இன்ஷா அல்லாஹ்!

இறைவா…!

உனக்கு
உருவம் இருக்கிறது என
அறிவுஜீவிகளான
எங்கள் ஆலிம்கள்
கண்டுபிடித்து விட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

இனிவரும் நாட்களில்
நீ
ஆணா…
பெண்ணா…
என்பதையும்
உனக்குச் சொல்வார்கள்,
இன்ஷா அல்லாஹ்!

*

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்
தொலைபேசி : 0091 9842394119
முகவரி:
கவிஞர் இஜட். ஜபருல்லா
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002

*

Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning “Praise to God” or “All praise is due to Allah.

In šāʾ Allāh (إن شاء الله) is an Arabic term to indicate hope for an aforementioned event to occur in the future. The phrase translates into English as “God willing” or “If it is God’s will”.

21 பின்னூட்டங்கள்

 1. 01/08/2010 இல் 06:39

  ஹஹ்ஹாஹா……….

  சூப்பர்..

  ஃபேஸ் புக்கில் என்னோட வாலில் (வால் – ஆங்கில வார்த்தை) வெளியிடலாமா..?

  • abedheen said,

   01/08/2010 இல் 06:46

   வெளியிடுங்கள். யார் தலையாவது ஆடினால் சரி!

   • 01/08/2010 இல் 10:45

    கவிக்குரிசில் ஆணா பெண்ணான்னு உனக்கு சொல்வார்கள் என்று எழுதியிருக்காஹலே.. அதை கண்டுபிடிக்க தான் தலைவர் ஆறு மாசம் ஆராய்ச்சிக்கு போயிருப்பாரோ..!?

    தலையை ஆட்ட வாலில் எழுத அனுமதி கொடுத்ததற்கு நன்றிகள்

 2. 01/08/2010 இல் 07:19

  உருவமா? நல்லா கிளப்பறாயங்கடா பீதிய… )))

 3. 01/08/2010 இல் 13:17

  ஆணுன்னு சொன்னா பொம்பளைங்க சண்டைக்கு வந்துடுவாக, பொண்ணுன்னு சொன்னா ஆம்பளைங்க சண்டைக்கு வந்துடுவாக, அதனாலெ ரெண்டுக்கும் நடுவுலெ உட்டுபுட்டா அஹலுவ.. அதாங்க கோசா மரைக்காருவ சந்தோசப்படுவாஹ இப்பவாவது நமக்கு ஒரு அந்தஸ்து கெடச்சுதேன்னு.

 4. மஜீத் துபாயிலிருந்து said,

  01/08/2010 இல் 14:45

  வாதம் பண்ணாங்களாம்! முடக்கு வாதமா, பக்க வாதமான்னு சொல்லலை. ஆனா, பண்ணுனது யார்ட்ட? அவுகளே சொல்றாங்க: கோமாளிகிட்டயாம். அப்ப நீங்க?? சரி விடுங்க. ட. மு கு ட பா தொண்டர்கள் இருக்கிறவரைக்கும் நமக்கென்ன கவலை? யா அல்லா, உன் உருவத்த (அவுங்களுக்கு)காட்றியோ இல்லையோ, எங்கள காப்பாத்திரு, அவுங்ககிட்ட இருந்துதான்

 5. abdullah said,

  01/08/2010 இல் 15:45

  இங்கே கேலிகுரியாக்கபடுவது அல்லாஹ்வையா ? அல்லாஹ்விற்கு உரிய உருவம் உண்டு என்று சொன்னவரையா..?

  ஆணா பெண்ணா என அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ நீங்களே ஆரம்பித்து விட்டீர்களே ..!!

  இதுல கோசானு வேற கேள்வி .. என்ன கொடுமக …

  • 02/08/2010 இல் 05:17

   இங்கே கேலிகுரியாக்கபடுவது அல்லாஹ்வையா ? அல்லாஹ்விற்கு உரிய உருவம் உண்டு என்று சொன்னவரையா..?

   – யார் ஆரம்பிச்சது..?

   ஆணா பெண்ணா என அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ நீங்களே ஆரம்பித்து விட்டீர்களே ..!!

   இதுல கோசானு வேற கேள்வி .. என்ன கொடுமக …

   – கண்ணு இருக்கு, கால் இருக்குண்ணுட்டாங்க.. அப்புறம் இதையும் சொல்லிவிடுவார்கள் என்ற கிண்டல் உருவம் இல்லாத இறைவன் மீது ஆணையாக ஆராய்ச்சியாளரை குறி வைத்து தான்..

