திருநீற்றை கை நிறைய எடுத்து பூசிக்கொண்டிருந்த வாரியார் சுவாமிகளைப் பார்த்து, ‘பெரியவரே, ஏன் நெற்றியில் வெள்ளை அடிக்கின்றீர்?’ என்று ஒரு இளைஞன் நக்கலாகக் கேட்டிருக்கிறான். ‘தம்பி.. குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்’ என்று சூடாக பதில் தந்தாராம் சுவாமிகள்! நண்பர் தமிழ்மாறனின் பதிவில் அதைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தபோது வாரியாரின் பிரசங்கம் ஒன்றை நம் ஜாஃபர்நானா அனுப்பியிருந்தது ஞாபகம் வந்தது. அதைப் பதிவிடுகிறேன். வஹாபிகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்! – ஆபிதீன்
***
ஜாஃபர்நானாவின் குறிப்பு :
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ! என்னண்டா , எதாவது வித்தியாசமான செய்தின்னு எனக்குப் பட்டுச்சுன்னா உடனே கத்தரியை எடுத்து கத்தரிச்சு வச்சுக்குவேன். ஆனால் அதை ஒழுங்காப் பாதுகாக்கணும்னு தோணவே தோணாது. அங்கெங்கேயோ வச்சிருப்பேன், எதையாவது தேடும்போது எதாவது கெடைக்கும் அப்படி கெடச்சதுதான் இந்த பத்திரிக்கைக் கட்டிங். 12-12-1975 லெ தினமணி பத்திரிக்கையிலெ வந்துச்சு. அதெ நான் வேறே எழுதி எதுக்குப் பக்கத்தை வேஸ்ட் பண்ணுவானே, நீங்களே படிச்சுக்குங்க.
அதெ படிக்கிறதுக்கு முந்தி…. இஸ்லாத்தோட நிலைப்பாடு எல்லாத்துக்கும் தெரியும், விளக்கவேண்டிய அவசியமில்லை ஆனா…..ல் பெட்ரோலியத்தில் அரேபியாவின் மோகத்தில் முளைவிட்ட மில்லினியம் ஆலிம்சாக்கள் சிலர் “அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்கிறார்கள். எங்க ஜஃபருல்லாஹ் நானாகூட சிலாகித்து ஒரு கவிதை எழுதினார்கள். இதுக்கு அதை ஒப்பீடாகப் பதியப்படுகிறது!- ***
***
போனஸ் : முத்தைத் தரு பத்தித் திருநகை..
ஒ.நூருல் அமீன் said,
20/11/2011 இல் 13:52
வாரியார் சுவாமிகளின் அருமையான சொற்பொழிவை தந்ததற்கு நன்றி ஜெஹபர் நானா! . ஏக தெய்வ வழிபாட்டிற்கும், ஏகத்துவத்துக்கு உள்ள வேறுபாடு தெரிந்த நானா இங்கே இரண்டும் நெருங்கி வரும் புள்ளியை தொட்டுக்காட்ட நினக்கிறார்கள் என்பது என் கணிப்பு. ஆயினும் யாருக்காவது பயன்படலாம் என்பதால் ஒரு சிறு விளக்கம்.
வாரியார் சுவாமிகள் சொல்ல வருவது ஏக தேவ வழிபாடு. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த குறைசியர்கள் கூட தாங்கள் வணங்கி வந்த ஒரு தெய்வத்தை பொது தெய்வமாக எல்லோரும் வணங்கலாம் என நபிக்கு அழைப்பு விடுத்தார்கள். நபி தாங்கள் காட்டித் தந்த ஏகத்துவத்திற்கு மாறானது என்பதால் உடன்படவில்லை.
எகத்துவம் என்பது ஏக தேவ வழிபாடு என்பதிலிருந்து மாறுப்பட்டது. ஏகத்துவம் என்பதன் பொருள் ஒன்றுபடுத்துதல் என்பதாகும்.
இலாஹுக்கும் இலாஹுன் வாஹித். – இலாவாக இருப்பதெல்லாம் ஒரு இலாஹ் தான் என்கிறது வேத வரிகள்
உலூஹிய்யத் – இறைதன்மை
இலாஹ் – அந்த தன்மைகளுக்கு சொந்தக்காரன்
ஏகத்துவம் – சுருக்கமாக சொன்னால், வானம் பூமியில் அந்த உலூஹிய்யத் பல ரூபங்களில் வெளிப்பட்டாலும். அந்த தெய்வத் தன்மை அவைகளுக்கு சொந்தமில்லை. அவைகளுடன் இருந்து அவைகளையும் அவற்றின் செயல்களயும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஏகப்பரம்பொருளுக்குத் தான்( அதை தான் அல்லாஹ் என்கின்றோம்) சொந்தம் என தரிப்படுத்துவது தான் ஏகத்துவம்.
வானம், பூமியிலுள்ள அனைத்தும் அவனைத் (உருவமற்ற ஏகப்பரம் பொருளான அல்லாஹ்வைத்) தான் வணங்குகின்றன எனும் வேத வரிகள் ஏகத்துவத்தின் நுட்பமான வரிகள்.
அன்புடன்,
அமீன்
மஜீத் said,
21/11/2011 இல் 13:49
//எகத்துவம் என்பது ஏக தேவ வழிபாடு என்பதிலிருந்து மாறுப்பட்டது. ஏகத்துவம் என்பதன் பொருள் ஒன்றுபடுத்துதல் என்பதாகும்.//
சரி, ஏகதேவ வழிபாடுன்னா என்ன? ரெண்டுபடுத்துதலா?
