பெரிய மனோராவின் பேரழகு

நேற்று மாலை , மொபைலில் எடுத்த புகைப்படம் இது .  enhance செய்யவில்லை, க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். ‘எஜமான்’ மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அலட்சியமாக 9ஆம் தட்டில் நின்றபடி வேலை செய்யும் அந்த ஊழியர் , அநேகமாக பானாசாஹிப் அவர்களின் அருமை மகனார் பாடிய ‘அல்லாஹ்வின் செல்வ இறைநேசரே.. எங்கள் நாகூரா எங்கள் நாகூரா‘வை முணுமுணுத்துக்கொண்டிருப்பார் என்பது என் யூகம்.

***

2013-04-26-194-b
***
கந்தூரி சிறப்பு மலரில் Dr. P.N. குப்புசாமி :

பெரிய மனோரா என்று அழைக்கப்படும் (இந்த) ஐந்தாவது மனோரா மராத்திய மன்னன் பிரதாபசிங்குவால் கட்டப்பட்டது. மன்னன் பிரதாபசிங், நாகூர் ஆண்டவர் அவர்களிடம் தமக்கு ஆண் மகன் பிறக்க வேண்டும் என்று வேண்டியதற்கு இணங்க ஆண்டவர் அவர்களின் கருணையினால் ஆண் மகன் பிறந்தபடியால் மன்னன் பிரதாபசிங்கின் தந்தை துக்கோசி அரசர் அளித்த நிலத்தில் காணிக்கையாக இந்த ஐந்தாவது மனோரா கட்டப்பட்டது. இது ஆண்டவர் அவர்கள் அடக்கமான 199ஆம் ஆண்டாகிய 1757 ஆம் ஆண்டில் உருவானது. 11 மாடங்களில்  131 அடி உயரத்தில் உயர்ந்தது இந்த ஐந்தாவது மனோரா. இதன் கட்டுமான காலம் 1 ஆண்டு 11 மாதம் 3 நாள்.. இம்மனோராவில் இசுலாமியச் சார்பில் பாரசீக மொழி மராத்திய மன்னர் சார்பில் மராத்திய மொழி, தமிழ் மண் சார்பாக தமிழ்மொழி என மும்மொழிகளில் வடக்கு தெற்கு மேற்கு மூன்று கல்வெட்டுக்கள் அமைத்து அந்த காலத்திலேயே ஒருமைப்பாட்டுக்கு வித்திட்ட பெருமை நாகூர் ஆண்டவர் அவர்களைச் சாரும்.

***

+

பெரிய மனோராவின் இன்னொரு புகைப்படம் (2009)

1 பின்னூட்டம்

  1. HAJAMYDEEN said,

    06/05/2013 இல் 03:28

    THIS PITCHER MADE ME TO GO ONCE AGAIN AFTER TWENTY LONG YEARS. GREAT. .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s