்கன் said,

  21/12/2012 இல் 13:29

  நன்றி 🙂 NBT வெளியீடுகளைக் கொண்ட ஃபோல்டருக்கு NCBH என்ற இன்னொரு பதிப்பகத்தின் பெயரைச் சூட்டியிருக்கும் ரகசியம்தான் புரியவில்லை 🙂

  என். சொக்கன்

  • abedheen said,

   22/12/2012 இல் 09:21

   வாங்க சொக்கன். நலமா? அந்த ஃபோல்டர் பெயரை நானும் பார்த்தேன். அது பற்றி விசாரித்தால் இன்னொரு சிலை வைக்கச் சொன்னாலும் சொல்வாரென்று ‘குரு’டனாக இருந்துவிட்டேன்.

   • என். சொக்கன் said,

    22/12/2012 இல் 18:25

    மேட்டர் அதில்லை, NCBH புத்தகங்கள் இன்னொரு ஃபோல்டரில் இருக்கிறதோ என்று விசாரியுங்கள், அள்ளிவிடுவோம் 😉

    நலம். நலமறிய ஆவல் 🙂

 5. 23/12/2012 இல் 12:49

  சொக்கன் அண்ணே,

  NCBH இல்லை. NBT தான் அது. ஃபோல்டர் பெயர் மாற்றினால் சேகரித்துப் பகிர்ந்தவற்றை தரவிறக்க சிரமமென்று விட்டுவிட்டேன். புதிய NBTயின் ஃபோல்டர் கதைகளையும் அடுத்த வாரம் ஆபிதின் அண்ணனின் தளத்தில் அப்லோடு செய்துவிடுகிறேன் 😉

  • abedheen said,

   23/12/2012 இல் 15:22

   சென்ஷி, அப்படியே சொக்கன் எழுதிய நூல்கள் அனைத்தையும் இங்கேயே போட்டுடலாம்!

   • என். சொக்கன் said,

    23/12/2012 இல் 22:38

    நல்ல ஐடியா 😉

 6. 25/12/2012 இல் 09:46

  சொக்கன் மொழிபெயர்த்து எழுதிய மிட்டாய்க் கதைகள் மாத்திரம் சொக்கன் தந்து பதிவில் பகிர்ந்த பிடிஎஃப் ஆதலால் பத்திரமாய் வைத்திருக்கிறேன். 🙂

  • abedheen said,

   25/12/2012 இல் 10:24

   ’மிட்டாய் கதைகள்’ வந்த நேரத்திலேயே அவரிடமிருந்து pdfஆக நான் வாங்கிவிட்டேன். இன்றுவரை யாருக்கும் ஷேர் செய்யவில்லை – உங்களைப்போல!

 7. 03/11/2013 இல் 12:04

  என்பிடி புத்தகங்கள் என்சிபிஎச் என்ற பெயரில் எப்படி வந்தது என்ற குழப்பம் எனக்குப் புரிகிறது. இதில் வந்திருக்கும் நூல்கள் எல்லாம், அவை வந்த காலத்தில், மொத்த விற்பனை உரிமை என்சிபிஎச்-இடம் இருந்தது. நூலின் நான்காம் பக்கம் அந்தக் குறிப்பு இருக்கும்.
  அடுத்து, உங்கள் தங்கத்தில் சிலை வைக்கக் கோரிய அந்த ஜென்முனியிடம் சொல்லுங்கள் – தங்கத்தில் உரிய பங்கு எனக்கு வந்து சேர வேண்டும் என்று. இல்லையேல் பதிப்புரிமை மீறலுக்காக என்பிடியிடம் போட்டுக்கொடுக்கலாம் என்று உத்தேசம்.

  • 03/11/2013 இல் 12:23

   //போட்டுக்கொடுக்கலாம் // அப்படி செஞ்சீங்கன்னா தாஜ் கவிதைகளை உங்களுக்கு அனுப்பி விடுவேன், ஜாக்கிரதை!

 8. 03/11/2013 இல் 12:39

  ஷாஜகான் அண்ணா, கனவில் சொன்ன இடத்திலாவது தங்கம் பெயர்ந்துவிடும் போல.. இதுவரை சிலைக்கான பங்களிப்பில் தங்கச்சொட்டுக்கூட கிடைக்கவில்லையென்பதை நீங்கள் அறிந்தால், தாங்கள் அறியக்கிடைக்கும் எல்லா வழக்குகளையும் என் மீது மாத்திரம் போடக்கூடிய சாத்தியம் இருந்தாலும், தயை கூர்ந்து பேச்சுத்துணைக்காய் ஆபிதின் அண்ணன், மஜீத் அண்ணம் மீதும் சில பல வழக்குகளை பிரித்து எனது சிறைப்பங்களிப்பில் பங்கேற்க ஈடுபடுத்தும்படி தன்மையுடன் கோருகிறேன்.

  இங்ஙனம்
  அ ஆ இ-யின் சீடகேடிகளுள் ஒருவரான சென்ஷி

 9. 03/11/2013 இல் 12:47

  //அப்படி செஞ்சீங்கன்னா தாஜ் கவிதைகளை உங்களுக்கு அனுப்பி விடுவேன், ஜாக்கிரதை//

  என்னதான் ஷாஜகான் அண்னன் மீது கோபமென்றாலும் இந்தளவு வன்முறையை அவர்மீது காட்டுதல் தகாது 😦

  அண்ணனின் சேவை.. நமக்கும் தேவை. ஆதலால் அவர்மீதும் கருணை காட்டுங்கள்!

  • 03/11/2013 இல் 12:54

   சென்ஷி, இன்றிரவு தாஜ் உங்களிடம் ஃபோனில் ’கவிதைகள்’ சொல்வாராக!

