கலைந்து போன கனவு ராஜ்யம் – சிதம்பரப்பிள்ளை சிவகுமார் சிறுகதை

சிதம்பரப்பிள்ளை சிவகுமார் (யாழ்ப்பாணம்)

‘ பெருநாள் கழித்து போட்டால் போதும். இதுவும் ஒரு வகை தியாகம்தான். நமது தியாகத் திருநாளில் ஒரு தமிழ் இளைஞனின் மனத்தின் தியாகம் கலைந்து போன கனவு ராஜ்யமாக ஆப்தீன் பக்க வாசகர்களை ஆட்கொள்ளட்டும். எல்லோர்க்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்’  என்று சொல்லி சிவகுமாரின் சிறுகதையை அனுப்பிய நம் ஹனீபாக்கா அவர்களின் குறிப்பு முதலில்:

கணையாழி ஜனவரி 1992 இதழில் வெளியான இந்தக் கதை அன்றும் இன்று இருபது வருடங்களுக்குப் பிறகும் அதே சூட்டோடு திகழ்கிறது. சிவகுமார் இலங்கை அரச ஒளி-ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்களின் ஆளுமை மிக்க கலைஞன். தான் சார்ந்த மக்களின் விடுதலைக்காக ஒரு தோளில் துப்பாக்கியும் மறு கையில் பேனாவும் ஏந்திய மனுஷ்யன். அவன் எழுதிய முதற்கதையே இலக்கியச் சிந்தனையின் பரிசை வென்றது. ஒரு கதை எழுதி தன்னை சிறுகதை ஆசிரியன் என நிறுவிக் கொண்டவன். இந்தக் கதையைப் பற்றி பொன் தனசேகரன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“இலக்கிய நூலொன்றில் அரசியல் கொள்கைகள் குறுக்கிடும் போது அது சங்கீதக் கச்சேரியின் நடுவில் துப்பாக்கி சுடப்பட்டது போல் ஒலிக்கிறது. இதிலும் அரசியல் அலசப்படுகிறது. ஆனால் கோஷமாகவோ கொச்சையாகவோ அல்ல. இதில் அடி நாதமாக வெளிப்படுவது பரஸ்பர மனித நேயமே” என்கிறார்.

***

கலைந்து போன கனவு ராஜ்யம்

சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

“தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான்.” மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்ந்திழுப்பதாய் அமைய வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது. சிரிப்புக்குக் காரணம், அப்புறம், ‘தலையில்லாமல் அல்ல, தலைக்குள்ளே ஒன்றுமில்லாமல்தான் போய்க் கொண்டிருந்தான்’ என்று மாற்றிச் சொல்லி விடலாம் என்பது. மிகப் பெரும்பாலும் சரியாகவே இருந்து விடும் என்பதால், இந்த வரியை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் நான் சொல்லி விட வேண்டும் என்று துடிக்கிற விஷயங்களுக்கு சிறுகதை உகந்த வடிவமல்ல. சமீபகாலமாக எனக்குள் வெறியாக மாறி விட்டிருக்கிற, என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது. எழுதுகிறவர்கள் எல்லோரும் இத்தனை அவஸ்தைகளுக்குப் பிறகுதான் எழுதுகிறார்களா தெரியவில்லை. எழுதுவது பற்றி அவர்கள் சொல்லும் கெட்டித்தனமான வாக்கியங்களிலிருந்து எந்த மனசைத்தான் தெளிவாய்க் கண்டு கொள்ள முடிகிறது?

பெண்களின் இருக்கைகளின் பக்கம் புதிதாய்ப் பலர் பஸ்ஸில் ஏறினார்கள். சட்டென்று அழகான முகங்களுக்குத் தாவியது மனம். ஆண் மக்கள் எல்லோரையும் ‘இளமையில் கொல்’ என்று சொல்லி யார் படைத்து விட்டது இவர்களை! இளமையின் அழகு பற்றி சற்று அதீதமான வியப்புணர்வுகள் என்னுள் உண்டாவதாய்த் தோன்றியது. ஒருவேளை இளமைப் பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும என் வயதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.

இயல்புக்கு மாறானதாய் பல்லவன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் ஆட்களை மட்டுமே சுமந்து ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று ஞாபகம் கொண்டாற் போல் நான் ஆண்கள் பக்கம்தான் அமர்ந்திருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் என் அம்மா வயதுப் பெண்மணிக்குப் பக்கத்தில் ஸ்வாதீனமாய் போய் அமர்ந்து கொண்டதும், அந்தம்மா தன் கற்புக்காகப் போட்ட கூச்சலும்  நான் பட்ட அவமானமும், தமிழகம் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு. அப்புறம் ‘இன்னாபா ஆட்டோ வடபயனி வருமா… இந்தா லெப்டில ஒடிச்சி ஸ்ட்ரெயிட்டா போய்க்கிட்டே இரு… எவ்ளோபா மீட்டர்லே சூடு வெச்சிருக்கே… நம்மகிட்டயே பேஜார் பண்றியே நைனா…’ எங்கிற அளவுக்குத் தேறியிருக்கிறேன். சந்தேகமில்லை.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைக்காரி ஒருத்தி பின்னாலிருந்த தோழிகளுக்கு எதையோ கீச்சிட்ட குரலில் சொல்லிச் சிரித்தாள். என்னை மூழ்கடித்து மூச்சுத்திணற வைக்கக்கூடிய இரண்டு சின்னச் சமுத்திரங்கள் அவள் முகத்திலிருந்தன. திரும்பும் போது எல்லாக் குறும்புக்காரிகளையும் போல் ஆயிரம் வோட் மின்சாரத்தை என் மீது பாய்ச்சி ஒரு கண நேர அதிர்ச்சியைத் தந்து விட்டே தோழிகளோடு சிரித்தாள். என்னைப் பற்றித்தான் ஏதேனும் சொல்லியிருப்பாளோ? இப்போது அவள் தோழிகள் என்னைப் பார்க்கத் திரும்பக் கூடும். நான் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டேன். இந்தக் கலாரசனை மிக்க உள்ளத்தை, முகதேஜஸைப் பார்த்தே புரிந்து கொண்டுவிடக் கூடியவர்கள் இருக்கலாம், யார் கண்டது? இளம் பெண்கள் எல்லோரும் அடக்கிக் கொள்ள மாட்டாத ஆர்வத்தோடு அடிக்கடி என்னைக் கள்ளமாகவேனும் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதில் எனக்கு போதை இருந்ததால், அலட்சியமாகத் தீவிரமாக சிந்தனையிலிருப்பது போன்ற பாவனையிலிருந்தேன். அவர்களைப் பார்க்க விரும்பி மனம் குறுகுறுத்தாலும் அப்படிப் பார்ப்பது அவர்கள் என் மீது கொண்டிருக்கும் வியப்பு நிறைந்த ஈடுபாட்டிற்கு பங்கம் நேர இடம் கொடுத்து விடும் என்று பட்டது. வெறுமனே அழகை ஆராதனை செய்கிற ரசிக உணர்ச்சிதான் என் பாரவையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம். இன்னும் சற்றுப் பெரிய மனிதத் தோரணையோடு ‘எனக்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டில்லை’ என்ற பாவனையில் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

“ராஜன்!”

மிகச் சமீபமாய்க் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். திடுக்கிடக் காரணம், அது பெண் குரல்… மாலினி!

“மாலினி என்ன இது? surprise, எப்ப இங்க வந்தனீ?”

“அங்க பின்னுக்கிருந்து பாத்தே உங்களை நான் அடையாளம் கண்டிட்டன்… எங்க போறீங்கள்… அவசரம் ஒண்டுமில்லைதானே?”

“இல்லை நீ எப்படி இருக்கிறாய்?”

“அடுத்த ஸ்டொப்பில இறங்குவம். நிறையக் கதைக்க வேணும்”

***

“வாராய் என் தோழி வாராயோ உன் மாப்பிள்ளை காண வாராயோ…” என்று பாடி வரவேற்றான் லோகு.

வந்தவள் தயங்கி நின்றாள். மிரட்சியோடு நோக்கினாள்.

“வலது காலை எடுத்து உள்ள வாறதுக்கு முந்தி மேல நிமிர்ந்து போர்டைப் படிச்சுச் சொல்லம்மா. நாங்கள் வந்திருக்கும் இடத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளலாமே” என்று பணிவாக அபிநயித்துச் சொன்னான் ஜெயக்குமார்.

“வந்த இடம் நல்ல இடம், வர வேண்டும் தோழி வர வேண்டும்” என்று மதில் சுவரில் அமர்ந்து கொண்டு வாய்க்கு வந்த படி பாடுவதாகக் காட்டிக் கொண்டான் தயா.

“ஏய் வாசி” – உறுக்கினான் ரட்ணம்.

“ஜவ்னா யூனிவர்சிற்றி” நடுங்கிய குரலில் சொல்லித் தலை கவிழ்ந்து நின்றாள் அவள்.

“அடி சக்கை! இங்கிலீசில படிக்கிறாடா… தமிழ் தெரியாதாடி உனக்கு?”

“கொழும்பு ரமிலா? அப்ப நல்ல கொழுப்பாய்த்தான் இருக்கும்…”

“வாம்மா மோதகம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சொல்ல வாய் சுளுக்குதா?”

“டேய்! இங்க வாம்மா” – மிரட்சிப் பார்வையை எனக்குத் தந்தாள்.

“உன் பேர் என்ன?”

“மாலினி!”

“என்ன படிக்கப் போறாய்?”

“Medical Faculty” என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டு, “மருத்துவ பீடம்” என்றாள்.

“கொப்பர் என்ன செய்யிறார்?”

தமிழ் அரசியல்வாதி ஒருத்தரின் பெயர் சொன்னாள்.

“அடடடே! தமிழ்க் கடலின் முத்து” என்றான் ரகு.

“முத்து எங்கள் சொத்து” என்றான் தயா.

“வீட்டில் எப்பிடிப் பொழுதைக் கழிக்கிறாய்?” என்றேன். முழித்தாள்.

“கோழி வளர்க்கிறியா?” என்றேன் நெஞ்சுக்கு நேரே பார்த்துக் கொண்டு.

தயங்கியவாறே ஆமென்பதாய் தலையாட்டினாள்.

கூட்டம் பேரொலியாகச் சிரித்தது.

“நான் தனியே வந்தா காட்டுவியா?”

குழப்பத்தோடு என் கண்களைப் பார்த்தவள், தலையைக் குனிந்து அழுவதற்கு ஆயத்தமானாள்.

கூட்டம் கெக்கட்டமிட்டுச் சிரித்தது.

***

நான் கென்டீனிலிருந்து வெளியே வந்த போது, மாலினி வந்து கொண்டிருந்தாள். தோழிகளைத் தவிர்த்து விட்டு தனியாக வரும் போதே, “என்ன இங்க நிக்கிறிங்கள், பந்தல் போடுமிடத்தில் உங்களைத் தேடுறாங்க” என்றபடியே மூச்சுவிட்டாள்.