   • abdullah said,

    02/08/2010 இல் 18:49

    நாகூர் இஸ்மாயில் அவர்களே .., சொல்பவர்களை நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அவர்கள் சொல்வது எல்லாம் தவறு என்ற வாதம் அர்த்தமற்றது .

    அல்லாஹ்வின் பார்வை ,கண் , கால் போன்ற கருத்தில் இடம் பெரும் வாசகங்கள் இருக்க தான் செய்கின்றன . அதலால் அதை நம்புவதும் நம் கடமை..

    நீங்கள் ஜான் டிரஸ்ட் வெளி இட்ட குரான் மொழி பெயர்ப்பில் பாருங்கள் , முஸ்லிம் -புஹாரி நபி மொழி பதிப்பிலும் பாருங்கள் தெளிவாக இருக்கிறது .

    ஜைனுல் ஆபிதீன் என்பவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்ற ரீதியில் தான் முதலில் நாம் இருந்தோம் , அவர் சொன்ன விடையங்களை தேடி பார்க்கும் போது தான் தெரிந்தது அதில் உள்ள உண்மை நிலவரம் .

    எதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து வைத்து கொள்வது நல்லது தானே .
    எனது கூற்றுக்கு மறுப்பு இருந்தால் சொல்லுங்கள் .

  • மஜீத் துபாயிலிருந்து said,

   02/08/2010 இல் 08:05

   சகோதரரே, என்ன கேள்வி இது? நையாண்டியையும் கோபத்தையும் தாண்டி எனக்கு கவிஞர் வடிக்கும் ரத்தக்கண்ணீர் தான் தெரிகிறது.

 6. nagoorumi said,

  01/08/2010 இல் 16:49

  கண்டு பிடித்துவிட்டார்கள், உனக்குச் சொல்வார்கள், இன்ஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகளில் இருக்கும் அங்கதம் ஒரு தேர்ந்த கவிஞனுக்கே உரியது. மிக எளிமையான, அதே சமயம் குறி தவறாத செருப்படி..(ஆறுமாத ஆராய்ச்சியாளர்களுக்குத்தான்).

  நாகூர் ரூமி

  • abdullah said,

   02/08/2010 இல் 18:39

   இறைவனுக்கு அவனுக்கே உரிய உருவம் இருக்கிறது என்ற செய்தியை மிக தெளிவாக தாங்கி வரும் இந்த நபி மொழிக்கு யாரேனும் பதில் சொல்ல , விளக்கம் சொல்ல முடியுமா ?

   முஸ்லிம் கிரந்தத்தில் : இறைவனை காண்பதற்கான சான்று என்றும் , இறைவனை காணும் வழிமுறை என்றும் தலைப்பிட்டு இந்த நபி மொழியை பதிவு செய்து இருகிறார்கள் :

   இந்த நபி மொழி தெளிவாக சொல்கிறது , என்னால் மனமுரண்டாக மறுக்க முடியவில்லை.

   நாகூர் ரூமி அவர்கள் இதற்க்கு விளக்கம் அளித்தால் நலமாக இருக்கும் இன்ஷாஅல்லாஹ்.

   அத்தியாயம்: 1, பாடம்: 1.80, ஹதீஸ் எண்: 266

   “சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று அல்லாஹ் அவர்களிடம் கேட்பான். அதற்கு அவர்கள், ” (இறைவா! எங்களுக்குப் பேரருள் புரிந்து) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்தாயே! (எங்களுக்கு வேறென்ன வேண்டும்?)” என்று கேட்பார்கள்.

   அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி(அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்கத் தம் இறைவனைக் காண்பதைவிட அவர்களுக்கு வேறேதும் அதிவிருப்பமாக இருக்காது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

   அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி)

   அத்தியாயம்: 1, பாடம்: 1.81, ஹதீஸ் எண்: 267

   மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

   “அவ்வாறே (மறுமையில் தெளிவாக) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்று கூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீய சக்தி)களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின் தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.

   அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்” என்பர். அப்போது நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயர்ந்தோனுமாகிய அல்லாஹ், அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம், “நான் உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று கூறியவாறு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதலாமவர்களாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும், “அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று” என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணித்து விட்டு, “கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள், “ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள்.

   (தொடர்ந்து),

   “அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களின் தன்மைக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயல்களால் (அங்கேயே) எஞ்சிவிடும் இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறியவர்களில், தான் கருணை காட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். நரகத்திலிருக்கும் அவர்களை அவர்களது ஸஜ்தாவின் அடையாளங்களை வைத்து வானவர்கள் இனம் கண்டு கொள்வார்கள். மனிதனி(ன் நெற்றியி)ல் உள்ள ஸஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப்பகுதிகளை நரகம் தீண்டுகிறது. ஸஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆவே, அவர்கள் அங்கமெல்லாம் கருத்து விட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது அவர்கள் மீது உயிர்நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (புதுப்பொலிவுடன்) நிறம் மாறி விடுவார்கள்.