 10. யூஸஃப் குளச்சல் said,

  07/01/2014 இல் 07:52

  சென்ஷிக்கு இப்போது, தண்டனை காலமா? அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் கதகளி பார்க்கும் தீர்ப்பையும் வழங்கி விடலாமே?

 11. Kalai said,

  03/07/2014 இல் 21:28

  can’t download… there is no such a folder… pls could anyone help me? Thanking you…

 12. 28/09/2014 இல் 18:42

  அன்புடையீர்
  தாங்களுக்குக் கோடி கோடி நன்றிகள். நீலகண்டப் பறவையைத் தேடி நாவலை வாசிக்கத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்துவிட்டது தங்களின் உதவியால். மேலும், சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto) – வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி) நாவல் மட்டும் தான் கிடைக்கவில். தாங்கள் குறிப்பிட்டுள்ள பட்டியலில் 21 நவால்கள் மட்டுமே இருந்தன. சிப்பியின் வயிற்றில் முத்து நாவல் கிடைக்கவில்லை. அது தமிழகக் கடற்கரை வாழ்வியலை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய நாவல் என்று அறிந்தேன். வாசிக்கப் பேராசையாக உள்ளது. உங்களிடம் pdf file இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியுதவுங்கள். visumbutamil@gmail.com காத்திருக்கிறேன்
  அன்புடன்
  மோ. செந்தில்குமார்

  • 29/09/2014 இல் 10:03

   அன்பின் செந்தில்குமாருக்கு, அந்த நாவல் என்னிடம் இருக்கிறது. சென்ஷிக்கும் தகவல் கொடுத்திருக்கிறேன். விரைவில் உங்களுக்கு கிடைக்கும் (‘இன்ஷா அல்லாஹ்’வெல்லாம் கிடையாது!). கொஞ்சம் பொறுங்கள்.

 13. 29/09/2014 இல் 14:00

  உங்கள் வலைப்பூவில் முக்குளித்துப் பார்த்தபோது 22.2.2013ல் நீங்கள் பதிந்த “கனவில் விளையும் முத்துக்கள்” பகுதிக்கான பின்னூட்டத்தில் அனாமதேய என்பாருக்கு முத்து இருக்கும் இடத்தைத் தாங்கள் காட்டிக்கொடுத்துள்ளீர்கள். அங்கிருந்து முத்தைத் திருடிவிட்டேன். சொல்லாமல் திருடியதற்கும், திருடிவிட்டுச் சொன்னதற்கும் நல்ல தண்டனை கொடுத்தாலும் திருடனுக்கு மகிழ்ச்சிதான். என்ன சரியாக ஸ்கேன் செய்யவில்லை போலும் எழுத்து மங்கல் மங்காலத் தெரிகிறது. வேறு பிரதி இருந்தால் கொடுங்கள்
  அன்புடன்
  செந்தில்

  • 29/09/2014 இல் 15:13

   ‘ஹலால்’ திருட்டுக்கு தண்டனை கிடையாது. நிற்க. அதே மங்கலான பிரதிதான் என்னிடம் இருக்கிறது செந்தில், மங்களகரமான பிடிஎஃப் இனிமேல்தான் செய்யனும் :). சென்ஷி துணை!

 14. 01/10/2014 இல் 06:28

  நன்றி அன்பரே, மங்களகரமான பிரதி கிடைத்தால் சொல்லியனுப்புங்கள்.
  நன்றி
  செந்தில்

 15. mano said,

  05/11/2014 இல் 13:39

  drive folder is in trash..Please restore it

 16. 28/02/2015 இல் 12:40

  சென்ஷி : அந்த டிரைவ் அழிந்துவிட்டது. அங்கு சேமித்ததில் பெரும்பாலானவற்றை இங்கு ஏற்றி உள்ளார்கள்.. http://www.openreadingroom.com/?cat=158

 17. 16/10/2015 இல் 21:47

  புதிதாகக் கொடுத்த லுங்கும் வேலை செய்யவில்லையே

  • 17/10/2015 இல் 09:43

   தயவுசெய்து கொஞ்சம் பொறுங்கள். சென்ஷி வேறு ஏற்பாடு செய்வார்.

 18. அனாமதேய said,

  09/11/2016 இல் 08:27

  //தயவுசெய்து கொஞ்சம் பொறுங்கள். சென்ஷி வேறு ஏற்பாடு செய்வார்.// வேறு ஏற்பாடு செய்தாகிவிட்டதா?!!!

 19. Srini said,

  27/12/2016 இல் 08:09

  can you please restore it. Thank you very much..

 20. Slm hanifa said,

  08/09/2017 இல் 17:32

  ஜென்சிக்கு தங்க வாத்தொன்றை பரிசாகவ அனுப்புகிறேன் நன்றியும் அன்பும்

  • விஜய் said,

   14/03/2018 இல் 20:04

   கொடுத்த லுங்கும் வேலை செய்யவில்லையே வேறு கிடைக்குமா

 21. 11/04/2018 இல் 09:52

  https://archive.org/ தளம் சென்று நாவல்களைத் தேடி அடையுங்கள். உதாரணமாக, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ இங்கே இருக்கிறது:
  https://archive.org/stream/NeelakandaParavaiyaiThedi/Neelakanda-Paravaiyai-Thedi#page/n0/mode/2up

 22. 29/07/2019 இல் 12:45

  நண்பர்களுக்கு, பதிவில் குறிப்பிட்ட 22 நாவல்களையும் இந்தத் தளத்திலிருந்தே இப்போது டவுன்லோட் செய்ய இயலும். நன்றி.

 23. 28/12/2021 இல் 23:36

  Thanks. Aryokya Niketan (bengali) irukka?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s