“உண்ணாவிரதமிருக்கப் பேர் குடுத்திருக்கிறவர்கள் உங்களில் எத்தனை பேர்?”

“நாலு பேர், போய்ஸ்ல அஞ்சு பேர். மொத்தம் ஒன்பது பேர், லிஸ்ட் குடுத்தாச்சு”

“ஒரே முறையில் இவ்வளவு பேரும் இருக்க வேண்டாம் எண்டு படுது… தொடர்ச்சியா பிறகும் ஆட்கள் இருக்கலாமெல்லே… அதுதான் யோசிக்கிறேன்…”

“இன்னும் நிறயப் பேர் தயாராய்த்தானிருக்கிறம்… இருக்கட்டுமேன், சுலோகங்களெல்லாம் ரெடியா?”

“ம்… கமலனை விடுதலை செய், தரப்படுத்தலை நீக்கு, ராணுவ அடக்குமுறைச் சட்டங்களை வாபஸாக்கு எண்ட ரீதியில கொஞ்சம் எழுதியிருக்கு. மிச்சம் எல்லோரோடையும் கதைச்சு இரவுக்கும் எழுதலாம்”

“இப்ப எங்க போறீங்கள்?”

“பந்தலடிக்குத்தான்… ஏன்?”

“இல்லை ராஜன், எனக்கு கன நாளாய் சந்தேகம் ஒண்டு….”

“என்ன?”

தயக்கம், நாணம் என்ற கலவையை வெளிப்படுத்த, கைக்குட்டையால் மோவாயைத் துடைத்தபடி எனக்கருகில் தரையில் கிடந்த ஏதோ ஒரு பொருளை வெகு தீவிரமாக உற்றுப் பார்த்தாள்.

“மோதகம் எண்டு நீங்கள் யாரைச் சொல்றனீங்கள்?”

“சரியான வெயிலா இருக்கு. எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டிட்டு ஓடலாம் போல…”

“ச்சீ… டேர்ட்டி!” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“அ… இதுதான்!” என்றேன்.

புரிந்திருக்க வேண்டும். மேலும் அழகானாள்.

“இன்னுமொண்டு…” என்று தயங்கினாள்.

“என்ன?”

“கோழி எண்டது ஏதேனும் கெட்ட வார்த்தையா… என்னது?”

“சேச்சே! கெட்ட வார்த்தையெல்லாம் இல்லை…” என்ற என் மீது நேர்ப்பார்வையோடு நின்றாள்.

“அப்ப அடிக்கடி உங்களுக்குள்ள சொல்லி சிரிச்சிக்கிறீங்களே!”

“பெண்களின் அப்பாவித்தனமோ, அல்லது அது மாதிரியான பாவனையோ எல்லாச் சமயங்களிலும் எரிச்சல் உண்டாக்குவதில்லை. என் கண்ணில் விஷமத்தைத் தவிர்க்க பிரயாசை எடுத்துக் கொண்டு பதில் சொன்னேன்.

“இல்லைக்கிடைக்குறை, இலையாமெனில் முல்லைக்கிடைக்குறை அதுவாகுமே…” அவள் புரிந்து கொள்வதற்குள் விலகி நடந்தேன்.

***

“அடிச்சாங்களா, ராஜன்?”

“ம் என்றேன்” இதென்ன அசட்டுக் கேள்வி என்ற பரிதாபப் பார்வையுடன்.

“உங்களைப் பிடிச்சுக்கொண்டு போனதிலிருந்து எங்கள் யாருக்கும் சாப்பாடே வேண்டியிருக்கேல்ல… எப்படி ராஜன் விடுதலை செய்தாங்கள்?” அவள் முகத்திலிருந்த வேதனையும் கோபமும் எனக்கு மிதப்புத் தருவதாய்த்தான் இருந்தது.

“எங்களைப் பயமுறுத்தி அடக்கிறதெண்டால், அதிலிருந்து எழுச்சி ஏற்பட்டு விடாமலும் தடுக்கிறதெப்படி எண்டதில் எல்லாம் அவர்களுக்கு இன்னம் குழப்பம் இருக்கலாம் போலத் தெரியுது”

“உங்களைக் கைது செய்த பிறகு இங்க ஒரே பதட்டம். சரியான சித்திரவதை செய்யிறாங்கள் எண்டும், திரும்பி வரமாட்டீங்கள் எண்டும் கதை பரவி, நாங்கள் எல்லாரும் ஒரே அழுகைதான்…!”

நான் முதன் முதலில் என்னை ஒரு போராளியாக உணர ஆரம்பித்தேன்.

***

“என்ன ராஜன், இந்தப் பக்கம் பார்க்காமலே போய்க் கொண்டிருக்கிறீங்கள்?”

“அ… இல்லை மாலினி. ஏதோ யோசனை, உன்ர வீடு இதில இருக்கெண்ட ஞாபகமே வரேல்ல. இருட்டிப் போச்செல்லே. அதான் நீ வாசல்ல நிண்டதும் தெரியேல்லே…”

“சென்ரி முடிச்சு வாறீங்கள் போலை… உள்ள வாங்கோ”

“இல்லை மாலினி… இப்ப…”

“அஆ… அதெல்லாம் வரலாம் வாங்கோ” என்று கொண்டே திரும்பி வீட்டினுள் நுழைந்து விட்டாள். தோளில் மாட்டிய ஏ.கே. 47 உடன் வீட்டினுள் போகக் கூச்சமாய் உணர்ந்தேன் நான். அவள் பெருமிதத்தோடு அழைத்ததாய்த்தான் தோன்றியது. மடித்துக் கட்டியிருந்த சாறத்தை அவிழ்த்து இறக்கி விட்டுக் கொண்டு, பவ்வியத்தை வரவழைத்துக் கொண்ட முகத்துடன் மெல்ல அவளைப் பின்தொடர்ந்து போனேன்.

நான் எதிர்பார்த்தது போலவே முன்னறையிலேயே அவள் தந்தை சாய்மனைக் கதிரைக்குள் கிடந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து, “வாருங்கோ தம்பி” என்றார் வெகு மரியாதையாக. எதற்கு அந்த மரியாதை என்றிருந்தாலும் கூசிக்கொண்டு ஒடுக்கமாய் அவர் முன்னால் அமர்ந்தேன்.

“அப்பாவோட கதைச்சுக் கொண்டிருங்கோ, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்று சொல்லிக் கொண்டே, சமையலறைக்குள் போனாள் மாலினி. சம்பிரதாயத்துக்கெல்லாம் மறுப்புச் சொல்லிக் கொண்டிராதே என்ற மாதிரி அவள் நடந்து கொண்டதை அதிசயித்து முடிவதற்குள் உள்ளே சமையலுக்கான ஆயத்தங்கள் கேட்க ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தின் பின்னணியில் அவள் தந்தையுடன் அவரை நான் வென்றெடுப்பதாக எண்ணியிருந்த ஒரு நீண்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன். மிருக நோக்கமெதுவுமில்லாத எங்கள் ஆயுதப் போராட்டத் தனித்துவ அவசியம் குறித்து அவர் சரிவரப் புரிந்து கொண்டு விட்டாரா என்று நான் தீர்மானிப்பதற்குள் மாலினி வந்து நின்றாள்.

“சாப்பிடலாம் எழும்புங்கோ. அப்பா நீங்களும் வாங்கோ!”

“இல்லைப் பிள்ளை, தம்பிக்குக் குடு. நான் கொம்மா வரட்டும். பிறகு சாப்பிடுறன்…” என்றவர் என்னைப் பார்த்து “தம்பி நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ” என்றார் பரிவு ததும்ப.

கையைக் கழுவும் போதே கோழிக் கறி மணத்தது. தட்டின் முன்னால் அமர்கையில் ஏதாவது பேச வேண்டும் என உந்தப்பட்டேன்.

“மாலினி, அம்மா எங்க காணல்ல” அனேகமான அல்லது எல்லா உரையாடல்களின் துவக்கத்தையும் போல அபத்தமானதும் அவசியமற்றதுமான முதல் கேள்விக்கு அவள் என்ன சொன்னாள் என்பது மனதில் செல்லவில்லை.

“ஏன் ராஜன், ஒரேயடியா இயக்க வேலை எண்டு மாறிட்டியள்… படிச்சுக் கொண்டே உதெல்லாத்தையும் செய்யலாந்தானே! இப்ப விட்டிட்டுப் பிறகெப்ப படிக்கிறது?”

“ராணுவம் நினைச்ச நினைச்சவுடன் பொடியன்களைக் கைது செய்யுது… சுட்டுக் கொல்லுது… அவைக்குப் பணிஞ்சு எதையும் கேட்டுக் கொள்ள வேண்டுமெண்ட அடக்குமுறைச் சட்டங்களுக்குள்ள இப்ப யாருக்குப் பாதுகாப்பிருக்கு? வடக்கு கிழக்கில் உள்ள யாருக்குமே வாழற உரிமைக்கான உத்தவராதமில்லை எண்ட நிலைமையில நான் படிச்சு என்ன சாதிக்கிறது? எனக்கு உனக்கு எல்லாருக்குமே எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எண்டிருக்கிற இந்த இன அழிப்பு நிலைமையை மாத்திறதுக்கு என்னால இயலுமானதையெல்லாம் இப்ப செய்யாமல், படிச்சுட்டு வேலை தேடி வெளிநாட்டுக்குப் போனால், எனக்குப் பின்னால வாற தலைமுறை என்னை மன்னிக்குமா மாலினி?”

ஆசுவாசப்படுத்திக் கொள்ள தண்ணீர் குடித்தேன். பிறகும் அவளைப் பேச விடாமல் நானே தொடர்ந்தேன்.

“எதிர்காலம், சந்ததி எல்லாத்தையும் விடு, இப்ப படிச்சுக்கொண்டு உயிரோடயும் இருக்கலாமெண்டதை உத்ததரவாதப்படுத்திறது யார்? கண்ணை மூடிக் கொண்டே பாலைக் குடிச்சுக் கொண்டிருந்தால் சூட்டுக்கோலைப் பற்றிக் கவலையே இல்லை என்கிறாயா?”

மாலினி மௌனமாக இருந்தாள். நான் பேச்சை நிறுத்தி விட்டு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்ற அக்கறையும் காரணமாயிருக்கலாம்.

“மாலினிக்கு தேர்ட் இயர் எக்ஸாம் முடிஞ்சிருக்கோணுமெல்லே… ரிசல்ட் எப்படியெண்டு சொல்லவேயில்லையே!”

“குண்டுதான்” என்றான் நிஷ்களங்கமுடன் சிரித்து, பிறகு அவளாகவே சொன்னாள்:

“எல்லாம் நல்லாய்த்தான் எழுதினனான்… எதுக்கு ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு தெரியேல்லே…”

“………………………..”