   பிறகு இறைவன் (தன் எல்லா) அடியார்களிடையேயும் தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது சொர்க்கத்துக்கு உரிய இறுதியான ஒருவர் நரக வாயிலின் எதிரில் எஞ்சியிருப்பார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்தெடுக்கிறது. ஆகவே, என் முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!” என்று வேண்டி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைச் சொற்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், “நீ கேட்டதை நான் கொடுத்தால் வேறெதையும் கேட்க மாட்டாயே?” என்று கேட்பான். அதற்கவர், “(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தை விட்டு (வேறு பக்கம்) திருப்பி விடுவான். இதையடுத்து அவர் (தூரமாக இருக்கும்) சொர்க்கத்தை முன்னோக்கி, அதைப் பார்த்துக் கொண்டு, அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.

   பிறகு, “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டு செல்வாயாக!” என்பார். அதற்கு இறைவன் அவரிடம், “இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து, “என் இறைவா … ” என்று தொடங்கி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், “இதை(யும்) நான் உனக்கு வழங்கி விட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைப்பாயோ?” என்று கேட்பான்.

   அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணை! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன்)” என்று சொல்லி விட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை அனுமதிப்பான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும் போது அவருக்காகச் சொர்க்கம் திறந்து கொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரைதான் அமைதியாக இருப்பார். பிறகு, “என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!” என்று கேட்பார். அப்போது அவரிடம் இறைவன், “இப்போது உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்பதில்லை என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கினாயே! ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான். என்னே உன்னுடைய வாக்குமாற்றம்!” என்பான். அதற்கு அவர், “என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகி விடக்கூடாது” என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்து விட்டு, “சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்” என்று கூறி விடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன், “இன்னின்னதை நீ ஆசைப்படு” என்று அவருக்கு நினைவுபடுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கி விடும்போது, “இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று மிக்குயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

   அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

 7. mydeen said,

  01/08/2010 இல் 17:12

  YA ALLAH KULAPANGALILIRUNDHU UNNIDAM NAAN PAADHUKAAVAL THEDUKIRAEN……….ENNAI KAAPAATRUVAAYAHA….

 8. ரூமி said,

  05/08/2010 இல் 17:26

  அன்பார்ந்த சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். சகோ அப்துல்லாஹ் நீண்ட ஹதீதுக்ளை மேற்கோள் காட்டி சகோ பிஜே-யின் வாதம் சரி என்று சொல்ல வருகிறார். நான் மௌனம் காத்திருப்பதும் அதற்காகத்தான். சகோ பிஜே ஆறு மாதம் கழித்து தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவாரல்லவா? அப்போது நான் என் வலைத்தளத்தில் அதை மறு பதிவிட்டு அதற்கு பதில் சொல்லலாம் — எனக்குத் தெரிந்த வரையில் — என்று காத்திருக்கிறேன்.

  என்றாலும், சில குறிப்புகளைத் தருகிறேன். முஸ்லிம்களுக்கு என்னுடைய ஆத்மார்த்தமான வேண்டுகோள் ஒன்றுதான்:

  தயவு செய்து சொந்தமாகச் சிந்தியுங்கள்.

  உதாரணமாக, நமக்கு உருவமும் உடலும் இருக்கிறது. அதாவது நமக்கு ஒரு ஆரம்பமும் (தலை) முடிவும் (கால்) உள்ளது. பிறப்பும் இறப்பும் என்றுகூட வைத்துக் கொள்ளலாம். நாம் தேவையுள்ளவர்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தேவையற்றவன். ’அல்லாஹுஸ் ஸமத்’ என்ற வசனத்தின் (112:02) பொருளும் அதையே சுட்டுகிறது. ஸமத் என்ற சொல்லுக்கு அரபியில் அனேக அர்த்தங்கள் உண்டு. எல்லா அர்த்தங்களும் தேவையற்றவன், நித்தியன் என்ற பொருளில் கொண்டுபோய் விடுகின்றன.

  அல்லாஹ்வுக்கு ஒரு உருவம், நாம் மறுமையில் பார்க்கக் கூடிய ஒரு உருவம் என்றே வைத்துக் கொள்வோம், உண்டு என்றால், அவன் ஆரம்பமும் முடிவும் உள்ளவனாக ஆகிவிடுகின்றானல்லவா? உருவம் என்ற ஒன்று அவனுக்குத் தேவையாகிவிடுகிறதல்லவா?