ஒரு(ஒற்றை) இறைவழிபாடு இல்லையா?
அதுவும் உருவம் வேறு இல்லைங்கிறாங்க…
என்ன, இறையின் வேறு adjectives வேணும்னா வேறுபடலாம். அது அறியாமையாகவும் இருக்கலாம்.
இதைத்தான் ஜாஃபர் நானா சொல்ல வந்தார்.
சரி, அவ்வாறு வேறுபடுபவர்களை என்ன செய்வது?
சகமனிதர்களாக ஏற்பதா? தண்டிப்பதா?
ஒ.நூருல் அமீன் said,
21/11/2011 இல் 14:50
ஒன்றுபடுத்துதல் என்பது unity in multiplicity.
வானம், பூமியிலுள்ள அனைத்தும் அவனைத் (உருவமற்ற ஏகப்பரம் பொருளான அல்லாஹ்வைத்) தான் வணங்குகின்றன எனும் வேத வரிகள் ஏகத்துவத்தின் நுட்பமான வரிகள். சின்ன குளூ
…………அனைத்துடனும் அல்லாஹ் இருக்கின்றான் அவன் ஏகன்.
ஹ்மீது ஜாஃபர் said,
20/11/2011 இல் 19:49
அவங்க கல்லை வணங்குறாங்களோ வேறே எதையும் வணங்குறாங்களோ, அதுவல்ல நான் சொல்ல வந்தது.
கடவுளுக்கு உருவம் இல்லை, இதுதான் அங்கு
“CENTRAL POINT”.
நீங்க எல்லாரையும் கொழப்பிடாதீங்க.
ஒ.நூருல் அமீன் said,
21/11/2011 இல் 12:12
இறைவனுக்கு உருவம் இல்லை என்கிறார் வாரியார்.
உண்டு என்கிறார் பி.ஜே/ அல்லது ஆலிம்சா என்று தலைப்பிட்டிருந்தால் நீங்கள் சொல்ல வந்ததற்கு இசைவாய் இருந்திருக்கும். ஏகத்துவம் என்றதால்,
ஏகத்துவம் எனும் சொல் இன்றும் பல பேர் குழப்பிக் கொள்ளும் அல்லது அறியாதிருக்கும் வார்த்தை என்பதால் சிறு விளக்கம். பதித்தேன்.
கல்லை வணங்குகிறார்கள் போன்ற சொற்களை நான் சொல்லவும் மாட்டேன். நீங்களும் தவிர்திருக்கலாம்.
Rashid said,
20/11/2011 இல் 22:02
இந்த் கட்டிங் வஹாபி கண்களில் பட்டால் உடனே fathva கொடுத்துவிடுவார்கள் பின்வருமாறு “உருவம் இல்லை என்பது ஹிந்துக்களின் கொள்கை ,அதையே சுன்னத் வல் ஜமாத்தும் கொள்கையாக கொண்டுள்ளார்கள் என்று”.நல்லவேளை நூருல் அமீனுடைய திருமறையின் அடிப்படையில் அமைந்த தெளிவான விளக்கம் அருமை…
(ரஷீத்)
மஜீத் said,
21/11/2011 இல் 13:33
எல்லா மதங்களும் நல்லதையே போதிக்கின்றன – யாரும் மறுக்க முடியுமா?
நல்லதை மதத்தின் பெயரால் மறுப்பதென்னவோ மதநம்பிக்கை கொண்ட மனிதர்கள்தான்.
இதில் ஒவ்வொரு மதத்திற்குள்ளும் உள்குத்து
வெவ்வேறு மதங்களுக்குள் வெளிக்குத்து
ஏக இறைவனே, மனிதற்கெல்லாம் மனிதமும் கற்றுக்கொடுப்பாயாக
மனிதம்தான் “உன்னை”த் தெளிவாக அறியும்; அறிவிக்கும்
ஹ்மீது ஜாஃபர் said,
21/11/2011 இல் 19:27
///இறைவனுக்கு உருவம் இல்லை என்கிறார் வாரியார்.
உண்டு என்கிறார் பி.ஜே/ அல்லது ஆலிம்சா என்று தலைப்பிட்டிருந்தால் நீங்கள் சொல்ல வந்ததற்கு இசைவாய் இருந்திருக்கும். ////
அமீன் அவர்களே…!
எல்லா ஆலிசாக்களும் அப்படி சொல்லமாட்டார்கள் “மில்லினியம் ஆலிம்சா” என்பதை வாசிக்க விட்டுவிட்டீர்கள். மேலும் தலைப்பை மீண்டும் வாசிக்கவும். அடைப்பில் இருப்பது வாசிக்கத்தான்.
தவிர PJ is not single person for TNTJ, they are group of culprits.
வஹ்தத்துல் உஜூது எல்லா மதங்களிலும் உள்ளது என்பதை மனதில் பதிந்துக்கொள்ளுங்கள்
ஒ.நூருல் அமீன் said,
21/11/2011 இல் 22:51
வா சொல்வது எல்லா மத ஞானிகளும் பேசிய வ.உ. இல்லை என்பது தான் நான் சொல்ல வந்ததன் சுருக்கம். அப்ப விசயம் முடிந்தது.
ஹ்மீது ஜாஃபர் said,
21/11/2011 இல் 19:30
ஏகத்துவத்தை நீட்டியதற்கு நன்றி ஆபிதீன்.