“ஏன் சிரிக்கிறீங்கள்?”

“டொக்டர்கள் சொல்லியிருக்கிறத நினைச்சேன்”

“எதைப் பத்தி?”

“நான் பிரமாதமா எழுதியும் என்னை ஃபெயிலாக்கிப் போட்டினம் எண்டு சொல்றது… அருள் வந்து சாமியாடுற மாதிரியான ஒரு மன நிலையை அடிப்படையாகக் கொண்டது எண்டு அவை சொல்லுகினம். தனக்குத்தான் அதிகம் பக்தி, தன்னோடு கடவுள் பேசுறார் எண்டு தன்னைத்தானே நம்ப வைச்சுக் கொள்கிற சாமியாடல். இந்த தோய்க்கு ஒட்டோஹிப்னோசிஸ் எண்டு பெயர் சொல்லுகினம்…” பெண்கள் தம்மை மேலும் அழகுபடுத்திக் காட்டும் தந்திரமான சிணுங்கலுடன் கூடிய முகச்சுளிப்பொன்றை வெளிப்படுத்தினாள்.

“கறியெல்லாம் எப்பிடியிருக்கு?”

“எல்லாமே அட்டகாசமாயிருக்கு… இத்தனை வேகமா… அதேசமயம் எப்படி இவ்வளவு ரேஸ்ற்றா சமைக்கிறாய்?”

“அஆ… சும்மா புளுக வேண்டாம். கேட்டதுக்குப் பிறகுதானே சொல்றீங்கள்…” அவளது செல்லமும் சிணுங்கலும் மிக நெருக்கமாய் உணர்த்தியது. எனக்குள் ‘சைரன்’ கேட்டது. எச்சரிக்கையாகும் படி சகல தூண்டல் நிலையங்களிலிருந்தும் செய்தி பிறந்தது. பெண்ணின் சகலவிதமான படைக்கலங்களோடும் வருகிறாள். உன் சுவரை உடைத்து விட அனுமதிக்காதே. பெண் போகப் பொருள் அல்ல; பொம்மை அல்ல; மனசை மயக்குகிற மாயப் பிசாசு அல்ல; சக மனுஷி; உன்னோடு போராட்டத்தில் கைகோர்க்க வேண்டிய சக தோழி என்ற அறிவின் விளக்கங்கள் அனைத்தும் பொசுங்கிப் போகக் கூடிய அதிசய ஈர்ப்புகளோடு வருகிறாள். தளர்ந்து போகாதே, அதற்கு இது காலமல்ல, மனசை இறுக்கி வைத்துக் கொள். அலைக்கழிக்கிற நினைவுகளுக்கென்று உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்து விடாதே! உன் பாதை தடுமாறி விடக் கூடும். உன் பயண நோக்கம் நிறைவேறும் வரை வேறு சிந்தனைகள் உன்னிடம் தடை போட வரக் கூடாது.

“ராஜன்”

“ம்…”

“எனக்கு இதெல்லாம் சரியெண்டு படேல்லை…”

“எதெல்லாம்”

“இயக்கங்களெல்லாம் தனித்தனியா பிரிஞ்சிரிக்கிறதாலதான் பிரச்சினை தீரக் கஷ்டம். ஒரே இயக்கமாய் எல்லாரும் ஒற்றுமையாய் இருந்தா, ராணுவத்தைத் துரத்திப் போடலாம். எல்லா இயக்கங்களுக்குமே நோக்கம் ஒண்டுதானே, பிறகேன் தேவையில்லாமல் நூற்றெட்டுப் பேர்களில் இயக்கங்கள்?”

“இப்ப இருக்கிற இயக்கங்களெல்லாம் எப்படி ஒரே இயக்கமாகலாம் எண்டு நீ சொல்றாய்?”

“எல்லா இயக்கங்களும் தங்களைத் தாங்களே கலைச்சிக் கொண்டு ஒரு புதுப்பேரில் எல்லாரையும் உள்ளடக்கினதா பெரிய ஒரு அமைப்பை உருவாக்கலாம்” என்றவள் சிறிது யோசித்து விட்டு, “இல்லாட்டி, எல்லா இயக்கங்களும் இப்ப இருக்கிற பெரிய இயக்கத்தில் சேர்ந்து ஒண்டாயிடலாம்” என்றாள்.

“பெரிய இயக்கத்தை எப்படி தீர்மானிக்கிறது? பயிற்சி எடுத்தவர்களின் எண்ணிக்கையையும் வெச்சிருக்கிற ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்த்தா?”

“ம்… அதிலே என்ன?”

“அப்படியெண்டால் அரசு ராணுவத்துடன்தான் எல்லாரும் சேர வேணும்…”

“உங்களோட கதைச்சு எனக்கு வெல்ல ஏலா” செல்லச் சிணுங்கலோடு சரணாகதி ஆகிவிடுகிற அவளது எளிமை மிகு ஆயுதம்.

“இல்லை மாலினி. நோக்கம் ஒண்டாயிருந்தாலும் செயற்படுகிற முறைகளில் ஆரம்பத்திலிருந்தே குறிக்கோளை சிதைத்து விடக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளேலும். முடிஞ்சா அவற்றைத் திருத்தித்தான் சேர்த்துக் கொள்ளவோ சேர்ந்து கொள்ளவோ முடியும். எங்கட மக்களது நலமான வாழ்க்கை எங்கிறதுதான் நோக்கம். பிறகு ஒரு கட்டத்தில நாங்கள் விரும்புகிற முறையிலதான் மக்களுக்கு நல்லபடியான வாழ்க்கை அமைய முடியும் என்ற வெறியா மாறியிடக் கூடாது”

அவளுக்குப் புரிகிற வகையில்தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் உண்டாயிற்று. இடையில் அவளைப் பார்த்தேன். மாலினி என்னையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சொல்லும் விஷயங்கள் பற்றியதுதானா இந்த ஆர்வம் என்பது குறித்துச் சந்தேகம் மீண்டும் கிளம்பிற்று. எனது தரப்பில் நான் பேசிக் கொண்டே சாப்பிடுவதுதான் தற்காப்பானது என்ற உணர்வுடன் அவள் பார்வையைத் தவிர்த்தபடி தொடர்ந்தேன்.

“தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கெண்டொரு நாடுமில்லை” என்பது மாதிரியான காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தை நடத்த முடியாது. இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல. நாங்களும் உண்மையாகவே பயங்கரவாதிகளாய் மாறிக் கொண்டு அரசைப் பணிய வைக்க நினைக்கிறதும் சிங்களப் பொதுமக்களைக் கொன்று குவிக்கிறதுமான வழிமுறைகளில் எல்லாம் நாம் உடன்பட்டுப் போக முடியாது. இது எங்களை நாங்களே கொன்று கொள்கிற வரைக்கும் போகக் கூடியது. பிடிக்காதவர்களையெல்லாம் கொலை செய்துவிட வேண்டும் என்றாகி விடும். தமிழ் மக்களால் தவிர்க்க முடியாமல் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் பிழையான பாதையில் போய் சீரழிந்து விட விட்டுடக் கூடாது மாலினி. அதுதான் முக்கியமானது…”

“ஒருத்தருக்கொருத்தர் முகத்தைத் திருப்பிக் கொண்டே வளர்ந்து எப்படி இதைச் சாதிக்கப் போகிறீர்கள்?”

“அப்படியரு விரோதமும் இன்னும் வளரல்ல மாலினி. முதல்ல இப்ப மூண்டு இயக்கங்கள் ஒன்றுபட்டு ஒரே அமைப்பாய் இயங்கக் கூடிய வழிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கினம். சரிவந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோரும் ஒண்டு சேர்ந்து போராடி வெல்லும் காலம் வரும்” பிறகு மௌனமாகச் சாப்பிட்டு முடித்தேன். கடைசியாக மாலினிதான் பேசினாள்.

“நீங்களும் கொஞ்சம் கவனமாய் இருக்க வேணும் ராஜன்” என்றாள் கீழிறங்கிய குரலில்.

கையைக் கழுவிவிட்டு எழுந்தேன்.

***

“எவ்வளவு காலமாச்சு…?” அவளைத் திடீரென்று சந்திக்க நேர்ந்த வியப்பு வடிந்து விடாமல், வள்ளுவர் கோட்ட நிழலொன்றில் அமர்ந்திருந்த போதும் வெளிப்பட்டது.

“முதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க ராஜன். எங்க தங்கியிருக்கிறீங்கள், என்ன பண்றீங்கள்…”

“இங்கதான் கோடம்பாக்கத்தில நண்பன் ஒருத்தன் வீட்டில தங்கியிருக்கன். என்ன பண்றதெண்டு தெரியாததுதான் இப்ப இருக்கிற பிரச்சினை” என்னை அறியாமலே என் பேச்சில் விரக்தி வெளிப்படுவது தெரிந்தது. அவள் முகபாவத்தைக் கவனித்து என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“இதில இனி யோசிக்க என்ன இருக்கு… நாட்டு நிலைமைய உங்களால எல்லாம் திருத்த முடியாது. இன்னும் நிறைய அழியப் போகுது. விடாப்பிடியா அதில தலையிட நினைச்சு இன்னும் ஏன் உங்களை அழிச்சுக் கொள்ள நினைக்கிறீங்கள்?”

“சேச்சே, விடாப்பிடியெல்லாம் ஒண்டும் கிடையாது மாலினி. என்ர பலம் எனக்குத் தெரியும். நாங்கள் ஆசை ஆசையாகக் கனவு கண்ட தேசம் அழிஞ்சு கொண்டிருக்கிறதை கையாலாகாத்தனத்தோடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கே எண்ட கவலைதான். வேறொண்டுமில்லை இப்ப” யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத என் பழக்க தோஷத்தில் மேலும் அவளுக்கு விளக்கமளிக்க முற்பட்டேன்.

“மக்களுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்கக் கூடிய யுத்தம் தேவைதான். அப்படித்தான் நினைச்சு ஆரம்பிச்சம். ஆனால், யுத்தத்தின் பலன் மேலும் மேலும் யுத்த அழிவுகள்தான் எண்டாக்குகிற பராக்கிரமசாலிகளின் பிடியில்தான் எங்கட மக்கள். அவர்களுடைய போராட்டம் எல்லாமே போயிட்டுது. என்னால இதை ஒப்புக் கொள்ளவும் முடியல்ல. எதிர்த்து வாழவும் பலமில்ல. இங்க வேற இப்ப சொல்கிறார்கள்; நீங்கள் உங்கட நாட்டுக்கே திரும்பிப் போயிர்ரதுதான் நல்லதெண்டு“.

“இன்னும் ஏன் அரசியல்ல ஈடுபடுறதையே நினைக்கிறீங்கள்?”