  அப்படியானால் அவன் தேவையற்றவன், மனிதர்கள்தான் தங்களுடைய தேவைகளை அவனிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பது பொய்யாகிவிடுமல்லவா?

  அப்படியானால் பெருமானார் சொன்ன ஹதீதுகளின் பொருள் என்ன? அவைகள் ரொம்ப எளிமையானவை. மிகமிக எளிமையான மக்களுக்காகப் பேசப்பட்டவை. குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டிய தாயின் வார்த்தைகளைப் போன்றவை அவை.

  கேட்கின்ற மக்களின் அறிவுக்குத் தக்கவாறுதான் பெருமானார் பேசுவார்கள் என்பது ஹதீதுகளை ஊன்றிப் படிப்பவர்களுக்குப் புரியும்.

  எனவே, சுருக்கமாகச் சொல்வதானால், குர்’ஆனில், ஹதீதில் வருபவற்றிற்கெல்லாம் பொருள் அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது. பல இடங்களில் விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

  எல்லா இடங்களில் சிந்திக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. அந்த கடமையைச் செய்வதற்காக நாம் மானசீகமாக சிலரை நியமித்துவிட்டு,அவர்கள் சொல்வதே வேதவாக்கு என்று எண்ணிவிடுவதால்தான் பிரச்சனைகள் நமக்குள் வருகின்றன.

  சகோதரர்களே, நான் சொல்வதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் — ஹிதாயத் — உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அப்போது யாரும் சொல்லாமலே திருமறையின் அர்த்தங்களும், ஹதீதுகளின் விளக்கமும் உங்களுக்குப் புரியலாம்.

  எது எப்படி இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். யூதர்கள் ஆரம்பத்தில் தொழுது கொண்டிருந்த பைத்துல் முகத்தஸை நோக்கியே முஸ்லிம்களும் தொழுது வந்தார்கள். (உத்தரவுப்படி). பின்னர் க’அபாவை நோக்கித் தொழும்படி உத்தரவு வந்தது. நாம் முஸ்லிம்கள் என்பதை எல்லா வகையிலும் வேறுபடுத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை இறைவன் அப்போதே உணர்த்திவிட்டான். இது அடிப்படை. அப்படி இருக்கும்போது, இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லும் மற்ற மதத்தவரின் நம்பிக்கயைப் போன்றதுதான் நமதும் என்று சொல்வது, அதற்கு ‘ஆதாரமாக’ குர்’ஆனையும் ஹதீதுகளையும் காட்டுவது / புரிந்து கொள்வது என்று சொன்னால், அது எங்கே போய் முடியுமென்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள்.

  பெருமானாரின் 23 ஆண்டுகால வாழ்வையை இப்படிப்பட்ட விளக்கங்களால் கேள்விக்கு உள்ளாக்கி விடுகின்றீர்கள்.

  அப்படியானால், மேலே கூறப்பட்டது போன்ற ஹதீதுகளின் உண்மையான பொருள் வேறாக இருக்கலாம் என்றாவது புரிந்து கொள்வது அறிவுடையாகும்.

  சிந்தியுங்கள்.

  அன்புடன், மிகுந்த வருத்தத்துடன்
  நாகூர் ரூமி

  • அப்துல்லாஹ் said,

   10/08/2010 இல் 20:08

   அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாவதாக !

   சகோதரர் ரூமி அவர்களுக்கு , முதலில் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் நான் உங்களுடன் செய்வது விவாதம் அல்ல கலந்துரையாடல். .

   சத்தியத்தை யார் சொன்னாலும் அதை முறையாக அணுகி , சுய ஆய்வு செய்து ஏற்று செயல் படவேண்டும் என்பதே நம்முடைய நிலைபாடு.

   தங்களின் முறையான விளக்கத்தை எதிர்பாத்த எனக்கு மிக பெரிய ஏமாற்றத்தை தந்தது தங்களின் இந்த வரிகள்
   //”” அப்படியானால், மேலே கூறப்பட்டது போன்ற ஹதீதுகளின் உண்மையான பொருள் வேறாக “இருக்கலாம்” என்றாவது புரிந்து கொள்வது அறிவுடைமையாகும்.. “”///

   தாங்கள் நான் குறப்பிட்ட ஹதீதின் பொருளை முறையாக விளக்கி விட்டு, தாங்கள் கூறிய சுய கருத்துக்களை சொல்லி இருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன் .

