‘உயிர்த்தலம்’ விளம்பரம் – 1

‘உண்மையான வாசகன், வாசிப்பதை விடுவதே இல்லை!’ என்று ஆஸ்கார் வைல்ட் கூறியதாக பபாஸி மூலம் அறிந்தேன். எந்த வழியாக என்று சொன்னால் தேவலை. அது போகட்டும், எனது இரண்டாம் சிறுகதைத் தொகுதியான ‘உயிர்த்தலம்’ (ஆபிதீன், அஸ்மா மற்றும் பலர் நடித்தது) சென்னை புத்தகக் காட்சி –  காலச்சுவடு அரங்கில் கிடைக்கும். அவசியம் வாங்கி விடவும். நன்றி!

abed-uyirthalam-kalachuvadu-for-wp1

19 பின்னூட்டங்கள்

 1. somansblog said,

  20/06/2016 இல் 07:43

  யேயப்பா! என்ன ஒரு முழி!…..
  ரொம்ப சரியா இருக்கு அட்டைப்படம்.
  அப்பிடியே உள்ள உள்ள பூந்து கொடாயுது.
  (இந்த இடத்தில் “இதற்கு தானே ஆசைப்பட்டாய்
  பாலகுமரான்னு ஒரு படம்.”
  காமெடி சூப்பரா இருக்கும். தேடி பாத்துக்கும்.
  இல்லாட்டி பொறுக்கி அனுப்பறேன்..

  பாரதி ஒரு தடவை யார்ட்டயோ கடன் கேட்டு
  போய் இருக்கார். அந்த ஆசாமி இவரை
  அப்போ இப்போ என்று அலைக்கழித்து விட்டு
  “காசு தர்ர்ரது ஒரு பெரிய விஷயமில்லை. உம்ம
  கிட்ட காசு, பணம் புழங்கினா கவிதை ஊற்று
  வற்றி விடுமோன்னு தான் தரலை” ன்னு
  சொன்னாராம்.

  அது மாதிரி ஆபிதீன் இப்படி கொஞ்சம் தள்ளி
  இருந்தா தான், ஊத்து வத்தாம இருக்கும்னு
  தோணுது. ஏய்யா, செயமோஹன்லாம் ஈடுக்கு
  ஒரு மூட்ட புழுக்க போடறாங்க, ஒமக்கு என்ன
  கேடுன்னு திட்டறதுக்கு ரிஹர்சல் பாத்து
  வச்சிருந்தேன். இப்போ எல்லாமே சரின்னு படுது.
  முக்கிகிட்டு பேளற மாதிரி வச்சுக்கிட்டா தான்
  கெட்டி விட்டயா வரும்னுட்டு இருக்கீர்.

 2. somansblog said,

  20/06/2016 இல் 08:22

  சொல்லப்போனா நல்ல விளைச்சல் எல்லாம் எப்போமே தேர்த்தச்சன் முனைஞ்சு முனைச்சு அச்சாணி வடிச்ச கத தான். அழுதும், தொழுதும், இறைஞ்சியும் தீரலை ஆன்றோர் கடன். ஒரு வாரியாரும், காந்தியும், பாரதியும், போனாப்போகுதுன்னு துப்பி இருந்தா
  நம்ம உயிர்ப்பயிர் இப்படி ஊட்டமா வளருமா,
  நல்ல உணர்வோடு காலத்துக்கும், ம்ம்ம்?

  சில சமயம் சரியான எழுத்தப்பாக்கும்போதும்,
  இது தான் போதும்னு நினைக்கறேன். மார்க்கப்பற்றும், போலிகள் மீதான எள்ளலும் பகடியும், எந்த சூழலிலும் எப்போவும் அறுக்க முடியாமல் உள்ளே ஓடும் ஒரு அறச்சரடும், அவ்வப்போது அஸ்மாவும், அனீபாவும், காக்காவும், நானாவும், தாஜூம், ரூமியும்,
  நானும் உம்ம கவனத்தில் கொஞ்சம். இருக்கோம் அதான் இன்பம்.

  தோணும்போதெல்லாம் பேளாதிரும்.