“அரசியல் எது மாலினி? ஒரு சாதாரண ஈழத்துக் குடிமகனா, நமக்கு எது வேணும் எண்டு தீர்மானிக்கிற உரிமை எனக்கில்லையா? எல்லா இடங்களிலும் மறுக்கப்படுகிறதே. ஒரு கற்கால வீரத்தமிழனாக அர்த்தமற்ற யுத்தத்தை பார்த்துக் கைதட்ட மட்டும்தானே நமது நாட்டில் எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கு”

“முதல்ல உங்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படுறதை வைச்சுக் கொள்ளலாமே ராஜன்”

“ஏதோ நம்மட தேசத்தின் ஒரு பக்கத்தை என்ர தோளில தாங்கிக் கொண்டிருக்கிற மாதிரியும் நான் விட்டுட்டா தேசம் விழுந்து நொறுங்கிப் போகும் எண்டெல்லாம் பிரமையில் நான் இல்லை மாலினி… மனசாட்சித் தொந்தரவுதான். தேசம் எக்கேடு கெட்டால் என்ன, நம்மால ஒண்டும் ஆகாதெண்டு சட்டெண்டு தனிமைப்படுத்திக் கொள்ள முடியல்ல, கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு, இதுவும் இல்லாட்டித்தான் நீ நினைக்கிற மாதிரி சாமியாராகி இருப்பேன்”

சிரித்தது நான் மட்டும்தான் என்பதைக் கவனித்துக் கொண்டே கேட்டேன்.

“உன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே மாலினி?”

“ஓம் ராஜன்! மூண்டு வயசில குழந்தை இருக்கு. ப்ரமிளா. அவ அப்பா பிஎச்டி முடிச்சிட்டு லண்டனிலே இருக்கிறார். உங்களுக்குத் தெரியும் ராஜன், ரவியை…. ரவீந்திரன் எங்களுக்கு ரெண்டு வருஷம் சீனியர். நானும் பாப்பாவும் கூட லண்டனுக்குப் போயிடப் போறம்… ம்.. அவ இனிப் படிக்கவும் வேணும்”

“கோப்பாய் ரவிதானே மாலினி?”

“ஓமோம். தயா, ரட்ணம், லோகு, பாமா, நந்தினி எல்லோருமே லண்டனில இவர் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலதானாம். அடிக்கடி சந்திக்கிறவையெண்டும் இவர் எழுதியிருக்கிறார்”

“ரவி நல்ல அமைதியான ஆளெல்லே…. உன்னைப் பூப்போல நேசிப்பார். நீ லக்கி!”

“நான் மட்டும்தானா லக்கி, அவரில்லையா?” வெள்ளையாகச் சிரித்தாள். அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்.

“ஜெயக்குமார், விஜி, குகா, செல்வி எல்லோருக்கும் கனடாவில் அகதிகளுக்கான அடையாள அட்டைகள் கிடைச்சிட்டுது… கடிதம் போடுவினம்” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டுக் கேட்டாள்.

“இங்கயும் இப்ப பிரச்சினைதானே, ஏன் ராஜன், நீங்க கொஞ்ச காலம் வெளிநாட்டுக்குப் போய் இருந்திட்டு வரக்கூடாது?”

மனம் எங்கெங்கோ அலைபாய ஆரம்பித்திருந்ததால், எனக்கு அவள் கேள்வியை வாங்கிக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது. உண்மையில் அவள் கவலைப்படும் அளவுக்கு எனது பத்திரமான எதிர்காலம் குறித்து நான் முடிவு செய்துதான் ஆக வேண்டும் என்பது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது. எரிச்சல் என் இயலாமை, அல்லது தோல்வி. எதனிலும் இருந்துதான் வருகிறதா என்றும் தேட முயன்றேன். அவளுக்கு என் மனநிலையை விளக்கி விட முடியுமா என்ற சந்தேகத்துடனேயே பதில் சொன்னேன்.

“தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”

“இங்க தனிய இருந்து என்ன செய்யப் போறீங்கள்?”

“எதுவும் செய்ய முடியாது” சற்று நேர மௌனத்திற்குப் பிறகு சொன்னேன். “…. ஆனால் தனிய இல்லை. அகதிகளாய் இங்க ஒண்டரை லட்சம் பேர் இருக்கிறம்”

“உங்களை எனக்கு விளங்கக் கொள்ளேலாமல் இருக்கு ராஜன்”

“எனக்கும்தான்!”

வள்ளுவர் கோட்டத்திலிருந்து நாமிருவரும் வெளியே வந்தபோது, எனக்கு எதையோ இழந்திருப்பது போன்ற உணர்வு இருந்தது. இப்போதைக்கு அது என்னவென்று என்னால் நிச்சயமாய்ச் சொல்லிவிட முடியாதென்றும் தோன்றியது.

***

நன்றி : சிவகுமார் ( aayanan@hotmail.com )  ,   கணையாழி  , எஸ்.எல்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

47 பின்னூட்டங்கள்

 1. 08/11/2011 இல் 17:10

  “தெருவில் ஒருவன் தலையே இல்லாமல் போய்க் கொண்டிருந்தான். மனசுக்குள் சிரிப்போடியது. சிறுகதை எழுதுவது பற்றிய யோசனை வந்த போது, முதல்வரி இப்படிக் கவர்வதாய் அமைந்திருக்க வேண்டும் என்று யாரோ சொல்லியிருந்த ஆலோசனைதான் நினைவில் மின்னியது.-

  சொல்லியது சுஜாதா என்று எழுதும் போதே இதை சொல்ல வேண்டியது ரொம்ப அவசியமோ என யோசிக்க வைத்தது கதை.

  கதையை முடித்ததும் நீண்டதொரு பெருமூச்சு விட நேர்ந்தது இன்றும் முடிய கதையை நினைத்து…

 2. 08/11/2011 இல் 19:41

  “இனவாத அரசுதான் எங்களின் எதிரியே தவிர, சிங்கள மக்களல்ல.” – இது அந்த தமிழனின் உணர்வு
  ஆனால், அவனை வைத்து முதலெடுப்பதே நம்ம அரசியல்வாதியின் உணர்வு. – இது தமிழனின் தலைவிதி..!

 3. அம்ரிதா ஏயெம் said,

  08/11/2011 இல் 22:05

  “தேசமும் மக்களும் உண்மையாகவே போராட்ட நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களையெல்லாம் துரோகிகளாகவே நான் நம்பினேன் மாலினி. இப்போதும் எனக்கு மனத்தடைகள் உண்டு”

  கதையை முடித்தபோது மனம் பாராமாகி இருந்தது. இரண்டு நாளைக்கு மேலும் பாரமாக இருக்கலாம். முப்பது வருடங்களில் எதனை எழுதுவது? எதனை விடுவது?

  ஒரு இராச்சியம் பூச்சியமான கதை. பூச்சியத்திற்கு கொடுத்த மதிப்பு…

 4. 08/11/2011 இல் 22:54

  சி.சிவகுமாரின் சிறுகதை இலங்கைத்தமிழ் பேசும் மக்களின் போராட்டப்பாதையின் நீட்சியின் துயர வடிவம் .போராளிகளின் ஒழுங்கமைக்கப்படாத அரசியல் போராட்டத்தின் சிதைவுகளை சிவகுமார் நகைச்சுவையாகவும், தீவிரமாகவும் சிறுகதைக்குள் அடக்கியுள்ளார்.
  பிரச்சார நொடியற்ற அவர் கதை சொல்லும் இலாவகத்தை தக்க வைத்துக்கொள்ள அவர் தொடர்ந்து எழுத வேண்டும்

 5. தாஜ் said,

  09/11/2011 இல் 10:39

  //என்னை அறிவித்துக் கொள்ளும் ஆவேசத்துக்கு மிக நீண்டதாய் ஒரு கவிதை அல்லது நாவல் எழுத முடிந்து விடும் என்றால் எவ்வளவு நல்லது.//

  மிக அருமையான கணிப்பு!

  நிஜத்தில்
  ஒரு கவிதைக்குள்
  ஒரு நாவலை அடக்கலாம்தான்.
  கவிதையின் வலிமை அப்படியானது.
  சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
  மிக சரியாகச் சொல்லி இருக்கிறார்.

  இக் கதையில்
  கண்ணுக்குத் புலப்படாத
  தென்றல் மாதிரி
  ஒரு காதல்
  சுகமாய்
  சொல்லப் பட்டிருக்கும் நேர்த்தி
  வலுவானது.
  மெச்சத் தகுந்தது.

  மற்றப்படிக்கு
  இயக்கம் குறித்த/
  அவர்களின்
  ஆயுதப் போராட்டம் குறித்த/
  அதையொட்டிய விமர்சனங்கள் குறித்த/
  தீர்க்கமானப் படைப்புகள்
  நிறம்பவே
  வாசிக்க கிடைத்திருக்கிற நிலையில்
  சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
  பெரிதாக
  சொல்லி இருப்பதாக நினைக்கவில்லை.

  சோபா சக்தியின்
  கொரிலா/
  ம்/
  என்கிற நாவல்களும்
  ஈழப் போர் பற்றியப் படைப்புகளில்
  உச்சம் என நினைக்கிறேன்.
  கொஞ்சமும் பாவனை இல்லாத
  அப்பட்டமான நிஜங்களோடு
  உண்மைக்கு மிக அருகில்
  எழுதப்பட்ட படைப்புகள் அது!

  சோபாவின் படைப்புகள்
  சொன்ன உண்மையில்
  மிரண்டுப் போனவன் நான்.
  ஆண்டு சில கழிந்தும்
  அது தந்த மிரட்சி இன்னும் பாக்கி இருக்கிறது.

  இந்தியா
  வெள்ளையனிடம்
  சுதந்திரம் வாங்கியதை
  அறிந்த மக்கள்
  ஈழ மக்கள்.
  இங்கே
  காந்தியின் அகிம்சை வென்றதை
  உலகம் பூராவும் பாடமாக கற்கிறார்கள்.
  ஆனால் பாருங்கள்…
  முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
  நம் சகோதர்களுக்கு
  அது புரியாதுப் போனதுதான் எப்படி?

  இந்திய அரசியல்வாதிகளை
  அவர்கள் நம்பியதும்/
  சகோதரர்க்கிடையில்
  சுட்டுக் கொண்டு மாய்ந்ததும்/
  நெஞ்சை சுடும் உண்மை.
  என்ன செய்ய?
  தமிழன் வீரம் பேசியே
  அழியும் இனமாக
  காலாகாலமும்
  பெயர் போட்டு வருகிறான்.

  மறக்க நினைத்த ஒரு கொடுமையை
  அனீபா காக்கா வழியே
  இக் கதை
  மீண்டும் எழுப்பிவிட்டது.
  -தாஜ்

 6. 09/11/2011 இல் 18:26

  1992ம் வருட புதையல்களில் ஒன்றைத் தந்த நானாவுக்கும் அனிபாக்காவுக்கும் நன்றி.
  அறபாத் சொல்லியிருப்பதுபோல் ஒரு அவலத்தின் தீவிரத்தை இத்தனை உணர்வுகளால், வெகுலாவகமாக எல்லாரும் எழுதிவிட முடியுமா என்ன?