   எதையும் உறுதியாக தெரிந்தால் அதன் பக்கம் சாய்வது அறிவுடைமை ஆனால் “இருக்கலாம்” என்ற சந்தேக நிலையில் முடிவெடுப்பது எப்படி அறிவுடைமையாகும் என்பது புரியவில்லை .

   அடுத்து நீங்கள் கேட்டீர்கள் //””அல்லாஹ்வுக்கு ஒரு உருவம், நாம் மறுமையில் பார்க்கக் கூடிய ஒரு உருவம் என்றே வைத்துக் கொள்வோம், உண்டு என்றால், அவன் ஆரம்பமும் முடிவும் உள்ளவனாக ஆகிவிடுகின்றானல்லவா? உருவம் என்ற ஒன்று அவனுக்குத் தேவையாகிவிடுகிறதல்லவா? “”//

   மனிதன் – ரூஹு இந்த கலவையை மனதில்வைத்து கேள்வி எழுப்புகிறீர்

   உங்களின் இந்த கேள்வியில் இருந்தே , நீங்கள் நம்மை போன்று (அ) நம்மால் சிந்தித்து உணர கூடிய ஒரு உருவத்தில் அல்லாஹ் இருப்பதை சொல்வதாக நீங்கள் நினைத்து கொள்கிறீர் ..

   நமக்கு அல்லாஹ் கொடுத்த மூளையை கொண்டு அவனுடைய உருவத்தை நாம் வடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலானவனுக்கு எதுவும் செய்ய முடியும்…

   நாம் சொல்வது எல்லாம் எப்பொருளும் அல்லாத , ஈடு இணை இல்லாத அல்லாஹ்விற்கே உரிய உருவம் இருக்கிறது .இன்ஷால்லாஹ் மறுமையில் மட்டுமே அந்த ஏக இறைவனை நாம் பார்க்க முடியும் என்பதை நம்புகிறோம்.

   இத்தோடு முற்று பெறுகிறது இங்கே உருவத்தை வரையறை செய்யவில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை.

   அல்லாஹ்வும் , அவனது தூதரும் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால் அதற்கு வேறு அபிப்பிராயம் கொள்ளலாமா ?

   எனக்கு ஒன்று இன்னும் புரியவில்லை //”” குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டிய தாயின் வார்த்தைகளைப் போன்றவை அவை. கேட்கின்ற மக்களின் அறிவுக்குத் தக்கவாறுதான் பெருமானார் பேசுவார்கள் என்பது ஹதீதுகளை ஊன்றிப் படிப்பவர்களுக்குப் புரியும். “”//

   இந்த கருத்து உண்மையானது தான் , இந்த கருத்தை உள்ளத்தில் வைத்து தானே ஹதித் தொகுக்கபட்டுள்ளது. அப்படியானால் இந்த விஷயம் ஹதிதை தொகுத்தவர்களுக்கும் – மொழி பெயர்தவர்களுக்கும் தெரியும் தானே ?? பிறகு ஏன் இந்த இமாம்கள் உங்களின் வாதப்படி நேரடி அர்த்தம் செய்தார்கள் .

   பல ஹதீத்கள் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற நேரடி அர்த்தத்தில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள் ?

   உதாரணத்திற்கு நான் குறிப்பிட்ட ஹதித்
   அத்தியாயம்: 1, பாடம்: 1.80, ஹதீஸ் எண்: 266
   அத்தியாயம்: 1, பாடம்: 1.81, ஹதீஸ் எண்: 267
   இது முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யபட்டுள்ளது.
   நான் ஒன்றும் உங்களின் எண்ணப்படி p . j சொன்னதை சொல்லவில்லை
   அந்த ஸஹிஹ் முஸ்லிம் நூலை எடுத்து பார்த்தால் மேலே நான் குறிப்பிட்ட வாசகம் தெளிவாக வருகிறதே..

   ஒரு சராசரி முஸ்லிம் நபி மொழி களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தானே மொழி பெயர்ப்பு செய்து இமாம்கள் தருகிறார்கள் , அதை அப்படியே புரிந்து கொள்ள கூடாது என்றால் மொழி பெயர்ப்பு பதிப்புகள் எதற்கு …??
   அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி பார்த்தால் மொழி பெயர்ப்பு செய்யும் இமாம்களின் தவறா இது ? எந்த கருத்தில் ஒரு சாதாரண முஸ்லிம் புரிந்து கொள்ளவேண்டுமோ அந்த கருத்தை நேரடியாக மொழி பெயர்த்து இருக்கலாமே ? எங்கே தவறு நிகழ்கிறது ஒன்று புரியவில்லை ..