 3. somansblog said,

  20/06/2016 இல் 08:49

  collect and work with other related sites…..thanks

 4. 20/06/2016 இல் 09:41

  //தோணும்போதெல்லாம் பேளாதிரும்.// அரபி பக்கத்தில் இருக்கிறான். ஆனாலும் சொல்கிறேன் : ஆமீன்! ஆனால் அந்த வீடியோ இங்கே தெரியலையே சோமன்… blocked in your country என்று வருகிறது. சரி, படம் எடுத்துப் பார்க்கிறேன். -AB-

  • somansblog said,

   21/06/2016 இல் 05:26

   மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
   பிறரை வேண்டாதே
   மூளாத்தீ போல் உள்ளே கனன்று
   முகத்தால் மிக வாடி
   ஆளாய் இருக்கும் அடியார்
   தங்கள் அல்லல் சொன்னக்கால்
   வாளாங்கிருப்பீர் திருவாரூர்
   வாழ்ந்து போதீரே.
   ————————————————————

   அப்பர் பெருமான் சிவன் மீது பாடும்
   இதை செவி மடும். இடர் களையப்பெறலாம் என்பதை விடவும், எண்ணும் அளவேயாம் எத்துன்பமும் எனும் சிந்தை வாய்க்கப்பெறலாம்.

   லால்குடி சுவாமிநாதன் கேளும். (மத்யமாவதி)

   பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
   பெண் சுமந்த பாகத்தெம் பெம்மான்
   பிறன் சடையான்
   கண் சுமந்த நெற்றிக்கடவுள்
   கலிமதுரை மண் சுமந்து
   கூலி கொண்டு-அக்
   கோவால் மொத்துண்டு
   புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண்
   அம்மானாய்.!

   மோகன ராகத்தின் உயிரை அப்படியே
   சொல்லுக்குள் விருத்தமாக பாடி இருப்பார்.
   அவலமும், துன்பமும் ஒரு சுவை என்று
   பழகி விட்டால் எல்லாம் அவன் தந்தது
   என்று “சும்மா….. இருக்கவே யாம் வந்தோம்”
   மனசு நிலைப்படும்.

   (நாலு தடவை கேட்டால் எல்லாம் காது பழகி விடும். புரியலைன்னு சொன்னா மிதி.)

   நல்ல இசையும், எழுத்தும், கோடும், வண்ணமும்,
   காதலும் கவிதையும் எப்போவும் இருந்தால்
   வாழ்க்கையை கொண்டாடி விட
   வேறு என்ன வேணும். சத்தியமாக சொல்லும்.

   அரபியைக்காட்டிலும் விட ஆண்டவன் கருமியோன்னு தோணி விடாதிருக்க
   து-ஆ வுடன். சோமன். .

 5. 21/06/2016 இல் 09:23

  ஆஹா, கேட்கிறேன் – உங்கள் சொல்படி. கொஞ்சம் கொந்தளிப்பு அடங்கட்டும். ஆசிர்வதிக்க என் தலையைத்தொட்ட ஹஜ்ரத், ‘ என்ன இப்படி ஜம்ப் ஆவுது…! ம்?’ என்று கேட்டார்கள் (1990) . ஞாபகம் வருகிறது. எல்லாம் அறிந்த இறைவனே, கருணை காட்டு…. ஆமாம், அந்த வீடியோ , ‘not available’ என்று சொல்லிவிட்டு கு.ஞானசம்பந்தன் பேச்சுக்குப்போகிறதே. சரிதானா சோமன்? உங்கள் எழுத்தை அவ்வப்போது கூகுள் ப்ளஸ்ஸிலும் பகிர்ந்துகொண்டு வருகிறேன். இது எச்சரிக்கைக்கு 🙂

  • somansblog said,

   22/06/2016 இல் 10:19

   நல்ல நகை அமைவதும் வரமில்லையா.
   பொறுக்கி கிடைத்ததில் ஒன்று இ.ஆ.பா.
   மற்றது கு.ஞா.. பிடி சாபம்..

   கீராக்கிழத்தின் கதை ஒண்ணில்
   வயக்காட்டில் மடிச்சு கட்டிக்கிட்டு
   உக்காந்து பேளப்போய்
   கிழிஞ்ச வேட்டியை பாத்து ஒரு பெருசு
   வருத்தப்படும், “அட எளவு, கிளிஞ்சு
   போனாக்கூட தெச்சுக்கலாம்.. பிஞ்சில்லா
   போச்சி, வம்பா..” ன்னு..
   பிச்சுத் தின்னு போட்டாய்ங்களே நம்ம
   பொழைப்ப.. கழுதை கூட சம்பாதிச்சு
   இருக்குமே காசை?