  //அவள் அசட்டுத்தனமாகக் கருதக்கூடிய சிரிப்பொன்றைச் சிரித்து வைத்தேன்// இதில் அவள்,கருதக்கூடிய என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்ததில் என்ன ஒரு கவனம்! ஷோபா சக்தியின் தீவிர வெளிப்பாட்டில், உண்மை வாசகனை அறைய முடிந்ததெனில், சிவகுமார் பிழிந்த சாறில் அத்தனை உணர்வுகளும் அவனை வருடுகின்றன.

  ஈழத்தின் இளமை இழந்தவை என்னவெல்லாம் என்பதை அந்த ’கோழி வளர்க்கும்’ நகைச்சுவை பட்டியல் இடுகிறது. சிரிப்பை சோகம் எளிதாக வெல்கிறது.

  • தாஜ் said,

   09/11/2011 இல் 21:10

   மஜீத் தொடர்ந்து…
   ஆக்கங்களுக்கு விமர்சனம் எழுதலாம்.
   அத்தனை நுட்பமாக இருக்கிறது
   சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின்
   ‘கலைந்து போன கனவு ராஜ்யம்’
   சிறுகதைக்கான விமர்சனம்.

   விமர்சனம் என்பது
   ஒருவகையில்
   நெருப்பாற்றை கடக்கும் சங்கதி.
   பல முறை நான் சூடுப் பட்டிருக்கிறேன்.
   நுட்பத்தோடு
   சாமார்த்தியமாக அணுகவும்.
   வாழ்த்துக்கள்.
   -தாஜ்

 7. 11/11/2011 இல் 00:15

  நான் பிறக்கும் போது ஆயுத பீரங்கிகளின் அட்டகாச இரச்சலோடுதான் பிறந்தேன். இச்சிறுகதைக்கும் எனக்கும் வயதில் நெருக்கம் என்றாலும் எனது வாழ்வில் கண்டுவந்ததை சிவகுமார் அன்றே பதிவுசெய்துவிட்டார். இதுவே அவரது எழுத்துக்கு சாட்சி என்றுதான் சொல்லவேண்டும்.

  இச்சிறுகதையை வாசித்து முடித்தவுடன் எஸ்.எல்.எம் (மூத்த வாப்பா) ஐ தொடர்புகொண்டேன். வடகிழக்கு மாகாண சபையில் சிவகுமாரின் பேச்சுக்களை பகிர்ந்து கொண்டார்.

  எங்கள் உரையாடலின் பின் வாசுகி அக்காவை தொடர்கொள்ளவேண்டும் போல் இருந்தது.

 8. சிவகுமார் said,

  11/11/2011 இல் 00:38

  அமீன், ஜாஃபர், அம்ரிதா, அறபாத், தாஜ், மஜீத் எல்லோர்க்கும் நன்றி.
  எழுது எழுது என்று அருட்டி, இது வேலைக்கு ஆகாது என்று கண்டு, 20 வருடங்களுக்கு முந்தியதை மினக்கெட்டுத் தேடி எடுத்து, யாரையோ பிடித்து தட்டச்சு செய்து (ஆபிதீனா? சாருவின் எழுத்தைப் படிக்கையில் கேள்விப்பட்ட அதே ஆள்தானா?) படத்தோடு போடுவித்த இந்த எஸ்.எல்.எம்மை என்ன மாதிரியொரு மனுசன் என்று இருவத்திநாலு வருசத்துக்குப் பிறகும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. “இப்பத்தான் உனக்கு ஆபத்தொண்டுமில்லையே! சும்மா உடு”என்று தமிழனைத் தமிழனிடமிருந்து காக்கும் கவனம் வேறு. காரணமின்றிப் பொழியும் அன்பிற்குப் பிரதியாக நன்றி என்று நினைப்பதே கூச வைப்பதெல்லோ!
  ஆபிதீனுக்கு வேறென்ன?
  கீழே பேர் போட்டிருப்பது படத்தில் பின்னால் இருப்பவருக்குத்தானே, அதை ஏன் குறிப்பிட்டில்லை என்பது முன்னால் நிற்பவரின் குழப்பம்.

  • 11/11/2011 இல் 05:21

   ஹனீபாக்காவின் அன்புத்தொல்லை காரணமாக தட்டச்சு செய்தது நானல்ல; தம்பி ’ஆற்றங்கரை’ ஸபீர்.. அவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லுங்கள்..

   ‘ஒரு வாரமாவது சிவகுமாரின் கதை நமது பக்கத்தின் முகப்பில் அமர்ந்து கொள்வதற்கு இடமளியுங்கள். இன்னமும் தமிழீழம் என்ற கனவில் மிதந்து தத்தளிக்கும் எங்கள் இனவாத அரசியல் தலைமைகளின் வாரிசுகளின் கண்களில் இந்தக் கதை பட்டால் போதும். அவர்களின் மனோபாவத்தை அறிந்து கொள்ளலாம். மறுமொழிகள் எதுவந்தாலும் ஏற்றி விடுங்கள். தணிக்கை வேண்டாம். இந்தத் தேசம் இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. சுகமானது என்ற மனோநிலையைக் கட்டியெழுப்பும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னமும் சண்டை, அகதி வாழ்வு என்ற சகதிக்குள் நமது மக்களை அமிழ்த்தி விடாமல், எல்லோரும் சேர்ந்து வாழும் நாடாக எங்கள் தேசம் மலர நீங்களும் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார் ஹனீபாக்கா. எவ்வளவு பெரிய மனசு…

   பிரார்த்தனையுடன்,

   அதே ஆபிதீன்!.

 9. இளையதம்பி தயானந்தா said,

  11/11/2011 இல் 19:36

  வாசித்தேன், நன்றிகள் சிவா,

  மிக்க நன்றிகள் திரு. ஆபிதீன் அவர்ர்களுக்கும், நான் விரும்பி தேடுபவற்றில் தரவுகள் உள்ள உங்கள் இணையமும் ஒன்று என்பதற்கும் என் மேலதிக நன்றிகள்.

  காலம் மாற மாற படைப்புக்கள் வேறு வேறு கோலங்கள் காட்டுகின்றன, 19 ஆண்டுகளுக்கு பிறகு இதுவும்.
  சிவா இந்த சிறுகதையை விட நீண்ட காலத்தின் பின்னர் பிள்ளைகளுடனான படம் மகிழ்ச்சி தந்தது. அன்பு வாழ்த்துக்கள்.

 10. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  11/11/2011 இல் 20:17

  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே எங்கள் பகுதியில் நான் பேர் பெற்ற புலி. அன்று தொடக்கம் இன்று வரையிலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான முஸ்லிம் (புத்திஜீவிகள் என்று சொல்ல கூச்சமாக இருக்கிறது) களை புலிகளாக பார்ப்பது, பழகுவது, பழிவாங்குவது எல்லாவற்றுக்கும் ஆட்பட்டு வந்திருக்கிறேன். குடும்பத்தில் பலரை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறேன். வாழ்ந்தாலும் தமிழர்களோடு மடிந்தாலும் தமிழர்களோடு என்ற தளத்தில் செயல்பட்டு வந்திருக்கிறேன். இது என்னைப் பற்றிய பீத்தல். ஆனாலும், புலிகளின் இந்த நிலைக்கு அவர்களைத் தவிர வேறு யாரும் காரணமல்ல. மற்றவர்களெல்லாம் இந்தியா உட்பட, பழிபோடுவது எங்கள் மீது, எங்களுக்கு நாங்களே குட்டுப்போடுவது போலத்தான். இது எல்லாவற்றையும் மறந்து அல்லது மீண்டும் ஒரு முறை சீர்தூக்கிப் பார்த்து எங்கள் பாதையை அமைத்துக் கொள்வது எங்களின் அடுத்த சந்ததியை வாழ வைக்க வாய்ப்பளிப்பது போலாகும். இது பற்றிய மனந்திறந்த சொல்லாடலுக்கு இன்னமும் போர் தமிழீழம் என்ற கனவுலகில் வாழ்கின்ற அனைவரும் நிஜத்திற்கு வாருங்கள். நாமும் வாழ்ந்து காட்டுவோம். இந்தப் பக்கத்திற்கு வந்து போன அனைவருக்கும் இனிமேல் வரப்போகிறவர்களுக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்.

 11. மதுவந்தி said,

  12/11/2011 இல் 07:35

  சிவகுமாரின் கதையில் வருகின்ற பல இடங்களில் எனக்கு அரசியல் ரீதியாக உடன்பாடு இல்லாவிட்டாலும் கதையும் அது நகர்த்திச் செல்லப் பட்ட முறைமையும் அதில் இருக்கும் மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கிற தன்மையும் எனக்கு மிகவும் பிடித்தது. அதிலும் மெல்லிய காதலைச் சொன்னவிதம் அழுத்தமாக என்னில் படிந்தது.சிவா கதையில் மாலினிக்கு சொன்னது போலவே கனக்க ஆயுதங்கள் வச்சிருக்கிற ஆக்களோட சேருவதெண்டால் இலங்கை ராணுவத்தோட தான் சேரோணும் எண்டு நகைச் சுவையாகச் சொன்னது உண்மையில் பல இயக்கங்களுக்குப் பின்னர் நடந்தது. என்பது துரதிஸ்ரவசமானது தான். தவிரவும் போராட்டம் தோற்றுப் போய் விட்டதென்பதற்காக தமிழீழம் தேவையற்றதொன்றாகி விடாது. விடுதலைப் போராட்டம் நெடிது.தமிழீழம் தேவை இல்லையெனச் சொல்கிற நீங்கள் ஏன் புலிகள் காலத்தில் அவர்கள் இத்தனை உயிர்களைக் கொடுத்து இடைக்கால நிர்வாக சபை கேட்ட போது அவ்வளவு காலமும் அரசின் நெஞ்சை நக்கி திரிந்து விட்டு அப்ப ஓடிவந்து எமக்கும் கிழக்கில் தனி அலகு வேண்டும் என்று கேட்டீர்கள்? அந்த வாதத்துக்கு என்ன பெயர்? ’இருந்து செய்யிற வேலை எண்டா எங்கடை அவருக்கும் ஒண்டு’ எண்டு வேலையத்து வீட்டில பிராக்குப் பாத்துக் கொண்டிருக்கிற புருசனுக்கு வீதியால வேலைக்கு போறவனைப் பாத்து திண்ணையில் இருக்கிற மனிசி கேக்கிற மாதிரித்தான் கிடக்கு உங்கட கதை, இப்பவும் கூட்டணி கேக்கும் போது தானே உங்களுக்கும் கிழக்கில் தனி அலகு கிண்டுது முடிஞ்சா நீங்களா போராடி எடுக்கப் பாக்கோணும் அல்லது உயிரைக் கொடுத்து போராடியவனின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாமல் இருக்கோணும்..