   நான் ஒன்றும் p.j என்னும் தனி மனிதரின் அடிசுவடியை பின்பற்றுபவனில்லை அதே சமயம் சத்தியத்தை யார் சொன்னாலும் எந்த தனி நபர் சொன்னாலும் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும். நபி (ஸல் ) அப்படிதான் நமக்கு சொல்லி கொடுத்துள்ளார்கள்.

   எதையும் சிந்தித்து ,ஆராய்ந்து நம்புவது இறை அச்சத்தை வலுபடுத்தும் என்ற ரீதியில் சில வினாக்கள் என்னுள் எழுகிறது அதை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன் :

   1 . அல்லாஹ்வை மறுமையில் பார்க்க முடியுமா ?
   2 . முடியும் என்றால் எவ்வாறு ? உருவம் இல்லை என்கிறீர் , அப்படியானால் ஒளி யாக பார்க்கலாமா ? ஒளி என்றாலும் உருவத்திற்குள் வந்து விடுமே – எப்படி புரிந்து கொள்வது .
   3 . இல்லை முடியாது என்றால் நபி (ஸல்) அவர்கள் ” மறுமையில் அல்லாஹ்வை பார்க்கலாம் என்று கூறி உள்ளார்களே அது எப்படி இதிலும் தவறான மொழி மொழியாக்கமா ?

   4 . அல்லாஹ்விற்கு உருவமில்லை அவன் உருவமற்றவன் என்று அல்லாஹ் அல்லது நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருகிறார்களா ?

   சத்தியத்தை உறுதியாக புரிந்து கொள்ள இந்த விடயத்தை கேட்கிறேன் , இன்ஷால்லாஹ் உங்களின் பதில் -விளக்கம் சத்தியத்தை நோக்கி பயணித்தால் அதை ஏற்று கொள்வதில் இன்ஷால்லாஹ் எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை .

   “”முழு நிலவுள்ள ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின்
   தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல், அல்லது குழப்பமடையாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்…
   (அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-573)””

   (வீண் விதண்டா வாதத்தில் எமக்கு உங்களை போலவே விருப்பமில்லை , ஒரு கருத்து பரிமாற்றம் என்ற அடிப்படையில் நான் இங்கே நுழைதேன் வேறு எந்த எண்ணமும் நமக்கு இல்லை . ஒரு வேலை தங்களின் நேரத்தை வீனடித்திருந்தால் அல்லாஹ்விற்காக பிழை பொருத்து கொள்ளுங்கள் )

   அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் .

 9. 07/08/2010 இல் 10:19

  “வெளி” (space) எனப்படுவதில் எல்லைகளைப் (boundaries) பெற்று “உருவம்” (shape of an object) என்ற ஒன்று அமைய வேண்டும். ஒரு உருவத்தின் எல்லைகளை உணரும் செயலானது நிச்சயமாக ஒரு கால இடைவெளியில் (over a span of time) நிகழும் செயல். “வெளி”யில் எல்லைகளை வகுத்துவிட்டு காலத்தினைத் தொடர்பு படுத்தாமல் இருக்கவே முடியாது என்பது அடிப்படை இயற்பியல் நியதி.

  உருவத்திற்குள் அடைபடும் இறைவன், காலத்தின் பக்கம் தேவையற்றவனாக இருக்க முடியாது.

 10. nagoorumi said,

  11/08/2010 இல் 19:58

  அன்புச் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் வாதங்களை மதிக்கிறேன். ஆனால் உடனே இப்போதே பதில்கள் சொல்ல எனக்கு விருப்பமில்லை. பிஜே அவர்கள் அவருடைய ஆறு மாத ஆராய்ச்சியை முடித்துவிட்டு தனது கண்டுபிடிப்புகளை வெளியிடட்டும். அப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீதுகளுக்கும் சேர்த்து எனக்குத் தெரிந்த, நான் புரிந்து கொண்ட விளங்கங்களை அளிக்கிறேன். நானும் உங்களைப் போலவே திறந்த மனதுடன்தான் பேசுகிறேன். அல்லாஹ்வுக்கு உருவம் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். இப்போது என் நிலைப்பாடு இதுதான். எது உண்மை என்பதை அல்லாஹ்தான் அறிவான். என்றாலும் நாம் கலந்துரையாடலாம். நான் சரி என்று நீங்கள் ஒத்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் சரி என்று நான் ஏற்றுக்கொள்ளலாம். பார்க்கலாம். அல்லாஹ் எப்படி வழி நடத்தப் போகிறான் என்று.