   கொழுந்துகளோட கூடிக்கெடக்கக்கூட
   வழியில்லாம வயசைப்பணயமில்லா
   வச்சிப்போட்டோம் பாழாப்போன
   பணத்த வச்சி இனி என்ன பண்ண.?

   கண்ணு பிசுக்கி கசியக்கூட
   நேரமில்லய்யா, நேரமில்ல..

 6. 22/06/2016 இல் 10:59

  அந்த பாழாப்போனதும் வரவேயில்லையே…. பாவம் பண்ணவும் எனக்குத் தெரியலே. என்ன செய்வேன்? ஹைர் (Hair அல்ல, நல்லதுன்னு அர்த்தம்!), நீங்க சொல்றாப்பல ‘எண்ணும் அளவேயாம் எத்துன்பமும்’னு தேத்திக்க வேண்டியதுதான் போல. ஊர்வந்து உங்களோடு சுத்தினா சரியாகும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

 7. somansblog said,

  22/06/2016 இல் 11:06

  இருந்தார்மா,. இங்க தான். நான் கூட என்னமோ கேட்டார்னு, கோச்சுண்டேன்.
  உன்ன வச்சுண்டு நான் பட்ட பாடு நேக்கு தான் தெரியும். இவரானா, சித்தம் போக்கு .
  சிவம்போக்கு, கைக்கு ஆப்டதை அரச்சிக்கலக்கி யேதாச்சும் பண்ணிப்பிடுவேன். வாயத்தொறக்காம
  சாட்டுப்போய்டுவார்.

  பெரியவ பசிக்காரி வரம் வாங்கிட்டு வந்தவள். சொத்தைக்கொட்ட நாழியானா ஓங்காரமா ஒரு முழி முழிப்பா. எனக்கு கொலையே நடுங்கும். பிச்சு என்னையே தின்னு பிடுவாளோன்னு பயம்மா இருக்கும்.

  பசிக்கும் படுத்துக்கறதுக்கும் தவிர நடுவ ஒரு மண்ணும் தெரியாது. இவளைக்காணாம அடிச்சுட்டேன்னு ஒரு தடவை இவ அப்பா என்ன கொண்ணே போட்டார். ஆமா, கையப்பிடிச்சிண்டே கூடவந்தவோ எவனோ பொம்மைக்காரன் கூப்ட்டான்னு நின்னு போய்ட்டா. என்ன பண்ண, போகாத இடம் இல்ல, தேடாத தெருவில்லை. போலீஸ்ல சொல்லிடலாம்னு கிளம்பிட்டேன். அப்பறம் இவ அப்பாக்கு தெரிஞ்ச ஒருத்தர் தர தரன்னு இழுத்துண்டு வறார் “யாராத்துலையோ உக்காண்டு
  அள்ளி அள்ளி சாட்டுண்டு இருக்கா, பாத்தேன்,
  பதில் சொல்ல தெரியல. பத்திட்டு
  வந்திட்டேன்னார். திரியும்வந்துட்டதேன்னு
  தான் இருந்தது.

  இந்த மனுஷன் கையப்பிடிச்சிண்டு வரச்சே நேக்கு பதிமூணு வயசு. தோளிலயும் முதுகிலையும் தூக்கி
  ஆட்டமா ஆடிட்டு மாமன்காரன் எல்லாம்
  ஓடியாச்சு. பொட்டணத்தோடு பொட்டணமா ரயில் ஏறியாச்சு. ஏஹேன்னு வரது. கூட கடிச்சிடுமோன்னு
  பயம். வாசல் தாண்டி லோகம்னு ஒண்ணு இருக்கான்னு தேடிண்டே வரேன். இவாத்து மனுஷாளா, அத்தனை உருட்டல் புரட்டலும் அத்துப்படி.,,

  ஒரே ஒரு தடவை சோத்தோட கஞ்சியைக்
  கொஞ்சம் போலக்கவுத்துட்டேன்.
  இவர் மாமியார் வெறுமே முழிச்சா, எனக்கு மூத்திரமே வந்துட்டது. ரொம்ப நல்லவ தான்,
  ஆனா கண்டிப்பு. ஆசாரமா இருக்கேன்
  பேர்வழின்னுட்டு ” அங்க வக்காத அத இங்க வக்காத இத” ன்னு நன்னா உயிரப்புழிஞ்சு தொங்க உட்டுருவா. தள்ளி இருந்தாலோ, தனியா கெடந்தாலோ தாங்கிப்பா, கோச்சுட்டெல்லாம் ஓடி
  பொறந்தாத்துக்கு போய் சீராடல்லாம் முடியாது. சோத்துக்கே வழியில்லாம தான
  இந்த பிராமணன் பின்னாடி வந்தேன், அப்பறம் சொகத்துக்கு என்ன வேண்டல் வேண்டி இருக்குன்னுட்டு பேசாம இருக்கேன்.

