ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?

பீம்ஷென் ஜோஷியின் மரணம் – ஹிஜ்ரியில் – 1431-ம் வருடம் சஃபர் மாதம் 9ஆம் தேதி, குழம்பிட்டேன், 1432-ம் வருடம் சஃபர் மாதம் 19ஆம் தேதி…

***

ஹமீது ஜாஃபர்  அனுப்பிய ‘ஹிஜ்ரி’ கட்டுரை :

என்னுடன் வசிக்கும் நண்பர் அஷ்ரஃப் , ‘சமுதாய ஒற்றுமை’ என்ற பத்திரிக்கையைக் காண்பித்து, ”அண்ணே!  நாம் எவ்வளவு தப்பு பண்றோம், அழகான அரபி காலண்டரை நாம் சரியாகப் பின்பத்துறதில்லை, இதிலெ எழுதியிருக்காங்க பாருங்க ஹிஜ்ரி காலண்டரைப் பத்தி” என்றார்.  சமுதாய ஒற்றுமை பத்திரிக்கை த.மு.மு.க வின் மாத இதழ் என்று எனக்குத் தெரியும். அதில் நல்ல பல கருத்துக்கள், வரலாற்று நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் நான் கொடுப்பதைல்லை. நண்பர் அஷ்ரஃப் கொடுத்த டிச 2010 இதழில்  ‘வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்’  என்ற கட்டுரையைப் படித்தபோது முஸ்லிம் வெறித்துவம் புகட்டப்படுவதை உணரமுடிந்தது. இதை வேறு யாரும் எழுதியிருந்தால் மன்னித்து விடலாம் ஆனால் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரே எழுதியிருப்பது வேதனைக்குரியது.

உலகளவில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை பல்முனைகளில் தாக்குதல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இச்செய்தி அமைந்துள்ளது. கட்டுரையில் ஹிஜ்ரி, கிருத்துவம், தமிழ் காலண்டர்களை அலசிப்பார்த்து அவைகள் சரியில்லை குழப்பம் நிறைந்தது ‘அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டர்தான் சரியானது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார் இந்த ஆலிம்சா.

அல்லாஹ் வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதற்குமுன் சில விசயங்களைப் பார்க்கவேண்டும். 1985/86 களில் எங்க ஹஜ்ரத் ஹிஜ்ரியையும் கிரிகோரியன் காலண்டரையும் ஒன்று படுத்தி perpetual calendar ஒன்றை CASIO FX-801P  Programmable Calculator ல் BASIC language ல் ப்ரோக்ராம் பண்ணிக்கொண்டிருந்தபோதுதான் உலகத்தில் எத்தனை வகையான காலண்டர்கள் இருக்கின்றன என்ற செய்தி எனக்கு தெரியவந்தது. அதில் memory போதவில்லை தவிர டிஸ்ப்ளே ஸ்கிரீன் சின்னதாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் எடுக்கவேண்டியதாக இருந்தது. 1987 ல் Casio PB1000  என்ற பாக்கட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிச் சென்றேன். புரோகிராமிலுள்ள சில குறைபாடுகளை நீக்கி அதில் மிகவும் சரியாக வரத்தக்க ரீதியில் வடிவமைத்தார்கள். 1-1-1 தேதியிலிருந்து infinite date வரை எந்த தேதியை தட்டினாலும் சந்திரத் தேதி (ஹிஜ்ரிக்கு முந்திய தேதி உட்பட) கிடைக்கும். வேலூர் பாக்கிஹாத்து சாலிஹாத்து மதரஸாவில் ஓதிய ஒரு மௌலவி, இண்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு காலண்டரை உருவாக்கியது என்னைப் பொருத்தவரை பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் மரணத்திற்கு பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை தவிர இப்போது பொத்தானைத் தட்டினால் போதும் காலண்டர் கொட்டுகிறது. அந்த அளவுக்கு பல்வேறு அமைப்புக்களின் ப்ரோக்ராம் இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையைப் படித்தபின் கை அரிக்க ஆரம்பித்தது, பழைய ஆவணங்கள் இல்லாததால் நேராக இணையத்துக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தேன். அவைகளில் கிடைத்தவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

காலண்டர் முதன் முதலில் பண்டை காலத்து மனிதர்கள் (bronze age) இரவு பகல் மாறிவருவதை வைத்து நாட்களை வகைப் படுத்தினாலும் சந்திரனின் சுழற்சியை வைத்து மாதங்களை எலும்புகளில் குறித்து வந்தார்கள் என்று அறியமுடிகிறது. சந்திரக் காலண்டரை முறையாகப் பயன்பாட்டுக்கு முதலில் கொண்டுவந்தது மெஸபடோமியர்கள் (கி.மு.2800) என்றும் பண்டைய எகிப்தியர்கள் என்றும், ரோமானியர்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 27.321582 நாட்கள்(27D 7Hr 43.1Min) என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும் பூமியுடைய சுழற்சி, பூமியின் சுற்றுப்பாதை இவைகளினால் சந்திரன் ஒரு முழு சுற்று பெற (The synodic month) 29.530589 நாட்கள் (29D 12Hr 44min 2.9 s) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் முழுமைபெற அது எடுத்துக்கொள்ளும் காலம் 354.375 நாட்கள். இதெல்லாம் வானவியல் கணக்கு, இது நமக்கு தேவையில்லை. ஒரு பிறைக்கும் மறு பிறைக்கும் இடைப்பட்ட காலம் சரியாக 29/30 நாட்கள் வராததால் ஒரு மாதம் 29 ஆகவும் மறு மாதம் 30 ஆகவும் கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு வருடத்துக்கு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது

ரோமானிய சக்ரவர்த்தி ஜுலியஸ் சீசர் (45 கி.மு.) வானவியல் நிபுணர்களை வைத்து ஜுலியன் காலண்டரை உருவாக்கினார். இதில் 12 மாதங்களும் 365.25 நாட்கள் கொண்ட ஒரு வருடமும் வருவதால் 365 நாட்கள் கொண்டது ஒரு வருடமாகவும் துண்டு விழும் பகுதியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கி 366 நாட்களாகவும் கணக்கிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து போப் கிரிகோரி XIII  என்பவரால் இப்போது புழக்கத்திலிருக்கும் ஆங்கிலக் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது 24 பிப்ரவரி 1582 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலியன் காலண்டரில் இருந்த சில தவறுகள் இதிலும் தொடர்ந்து வந்ததால் அவ்வருடமே திருத்தப்பட்டது 1582 அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமைக்குப் பிறகு மறு நாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி வருகிறது.

ஜூலியன் காலண்டரும் கிரிகோரியன் காலண்டரும் பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் காலத்தை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி எடுக்கும் காலம் 365.2564 நாட்கள். இதை அடிப்படையாக வைத்து நான்காண்டுகளுக்கு ஒரு நாள் கூடுதலாக எடுத்து 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாக எடுக்கப்பட்டுள்ளது. (Gregorian solar calendar is an arithmetical calendar. It counts days as the basic unit of time, grouping them into years of 365 or 366 days; and repeats completely every 146,097 days, which fill 400 years, and which also happens to be 20,871 seven-day weeks.[10] Of these 400 years, 303 (the “common years”) have 365 days, and 97 (the leap years) have 366 days. This gives an average calendar-year length of exactly 365.2425 days, or 365 days, 5 hours, 49 minutes and 12 seconds.)

ஒரு சூரிய வருடத்துக்கும் ஒரு சந்திர வருடத்துக்கும் இடையில் வித்தியாசப்படும் நாட்கள் 11. இது 3 வருடங்களில் ஒரு மாதம் மூன்று நாட்கள் அதிகமாகி 300 சூரிய வருடங்களில் 11 வருடங்கள் அதிகமாகி 311 சந்திர வருடங்கள் ஆகின்றன. எப்படி இருந்தாலும் -சூரிய காலண்டரும் சரி சந்திர காலண்டரும் சரி – சூரியன், பூமி, சந்திரன் இவைகளின் சுழற்சி(spinning), ஓட்டம் (orbiting) இவைகளை வைத்து துல்லியமாக நாட்களை கணக்கிட முடியாததால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நேரத்தில் மாற்றம் செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஜனாப் முஜிப் ரஹ்மான் உமரி அவர்கள் ’சந்திரக் காலண்டருக்கு நிகராக சூரிய காலண்டரை உருவாக்கவேண்டும் என்பதற்காக கி.மு.700 காலகட்டங்களில்..’ என்று தொடங்கி அதிலுள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி  ‘ஒவ்வொரு மாதத்துக்கும் அவர்களின் கடவுள் பெயரையும் தங்கள் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். துண்டு விழும் கால் நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் வருடமாக்கிக் கொண்டனர், இப்படி குழப்பம் நிறைந்த கிருஸ்துவ காலண்டர் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது’  என்று எழுதியுள்ளார். (பக்கம் 20)

ஒருவர் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் தன் பெயரை வைத்துக்கொள்வது இயல்பு. சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பு ‘நியூட்டன் லா’; சர் சி.வி.ராமனுடையது ‘ராமன் எஃபக்ட்’; பிதாகரஸின் கணதவியலுக்கு ‘பிதாகரஸ் தேற்றம்’ அதுபோல  மாதங்களுக்கு ஜூலை ஆகஸ்ட் என்று அவர்கள் பெயரை வைத்துக்கொண்டதில் தவறு என்று சொன்னால் அப்துல் வஹாப் நஜ்தி என்ற சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து குறு நில மன்னர்களை மண்டியிடச் செய்து நாட்டைப் பிடித்த முஹம்மது பின் சவுது  தன் பெயரை (சவுது) சவுதி அரேபியா என்று தன் நாட்டுக்குப் பெயர் சூட்டிக்கொண்டது தவறாகாமல் எப்படி இருக்கமுடியும்? (நஜ்தி எப்போதாவது கட்சி மாறிவிடுவானோ என்று பயந்து அவர்களுக்குள் சம்மந்தம் பண்ணிக்கொண்டது வேறு விஷயம்)

பெருமானார் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சந்திரக் காலண்டரை அரேபியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அந்த அடிப்படையிலேயே ஹஜ் உள்பட அவர்களுடைய எல்லா செயல்களும் நடைபெற்று வந்தன. இதில் எந்த மாற்றம் ஏற்படாமல் இஸ்லாத்தின் எல்லா செயல்களும் இறை உத்திரவுகளும் அமையப் பெற்றுள்ளன. பெருமானார் அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள். இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் மார்க்க சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றியே செயல்பட்டு வருகிறார்கள். இது ஆலிம்சாவின் கண்ணுக்குப் புலப்படவில்லை

சந்திரக் காலண்டர் அல்லா வழங்கியதா?

’எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவ காலண்டரை மனித இனம் முழுமையாக ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் துல்லியமாக, நாட்களைக் காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் BOLD முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்என்று ஆசிரியர் அங்காலாய்க்கிறார். (பக் 21)

சந்திரக் காலண்டரை அல்லாஹ் படைத்தான் என்றால் சூரியனை யார் படைத்தார்? அவைகளின் ஓட்டத்தை யார் நிர்ணயித்தார்? “தன்னுடைய வரையரைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்)” (அல் குர்ஆன்36:38); “சூரியன் சந்திரனை அணுகமுடியாது; இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (அல் குர்ஆன்36:40)

சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ஓளி இல்லாவிட்டால் பிறை ஏது? பிறை இல்லாவிட்டால் காலண்டர் ஏது? “(தவறாது)ஒழுங்காக நடைபெற்றுவருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் (படைத்து)அமைத்தான், (மாறிமாறி வரக்கூடிய) இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.” (அல் குர்ஆன்14:33)

ஒரு முறை நபி(சல்) அவர்களிடம் சில யூதர்கள் வந்து, “ஒ முஹம்மதே, குகை மனிதர்கள் 300 ஆண்டுகள் இருந்ததாக இன்ஜீல் கூறுகிறது. உங்கள் குர் ஆனில் 300ம் பின் ஒரு 9 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குர்ஆன் அல்லாஹ் இறக்கியதாக சொல்கிறீர்கள். இன்ஜீலும் அல்லாஹ் இறக்கியிருக்கும்போது உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எப்படி சொல்ல முடியும்? இதில் எது உண்மை? என்ற வினாவை வைத்தனர். அப்போது அருகிலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிபெற்று “சூரியனைப் படைத்தவனும் அல்லாஹ்தான் சந்திரனைப் படைத்தவனும் அல்லாஹ்தான், உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லியிருக்கிறான் எங்களுக்கு சந்திர கணக்குப்படி சொல்லியிருக்கிறான்” என யாருடைய மனமும் புண்படாதவாறு சரியான விளக்கத்தை அளித்தார்கள்.

ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக எளிமையாக பதிலுரைத்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் அலி (ரலி) அவர்கள். இதையே நம்ம ஆலிம்சாவிடம் கேட்டால்..  “உங்க இன்ஜீல் மனுஷன் எழுதினது எங்க குர்ஆன்தான் அல்லாஹ் இறக்கியது அது சொல்றதுதான் சரி” என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.  

துல்லியமானதா?

‘மாத நாட்கள் 29 ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354-355 நாட்களைக் கொண்டதாக
மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.’ எதிர்வரும் பல நூறு வருடங்களுக்கு சந்திரனின் மிகத்துல்லியமான ஓட்டத்தை கணித்து ‘உம்முல் குரா’ காலண்டரை சவுதி அரேபியா பின் பற்றிவரும்போது (பக் 22) பிறை பார்ப்பதில் குழப்பம் எதற்கு? பிறை கமிட்டி  எதற்கு?

ரமலானையும் நோன்புப் பெருநாளையும் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் கொண்டுவருவது ஏன்?. பிறை மஃக்ரிபில் தோன்றி ஒரு சில  நிமிடங்களில் மறைந்துவிடும், பிறை பார்த்தாகிவிட்டது என்று பல குழப்பத்துக்கிடையில் பத்து மணிக்குமேல் அறிவிக்கிறார்கள். துல்லியத்தில் ஏன் இந்த குழப்பம்?

தமிழ் பஞ்சாங்கம்

பௌர்ணமி அன்று பிறை 13 ஆகவும் அமாவாசை அன்று பிறை 27 ஆகவும் இருக்கும் சிவகாசி காலண்டரையே நம்முடைய மதரஸாக்களும் இஸ்லாமிய நிறுவனங்கள் பின்பற்றுவது வேதனையான விஷயமாக (பக் 22) ஆலிம்சாவுக்குப் படுவது வேதனையானது.

பாவம் அவருக்குத் தெரியாது, நாம் எடுக்கும் முதல் பிறையை ஹிந்துக்கள் மூன்றாம் பிறையாக கணக்கிடுவார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட ஆச்சாரங்களை அனுசரிக்கும் ஹிந்து மக்கள் சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கிறார்கள். மத சடங்குகளுக்கும் சோதிட முறைகளுக்கும் சந்திர ஓட்டத்தை 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ‘திதி’  முக்கியமாக கருதப்படுகிறது, எனவே அவர்களுடைய பஞ்சாங்கத்தில் பிறை எந்த நாழிகையிலிருந்து எந்த நாழிகை வரை தெரியும்; எந்த பருவத்தில்(கோணம்) தெரியும்; வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வானதா இல்லை தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்வானதா இல்லை சமமாகத் தெரியுமா என்பதையெல்லாம்
குறிப்பிட்டிருப்பார்கள். (வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வு என்றால் பிறை சற்றே வடக்கு திசையில் உயர்வாகவும் தெற்கு திசையில் தாழ்வாகவும் இருக்கும்; சமம் என்றால் சந்திரனின் இரண்டு முனைகளும் சமமாக இருக்கும்). கிரிதாரிலால் சியால்கோட்டி என்பவரால் கணிக்கப்பட்ட ‘ஜன்த்ரி’ என்ற உருது பஞ்சாங்கத்தில் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

‘ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது; ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.’ என்கிறார். (பக்கம் 18/19)

இவ்வளவு வேதனைப் படும் ஆலிம்சா முதலில் தான் நடக்கிறாரா என்று உணர்ந்து பார்க்கவேண்டும். அவர் நடத்தும் பத்திரிக்கை எந்த காலண்டரை பின்பற்றுகிறது? அவருடைய சொந்த கணக்கு வழக்குகளை கிருத்துவ காலண்டரைப் புறக்கணித்துவிட்டு ஹிஜ்ரிக்கு மாற்ற  முடியுமா? இது என்ன ஊருக்கு உபதேசமோ? பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து கணிக்கப்பட்டுள்ள கிருத்துவ காலண்டரை எப்படி புறக்கணிக்க முடியும்? தவிர நம்முடைய தொழுகை நேரம் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்லவா இருக்கிறது. அப்படி இருக்க வாழ்க்கை முறைக்கு கிருத்துவ காலண்டரை பயன் படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? “ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.” (அல்குர்ஆன் 10 : 5)

சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்’. என்கிறார். (பக் 21/22)

சந்திரனை மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை, பகல் நேரத்தில் சூரியனையும் இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து நேர காலத்தையும் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். ஹிஜ்ரி காலண்டர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாகவுமில்லை,  மறக்கவுமில்லை. இப்போதுள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் அரபி மாசத்தை சரிவர புரிந்து வைத்திருந்தாலும் வயதானப் பெண்களுக்கு மாதங்களின் பெயர் தெரியாவிட்டாலும் அந்தந்த பகுதியில் நடக்கும் கந்தூரியை வைத்து மாதங்களின் பெயர்களைத் அறிந்து வைத்திருந்தார்கள்.

1 முஹர்ரம்  – ஆஷுரா மாசம் 
2 சஃபர்  – அப்பா கந்தூரி(சதக்கத்துல்லாஹ் அப்பா கந்தூரி)/சபர் மாசம்
3 ரபியுல் அவ்வல் – ரசூலுல்லாஹ் மவுலிது மாசம்
4 ரபியுல் ஆகிர் – முஹைதீன் ஆண்டவர் மாசம்
5 ஜமாத்துல் அவ்வல் – முத்துப்பேட்டை கந்தூரி மாசம்
6 ஜமாத்துல் ஆகிர்  – நாகூர் கந்தூரி மாசம்
7. ரஜப்  – மெஹ்ராஜ் மாசம்
8 ஷஹ்பான்  – பராத்து /வராத்து மாசம்
9 ரமலான்  –  நோன்பு மாசம்
10ஷவ்வால்  – நோன்புப் பெருநாள் மாசம்
11துல் கஃதா  –  ஏர்வாடி கந்தூரி மாசம்
12துல் ஹஜ்ஜு – ஹஜ்ஜுப் பெருநாள் மாசம்

இம்மாதங்களை வைத்து அந்தந்த மாதங்களில் ஹத்தம் ஃபாத்திஹா ஓதி இரண்டுமூன்று ஏழைகளுக்கு சோறு கொடுத்துவந்தார்கள்.  பெட்ரோலிய  வஹாபிசம் வந்தபிறகு இது மறையத் தொடங்கியுள்ளதால் ஏழைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த இறைச்சிக் கறி நெய் சோறு CUT.

பெட்ரோலிய டாலர்களால் வரும் குழப்பம்

சென்ற முப்பதாண்டுகளுக்கு முன் வரை இஸ்லாத்தில் குழப்பம் எதுவும் இல்லை பிறை பார்ப்பதைத் தவிர. பெட்ரோலிய டாலர் வந்தது, இஸ்லாத்தை நாங்கள்தான் தூயவடிவில் கொண்டுச்செல்கிறோம் என்று பறை சாற்றிகொண்டு (தொழும்போது) தொப்பியை தூக்கினார்கள்; நேராக இருந்த விரலை துடிக்க வைத்தார்கள்; இருபதை எட்டாக சுருக்கினார்கள்; இறைவன் அருவ நிலைக்கும் அப்பாற்பட்டு தூய நிலையில் உள்ளவன் என்ற இஸ்லாத்தின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் இறைவனுக்கு கால் இருக்கிறது என்று புதிய கண்டுபிடிப்பை புகுத்தியிருக்கிறார்கள்; நபி வழி என்று சொல்லிக்கொண்டு போட்டுத்தள்ளுகிறார்கள். ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்கள்
கொண்டுவந்த ஹிஜ்ரி காலண்டரை நாங்கள் பின்பற்றுவோம் ஆனால் அவர்கள் முறைபடுத்திய திராவிஹ் 20 ரக்அத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்களுக்கு நபி (சல்) அவர்கள் தொழுதது தஹஜ்ஜத்தா இல்லை திராவிஹா (புஹாரி 2013) என்ற வித்தியாசம் இன்னும் தெரியவில்லை. ஆனால் நம்மிடம் பெருமைப் படும் விஷயம் ஒன்று இருக்கிறது, யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் எங்கள் குர்ஆனில் 1400 வருடத்துக்கு முந்தியே அல்லாஹ் சொல்லிவிட்டான், இப்போதுதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று பெருந்தன்மையாக பீற்றிக்கொள்வதிகள் முன்னோடிகளாக இருக்கிறோம்.

நாம் பெருமைப் படுவதற்காக ஒரு விசயம் காத்திருக்கிறது. அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக. பிரபஞ்சம் உருவானது பெரு வெடிப்பிலா (Big Bang) இல்லையா என்று விஞ்ஞானிகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை இருந்துவருகிறது. என்றாலும் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே அல்லாஹ்வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் குரல் கேட்ட நாளிலிருந்து அவருக்கு ஓர் ஆசை வந்துவிட்டது. தாத்துல் கிப்ரியாவில் கன்ஜு மக்ஃபியாக இருக்கும் அல்லாஹ்வை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை சந்தித்துவிட்டால் “ஆண்டவரிடத்திலிருந்து முதலில் சப்தம் வந்தது, அச்சப்தத்திலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது” என்ற பழைய ஏற்பாட்டின் (இன்ஜீல்) வசனமும், “விந்து நாதம்” என்று சொல்லும் ஹிந்து மத அத்துவைதமும், “அவ்வல ஃகலக்கல்லாஹு நூருன்நபிய்யி யா ஜாபிர்” (ஓ ஜாபிரே! அல்லாஹ்வின் முதல் படைப்பு உம்முடைய நபியின் ஒளியாகும்) என்ற ஹதீஸும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடும். பின்பு,  நீங்கள் இப்போதுதானே சொல்கிறீர்கள் எங்கள் குர்ஆனில் “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்….”  (21:30) என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் சொல்லிவிட்டான் என நாம் சொல்லி பெருமிதம் அடைவோமாக…! ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்…!!