  அன்புடன்
  ரூமி

 11. அப்துல்லாஹ் said,

  12/08/2010 இல் 16:09

  அழைக்கும் ஸலாம் சகோதரர் ரூமி அவர்களே ,

  நீங்கள் எப்போது பதில் சொல்ல விரும்புகிறீர்களோ அப்போது சொல்லுங்கள், எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பி.ஜெ அவர்கள் “ அல்லாஹ்விற்கு உருவம் உண்டா என்பதை ஆறு மாத காலம் ஆராய்ச்சி செய்ய போவதாக சொல்லவில்லை . மாறாக தனது இணையதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளது “ஆறுமாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட நான் முடிவு செய்துள்ளேன் ” என்பது தான் ஆனால் அந்த ஆய்வில் இறைவனுக்கு உருவம் உண்டா ? என்பதும் இருக்கலாம்.

  இருந்தாலும் உங்களின் நிலைபாட்டை நிரூபிக்க சரியான ஆதாரங்கள் நீங்கள் தந்தாள் எனக்கு புரிந்து கொள்ள எதுவாக இருக்கும் என்றே நான் கேட்டேன்.

  என்னை பொருத்தவரை இறைவனுக்கு உருவம் உண்டு என்ற சிந்தனை 1995 ஆண்டு வெளி வந்த அல்-ஜென்னத் வர இதழ் படித்த பிறகு தான். அதில் தர பட்ட ஆதாரங்களையும் , விளக்கங்களையும் சுய ஆய்வு செய்து அதை ஏற்று கொண்டேன்.

  தற்போது நடைபெற்ற விவாதத்தை கூட மிக கவனமாக , நடுநிலையாக என்னுடைய கருத்தை வெளியில் வைத்து பார்த்து. என்னுடைய நிலையை உறுதி செய்துள்ளேன் .

  நிச்சியமாக சொல்பவரை விட சொல்லும் விடையதிர்க்கு தான் தான் மதிப்பளிதேன்.

  நீங்கள் உங்கள் நிலைபாட்டை சமயம் வரும் போது விளக்குங்கள் – எனக்கு எதுவாக இருக்கும்.

  (அல்லாஹ் உங்களுக்கு நற் கூலி வழங்குவானாக !- )
  அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

  • 17/09/2011 இல் 15:57

   அஸ்ஸலாமு அழைக்கும் … சகோதரர் நாகூர் ரூமி அவர்களுக்கு ஓர் நினைவூட்டல்..

   கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐயப்பாடுகளை நீக்குவதற்காக நாம் இந்த உரையாடலை தொடங்கினோம் ஆனால் மேலதிக விபரதிற்க்காக தாங்கள் ஆறுமாத காலத்திற்கு பிறகு பதிலளிக்கிறேன் என்று கூறி இருந்தீர்கள்.. ஆனால் இதுவரை பதில் இல்லை.

   தங்களின் வேலைபளு காரணமாக ,நேரமின்மையால் தங்களால் பதிலளிக்க முடியவில்லை என்று எண்ணுகிறேன். எனினும் மறதியாக விட்டிருந்தால்.. நினைவூட்டலாக இருக்குமே என்று இந்த மறுமொழியையிடுகிறேன்.

   அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உண்டாவதாக !

 12. 18/09/2011 இல் 20:06

  அலைக்கும் ஸலாம். நினைவூட்டியதற்கு நன்றி.உண்மையில் வேலைப்பளு அதிகம்தான். அதுவும் ரிடையர் ஆகப் போகிற இன்னும் நான்கைந்து ஆண்டுகளில்…! நான் பிஜே அவர்களுடைய ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன். அவை இதுவரை வெளி வந்திருப்பின் — இறைவனுக்கு உருவம் இருப்பதாக அவர் சொல்வது தொடர்பாக — எனக்கு சுட்டு அனுப்பவும். இன்ஷா அல்லாஹ் என் பதிலைச் சொல்கிறேன்.

  • அப்துல்லாஹ் said,

   19/09/2011 இல் 10:26

   தங்களின் உடன் பதிலுக்கு நன்றி சகோதரே… ரிடையரா ? உங்களுக்கா… என்ன சொல்கிரீகள் ? … தங்களை போல் சிந்தனையாளர்கள் இப்படி சொல்ல கூடாது ..