 8. 22/06/2016 இல் 11:15

  அட்டகாசம்! ஐயோ, எதில் வருகிறது? சஸ்பென்ஸ் தாங்கலையே..

 9. somansblog said,

  22/06/2016 இல் 11:45

  அட ராமா! இத எழுதலாமா, அத எழுதலாமா,
  தப்பா போய்டுமான்னு சிக்கெடுக்கறதுக்குள்ள ஓடி வந்து வெந்தும் வேகாமையும் புடுங்கி வாயில போட்டுட்டா என்ன அர்த்தம்? இப்படியா உக்காந்து இருப்பீர்…அட மக்கு ஆபிதீன்.. !! ஏதோ எழுதிட்டு இருந்தேன்.

  இரும் வரேன் பசிக்கறது. சாப்ட்டுட்டு வரேன்.
  பல்லு விளக்கிட்டு தான்.

  போன மறுமொழியில் ஒரு தப்பு பண்ணிட்டேன்.
  எழுத எழுத உம்ம பதில் வந்ததா, டிராப்ட் பண்ணதை
  கழுவேத்திட்டேன்.. மன்னிக்கணும்.
  அழிக்க தெரியலை.

  நாம மொத மொத முட்டிட்டதும் இப்படித் தான் இல்ல,?
  நல்லா தான்யா இருக்கு. ஹஹா….

 10. 22/06/2016 இல் 12:19

  பின்னூட்டத்தையெல்லாம் அழிக்கவாவது, ‘பரக்கத்’தான விஷயமாச்சே…! மொத்தமா எழுதி அனுப்புங்கய்யா, இங்கேயே போட்டுடலாம் :))

  • somansblog said,

   22/06/2016 இல் 13:07

   ஏற்கனவே வலுசாயிட்டு வருதேன்னு
   வெசனம். இந்த அளகில “ங்கய்யா” ன்னு
   ஒரு கசக்கு கசக்காதீரும். ஒண்ணு பண்ணும்.
   இந்த மூடில் இருக்கும்போதே, “www.paltalk.com”
   போய் ஒரு messenger டவுன்லோட் பண்ணிட்டு
   id create பண்ணி என் ரூம் வந்துவிடும்.
   ஆடலாம் பாடலாம் எழதலாம், கொண்டாடலாம்.
   சரியா?
   என் ரூம் “carnatic music voice and practice”

 11. 22/06/2016 இல் 13:31

  ஊஹூம், இது சரிவராது. என் மூஞ்சி அப்படி. அதாவது, அலுவலக நேரத்தில் மட்டுமே இணையத்தை உபயோகிக்கிறேன். மற்றநேரங்களில் – அஸ்மாவிடம் திட்டுவாங்குவது போன்ற அவசியத்திற்காக மட்டும் – கொஞ்சூண்டு Data Package. அவ்ளோதான் (ஆட்டவே இயலவில்லை, இதில் ஆடவாவது பாடவாவது!). இருந்தாலும் முயற்சிக்கிறேன். அப்புறம்… தினம் ஒரு நல்ல சினிமா பார்க்கிறேன், நண்பர் சென்ஷி உதவியுடன். முந்தாநாள் ஒரு ஃப்ரெஞ்ச் படம். Dans la Maison ( In the House) . நேற்று ஒரு ஹிந்தி. Nil Battey Sannata. முடிந்தால் இரண்டையும் பாருங்கள். ந.பிச்சமூர்த்தியின் 20 சிறுகதைகள் (pdf) , நண்பர் சுரேஷ் மூலம் இன்று கிடைத்தது. விரும்பினால் சொல்லுங்கள். டவுன்லோட் லிங்க் தருகிறேன். வஸ்ஸலாம்.

  • somansblog said,

   22/06/2016 இல் 14:13

   எழுதிட்டு இருக்கேன், வரேன்..அன்புடன் சோமன்.
   இடையில் “வேட்டி” படியும். பாலகுமாரனை பாரும்.
   உமக்கு அந்த காமெடி பிடிக்குமான்னு தெரியலை.

 12. somansblog said,

  23/06/2016 இல் 15:46

 13. somansblog said,

  23/06/2016 இல் 15:53


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s