***

ஹமீது ஜாஃபர்

நன்றி: ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

அல்-குவாரிஸ்மி (அருட்கொடையாளர் – 3) : ஹமீது ஜாஃபர்

அருட்கொடையாளர் 3 : அல்-குவாரிஸ்மி

ஹமீது ஜாஃபர்

நான் படிக்கிற காலத்தில் 1200 வயதுடைய அல்ஜிப்ரா பத்தாம் வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அப்போது இரண்டு வகையான கணிதம் இருந்தது. ஒன்று general mathametics மற்றொன்று composit mathametics. பொதுக்கணிதத்தைப் பொருத்தவரை அல்ஜிப்ரா மருந்துக்குத்தான் இருக்கும். ஆனால் காம்பொஸிட்டைப் பொருத்தவரை முழுக்க முழுக்க அல்ஜிப்ரா+ஜியாமெட்ரிதான். அதில் வரும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொண்டால் அதைப் போன்ற சுலபமான கணிதம் கிடையாது. சூத்திரம் கொஞ்சம் பிசகினாலும் கழுதை கெட்டால்…. என்றாகிவிடும். இப்போது சற்று முன்னேற்றம், ஆறாம் கிளாஸிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கல்வி வாழ்க்கை முடிந்து, சம்பாதிக்கத் தொடங்கி, கல்யாணம் குடும்பம் என்றாகிய பிறகு கணிதத்திற்கு வேலை இல்லை. ஆனால் எங்கள் ஹஜ்ரத் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு முறை சொன்னார்கள், ஜியாமெட்ரிலெ, யுக்லிட்ஸு ஒரு பிரின்சிபலை சொல்லி இதை ஒத்துக்கொள் என்பான். அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகணும். அது பிறகுதான் புரியும். அதே சிஸ்டம்தான் நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தையை கொடுத்து அதை அல்லாவுடைய பேராகச் சொல்லி ‘திக்று’ செய் என்பேன். என்னா, ஏதுண்டு யோசிச்சுக்கூடப் பார்க்காம செஞ்சுத்தான் ஆகணும். ஏன்னு கேட்கிறதா இருந்தா நாளையிலேந்து வராதே என்றார்கள்.

வேலூர் மதரஸாவில் ஓதிய ஆலிம்சா ஜியாமெட்ரி பத்தி சொல்றாங்க, அல்ஜிப்ராவைப் பத்தி சொல்றாங்க, யுகலிட்ஸ் என்கிறாங்க, யுகலிட்ஸ்..! அது யார் அல்லது என்னவென்றே புரியவில்லையே.!? என அப்போது நான் சிந்தித்ததுண்டு, காலஓட்டத்தில் அவர்கள் சொன்னமாதிரியே விளக்கம் தானாகவே புரிய ஆரம்பித்தது. யுக்லிட் , ஜியாமெட்ரியின் தந்தை என்று ரொம்ப வருஷத்துக்கு பிறகுதான் தெரிந்தது. அல்ஜிப்ரா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருந்துச்சு அப்போ. இப்ப எல்லாம் போச்சு. என்றாலும் அல்ஜிப்ராவைக் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியர் என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம், அல்லது கேட்ட ஞாபகம். அதில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கணிதவியலில் கிரேக்கர்கள் சூரர்களாக இருந்தார்கள் என்பதுதான் என் நம்பிக்கை.

அருட்கொடையாளர்கள் வரிசையில் அல் குவாரிஸ்மி வந்தபோதுதான் தெரிந்தது மனித சமுதாயத்துக்கு அரேபியர்கள் எத்துணை அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்பது. இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தனித்து நிற்காமல் இந்திய தத்துவங்களையும் கிரேக்கத் தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு புதிய வழிமுறைகளை புதையலாகத் தந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுடைய ஆய்வுகளில் அகம்பாவமோ கர்வமோ இல்லை. முந்தைய காலத்தவர்களையும் பிற நாட்டவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புக்களையும், தத்துவங்களையும், அறிவுகள் முதல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அறிவுக்காகவே வாழ்ந்து developed invention-ஐ இம்மனித சமுதாயத்துக்கு தந்திருக்கிறார்கள் எனும்போது பெருமிதம் கொள்வதில் தவறில்லை.


AL KHWARIZMI – The Father of Algebra (780-850)

முஹம்மது பின் மூஸா அல் குவாரிஸ்மி(محمد بن موسی خوارزمی) என்ற முழுப் பெயரைக் கொண்ட அல் குவாரிஸ்மி எப்போது பிறந்தார், அவருடைய இளமைக் கால வாழ்க்கைப் பற்றிய உறுதியான குறிப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும் கி.பி 800 க்கு முன் தற்போதைய உஸ்பெகிஸ்தானிலுள்ள தெற்கு ஏரல் கடல் அருகிலுள்ள குவார்ஜம் பகுதியில் பிறந்தார் என சிலராலும், கிபி 780ல் சிர்காவில் பிறந்தார் என சிலராலும் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் அவர் குவார்ஜம்(Kheve)ல் பிறந்தார் என கூறுகின்றனர். சிலர் பாக்தாது என்கின்றனர், ஆனால் டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கிடையிலான அல் குத்ரபுல்லி என்ற பட்டணத்தில் பிறந்தவர், இவர் முன்னோர்கள் க்வாரிஸம் பகுதியிலிருந்து குடியேறி இருக்கலாம் என்கிறார் வரலாற்றாசிரியர் அல் தப்ரி. அதேபோல் அவர் மறைந்தது பாக்தாது என்றாலும் எந்த ஆண்டு என்பதில் கருத்து வேறுபாடு உள்ளன. சிலர் கிபி 850 என்கின்றனர், சிலர் 833 அல்லது 840 என்கின்றனர்.

அவருடைய பிறப்பில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் குவாரிஸ்மி என்ற அவரின் பெயரை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாக அன்று பாரஸீகத்தின் ஒரு பகுதியாக இருந்த குரோஸம் அல்லது Khwarizm பகுதியில் பிறந்திருக்கவேண்டும் என்பதே சரியானதாக இருக்கும். இன்றைய உஸ்பெகிஸ்தானில் Oxus நதியின் தென் பாகத்தில் இருக்கிறது. இதே பகுதியில் தான் அல் பைரூனியும் 973ல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாஸிய கலிஃபா ஹாரூன் அல் ரஷீதின் ஆட்சி அரபுலகின் பொற்காலமாக இருந்தது. பாக்தாதைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த கலிஃபா தன் ஆட்சியை மத்தியதரைக் கடலிலிருந்து இந்தியாவின் சிந்து பகுதி வரை விரிவு படுத்தினாலும் தன்னுடைய அரசவையில் பல்வேறு அறிஞர்களை பங்குபெற செய்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். எனவே கல்வியைப் பெறுவதற்காக இந்தியா, சீனா மற்றும் பல பாகங்களிலிருந்தும் பாக்தாதை நோக்கி வந்தனர் என்கிறது ஒரு குறிப்பு. அப்போது வணிகத்திற்கும் கல்விக்கும் சிறந்த நகரமாக விளங்கியது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டாம் மகன் மாமூன் பின் ராஷீத்  தன் தந்தையின் தடத்தைப் பின்பற்றினார். விளைவு பாக்தாதில் தந்தை நிறுவிய அறிவகத்தில் (Dar-al-Hikma – house of wisdom)  குறிப்பிடத்தக்க அறிவியலாளர்களை பணியில் அமர்த்தி பல்வேறு கிரேக்க, பைசாந்திய, இந்திய தத்துவம் மற்றும் அறிவியல் கையெழுத்துப் பிரதிகளை அரபியில் மொழிபெயர்ப்பு செய்தார். மிகப் பெரிய நூலகத்தை நிறுவினார். பல நூற்றாண்டுகளுக்குப் பின் அலக்ஸாண்டிரியாவில் நிறுவப்பட்ட நூலகத்தைவிட இந்நூலகம் பெரிதாக இருந்ததாக ஆய்வாளார்கள் கூறுகின்றனர். தவிர வான் ஆய்வகங்களை (Observatories) நிறுவி வான் ஆய்வுக்கு பெரிதும் உதவினார்.

ஹாரூன் ரஷீது காலத்தில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் பிறந்த அல் குவாரிஸ்மி இளமை காலத்தில் தன் பெற்றோர்களுடன் பாக்தாதில் குடியேறினர் என சில தகவல்கள் கூறுகின்றன. எனவே இவருடைய கல்வி தன் சொந்த ஊரில் சிலகாலாமும் பின் பாக்தாதிலும் இருந்திருக்கவேண்டும்.

கணிதத்துறையிலும், வானவியலிலும், புவியியலிலும் சிறந்து விளங்கிய இவர் கணிதவியலில் ஆற்றிய பங்கு மகத்தானது. மத்திய காலத்தில் வாழ்ந்த கணிதவியலார்களைவிட கணிதத்தில் பல பிரிவுகளில் இவருடைய அடிப்படைக் கொள்கை( Basic concept) மகத்தானதாக இருக்கிறது என்று பிலிப் ஹிட்டி என்பவர் கூறுகிறார்.

அல்ஜிப்ராவின் தோற்றம்

அறிவகத்தில் (house of wisdom) தன்னுடைய சகாக்களான பனு மூஸா சகோதரர்களோடு பணியாற்றிய குவார்ஜமி மொழிபெயர்ப்பு பணியுடன் கணிதவியலையும், வானவியலையும் ஆராய்ந்தார். கலிஃபா அல் மாமூனின் ஊக்கத்தால் உந்தப்பட்டு இரண்டு புத்தங்களை அவருக்கு சமர்ப்பணம் செய்தார். ஒன்று அல்ஜிப்ரா (இயற்கணிதம்; குறிக்கணக்கியல்) பற்றியது; மற்றொன்று வானவியல் பற்றியது.

Manuscript copy of al-Khwarizmi’s book of algebra; the MS was copied in 743 H in Cairo, 500 years after the death of al-Khwarizmi. © Oxford University, the Bodleian Library.

a copy of algebra book

His work on algebra was outstanding, as he not only initiated the subject in a systematic form but he also developed it to the extent of giving analytical solutions of linear and quadratic equations, which established him as the founder of Algebra’ என்கிறார் ஃபிலிப் ஹிட்டி.

வாழ்க்கையில் சந்திக்கும் மரபுசார் சொத்து(legacy), மரபுரிமை(inheritance),வணிகம், அளவீடு, பங்கீடு, நில அளவை, கட்டுமானம், geometrical computation இன்னும் பல காரியங்களுக்கு இந்த அல்ஜிப்ரா மிக சுலபமான வழியை வகுத்துக் கொடுக்கிறது. இஸ்லாமியப் பேரரசில் அன்று அவர்களுக்கு பிரச்சினையாக இருந்த கணக்கீட்டு முறை அனைத்துக்கும் தீர்வைக் கொடுத்தது.