 12. 12/11/2011 இல் 11:32

  ‘சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின்’ கதை படித்தேன். அவரது நிலைப்பாட்டில் இருந்த உண்மைத் தன்மை கதையில் அழகாக வந்திருக்கிறது. அவர் வானொலியில் இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியை நடத்தும்போது அவரது குரலில் கவிதைகள் மிக வசீகரமாக இருக்கும். அவரது வாசிப்பில் கேட்கவேண்டும் என்றே நிறைய… ஆரம்பகாலக் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறேன். இன்று வரை நலம் விசாரித்துக் கொள்ளும் நட்பு வாசுகியோடும், சிவகுமாரோடும் உள்ளது. இந்தக் கதையின் மூலம் அவர் சொல்லாத சேதிகள் எல்லாம் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. இளையதம்பி தயானந்தாவும், சிவகுமாரும் ஒலிபரப்புத் துறையில் இருந்து விலகியதன் பிற்பாடு, நான் வானொலியை செவிமடுப்பது இல்லை. எழுத்துத் துறைக்கு சிவகுமார் மிக கணிசமாகவே பங்களிப்புச் செய்திருக்கிறார். அவர் ஆதங்கப்படுவதுபோல் பல நாவல்களை எழுதக் கூடியவர்தான். ‘எஸ்எல்எம்’ அவரை எழுத வைக்க வேண்டும். இந்த நீண்ட பாதையில் எஸ்எல்எம்மைப் போல, சிவகுமாரைப்போல மனிதர்களை சந்தித்த நிகழ்வு மிகுந்த மன நிறைவுக்குரியது.

  வாழ்த்துக்களுடன்
  அனார்

 13. ச.தமிழ்நிதி said,

  12/11/2011 இல் 16:03

  மதுவந்தி சொன்னதுதான் சரி. தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது இக்கதை. மிருகங்களோடு போராடும்போது மிருக நோக்கமில்லாது எதிர்நிற்க முடியுமா? எதிர்த்துத் தோல்வி கண்டாலும் அழிந்துபட்டாலும் விதையாக விழுந்து விருட்சமாக எழுவதை விடுத்து அடிபணியும் அரசியலுக்கு மாறிவிட முடியுமா? துரோகிகளும் தொடைநடுங்கிகளும் போய் 7ஆம் அறிவு பார்த்துவிட்டு வாருங்கள்… பேசுவோம்.

 14. 12/11/2011 இல் 17:30

  ஆஹா!

  இவ்வளவு சிக்கலான விஷயத்திற்கு வணிகரீதியான ஒரு தமிழ் சினிமாதான் தீர்வா?

  மிக எளிதான ஒரு விடயத்தை ஏன்தான் இத்தனை சிக்கலாக்கினார்கள் எல்லோரும்?

  சரி சரி, நாம் இங்கிருந்து ஒரு சண்டையை ஆரம்பிக்க வேண்டாம்; மூத்த வாப்பா சொல்வதுபோல அமைதியை னோக்கி பயணிப்போம். முயற்சியுங்கள்; மூன்றாம்
  தலைமுறையின் சந்தோஷத்திற்காகவாவது,

  தயைகூர்ந்து

 15. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  12/11/2011 இல் 19:08

  மதுவந்தியும் தமிழ்நிதியும் சொல்வது கேட்பதற்கு ரொம்பவும் சுவாரசியமான விடயங்கள்தான். ஏழு வருடங்களுக்கு முதல் என்னுடைய பிபிசி நேர்காணலில் இதை விடவும் உரத்த குரலில் தமிழர்களுக்கான தனி ராஜ்யத் தேவையை நான் மிகவும் ஓர்மத்துடன் முன்வைத்தேன். இரண்டு வாரங்கள் அது ஒலிபரப்பானது. இடையில் நடந்ததெல்லாம் நாமாகத் தேடிக் கொண்டதே. நேற்றிரவு நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பிபிசியில் மிக சிறப்பாக இந்த விடயத்தை பேசியிருக்கிறார். ஒரு முறை கேட்டுப் பாருங்கள். மற்றப்படி நீங்கள் சொல்கின்ற தனியலகு சங்கதிகளிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. உலகமே ஒண்ணாகப் போய் மனிதர்களெல்லாம் ஒரே குலமாப் போனால் எவ்வளவு சிறப்பாக இந்த உலகம் அமையும் என்று கனவு காண்பவன் நான். எங்கள் கவிஞர் புரட்சிக் கமாலின் ‘நாளை வருவான் ஒரு மனிதன்’ என்ற கனவில் நானும் வாழ்கிறேன். முஸ்லிம்கள் தனியலகு கேட்டாலும் தமிழர்கள் தனிநாடு கேட்டாலும் அது இலங்கைக்குள் ஒருபோதும் சாத்தியமாகாது. இது சத்தியம். ஏதோ கதையைப் படித்தீர்கள். அந்த மட்டில் வாழ்த்துக்கள். நன்றிகள்.

 16. எஸ்.எல்.எம். ஹனீபா said,

  12/11/2011 இல் 19:17

  அமைதி வழிமுறை தோற்றதை நோர்வே ஆராய்ந்துள்ளது

  இலங்கையில் தோல்வியடைந்த அமைதி வழிமுறை குறித்து நோர்வே ஒரு சுயமதிப்பீட்டைச் செய்துள்ளது.
  இலங்கையில் 1997ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை அமைதித் தூதுவராக நோர்வே செயல்பட்டிருந்தது.
  நோர்வே வெளிநாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதீப்பீட்டுப் பணியை, நோர்வேயில் இருந்து இயங்கும் மைகேல்சன் இன்ஸ்டிடியூட் மற்றும் லண்டனில் இருந்து செயல்படும் கீழ்த்திசை மற்றும் ஆப்ரிக்கக் கல்விகள் கழகம் ( சோ-அஸ்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செய்திருந்தன.
  இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதரும், நோர்வேயின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சருமான, எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை துணைச்செயலர், ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ், இலங்கையின் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  இலங்கையில் நடந்த மோதலுக்கு முடிவு காண எடுக்கப்பட்ட இந்த அமைதி வழிமுறை தோல்வியில் முடிந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  மத்தியஸ்தம் தோற்றதன் காரணங்கள்
  இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை விவரித்த மிக்கெல்சன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த குன்னார் செர்போ, அமைதி முயற்சி தோல்வியடைந்ததற்கு நான்கு காரணங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார்.
  முதலாவதாக, இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இந்த அமைதி முயற்சிகளில் இறங்கியபோது கூட, தங்களது லட்சியங்களை நிலைப்பாடுகளை கைவிடாமலேயே வந்தனர். இதனால் அவர்கள் ஒரு அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் உளச்சுத்தியுடன் ஈடுபடவில்லை என்று கூறிவிட முடியாது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  ஆனால் இந்த அமைதி முயற்சி எப்படி அரசியல்ரீதியாக முடியவேண்டும் என்று இந்த இரு தரப்புகளுமே அவர்கள் வரையறுத்துக்கொண்ட நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று அது தெரிவிக்கிறது.

  இரண்டாவதாக, இலங்கை நாடு மற்றும் அரசியலில் இருந்த கட்டமைப்பு ரீதியான அம்சங்களும் இந்த அமைதி வழிமுறையைப் பாதித்தன.
  இலங்கையில் நிலவும் பரம்பரை அரசியல், உட்கட்சி போட்டிகள், வேண்டியவர்களுக்கு அனுகூலம் செய்யும் அரசியல், தேசியவாத அரசியல் அணி திரட்டல் ஆகியவை நாட்டை சீர்திருத்துவதற்கும் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கும் இடைஞ்சலாக இருந்தன.
  மூன்றாவதாக, ஒரு பேச்சுவார்த்தை ரீதியிலான தீர்வுக்கு இருந்த வாய்ப்பு என்பது மிகவும் குறுகிய வாய்ப்புதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  அரசியல் மற்றும் ராணுவரீதியிலான சமநிலை இருக்கும் ஒரு நிலை, மேலை நாடுகளோடு ஒத்த கருத்துணர்வில் இயங்கும் ஒரு அரசு இருப்பது, பல தரப்பட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவு பேச்சுவார்த்தைகளுக்கு இருந்தது என்று ஒரு சாதகமான சூழ்நிலை போன்றவை மிக விரைவிலேயே மாறிவிட்டன.

  மிக முக்கியமாக, 2004ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவுண்டது, ராணுவ சமநிலையை, அரசுக்குச் சாதகமாக மாற்றியது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  இந்த பிளவுக்குப் பிறகு, இரண்டு தரப்புகளுமே மற்ற தரப்புக்கு குறிப்பிடத்தக்க சலுகைகளைக் காட்டவேண்டியதற்கான தேவையைக் குறைத்துவிட்டது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  நான்காவதாக, ஐக்கிய தேசிய கட்சி அரசு இந்த அமைதி வழிமுறையை, பாதுகாப்பு உத்தரவாதங்கள், சர்வதேச கொடை வழங்கும் நாடுகளிடம் நிதி உதவி, மற்றும் அரசியல் ரீதியாக சிக்கலான பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம், சர்வதேச மயமாக்க எடுத்த முயற்சிகள் சிங்கள தேசிய வாத எதிர்வினையைத்தான் தூண்டின என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
  இதன் விளைவாக, ஒரு தேசியவாத முனைப்புள்ள கட்சி இலங்கையில் ஆட்சிக்கு வர உதவியது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த புதிய அரசு ஆசிய நாடுகளின் ஆதரவுடன் புதிய சர்வதேச பாதுகாப்பு வலையத்தைத் தனக்கு ஆதரவாக அமைத்துக்கொண்டு, விடுதலைப்புலிகள் மீது மேலும் கடுமையான ஒரு அணுகுமுறையை எடுக்கவே உதவியது.
  இதன் மூலம் மஹிந்த அரசு இந்த மோதலுக்கு ராணுவ ரீதியான தீர்வை முக்ன்னெடுக்க வழி பிறந்தது.

  ஒரு பலவீனமான, மென்மையான நோர்வேயால், இந்த இயங்கு சக்திகளை எதிர்க்க முடியவில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
  ஒரு கேந்திர தொலை நோக்கு திட்டம் இல்லாமல், துடிப்புடன் செயல்படக்கூடிய சர்வதேச வலையமைப்பு இல்லாமல், இந்த அமைதி வழிமுறை பாதிக்கப்பட்டது என்றும் இருதரப்புகளும், பின் வாங்கமுடியாத விட்டுக்கொடுப்புகளையும், உறுதிமொழிகளையும் தரவைப்பதற்கும் , அவற்றை இருதரப்பும் கடைப்பிடிக்கச் செய்வதற்கும் நோர்வேயால் இயலாமல் போனது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  மேலும், இலங்கையின் அரசியலில் ஒரு சதுரங்கப் பகடையாக பயன்படுத்தப்படுவதை உணர்ந்து, அதை தடுத்திருக்கவேண்டும். 2006ம் ஆண்டு ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தபோது, மத்யஸ்த முயற்சிகளிலிருந்து நோர்வே விலகிக்கொண்டிருக்க வேண்டும் என்று குன்னார் செர்போ தெரிவித்துள்ளார்.
  இந்த அமைதி வழிமுறையிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது..