   எழுத்திற்கு ரிடையர் கொடுத்தாலும் – சிந்தனைக்கு ,அறிவு தேடலுக்கு ரிடையர் கொடுக்க மாடீர்கள் என்று நம்புகிறேன்…

   சரி விஷயத்திற்கு வருவோம்.. இது சம்மந்தமாக நான் முன்பே தங்களிடம் கூறினேன் /// பி.ஜெ அவர்கள் “ அல்லாஹ்விற்கு உருவம் உண்டா என்பதை ஆறு மாத காலம் ஆராய்ச்சி செய்ய போவதாக சொல்லவில்லை . மாறாக தனது இணையதளத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளது “ஆறுமாத காலம் முழுமையாக ஒதுங்கி முற்றிலும் மார்க்கம் சம்மந்தமான ஆய்வில் ஈடுபட நான் முடிவு செய்துள்ளேன் ” என்பது தான் ஆனால் அந்த ஆய்வில் இறைவனுக்கு உருவம் உண்டா ? என்பதும் இருக்கலாம்./// ஆக ஒருவருடம் தாண்டிவிட்டது..

   அவர் இறைவனுக்கு உருவம் உண்டா என எந்த மறு ஆய்வையும் செய்ததாக தெரியவில்லை..

   நம்மை பொருத்தவரை – ஒரு விஷயத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் இஸ்லாம் அது பற்றிய பேசிய இறைவசனங்கள் – சஹீஹான ஹதீதுகள் ஆய்வு செய்து பார்த்து முடிவெடுக்க வேண்டும் என்பதே..

   பிஜே சொல்வதை வைத்து நாம் எந்த முடிவிற்கும் வரமுடியாது.. நமக்கு திருக்குரான்- ஹதீஸ்கள் தான் அடிப்படை என்று இருக்கும்போது உண்மையை கண்டறிய நாம் மற்றவரை எதிர்நோக்க வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணுகிறேன்.

   பிஜே கருத்து சரியா ? தவறா ? என்பது நமக்கு தேவை அற்ற விஷயம் . உண்மை என்ன அது தான் நமக்கு முக்கியம்..

   இந்த விஷயத்தில் அதாவது இறைவனுக்கு என்று தனித்தன்மையான உருவம் உண்டு என்று உலகில் முதல் முதலில் தமிழ்நாட்டில் பிஜே புதிதாக கண்டுபிடித்து சொன்னார் என்று சிலர் நினைத்து வைத்திருப்பது மிக தவறான ஒன்று…

   கவனிக்கபடாத ஒன்றை சுட்டிக்காட்டினார் என்றே சொல்ல முடியும்… இவரை விடுங்கள் நபி (ஸல் ) அவர்கள் முதல் பல மார்க்க மேதைகள் அக்காலத்திலும் ,இக்காலத்திலும் சொல்லிருகிரார்கள் என்பது தெளிவு.
   (அதை எற்றுகொல்வது அல்லது மறுப்பது என்பது வேறு விஷயம்)

   பிஜே நாளைக்கே இறைவனுக்கு உருவம் இல்லை நான் சொன்னதை திரும்ப பெற்றுகொள்கிறேன் என்று அறிவிக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம்… சிலர் இதுவும் சரிதான் என்பார்கள். சிலர் பாத்தீர்களா ? இவன் மீண்டும் மாறிவிட்டான் என்று விமர்சிப்பார்கள். ஆதலால் இது நமக்கு முக்கியமில்லை..

   சத்தியம் எது -உண்மை எது அதுதான் நமக்கு வேண்டும்..
   உண்மை என்று தெரியும் பட்சத்தில் நமக்கு அதை ஏற்றுகொள்வதில் எந்த நெருடலும் இருக்க கூடாது. அதை உலகமே எதிர்த்தாலும் சரியே…

   பொய்-மோசடி என்று தெரிய வந்தாலும் இதை நிலைதான். அதை ஏற்றுகொள்ள வேண்டும் என்பதே நமது நிலை.

   இவ்விஷயத்தில் நாம் பலமுறை -பலவாறாக – என் சக்திக்கு உட்பட்டு ,நடுநிலையோடு சுய ஆய்வு செய்து ஏற்றுக்கொண்டேன்…

   ஆனால் நீங்கள் இதே வழிமுறையில் இதை மறுகிரீர்கள் என்று நான் நினைத்தேன்.. ஆதலால் நீங்கள் எதற்கு ,எதை வைத்து இதை மறுகிரீர்கள் என்பதை அறிய ஆவல் பட்டேன்..

   தாங்கள் ஒரு எழுத்தாளர் ,சிந்தனையாளர் என்ற ரீதியில் தங்களின் கருத்தை பெற காத்திருக்கேனே ஒழிய பிஜே என்ன சொன்னார் ,சொல்வார் என்பதற்காக அல்ல.

   தங்களுக்கு நேரம் கிடைத்தால் — இது சம்மந்தமாக தங்களின் நிலையை தெளிவுபடுத்துங்கள் என்பதே எனது இறுதி வேண்டுகோள்.

   அஸ்ஸலாமு அழைக்கும்….


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s