கிபி 830 ம் ஆண்டு வெளியிடப்பட்டது இவரது பிரசித்திவாய்ந்த புத்தகமான ‘அல் கித்தாப் அல் முக்தசர் ஃபி ஹிசாப் அல் ஜபர் வல் முக்காப்லா’ – الكتاب المختصر في حساب الجبر والمقابلة (The Compendius Book on Calculation and Balancing). இது மிகவும் உபயோகமான, சுலபமான கணிதமுறையை தந்தது(ernie.bgsu.edu). Al Khwarizmi introduced natural number  in his book, namely solution of equation. His equations are linear or quadratic  and are composed of units, roots and squares. For example, to al-Khwarizmi a unit was a number, a root was x, and a square was x2. However, although we shall use the now familiar algebraic notation in this article to help the reader understand the notions, Al-Khwarizmi’s mathematics is done entirely in words with no symbols being used.

He first reduces an equation (linear or quadratic) to one of six standard forms:

1. Squares equal to roots.
2. Squares equal to numbers.
3. Roots equal to numbers.
4. Squares and roots equal to numbers; e.g. x2 + 10 x = 39.
5. Squares and numbers equal to roots; e.g. x2 + 21 = 10 x.
6. Roots and numbers equal to squares; e.g. 3 x + 4 = x2.

The reduction is carried out using the two operations of “al-jabr and al-muqabala”. Here “al-jabr” means “completion” and is the process of removing negative terms from an equation. For example, using one of al-Khwarizmi’s own examples, “al-jabr” transforms x2 = 40 x – 4 x2 into 5 x2 = 40 x. The term “al-muqabala” means “balancing” and is the process of reducing positive terms of the same power when they occur on both sides of an equation. For example, two applications of “al-muqabala” reduces 50 + 3 x + x2 = 29 + 10 x to 21 + x2 = 7 x (one application to deal with the numbers and a second to deal with the roots).

‘அல் ஜபர் வ முக்காப்லா’ லத்தின் மொழியில் Robert of Chester  என்பவரால் 1145 ல் ‘Liber algebrae et almucabala’ என்ற பெயரில் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பிறகு F. Rosen  என்பவரால் 1831 ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. லத்தீன் மொழியில் வரும் algebrae என்ற வார்த்தை ‘அல்ஜிப்ரா’வாக நிலைத்துவிட்டது. அரபி புத்தகத்தின் நகல் ஆக்ஸ்போர்டிலும் லத்தின் மொழிபெயர்ப்பு கேம்ப்ரிட்ஜிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

Diophantus  ஐ சிலரால் அல்ஜிப்ராவின் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் Diophantus ஐ காட்டிலும் சுலபமான செய்முறைகளை அல்ஜிப்ராவில் ஆரம்ப நிலையிலேயே அல் குவாரிஸ்மி புகுத்திவிட்டார். Diophantus ன் செய்முறைகள் கரடுமுரடாக இருந்ததால் அரபு கணிதவியலார் அதை தவிர்த்து வந்தனர். இவருடைய நேரடியான  சமன்பாட்டு வழிமுறைகள் Diophantus மற்றும் பிரம்மகுப்தாவின் வழிமுறைகளைக் காட்டிலும் சுலபமாகவே அமைந்துள்ளது.  இவரது கண்டுபிடிப்புக்குப் பெரிதும் உதவியாக இருந்தது பாபிலோனிய, இந்திய, கிரேக்க கணிதமுறைகள். எனவே பண்டைய கணிதவியலாரின் அல்ஜிப்ரா வேறு வடிவத்தில் இருந்தாலும் தீர்மானிக்கமுடியாத நிலையில் தவிர்க்கக்கூடியதாக இருந்தது.

Arithmetic

அல் குவாரிஸ்மியின் இன்னொரு பெரிய ஆய்வு ‘ஹிந்து-அரபிய எண்களைப்(hindu arabic numarals) பற்றியதாக இருந்தது. இது பிரம்மகுப்தாவின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. தூரதிருஷ்டவசமாக அவர் எழுதிய ஆய்வு புத்தகம் Kitāb al-Jama wa-l-tafrīq bi-ḥisāb al-Hind (“The Book of Addition and Subtraction According to the Hindu Calculation”) மறைந்துவிட்டது. ஆனால் லத்தீன் மொழி பெயர்ப்பான ‘Alogritmi de numero Indorum’என்றும் ஆங்கிலத்தில் ‘ Al Khwarizmi on the Hindu Art of Reckoning’ என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கணிதவியலே இன்றும் ‘Algorismi or Algorithm‘  என இவருடைய பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. 

Al-Khwarizmi wrote numerous books that played important roles in arithematic and algebra. In his work, De numero indorum (Concerning the Hindu Art of Reckoning), it was based presumably on an Arabic translation of Brahmagupta where he gave a full account of the Hindu numerals which was the first to expound the system with its digits 0,1,2,3,….,9 and decimal place value which was a fairly recent arrival from India. Because of this book with the Latin translations made a false inquiry that our system of numeration is arabic in origin. The new notation came to be known as that of al-Khwarizmi, or more carelessly, algorismi; ultimately the scheme of numeration making use of the Hindu numerals came to be called simply algorism or algorithm, a word that, originally derived from the name al-Khwarizmi, now means, more generally, any peculiar rule of procedure or operation. The Hindu numerals like much new mathematics were not welcomed by all. In 1299 there was a law in the commercial center of Florence forbidding their use; to this day this law is respected when we write the amount on a check in longhand (ernie.bgsu.edu).

பண்டைய காலத்தில் ‘0’ அராபிய கணிதத்திலும் கிரேக்க எகிப்திய கணிதத்திலும் இல்லாமலிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டபிறகுகூட பூஜ்யம் மதிப்பில்லாதது என பல கணிதவியலார் நம்பினர், மேலும் அது வேறு எண்கூட சேர்வதால் அதன் மதிப்பு உயரும் என்பதையும் மறுத்தனர். மறுபக்கம் ரோமானிய எண்கள் எழுத்து(Alphabet) வடிவில் இருப்பதால் சாதாரண கணக்கிடல்கூட(simple calculation) கடினமாகும்போது சிக்கலான கணக்கு(complex mathemetics) சாத்தியமில்லாமல் போகிறது. தவிர அப்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உபயோகித்துவந்த எண்கள் இடர்பாடாடும் தடுமாற்றமும் உள்ளதாகவும் (awkward and clumcy) இருந்ததாக JJ. O’Connor and EF. Robertson கூறுகின்றனர். அப்போது கணிதத்துறையில் ஒரு சிக்கலான சூழலே அமைந்திருந்தது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலும் மாயா இனத்தவராலும் பூஜ்யம் புள்ளி வடிவில் இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். என்றாலும், இந்தியாவில் 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கணிதவியல் நிபுணர் ஆரியபட்டா(கி.பி.476) முதலில், ‘0’ வைக்  கண்டுபிடித்து சூன்யம் என பெயெரிட்டார். 0,1,2,3,4,5,6,7,8,9 எண்களை உருவாக்கினார். அல் குவாரிஸ்மி தன் கணித முறையில் ‘0’ புகுத்தி பின்னம் முதல அனைத்திலும் அதன் முக்கியத்துவத்தைக் காட்டி கணிதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் (JJ. O’Connor and EF.Robertson). 

அரபியில் எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. ஆனால் எண்கள் மட்டும் இடமிருந்து வலமாக எழுதப்படுகிறது. இந்திய எண்ணான ‘0’வை சிஃபர் (الصفر) என்ற பெயரில் அரபியர்கள் கணிதத்துறைக்கு எடுத்துக்கொண்டதால் நன்றிக்கடனாக எண்களை மட்டும் இடமிருந்து வலமாக எழுதப்படுவதாக ஒரு கதை உண்டு. இதற்கு சான்றாக துபாயிலுள்ள ‘இப்னு பதூதா‘ வணிகவளாகத்தில் , ‘The number used throughout the world today as called “Arabic” because they were taken by the Arabs from ancient Indian Sanskrit developed into system and then passed on to the rest of the world.’ என்ற குறிப்பு காணக்கிடைக்கிறது. எனவே எண்களின் பிறப்பிடம் இந்தியா என்றும் அது அல் குவாரிஸ்மியிலிருந்து மற்ற அரபிய ஆய்வாளர்கள் மூலம் ஐரோப்பா முதல் உலகெங்கும் பரவியதால் அரேபிய எண்கள் என சொல்லப்படுகிறது. எண்கள் முழுவதும் இந்தியாவிலிருந்து பெறப்பட்டதால் அவை இடமிருந்து வலமாக எழுதப்படுவதன் காரணம் தெளிவாகிறது.

Evoluation of Hindu-Arabic numerals

யுக்லிட்ஸால் கவரப்பட்ட அல் குவாரிஸ்மி, ஜியாமெட்ரி கணிதத்திற்கு யுக்லிட்ஸின் முறையைப் பின்பற்றினார். கலிஃபா மாமூன் ராஷிதின் காலத்தில், அறிவகம்(House of Wisdom) ஆய்வகத்தில் பணிபுரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் பின் மத்தார்  என்ற அறிஞர் Equlid’s Elements  ஐ அரபியில் மொழிபெயர்த்தார். அப்போது அல் குவாரிஸ்மி இளைஞராக இருந்தாலும் குவாரிஜ்மியின் குழுவில் ஹஜ்ஜாஜூம் ஒருவராக இருந்திருக்கிறார்.

((குறிப்பு: ஹிஜ்ரி 40 (கிபி 661)ம் ஆண்டில் ஈராக்கின் கவர்னராக இருந்த கொடுங்கோளன் பெயரும் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் என்பதே. இவன் இறந்தபோது ஈராக்கிய மக்கள் தெருக்களில் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம், இமாம் ஹசன் பஸரியும், இரண்டாம் உமரும்(உமர் பின் அப்துல் அஜீஸ்) இறைவனுக்கு நன்றி செலுத்தினார்களாம். எனவே ஒரே பெயருடைய இருவரும் வேறு வேறு காலத்தவர், மாறுபட்ட அறிவு உடையவர்கள்.))
வானவியல்

இந்திய வானவியலை ஆதாரமாக வைத்து இவரது ஆய்வுகள் இருந்தன. இவர் எழுதிய zij al-Sindhind (ﺰﻳﺝ “astronomical tables of Sind and Hind”)என்ற நூல் சுமார் 37 அத்தியாயங்களையும் 116 அட்டவணைகளையும் கொண்டது. இதில் காலண்டர், சூரியன், சந்திரன், கிரகங்கள் இவைகனின் நிலையைக்(true position) கணக்கிடும் முறை, spherical astronomy, astrological tables, parallax and ecalipse calculation, tables of sines and tangents, visibility of the moon இடம்பெற்றிருந்தன. இவருடைய இவ்ஆய்வு இஸ்லாமிய வானவியலில் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

கிபி. 820ல் எழுதிய இந்த புத்தகமும் மறைந்துவிட்டது.  அடிலார்டு(Bath-England) என்பவரின் ஊகப்படி மஸ்லாமாஹ் இபுனு அஹ்மது அல் மஜ்ரிதி என்ற ஸ்பெயின் வானவியல் விஞ்ஞானி(கிபி 1000) அதை லத்தினில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதன் கையெழுத்துப் பிரதிகள் நான்கு Bibliothèque publique (Chartres), the Bibliothèque Mazarine (Paris), the Bibliotheca Nacional (Madrid) and the Bodleian Library (Oxford) ஆகிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்திய, கிரேக்க(Hellenistic) முன்னோடிகளின் வழியில் சூரிய கடிகாரம் ஒன்றை வடிவமைத்து அதற்கென்று பிரத்தியேக அட்டவணை ஒன்றயும் உருவாக்கினார். இவருடைய இக்கடிகாரத்தின் மூலம் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் நேரத்தை கணிக்கமுடியும். இவர் வடிவமைத்த கடிகாரத்தையே பல பள்ளிவாசல்களில் தொழுகை நேரம் கணிப்பதற்காக வைத்திருந்தனர்.