  நன்றி; பிபிசி தமிழ்

 17. மதுபாலன் said,

  12/11/2011 இல் 20:54

  சிவகுமார் போன்ற யதார்த்தவாதிகள், தமிழீழப் போராட்டத்தின் உண்மை முகத்தையும், அது திசைமாறிச் சென்ற நிலையையும் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்கள். அவற்றைச் சரியாகப் பதிவு செய்துமுள்ளார்கள். எனினும் இந்த மதுவந்தி, தமிழ்நிதி போன்றவர்கள் அவற்றை இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதற்குக் காரணம் என்ன? அவர்களது புதல்வர்கள், அல்லது சகோதரர்கள் அவர்களின் கண் முன்னால், போராட்டம் என்ற பெயரில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு போராட்ட களத்தில் முன்னணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், அல்லது விமர்சனத்துக்கான தமிழீழப் பதிலளிப்பாக அவர்களது உறவினர்களில் யாரேனும் ஒருவர் இருட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுடப்பட்டிருந்தால், அல்லது நடு வீதியில் நாயைப் போல சாகடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தால், அல்லது அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டிருந்தால், இந்த உண்மை இவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

  இலங்கையின் வடகிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்களிடைய குரோதத்தை வளர்த்து அதனூடாகத் தமது கஜானாவை நிரப்பிக் கொள்ள முனையும் இவர்கள் போன்றோர், தமிழ் மக்களின் பெயரால் இந்துத்துவ சிந்தனைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணாக நடந்து கடவுளால் தண்டிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை விடவும் அபாயகரமானவர்கள்.

 18. அப்துற்றஹீம் said,

  12/11/2011 இல் 21:18

  அரசின் நெஞ்சை நாங்கள் நக்கித் திரியவில்லை. திருவாளர் மதுவந்தி அவர்களே! நீங்களும் உங்களைப் போன்ற புலி ஆதரவாளர்களும்தான், எங்களது செருப்பை நக்கித் திருந்தீர்கள். நீங்கள் இதை மறந்திருக்கலாம். அல்லது மறந்தது போன்று நடிக்கலாம்.

  விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பு, தமிழர்கள் வழங்கிய பங்களிப்பிலிருந்து சற்றும் குறைந்ததல்ல.

  உங்களது போராட்டத்தில் நம்பிக்கை வைத்து, எமது இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் உங்களுடன் இணைந்து போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். எமது பெண்கள் எத்தனை தடவைகள் உங்களது போராட்டத் தலைவர்களை இராணுவத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை சொத்துகளையும் வளங்களையும் உங்களுக்காகவும் உங்களது போராட்டத்துக்காகவும் தானமீந்தார்கள் தெரியுமா? இவற்றை ஏன் செய்தார்கள்? உங்களது போராட்டம் எங்களுக்குமானது என்ற நம்பிக்கையில்தான்.

  ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்தீர்கள். பல நூறு வருடங்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து துரத்தியடித்தீர்கள், அவர்களது கோடிக்கணக்கான சொத்துகள் முழுவதையும் சூறையாடினீர்கள். துடிப்புள்ள இளைஞர்களைத் தேடித் தேடிக் கருவறுத்தீர்கள், கல்விமான்களைக் கடத்திச் சென்று காணாமல் போகச் செய்தீர்கள். வயல் நிலங்களை, வாகனங்களை அச்சுறுத்திப் பறித்துத் தின்றீர்கள்.

  இவை போதாதென்று, உயிர்களையும் காவு கொண்டீர்கள். படுக்கையில் இருந்தவர்களை, ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தவர்களை, பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்தவர்களை, சிறுவர்களை, பெண்களை, முதியோரை… எந்த இரக்கமுமின்றிக் கொன்று குவித்தீர்கள்.

  இதற்குப் பின்னும், உங்களது போராட்டம் எங்களுக்குமானதுதான் எனக் கற்பனையில் ரசித்துக் கொண்டிருக்குமாறு எம்மை நிர்ப்பந்தித்தீர்கள்.

  இவ்வளவு அநீதிகளுக்குப் பிறகும், உங்களது போராட்டத்தை ஆதரிப்பதற்கும், உங்களுக்குதவுவதற்கும் எங்களுக்கென்ன கேடு!

  அதிகாரத்திற்கு வருமுன்னே இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய உங்களிடமிருந்து, அதிகாரத்திற்கு வந்தபின்னர் பங்கு கேட்டுப் பெற முடியுமா?

  தென்கிழக்கு அலகுக் கோரிக்கை, உங்கள் மீதான அச்சத்தின் காரணத்தினால் உருவானதேயன்றி, உங்களைப் போன்று நாட்டைத் துண்டாட வேண்டும் என்ற வெறியில் உருவானதல்ல.

  தமீழழப் போராட்டம் என்ற பெயரில் இனசம்காரம் செய்த விடுதலைப் புலிகளின் அகோர முடிவைப் பார்த்த பிறகும் நீங்களெல்லாம் திருந்தவில்லையென்றால், இனி ஒரு போதும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

  தேச பக்தியும், சகோதரத்து உணர்வும் கொண்ட தமிழ் மக்களே இலங்கையில் அதிகம் என்ற போதிலும், உங்களைப் போன்ற விஷக்கிருமிகளினால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள் என்பது மிகப் பெரும் கவலையே.

  எல்லா மக்களும் இணைந்து ஒற்றுமையாய் பரஸ்பர புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்போடும் வாழ வேண்டும் என்ற அவா இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்கள் மத்தியிலும் உள்ளது. தயவு செய்து அதனை, இதுபோன்ற வக்கிரத்தனமான சிந்தனைகளினாலும் கருத்துகளினாலும் தவிடுபொடியாக்கி விடாதீர்கள்.

 19. சதீஷ் குமார் said,

  12/11/2011 இல் 21:36

  ஐயா தமிழ்நிதி அவர்களே! நகைச்சுவை ஒன்றுமில்லையே என ஏழாம் அறிவு சினிமா பார்த்த போது எழுந்த ஏக்கம், உங்களது பின்னூட்டத்தைப் பார்த்த போதுதான் தீர்ந்தது ஐயா.

  தமிழன் என்ற வெற்றுக்கோஷத்தையும் தமிழீழம் என்ற போலிக் கவர்ச்சியையும் காசாக்க நினைத்த இயக்குனர் முருகதாஸின் வணிக தந்திரம் அபாரம்! உங்களைப் போன்ற மடச்சாம்பிராணிகள் இருக்கிற வரைக்கும் தமிழையும் காப்பாற்ற முடியாது, தமிழனையும் காப்பாற்ற முடியாது. இப்படியான தரங்கெட்ட சினிமாக்களின் வருகையையும் நிறுத்த முடியாது.

  இந்த ஏழாம் அறிவைப் பார்த்துத்தான் உங்களுக்கு துரோகத்துக்கும் வீரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்கிறதென்றால், உங்களது அறிவையும் புத்தியையும் என்னென்று சொல்லிப் பாராட்ட!

 20. முருகானந்தன் said,

  12/11/2011 இல் 21:38

  பிரபாகரன் இறந்து போனாலும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், தமிழும் தமிழீழ தாகமும் என்றும் சாகாது.

  அடுத்த தலைமுறைக்கும் இன்னொரு புதிய பிரபாகரன் பிறப்பான். அவன் முந்தைய பிரபாகரனை விடவும் வீரியத்துடன் தமிழீழத்தை நிறுவுவான்.

 21. . said,

  12/11/2011 இல் 23:13

  Super

 22. தாஜ் said,

  13/11/2011 இல் 02:54

  //மதுவந்தி சொன்னதுதான் சரி. தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது இக்கதை. மிருகங்களோடு போராடும்போது மிருக நோக்கமில்லாது எதிர்நிற்க முடியுமா? எதிர்த்துத் தோல்வி கண்டாலும் அழிந்துபட்டாலும் விதையாக விழுந்து விருட்சமாக எழுவதை விடுத்து //

  -என்கிறார்
  ச.தமிழ்நிதி…

  தனிழனின் சரித்திரத்தில்
  இத்தனைப் பெரிய போர்
  எந்தக் காலத்திலும் நடந்தது இல்லை.
  தமிழ் நிதி இன்னும் உயிரோடு இருப்பது
  விந்தையாக இருக்கிறது.
  விதையாக விழுந்து
  விருட்சமாக முயற்சிக்காமல்
  மீதம் இருக்கும்
  ஈழத்துக்காரர்களின்
  உயிர்க்கு உலைவைக்க
  வீர ஆவேசம் கொள்கிறார்.

  ‘கலைந்து போன கனவு ராஜ்யம்’ கதையில்
  சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
  அழுத்தமாகப் பேசும் சங்கதிகளில்
  விடுதலைப் போரில்
  பங்கெடுக்காமல்
  வெளி நாடு போய்
  சுகம் கொள்பவர்களைப் பற்றி/
  அதன் கேவலத்தைப் பற்றி
  திரும்பத் திரும்ப பேசி இருக்கிறார்.

  ஆஸ்ரேலியாவில் இருந்து
  கனடாவரை
  எத்தனை ஈழத்துக்காரர்கள் எத்தனை லட்சம் தங்கியிருக்கிறார்கள்!.
  இவர்களில் கோடிஸ்வர சுகம் காணுபவர்களின்
  எண்ணிக்கை எத்தனை ஆயிரம் இருக்கும்?!
  சிவகுமாராவது
  ஈழப் போரில் பங்கெடுத்து இருக்கிறார்.
  மேற்குறிப்பிட்ட வெளிநாடு வாழும்
  கோடிஸ்வர்களுக்கு
  ஈழத்துப் போர் என்பது
  வெரும் செய்தி மட்டும்தான்.
  தமிழ் நிதி இப்படியானவர்களை
  விமர்சித்துவிட்டு
  பின்னர்
  சிதம்பரப்பிள்ளை சிவகுமாரைப் பற்றி
  பேசுவதென்பதோ
  விமர்சிப்பது என்பதோ சரியாக இருக்கும்.

  தமிழகத்தில் இருந்து
  ஈழப்போரை
  அவதானித்த பலரில் நானும் ஒருவன்.
  உயிர் துடிப்போடு
  விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாக இருந்ததும்/
  அது இல்லாமல் இருந்தமான
  இரண்டு நிலைப்பாட்டிலும்
  வெவ்வேறு காலக்கட்டங்களில்
  காலம் கழித்திருக்கிறேன்.