முதல் quadrants(கால் வட்ட வடிவிலான) and mural instruments மற்றும் the sine quadrant, யும் கண்டுபிடித்தார். sine quadrant, was used for astronomical calculation The first horary quadrant for specific latitudes யும் கண்டுபிடித்தார். இதன் உதவியால் ஒவ்வொரு மணித்துளியில் அட்சரேகை, மற்றும் கால மாற்றங்களை அறிய முடிந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு அட்சரேகைகளைக் கணக்கிட்டனர், சூரியனின் உயர வித்தியாசங்களையும் கணக்கிட்டனர். இன்றும் இது கடல் பயணத்தில்(navigation) பயன்படுத்தப்படுகிறது.
புவியியல்

குவாரிஸ்மியின் மூன்றாவது ஆய்வு புவியியல் பற்றியது, இவர் எழுதிய ‘கித்தாப் சூரத் அல் அர்ள்’ (كتاب صورة الأرض “Book on the appearance of the Earth” or “The image of the Earth”) என்ற நூல். இது கிபி 833 ல் எழுதி முடிக்கப்பட்டது. தாலமியின் புவியியலை ஆதாரமாகக்கொண்டு 2402 ஊர்களின் அட்சரேகை, தீர்க்கரேகை, மலைகள், நதிகள், கடல்கள், தீவுகள், கடல்தீரங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், அட்சரேகை தீர்க்க ரேகைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொரு அட்சரேகைப் பகுதிகளிலும் தட்பவெட்பப் பகுதிகளாக பிரித்தார்.

தாலமியின் தவறான மத்தியத்தரைக்கடல் (கானரி தீவுகளிலிருந்து கிழக்குக் கடற்கரை வரை) வரைபடத்தைத் திருத்தி அமைத்தார். (கானரி தீவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கிறது.)  Ptolemy overestimated it at 63 degrees of longitude, while al-Khwarizmi almost correctly estimated it at nearly 50 degrees of longitude. தாலமியின் வரைபடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலும் இந்தியப் பெருங்கடலும் தரையினால் சூழப்பட்டிருந்தாக (land locked seas) தவறாக வரையப்பட்டிருந்ததை திருத்தி சரியாக வரைந்தார்(both oceans are open bodies of water). இஸ்லாமியப் பகுதி, ஆப்ரிக்கா, தூரக்கிழக்கு நாடுகள்(the regions of Islam, Africa and the Far East) பற்றிய குறிப்புகள் தாலமியைவிட சரியாக இருந்தன. ஆனால் ஐரோப்பாப் பற்றி தாலமியின் அடிச்சுவற்றையே பின்பற்றுகிறார்.

இன்றைய ஆஸ்திரேலியாவும்      குவாரிஸ்மி வரைந்த ஆஸ்திரேலியா படமும்

கலிஃபா மாமூன் அல்-ரஷீதின் ஆதரவுடன் எழுபது புவியியல் நிபுணர்களின் உதவியால் இன்றைக்கு காணப்படும் உலக வரைபடத்தைப் போன்ற அமைப்பையுடைய  வரைபடம் ஒன்றை உருவாக்கினார். அதில், கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பே  தென் அமெரிக்கா இடம்பெற்றிருந்தது.

இவரது ‘கித்தாப் சூரத் அல்-அர்ளு’ ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழக நூலகத்திலும் லத்தின் மொழிபெயர்ப்பு Biblioteca Nacional de España மேட்ரிட்லும் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

இதர ஆய்வுகள்

அவரது இதர ஆய்வுகளில் ஒன்று யூதர்களின் காலண்டர். ‘ரிசாலா ஃபி இஸ்திக்ராஜ் தாரிக் அல்-யஹூத்’ (Extraction of the Jewish Era) என்ற அவரது நூலில் 19 வருட சூரிய  காலண்டரின் கணிப்பும் Tishrī மாதத்தின் முதல் வாரம் முதல் நாள் இவைகளையும், யூத வருடத்திற்கும் பண்டைய பாபிலோனிய செலியுசிட் பேரரசு உபயோகித்த Seleucid era வுக்கும் இடையிலான கால வித்தியாசத்தை கணக்கிடும் முறையையும், யூதக் காலண்டர்படி சூரிய சந்திரனின் சராசரி தீர்க்கரேகைகளின் (mean longitude) விளக்கமும் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று அல் பைரூனியும் விளக்கியிருக்கிறார்.

அஸ்ட்ரோலோப் அமைக்கும்(construction of astrolabes) விதமும் அதை பயன்படுத்தும் முறை பற்றியும் ‘கித்தாப் அல் ருகாமத்'(Book of sundial) மற்றும் ‘கித்தாப் அல் தரீக்'(the book of history) என்று இரண்டு நூல்கள் எழுதியுள்ளதாகவும் அவை தொலைந்துவிட்டதாகவும் இப்னு அல்-நதீம் என்ற அறிஞர் தன்னுடைய Kitab al-Fihrist என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் Two texts deserve special interest on the morning width (Ma’rifat sa’at al-mashriq fī kull balad) and the determination of the azimuth  (திசைவில், திசை ரேகை கிடைத்தளம்) from a height (Ma’rifat al-samt min qibal al-irtifāʿ).

பெர்லின், இஸ்தான்புல், தாஷ்கண்ட், கெய்ரோ, பாரிஸ் நகரங்களில் அரபி கையெழுத்துப் பிரதிகள் அனேகம் காணக்கிடைக்கிறது அவைகளில் சில அல்-குவாரிஸ்மியுடையதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இஸ்தான்புலிலுள்ள கையெழுத்துப் பிரதிகளில் சில அறிஞர் நதீம் குறிப்பிட்ட சூரிய கடிகாரத்தைப் பற்றியது, இன்னும் சில மக்காவின் திசையைக் குறிப்பிடும் பிரதிகளும் உள்ளன.

கிபி. 813 – 833  இடையிலான இருபதாண்டு குறுகிய காலத்தில் பெரும்பாலான ஆய்வுகளையும் ஆய்வு நூல்களையும் குவாரிஸ்மி எழுதி முடித்துள்ளார். இவரது பெரும்பாலான நூல்கள் 12ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டது, அதன்பிறகே இதர ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பின்பு சீன மொழிக்குச் சென்றது. அதன் பிறகு படையெடுப்புகளினால் அழிந்தது.

அல்-குவாரிஸ்மிக்குப் பிறகு அபு மன்சூர் இப்னு தாஹிர் அல் பக்தாதி( 980-1037), உமர் கையாம்(1048–1131) ஆகியோர் அல்ஜிப்ராவை இன்னும் விரிவாக்கினர் (JJ. O’Connor and EF.Robertson).  இன்று வணிகத்திலிருந்து வங்கி வரை, கம்ப்யூட்டரிலிருந்து கட்டுமானம் வரை அனைத்திலும் பயன்பாட்டிலுள்ள கணிதத்தின் தந்தையை மறந்தாலும் அல்ஜிப்ராவை மறக்கமுடியுமா……..? காலம் உள்ளவரை அல்ஜிப்ரா இருக்கும்வரை, அல்காரிதம் இருக்கும்வரை அல் குவாரிஸ்மியும் கூடவே இருந்துகொண்டிருப்பார்………

 ***

குறிப்பு:

குவாரிஜ்மியைப் பற்றிய சில தெளிவான குறிப்புகள் H.பீர் முஹம்மது அவர்கள்  ‘கணிதமும் வரலாற்று அரபுலகமும்’ என்ற தலைப்பில் திண்ணையிலும் அவரது வலைத்தளத்திலும் எழுதியுள்ள கட்டுரையைப் பார்க்கலாம்.

இவர்களைப் பற்றி எழுதுவதாக இருந்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு செய்திகள் தோண்டத் தோண்ட வந்துக்கொண்டிருக்கிறது. தமிழ் இணையத்தில் தேடிப்பார்த்தவரை போதுமான செய்திகள் இல்லை. ஆனால் வேறு யாரும் புத்தகமாகப் போட்டிருக்கலாம். அது கிடைக்கவில்லை. என்னால் முடிந்தவரை எழுதியுள்ளேன்.  பொறியியலிலும் தொழில்நுட்பத்துறையிலும் இருப்பவர்களுக்கு கணிதம், விரல் நுனியில் இருக்கும், மொழிபெயர்ப்பில், கருத்தில் தவறுகள் இருக்கலாம். கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்கவும்.

Sources:

http://www.gap-system.org/~history/Biographies/Al-Khwarizmi.html

http://www.mathsisgoodforyou.com/topicsPages/algebra/name.htm

http://www.britannica.com/EBchecked/topic/317171/al-Khwarizmi

http://wzzz.tripod.com/KHAWARIZ.html

http://members.tripod.com/elegant_elaine/father_of_algebra.htm

http://www.ms.uky.edu/~carl/ma330/project2/al-khwa21.html

https://www2.bc.edu/christian-zorn/work_and_research/hist_algebra.pdf

http://rsa-bengali.blogspot.com/2010/01/al-khwarizmi-father-of-algebra.html 
 
http://www.imamreza.net/eng/imamreza.php?id=5180  

http://www.contactpakistan.com/newsletter/ksa/May031st/Muslimscontribution.htm

http://en.wikipedia.org/wiki/Al-Ma’mun                                                                                           

http://wiki.answers.com/Q/Who_invented_the_number_name_zero                                          

http://www.ehow.com/facts_6901393_history-algorithm.html?ref=Track2&utm_source=ask  
         
http://rach87197.glogster.com/al-khwarizmi/

http://en.wikipedia.org/wiki/Ban%C5%AB_M%C5%ABs%C4%81                                                   

http://en.wikipedia.org/wiki/Natural_number                                                                                         

http://rudra.hubpages.com/hub/Aryabhatta                                                                                             

https://www2.bc.edu/christian-zorn/work_and_research/hist_algebra.pdf

http://en.wikipedia.org/wiki/Mu%E1%B8%A5ammad_ibn_M%C5%ABs%C4%81_al-Khw%C4%81rizm%C4%AB

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

அறிவை மறைக்க விரும்பாத அறிஞர் : அல்-பைரூனி பற்றி ஹமீது ஜாஃபர்

நானாவும் எதையும் மறைக்க மாட்டார்!  சார்வாகனின் பதிவைப் பார்த்ததிலிருந்து அதுபோல் ஒன்று எழுதச்சொல்லி நச்சரித்ததற்கு நல்ல பலன். ஓரிருநாளிலேயே எழுதிமுடித்து அனுப்பி வைத்துவிட்டார் மனுசன் –  நிறைய தகவல்களுடன். நல்ல உழைப்பு. வாழ்க. ’அஹமியம்’ இணையதளத்தில் நானா எழுதிய ’ஷிப்லிபாவா வரலாறு’ம் இடம் பெற்றுள்ளது. ஆன்மீக நாட்டமுள்ள அன்பர்கள் (மட்டும்) வாசிக்கலாம்.  அருட் கொடையாளர்கள் வரிசையை அருமையாகவும் நிறைவாகவும் அவர் செய்யட்டும். ’ஃபத்வா ஃபாக்டரிகள்’ இப்போது பரவசப்படும் என்று நம்புகிறேன்.  தகவற்பிழை இருப்பின் தவறாது சு(ட்)டுங்கள். நன்றி. – ஆபிதீன்.

***

அருட் கொடையாளர்கள் – 1   

ஹமீது ஜாஃபர்

வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் ; சில வருடங்களுக்கு முன் , ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசுப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.

எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா , காம்பஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்க்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுள்?. திசை காட்டும் கருவியை கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகளின் பங்கு என்ன? விடவில்லை , ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ளக் கிடைத்தன. அள்ளுவதற்குத்தான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத சாதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொறுப்பு.

சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தையர்களை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன்.

அல்  பைரூனி (973 – 1048)

பிறப்பு: 4 or 15 Sep 973 in Kath, Khwarazm (now Khiva, Uzbekistan)
இறப்பு: 13 Dec 1048 in Ghazna (now Ghazni, Afganistan)
முழு பெயர்: அபு ரய்ஹான் முஹம்மது இப்னு அஹ்மது அல் பைரூனி

இன்று உஸ்பெகிஸ்தானில் ஒரு பகுதியும் டர்க்மெனிஸ்தானில் ஒரு பகுதியுமாக இருக்கிறது குவார்ஜம் அல்லது கொரஸ்மியா பகுதி. உஸ்பெகிஸ்தானிலுள்ள  குவார்ஜமில் கேத்(Kath) எனும் பட்டணத்தின் புறநகரில் பிறந்தார். பைரூன் என்றால் பாரஸீக மொழியில் புறநகர் என்று பொருள். பிறந்த இடத்தை பெயருடன் இணைத்து அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே அவருடைய பெயராகிவிட்டது. அவர் பிறந்த நகரத்தை இன்று பைரூனி என்று அழைக்கப்படுகிறது.

தன்னுடைய இளமைப் பருவத்திலேயே கல்வியில் ஆர்வம் கொண்ட அவர் ஏறக்குறைய இருபத்தைந்தாண்டு காலம் குவார்ஜம்மில் ‘அல் உலுமுல் அரபியா’ என்று சொல்லப்படும் ஃபிக்ஹ், இஸ்லாமிய அறிவு, அரபி இலக்கணம் முதலியவைகளை கற்றதோடு நில்லாமல் ‘அல் உலூமுல் அஜமியா’ எனும் அரபியல்லாத கிரேக்க ஞானம், கணிதம், வானவியல், மருத்துவம் முதலான கல்வியை புகழ் பெற்ற வானவியல் கணிதவியல் நிபுணரான அபு நாசர் மன்சூர் (அபு நாசர் ஜிலானி என்று சிலர் சொல்கின்றார்கள்) என்பவரிடம் பயின்றதாக சில குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இரண்டு கல்விகளையும் சமகாலத்தில் பயின்றதாகவே ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இவர் அரபி, ஃபார்ஸி, சமஸ்கிருதம், ஹீப்ரு, கிரேக்கம், சிரியாக் முதலான மொழிகளில் பாண்டித்துவம் பெற்றிருந்ததோடு பல கலைகளில் தலை சிறந்த மேதையாகவும் விளங்கினார். தன்னுடைய பதினேழாம் வயதில் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர் தன்னுடைய கேத் நகரத்தின் அட்ச ரேகையை (Latitude) கண்டுபிடித்தார். 995 ல் தன்னுடைய 22 ம் வயதில் ஏற்கனவே பல ஆய்வாளர்களால் கண்டுபிடித்த உலக வரைபடங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் ஒரு பகுதியின் வரை படத்தை உருவாக்கினார். He described his own projection of hemisphere onto plan என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அது southern hemisphere or northern hemisphere என்ற விபரமில்லை. அவர்  முதன் முதலில் பூமியின் ஆரத்தை எளிதாக கணக்கிடும் முறையை உருவாக்கினார். இது சிறிது மாற்றங்களுடன் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. (பார்க்க யுடியூப்)

அல் பைருனியின் செயல் முறை :

மலையின் உயரத்தை அளத்தல்

1. இதற்கு ஒரு கடல் அருகில் உள்ள ஒரு மலை அடிவாரத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து கோணமாணியின் மூலம் மலை உச்சி வரையிலான கோணத்தை அளக்கவேண்டும்(Ø1).
2. பின் சற்று தூரம் சென்று மீண்டும் மலை உச்சி வரையிலான கோணத்தை அளக்கவேண்டும் (Ø2).
3. முதல் இடத்துக்கும் இரண்டாவது இடத்துக்குமுள்ள தூரத்தை(d) சரியாக அளந்துக்கொள்ளவேண்டும்.  அவை இரண்டும் நேர்கோட்டிலும் இருக்கவேண்டும்.
4. ட்ரிக்னாமெட்ரிக், அல்ஜிப்ரா மூலம் மலையின் உயரத்தை(h) அளக்கவேண்டும்(h=(d tanØ1 tanØ2)/( tanØ2- tanØ1)இப்போது மலையின் உயரம் கிடைத்துவிடும்.
5. பின் மலையுச்சிக்கு சென்று  கடலும் வானமும்(Horizon) சந்திக்கும் இடத்தின் கோணத்தை அளக்க வேண்டும்.
6. மலையின் உச்சி, தொடுவானம், பூமியின் மையம் இவை மூன்றையும் இணைத்து ஒரு செங்குத்து முக்கோணம்(90°tri angle) வரையவேண்டும்.
7. ட்ரிக்னாமெட்ரிக்(trigonometric) முறைபடி மலையின் உயரம், பூமியின் ஆரத்தினோடு தொடர்பு உள்ளதை காண்பிக்கும். இப்போது அல்ஜிப்ராவை உபயோகித்து ஆரத்தைக் கணக்கிடமுடியும் R=(h cosØ)/(1-cosØ). இதை வைத்து பூமியின் சுற்றளவை மிகத் துள்ளியமாக கணக்கிட்டார்.

பூமியின் ஆரத்தைக் கண்டறிதல் (c மஞ்சள் கட்டம் இரு இடங்களின் தேர்வு (Ø1& Ø2))

தன்னுடைய இளம் வயதிலேயே இப்னு சினாவுடன் தொடர்பு வைத்திருந்து கருத்து பறிமாற்றங்கள் செய்திருக்கிறார்கள். 10 ம் நூற்றாண்டின் இறுதியிலும் 11 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பைரூனிக்கு சோதனைக் காலமாக அமைந்திருந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் கலவரம், பிற மன்னர்களின் படை எடுப்புக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டார். குவார்ஜம்மின் ஆட்சியாளரான பனு ஈராக் கவிழ்ந்தபின் இளவரசரும் ஆசிரியருமான அபு நாசர் மன்சூர் என்ன ஆனார் என்ற விபரம் பைரூனிக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான சூழலில்  பைரூனி ரேய்(Rayy) இப்போதைய டெஹ்ரானுக்குச்  சென்று சில வருட காலம் அங்கு வாழ்ந்து பின் தன் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். ரேய்யில் வாழ்ந்த காலம் தனக்கு மிகவும் சோதனைகள் நிறைந்திருந்தது, அங்கு தன்னை ஆதரிப்பவர்கள் யாருமில்லை, வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றதாக குறிப்பிடுகிறார்.

அப்போதும் தன் ஆய்வை விடவில்லை. அப்போது ரேய்யில் வாழ்ந்த குஜாண்டி(Khujandi) என்பவர் ரேய் மலை மீது வான் ஆய்வகம் (observatory) ஒன்றை அமைத்து மிகப்பெரிய கருவிகளைக் கொண்டு ஜூன் 994-ல் summer solestice டிசம்பரில் winter solestice ஆரய்ந்து கிரகணங்கள் நிகழ்வை முன்கூட்டியே கணக்கிட்டார்.  அதில் சில தவறுகள் இருப்பதை பைரூனி பின்னர் சுட்டிக்காட்டினார். 995 முதல் 997 வரை ரேய்யில் காலங்கழித்துவிட்டு பின் காஸ்பியன் நகரமான ஜிலான்(ஜைலானி) நகருக்கு சென்றார். அங்கு ஆட்சிபுரிந்த  இப்னு ருஷ்தத்தின் ஆதரவோடு தன் ஆராய்ச்சியை தொடர்ந்தார். சந்திர கிரகணம் நிகழப்போவதையும் அது ’கேத்’திலிருந்து ’பாக்தாத்’ வரை தெரியும் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்.  கி.பி 1000-த்தில் பல பாகங்களுக்கும் பயணம் செய்து ஆராய்ந்தார். அதே ஆண்டு குர்கான்(Gurgan) என்ற நகரில் தங்கி மன்னர் கபூஸின் ஆதரவுடன் ஆய்வுகள் பல நடத்தினார். காலமாணியை உருவாக்கி நன்றிக்கடனாக மன்னர் கபூஸுக்கு சமர்ப்பித்தார். பண்டைய பாரசீகர்கள், யூதர்கள், சிரியர்கள், ஹரானியர்கள், அரபியர்கள், கிரேக்கர்கள் உபயோகித்த காலண்டர்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார், ஆனால் இந்திய காலண்டரை விவரிக்கவில்லை. காரணம் அந்த சமயம் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் இந்த படைப்பு காலண்டரின் கலைக் களஞ்சியமாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

பின்னத்தைப்( decimal system) பற்றி ஒரு புத்தகம், உயரத்தை (altitude) அளக்கும் astrolabe பற்றி ஒரு புத்தகம், வான் ஆராய்ச்சி பற்றி ஒன்றும், சோதிடம் பற்றி மூன்றும், சரித்திரம் பற்றி இரண்டு புத்தகங்களும் எழுதியிருந்தார். 

1004 ல் பைரூனி தன் சொந்த நாட்டுக்குத் திரும்பியபோது அங்கு மஃமூன் சகோதரர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய அரசவையில் விஞ்ஞானிகளுக்கு தனி மதிப்பு கொடுக்கப்பட்டது. பல விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை நடத்தி வந்தனர். பைரூனியின் ஆசிரியர் அபு நாசர் மன்சூரும் அவர்களில் ஒருவராக இருந்தார். மஃமூன் சகோதரர்களின் ஆதரவு பைரூனிக்கு உதவியாக இருந்தது. அப்போது அவர் ஜர்ஜானியாவில் ஒரு கருவியை உண்டாக்கி 1016 ஜூன் 7 முதல் டிசம்பர் 7 வரை ஆறு மாத காலம் சூரியன் தீர்க்க ரேகையை(Meridian) கடப்பதை பற்றி பதினைந்து முறை ஆராய்ந்தார்.

மஃமூன் சகோதரர்கள் இருவரும் கஜ்னாவை(Ghazna) ஆண்ட சுல்தான் மஹ்மூது (கஜ்னி முஹம்மது) வின் சகோதரிகளைத் திருமணம் முடித்திருந்தார்கள். அது, கஜ்னி தன் ஆட்சியை கேத் வரை விரிவு படுத்துவது எளிதாக இருந்தது. சொந்த ராணுவத்தால் மஃமூன் கொல்லப்பட்டபிறகு பைரூனியும் அவர் ஆசிரியர் அபு நாசர் மன்சூரும் கஜ்னி முகம்மதுவால் தன் சொந்த நாடான கஜ்னாவுக்கு கைதிகளைப்போல் அழைத்துச் செல்லப்பட்டனர் J.J.O’Connor and E.F Robertson குறிப்பிடுகிறார். ஆனால் மஹ்மூது (கஜ்னி) மஃமூன் மீது பொறாமைக் கொண்டு அவரிடம் இருந்த அனைத்து விஞ்ஞானிகளையும் தன்னிடம் அனுப்பி வைக்கவேண்டும் என்று மிரட்டினார். அதனால் இபுன் சீனா, அபு சாஹல் ஈசா மஸிஹி ஆகியோர் மேற்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். ஆனால் பைரூனி, அபு நாசர் மன்சூர், அபுல் கைர் கம்மார் ஆகியோர் கஜ்னா சென்று சுல்தான் மஹ்மூது அரசவையில் பணியாற்றினர். பைரூனி தன் எஞ்சிய காலம் வரை சுல்தான் மஹ்மூது (கஜ்னி), அவர் மகன் மசூது, பின் பேரன் மவ்தூத் ஆகியோர் அரசவையில் பணியாற்றியதாக பல்காகோவ் குறிப்பிடுகிறார்.

சுல்தான் மஹ்மூது பைரூனி மீது ஆரம்பத்தில் பொறாமை கொண்டிருந்தாலும் பின்னர் ஆதரவு அளித்தார். ஆனால் பைரூனி குறித்து வைத்திருந்த வின்னக நிகழ்வுகளை திருத்தி அமைத்தார். பைரூனியை சுதந்திரமாக செயல்பட விடாமல் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். 1026 ல் இந்தியா மீது படை எடுத்தபோது கூடவே பைரூனியையும் அழைத்துச் சென்றார். இந்தியா மீது கஜ்னி பதினேழு முறை படை எடுத்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் பைரூனியை எத்தனை முறை அழைத்துச் சென்றார் என்ற குறிப்பு இல்லை.

1030 ல் சுல்தான் மஹ்மூது(கஜ்னி முகம்மது) இறந்தபின் அவர் மகன் மசூது ஆட்சி பொறுப்பை ஏற்றார். தன் தந்தையைப் போல் இல்லாமல் பைரூனிக்கு முழு சுதந்திரம் அளித்தார். இது அவருடைய ஆய்வுகளுக்கு பெரும் துணையாக இருந்தது மட்டுமல்ல உத்வேகம் பெற்று பெரும்

சாதனைப் படைத்தார் என சொல்லலாம். தனக்கு பெரும் ஆதரவளித்த சுல்தான் மசூதுக்கு நன்றிக்கடனாக  ‘அல் கானூன் அல் மசூதி ஃபில் ஹையா வல் நுஜும்’ (Masudic canon of astronomy) என்ற புத்தகம் பிரசித்தி வாய்ந்த புத்தகத்தை எழுதினார். பதினோரு பாகங்கள் அடங்கிய  அப்புத்தகம் ஒவ்வொரு பாகமும் ஏழு அத்தியாயங்களையும் சில அதற்கு மேலும் கொண்டது. முதல் பாகத்தில் அறிமுகம், வானசாஸ்திரம், பிரபஞ்சம், நேரம், இடைவெளி (space) இவைகளைப் பற்றியது. இரண்டாம் பாகம் ஹிஜ்ரி, கிரேக்கம் மற்றும் பாரசீக காலண்டரைப் பற்றிய விளக்கம். மூன்றாம் பாகம் கோணவியல் (trigonometry). நான்காம் பாகம்  special astronomy. ஐந்தாம் பாகம் புவிப்புறவியல் ( geodesy), புவி இயல் கணிதம்( mathenatical geography). ஆறாம் பாகம் நேர வித்தியாசம், சூரியனின் நகர்வு(solar motion). ஏழாம் பாகம் சந்திரனின் சுழற்சி. எட்டாம் பாகம் கிரகணம் மற்றும் பிறையின் தோற்ற நேரம். ஒன்பதாம் பாகம் நிலையான நட்சத்திரங்கள் (stable stars). பத்தாம் பாகம் மற்ற கிரகங்கள். பதினொன்றாம் பாகம் சோதிட செயல்முறை விளக்கம்(Astrological operations) என வரிசைப் படுத்தி எழுதியுள்ளார். 1040 ல் மசூது கொல்லப்பட்டபிறகு அவர் மகன் மவ்தூது அரசரானார். அப்போது பைரூனிக்கு முதுமை அடைந்தார். முதிர்ந்த வயதிலும் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வந்தார்.

கணிதம் மற்றும் வானவியல்

146 புத்தகங்களில் 95 புத்தகங்கள் பைரூனி கைபட எழுதியவை. அவற்றில் பெரும்பாலும் வானவியல், கணிதம், புவி இயல் கணிதம் சார்ந்ததாகவே இருந்தது. கணிதவியலில் விளக்கத்தைவிட அதில் எழுந்த கேள்விகளுக்கு தீர்வு காண்பதில் மிகவு ஆர்வம் கொண்டிருந்தார். வானவியலில் ஆய்வு சம்பந்தமாக பலருடன் கலந்தாய்வு நடத்தி அவை பற்றி விளக்கம் அளிப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 

கணிதவியலில் அல்ஜிப்ரா பற்றியோ அல்லது ஜியாமெண்ட்ரி பற்றியோ விளக்கங்கள் எழுதவில்லை, தவிர பொது கணிதத்திலும் (arithmetic) கவனம் செலுத்தவில்லை.  மாறாக வானசாத்திரத்தில் கோணவியலின் செயல்பாட்டைப் (trigonometric function) புகுத்தி புதுமை செய்தார். சூரியனின் சுழற்சியையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் அறிந்தார். ‘கித்தாப் மக்காலித் இல்ம் அல் ஹையா(Compendium on astronomy)  என்ற புத்தகத்தில் கோள வடிவ கோணவியல் கணிதத்தை (spherical trigonometry) வானசாத்திரத்தில் பயன்படுத்தும் முறையையும் அதில் ஏற்படும் சிக்கல்களையும் அவற்றை நிவர்த்திபடுத்தும் முறையையும் எழுதியுள்ளார். ‘கித்தாப் ஃபி இஃப்ராத் அல் மக்கால் ஃபி அம்ரு அல் ஜிலால்’ (exhaustive treatise of shadow) என்ற புத்தகத்தில் கோணவியலைப் (trigonometry) பயன்படுத்தி தொழுகை நேரத்தையும் கிப்லாவின் திசையையும் கணக்கிடும் முறையையும் விளக்கியுள்ளார். பூகோள கணிதத்தில் புதிய உக்தியைக் கையாண்டு இரண்டு நகரங்களுக்கான தீர்க்கரேகையை கணக்கிடும் முறையை கண்டுபிடித்தார். அம்முறையில் பாக்தாதுக்கும் கஜ்னாவுக்கும் 24;20° வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தார். அவ்விரு நகரங்களுக்கும் இப்போதைய நவீன முறையில் 18 மினிட்( ஒரு டிக்ரியை  அறுபதாகப் பிரித்து அதில் பதினெட்டு பாகம், அதாவது 24;20°:18′:00” ) வித்தியாசமே உள்ளது. அல் கானூன் அல் மஸூதி (al qanun al masudi) என்ற புத்தகத்தில் கிரேக்க ஞானி தாலமியின் புவி இயலைச் சார்ந்து இன்னும் தெளிவான கருத்தை தெரிவிக்கும் பைரூனி, படிமங்கள், கடல் சிப்பிகள், படிம அடுக்குகளை மிக கவனமாக ஆராய்ந்து சீதோஷ்ணம் மற்றும் நில பரப்பின் மாற்றங்களை கண்டறிந்தார்.

சந்திரக் கிரகணம் பற்றி பைரூனியின் வரை படம்

இந்தியாவில் பைரூனி

சுல்தான் மஹ்மூது (கஜ்னி முகம்மது) உடன் வந்து இந்தியாவில் தங்கி இருந்த காலத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்று பாதஞ்சலி யோகசூத்ரா என்ற சமஸ்கிருத புத்தகத்தை ’கித்தாப் பாதஞ்சல்’ என்ற பெயரில் அரபியில் மொழி பெயர்த்தார். ‘கித்தாப் தஹ்கிக் மஆலில் ஹிந்த் மின் மகூலா மக்பூலா ஃபில் அக்ல் அவ் மர்தூலா’ (The book confirming what pertains to India, wether rational or despicable) இந்தியாவில் இருந்த ஜாதி வேறுபாட்டினையும் உயர் ஜாதிக்காரர்களால் தலித்துக்கள் கொடுமைப் படுத்தப்பட்டதையும் விவரித்திருக்கிறார்.  இந்தியாவில் பல பாகங்களுக்குச் சென்று அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, திருமண உறவுகள், உணவு என அனைத்தையும் விவரித்திருக்கிறார். பல பண்டிதர்களை சந்தித்து நடைமுறையில் இருந்த வானசாஸ்த்திரம், சோதிடம், கணிதம் முதலியவற்றை தெரிந்துக்கொண்டார். ஒரு பக்கம் கடுமையாக சாடியும் மறுபக்கம் பரிவும் காட்டும் பைரூனி, இந்தியாவைப் பற்றி இருவகை மனப்பாண்மை கொண்டிருந்தது தெரியவருகிறது.

’கித்தாப் பாதஞ்சல்’-ஐ மூலத்தில் உள்ளதுபோல் நான்கு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் பாகத்தில் கேள்வி பதில் ரூபத்தில் விளக்கம் ஆரம்பித்து மனக்கட்டுப்பாட்டை(mind control) சொல்கிறது. அப்பியாசம், வைராக்கியம், பக்தி என முறையே தஃவீது, அல் ஜொஹத் அல் ஃபிக்கர், இபாதத் என மூன்றாக பிரித்து சொல்லப்படும் இந்நிலை பகவத் கீதையில் கர்ம யோகா, ஜனன யோகா, பக்தி யோகா என விவரித்து சொல்லப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாகங்களில் தன்னை உணருதல் (Introspection) பற்றி விரிவாக்கமும், அஷ்டாங்க யோகா நிலைகளையும், மூச்சுப் பயிற்சி(ப்ராணா)யும் சித்தி (அஜாயிபு அல் அஃப் ஆல்) பற்றியும் விளக்கியுள்ளார். மொத்தத்தில் இது மூலதத்துவத்தைப் பற்றி விளக்கும் நூல் என்றாலும் இந்திய ஞானத்திலும் கிரேக்க ஞானத்திலும் சூஃபித்துவத்திலும் ஒற்றுமை இருப்பதை காணமுடிகிறது.

பைரூனியின் சோதிடக் கலை

1017ம் ஆண்டு சுல்தான் மஹ்மூதால் (கஜ்னி முகம்மது) அழைத்துச் செல்லப்பட்ட குவார்ஜம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரைஹானா என்ற பெண்ணிற்காக ‘தஃப்ஹிம்’ என்று சுருக்கமாக சொல்லப்படும் ‘கித்தாப் அல் தஃப்ஹிம் லி அவாயில் சினாஅத் அல் தன்ஜிம்’ (the Book of Instructions in the Elements of the Art of Astrology) என்ற புத்தகத்தை எழுதினார். அதை ஐந்து பாகமாகப் பிரித்து முதல் பாகத்தில் பெரு வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி எழுதியுள்ளார். இரண்டாம் பாகத்தில் அரசியல் சம்பந்தமானது, இதில் அரசர்களின் உயர்வும் வீழ்ச்சியும், சண்டை, புரட்சி பற்றி எழுதியுள்ளார். மூன்றாம் பாகத்தில் தனி மனிதனின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு, பரம்பரை இவைகளைப் பற்றியது. நான்காம் பாகத்தில் சமுதாயத்தின் நிலைபாடு, தொழில் முதலானவற்றை குறிக்கிறது. ஐந்தாம் பாகம் பயங்கரங்கள் அத்துமீறல்கள் பற்றி கூறுகிறது. என்றாலும் இதில் சோதிடர்கள் ஒருபக்கமும் மந்திரவாதிகள் மறுபக்கமும் நிற்கிறார்கள்.

இந்தியாவில் சோதிடக்கலையில் பெரும்பாலும் பிரம்மகுப்தாவின் சோதிடத்தை மேற்கோள் காட்டுகிறார். பிரம்மகுப்தாவின் ‘பிரம்மகுப்தா சித்தாடந்தம்’ என்ற புத்தகத்தை முழுமையாக அரபியில் மொழிபெயர்ப்பு செய்யமுடியாவிட்டாலும் அதிலுள்ள அம்சங்களை (table of contents) அரபியில் எழுதியுள்ளார்.

கிரேக்கம், பாரசீகம், இந்தியா ஆகிய மூன்று நாட்டிலிருந்து சோதிடக்கலை அரபு நாட்டில் நுழைந்தது. கி.பி 770 ல் சித்தாந்தா என்ற சோதிடப் புத்தகம் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் கிரேக்க சோதிடக் கலை அரபு கலைக்கு முக்கிய பங்கு அளித்தது. பைரூனி, இந்திய கலையுடன் அரபி கலையை ஒப்பிட்டுப் பார்க்கிறார். தன்னுடைய பிறப்பை கணித்து கூறும்போது செப்டம்பர் 4 என்று வருகிறது ஆனால் சில ஆய்வாளர்கள் செப்டம்பர் 5 என்றும், சிலர் 15 என்றும் குறிப்பிடுகிறார்கள்.

பைரூனி பிறந்த ஜாதகம்

மருந்தும் கனிமமும்

மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர் தாவரங்களின் வகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும், மருந்து செய்யும் முறையையும் விளக்கியதோடல்லாமல் அவற்றை வரிசையப்படுத்தி ‘கித்தாப் அல் சைதலியா’ (Book of medicine) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில் மருந்தின் வகை(dawa), விஷம்(somun), உணவு வகைகள்(agdia), ஒவ்வாமை(hadf), மாற்று மருந்து(tabdil) முதலியவற்றை குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 1197 வகையான மருந்துக்கள் பற்றி எழுதியுள்ளார். இவருடைய இப் புத்தகம் பார்சி மொழியில் மொழி பெயற்கப்பட்டு கிடைத்துவந்தது. ஆனால் அரபியில் எழுதப்பட்ட மூல புத்தகம்(கையெழுத்துப் பிரதி) 1926ல் பஸராவில் Velidi Togan என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு ஹக்கிம் முஹம்மது சயீது (Hamdard National Foundation, Karachi) என்பவரால் ஆங்கிலத்தில் 1973 ம் ஆண்டு மொழிபெயர்கப் பட்டுள்ளது.

கித்தாப் அல் ஜமாஹிர் ஃபி மஅரிஃபத்துல் ஜவாஹிர்(The sum knowledge of precious stones) என்ற புத்தகத்தில் வைரம், வைடூரியம், கோமேதகம், முத்து என பதினெட்டு வகையான கற்களின் specific gravity யை முதன்முதலில் கண்டறிந்து அவற்றின் தன்மைகளை விளக்கியுள்ளார்.  இந்த புத்தகத்தின் பல பகுதிகளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்திருந்தாலும் முழு புத்தகத்தையும் ரஷ்ய மொழியில் 1968 ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பல்வேறு கிரேக்க, அரேபிய அறிஞர்களின் ஆய்வுகளையும் அரேபிய பாரசீக புலவர்களின் மேற்கோள்களையும் ஆதாரமாக வைத்து கனிமங்களை ஆய்வு செய்தார். ரசவாதத்தை மறுத்த அவர் இயற்கையாக உலோகம் படிப்படியாக தங்கமாக மாறுவதை ஏற்கிறார்.  குடுவை போன்று ஒரு உபகரணத்தை உருவாக்கி சில உலோகம் மற்றும் கனிமங்களின் specific gravity யைக் கண்டுபிடித்தார். Specific gravity of Gold at 19.0 (actually 19.3); Specific gravity of Iron at 7.92 (actualluy 7.9).

மதம்

பைரூனி ஷியா பிரிவை சேர்ந்தவர் என்று encyclopedia britannica கூறுகிறது. ஆனால் அவர் இஸ்லாத்தில் எதை சார்ந்திருந்தார் என்ற தெளிவில்லை என்று  encyclopedia iranica கூறுகிறது. ஆனால் அவர் எழுதிய சில புத்தகங்களில் ஈரானிய மதத்தைத் தழுவி கிருஸ்துவத்தையும் ஜூடாயிஸத்தையும், இந்திய மதங்களைப் பற்றியும் வாதிக்கிறார். ஷியாக்கள் மிக விஷேசமாகக் கொண்டாடும் ‘ஆஷுராவுக்கும் ,   ghadir khomm غدير خم க்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவர் ஷியாவில் ஜைதி பிரிவை ஆதரிக்கவில்லை. பெருமானார் அவர்கள் குடும்பத்தையும் அலி(ரலி) அவர்களையும் சிலாகித்து சொல்கிறார். ஹஜ்ரத் அபூபக்கர்(ரலி), ஹஜ்ரத் உமர்(ரலி), ஹஜ்ரத் உதுமான்(ரலி), ஹஜ்ரத் அலி(ரலி), ஹஜ்ரத் ஹஸன்(ரலி) ஆகிய ஐவரையும் கலிஃபாக்களாக ஏற்றுகொள்ளும் அதே சமயம் உமையாக்களை அரசர்கள் என்றும் அப்பாஸியர்களை இமாம்கள் என்றும் ‘கித்தாப் அல் அத்தார்’ல் குறிப்பிடுகிறார். எனவே அவர் ஷியா முஸ்லிம் என்று உறுதிப்படுத்த முடிகிறது என்றாலும் சுல்தான் மஹ்மூதுவால் (கஜ்னி முகம்மது) கஜ்னாவுக்கு அழைத்துச் சென்ற பிறகு ஷியா வகுப்பின் மீது இருந்த பற்று குறைந்தது ஆச்சரியப் படுவதற்கில்லை. காரணம்  சுல்தான் மஹ்மூது(கஜ்னி முகம்மது) தீவிர ஸுன்னி பிரிவை சேர்ந்தவர். ஷியாப் பிரிவை சார்ந்தவர்கள் வெள்ளைக் கல் மோதிரமும் ஸுன்னி பிரிவை சார்ந்தவர்கள் கருப்புக் கல் மோதிரமும் அணியவேண்டும் என்று  குறிப்பிடும் பைரூனி  தன் கையில் இரண்டு வகை மோதிரங்களையும் அணிந்திருந்ததாக ‘கித்தாப் அல் ஜமாஹர் ஃபி மஆ ரிஃபத்துல் ஜவாஹரில்’(Book of the sum of knowedge and precious stones) குறிப்பிடுகிறார்.

பெருமானார் மீது மாறாத அன்பு வைத்திருந்த அவர் தொழுகை நேரங்களைப் பற்றி விவாதிக்கும்போது ஹஜ்ரத் உமர்(ரலி) மற்றும் இமாம் ஜாபர் சாதிக்(ரலி) அவர்களை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார். மற்ற மதங்களை மதிக்கும் அவர் இஸ்லாமியர்கள் வேற்று மதங்கள்மீது வெறுப்புக்கொள்வதை கடுமையாகச் சாடுகிறார். இந்து மதத்தில் சொல்லப்படும் ‘ஓம்’ என்ற வார்த்தையையும் இஸ்லாத்தின் ‘பிஸ்மில்லாஹ்’வையும்  இறைவனை அழைக்குக்கும் ஒப்பிடமுடியாத வார்த்தைகள் என்கிறார். பௌத்தம், கிருஸ்துவம், யூதம், ஜொராஸ்ட்ரம் என பல மதங்களை ஆய்வு செய்த பைரூனி சூஃபிஸத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இறுதி நாட்கள்

இந்தியாவில் இருந்த பைரூனி எப்போது கஜ்னாவுக்கு சென்றார் என்ற விபரமில்ல. நீதிபதி அல் ஜஸபூரி என்பவர் சொல்கிறார், “நான், அபு ரைஹான் முஹம்மது மரணப் படுக்கையில் இருந்த சமயம் பார்க்கச் சென்றேன், அப்போது என்னிடம் கேட்டார், “ஒரு நாள் ஒரு விஷயமாக முன்பு என்னிடம் கேட்டீரே அதை இப்போது சொல்லட்டுமா?”.  நான் கேட்டேன் “இந்த சூழ்நிலையிலா சொல்ல ஆசைப் படுகிறீர்?” என்று. “அறிவை மறைத்த குற்றத்துக்கு ஆளாக விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு அதை விளக்கினார். அவர் சொன்னது என்னை சிந்திக்க வைத்தது. அந்த விளக்கத்தின் பிரமிப்பு நீங்காமல் அவரிடம் விடை பெற்று வெளியே வந்தபோது வீட்டினுள்ளே அழுகை சத்தம் கேட்டது, மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை என்னிடம் சொன்னார்கள் ” என்கிறார்

மரணத்தின் எல்லை வரை   அறிவுக்காக பாடுபட்டு அறிய கண்டுபிடிப்புகள் பலவற்றை இவ்வுலகுக்கு அளித்த இந்தப் பல்கலை வித்தகர் விட்டுச் சென்ற சாதனைகள் இன்னும் நம்மை வழிநடத்துகின்றன.

***

Sources :

http://www.youtube.com/watch?v=MfIUO4SP3oQ

http://www.youtube.com/watch?v=6gpENYL3mvk&feature=related

http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=135373

http://saarvaakan.blogspot.com/2011/02/blog-post.html

http://en.wikipedia.org/wiki/Ab%C5%AB_Ray%E1%B8%A5%C4%81n_al-B%C4%ABr%C5%ABn%C4%AB

http://en.wikipedia.org/wiki/Spherical_Earth

http://en.wikipedia.org/wiki/File:Lunar_eclipse_al-Biruni.jpg

http://islamsci.mcgill.ca/RASI/BEA/Biruni_BEA.htm

http://www.renaissanceastrology.com/albiruni.html

http://www.skyscript.co.uk/albiruni.html 

http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Al-Biruni.html

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-i-life

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-iii

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-iv

http://www.iranica.com/articles/biruni-abu-rayhan-v

http://iranica.com/articles/biruni-abu-rayhan-vi

http://iranica.com/articles/biruni-abu-rayhan-vii

http://iranica.com/articles/biruni-abu-rayhan-viii

http://unesdoc.unesco.org/images/0007/000748/074875eo.pdf

***

ஹமீது ஜாஃபர்

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com