  மதுவந்தி /தமிழ்நிதி போன்றோர்களிடம்
  இப்போது நேராகவே
  சில கேள்விகள்:

  புலிகள் எந்த அர்த்ததில்
  இந்திய ராணுவத்தை எதிர்க்க
  இலங்கை ராணுவத்திடம் கைக் கோர்த்தது?

  பத்து ரூபாய் போறாத ‘பேட்டரி செல்’லுக்காக எல்லாம்
  இந்தியாவுக்கு
  தெரிந்தோ தெரியாமலோ
  வந்துப் போக வேண்டிய நிர்பந்தம் இருக்க,
  எந்த வொரு ஞானத்தில்
  இந்தியப் பிரதம வேட்பாளரான
  ராஜீவ் காந்தியை
  கொல்ல முடிவு செய்து கொன்றீர்கள்?

  சரி…
  அவர் எடுத்த அரசியல் நடவடிக்கைப்படி
  ஈழத்தில்
  பல உயிர்கள் பறிப் போக காரணமானது
  என்று நீங்கள் என்னை மறுத்து சொல்லக் கூடும்.
  ஒப்புக் கொள்கிறேன்…

  ஈழத்தில்
  இயக்கத்துக்கு வேண்டாதவர்களை
  துரோகிகள் பட்டம் கட்டி
  சொந்த சகோதரர்கள் என்றும் பாராது
  கேம்பில் வைத்து ரணவதைச் செய்து
  புலிகள் கொன்று குவித்தார்களே
  அந்த அரசியல் நடவடிக்கைகளை
  எப்படி நீங்கள் நியாயப்படுத்துவீர்கள்?

  இப்படி
  இன்னும் பல நூறு கேள்விகள் உண்டு.
  கேட்டும்தான் என்ன புண்ணியம்?
  ஈழத்து கோலத்தை எண்ணி
  வயிறு எரிகிறது.

  கடைசியாக ஒரே ஒரு சொல்.
  எங்கள் நாட்டு
  அரசியல்வாதிகள் எவனையும் நம்பாதீர்கள்.
  எங்கள் நாட்டு
  சினிமாக்காரன்கள் எவன் ஒருவபையும் நம்பாதீர்கள்.
  அவன்களது படம் ஏழு அறிவோடு இருந்தாலும்
  தயவு செய்து நம்பாதீர்கள்.
  அரசியல் செய்திகள் எழுதும்
  எங்கள் நாட்டுப் பத்திரிக்கைகளை
  சத்தியமாக நம்பாதீர்கள்.
  கக்கூசுக்குப் போகும் நேரம்
  துடைத்துப் போடக் கூட
  அவைகளை கைகளால் தொடாதீர்கள்.

  இப்படி…
  பத்தியமாக இருப்பீர்கள் என்றால்…
  நூறு வருடங்கள் கழித்தாவது
  தமிழீழம் சாத்தியப்பட வாய்ப்பிருக்கிறது.

  அன்புடன்
  -தாஜ் ..

  • சாம்பவி said,

   13/11/2011 இல் 07:10

   சிவகுமார் ‘கலைந்து போன கனவு ராஜ்ஜிய’த்தை எழுதிய 92 காலகட்டங்களில் வேண்டுமானால் அவர் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குவதாக விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு ,போராட்டம் அர்த்தமற்றுப்போய், தமிழர்கள் நிரக்கதியாய் நடுத்தெருவில் நிற்பது நிதரிசனமான பின்னும் அவ்வாறான விமர்சனங்களையே கூறிக்கொண்டிருப்பது கவலை தருகின்றது.
   தமிழகத்தின் அரசியல் தலைமைகள், இலக்கியவாதிகள் ,ஊடகங்கள்;; தமது அரசியல், விற்பனைத் தந்திரமாக ஈழமக்களின் பிரச்சினைகளைக் கையாள்கிறார்கள் என்று குற்றம்சாட்டி வந்த தமிழ்நதி இப்போது 7ஆம் அறிவைப் பார்த்துவிட்டு வாருங்கள் பேசுவோம் என்பது நகை முரண்.மஜீத் கூறியதுபோல ஒரு வர்த்தக ரீதியான ஒரு திரைப்படம் சிக்கலான பிரச்சினைக்கு எப்படித் தீர்வாக முடியும்.
   ‘தோல்வி கண்டாலும் அழிந்துபட்டாலும் விதையாக விழுந்து விருட்சமாக எழுவதை விடுத்து அடிபணியும் அரசியலுக்கு மாறிவிட முடியுமா?’…என்று கூறிக்கூறி ஈழத்தமிழர்களை மட்டும் புறநானூற்றுத் தமிழர்களாகவே தொடர்ந்தும் வைத்திருக்கும் முயற்சியை தமிழ்நதி உள்ளிட்ட புலம்பெயர் தமிழர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் இதே வசனத்தைச் சொல்லிப்பார்த்து விட்டு எழுதச் சொல்ல வேண்டும் தமிழ் நதியிடம்.
   எனக்குத் தெரிந்து, தமிழர்களின் தலைவிதியைப்பற்றி தீர்க்கதரிசனமான கருத்துக்களை காலங்காலமாய் முன்வைத்து வந்தவர்களில் சிவகுமாரும் ஒருவர். அவரது கவிதைகள் , இலக்கிய , அரசியல் கட்டுரைகள் , பத்திகளை மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறேன்.92 ஆம் ஆண்டின் கணையாழியைத் தேடிப் பிடித்து தட்டச்சு செய்து எங்கள் வாசிப்பிற்காகத் தந்த எஸ்எல்எம்முக்கு நன்றி.; தான் சார்ந்த இனத்தின் அவலத்தை வெகு லாவகமாகப் பதிவு செய்திருக்கிறார் சிவகுமார். ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி நிறையவே வாசித்திருந்தாலும் , இத்தனை ஆண்டுகளின் பின்னரும் இக்கதை நம்மைக் கவரக்; காரணம் நேர்த்தயாகக் கதை சொல்லும்; உத்தி சிவகுமாருக்குக் கைவந்திருப்பதுதான். எஸ்எல்எம்மின் ஆக்கினைக்காவது தொடர்ந்து எழுதுவதைப் பற்றி சிவகுமார் யோசிக்க வேண்டும்.
   ஆனாலும் இந்தக் கதையினூடே இழைந்து செல்லும் அழகிய காதலும், மாலினியும் மனத்தின் ஓரத்தில் ஏற்படுத்திய வலியைத் தவிர்க்க முடியவில்லை.
   அன்புடன்
   சாம்பவி

  • 13/11/2011 இல் 17:45

   இன்னொரு ரொம்ப முக்கியமான கேள்வி: சீறி சபாரத்னம் போன்ற பல ‘ ஜாலியன் வாலாபாக்’குகளுக்கு எந்த வகையில் சமாதானம் கூறினாலும் யாராலாவது ஏற்றுக்கொள்ள முடியுமா?

 23. 13/11/2011 இல் 14:33

  பல விடயங்களில், எதிரில் நிற்கும் யானையளவு உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பதும், எங்கோ இருப்பதாகச் சொல்லப்படும் ஏதோ ஒன்றை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளத் துடிப்பதும்
  நம்மில் பலருக்கு ஏற்புடையதே

  இது இப்போது தமிழீழத்துக்கும் பொருந்துவது வலித்தாலும் முன்னிற்கும் உண்மை அதுதான்.

 24. 13/11/2011 இல் 15:48

  நீங்கள் சிண்டை பியத்துக்கொள்வது போல் தமிழீழமும் கிடைக்காது. முஸ்லிம் தனியலகும் கிடைக்காது. எல்லாம் பகற்கனவு. ரவூப் ஹகீமுக்கு தன்னுடைய கச்சையை பாதுகாப்பதே பெரும் சவாலாக இருக்கின்ற போது தனியலகு கதையை சொல்லி எங்கள் கடந்த கால போராட்ட உபகாரத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். அன்பர்களே இப்போது தமிழ் பேசுபவர்களின் நிலை பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்றிருக்கின்றது.முடிந்தால் இரு இனமும் மனமொன்றி வாழ முயற்சிப்போம்.

 25. வ.செல்வராஜரட்ணம் said,

  13/11/2011 இல் 15:54

  வலிக்குது… அழுதுடுவேன்…

  சரி, பேரில் என்ன இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னூட்டங்களைப் பார்க்கும்போதல்லவா தெரிகிறது.… பேரில் எவ்வளவோ இருக்கிறது!

 26. வன்னியிலிருந்து அருள் said,

  13/11/2011 இல் 18:21

  //முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளின் அநீதிகளை எதிர்த்து ஈழத் தமிழ்ச் சமூகத்துக்குள்ளிருந்து எத்தனையோ போராளிகளும் இடதுசாரிகளும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் பல்வேறு தருணங்களில் பொதுசனங்களும் குரல் கொடுத்தார்கள். அவர்களில் அநேகர் புலிகளின் துப்பாக்கியால் துடைத்தெறியப்பட்டார்கள். புலிகளால் கொல்லப்பட்ட சகோதர இயக்கப் போராளிகள் மட்டும் நான்காயிரத்துக்கும் மேல். துல்லியமான கணக்கு பொட்டம்மானுக்கு மட்டுமே தெரியும். அப்பாவிச் சிங்கள மக்கள் மீதான ஆயிரக்கணக்கான கொலைகள், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என்றெல்லாம் இங்கே விபரித்துச் சொல்லத் தேவையில்லை. அவற்றையெல்லாம் ஏற்கனவே போதுமானளவு ஆதாரங்களுடன் உரைத்தாகிவிட்டது. இறுதி யுத்தத்தில் 3 லட்சம் மக்களை புலிகள் மனிதத் தடுப்பரண்களாக உயயோகித்தது குறித்தெல்லாம் அய்.நா. நிபுணர்கள் குழு அறிக்கையும் தெளிவுபட உரைத்துவிட்டது. இதற்கு மேலும் தமிழின உணர்வாளர்களுக்கு இதெல்லாம் புரியாது என்றால் எப்படித்தான் இதையெல்லாம் அவர்களிற்குப் புரிய வைப்பது. சமயசந்தர்ப்பம் இல்லாமல் உண்மையைப் பேசுவதைவிட வேறென்ன வழியுண்டு! கிடைக்கும் தருணங்களிலெல்லாம் அவர்களது மனச்சாட்சியிடம் உரையாடுவது புரியாமையல்ல, அது எனது கடமை. //

  ம்.…
  7ஆம் அறிவு போதிதர்மரைப் பார்த்துவிட்டு அப்படியே ஒரு நடை http://www.shobasakthi.com/ போய்ப் பார்த்துவிட்டும் சுறுக்கா வந்துவிடுகிறீர்களா.…. (ஆபிதீன் பாவம் அவருக்கு இந்தக் கதி போதும்) அவரை விட்டு விட்டு நாம் வேறெங்காவது ஒரு வெளியில் ரத்தத்தைச் சூடேற்றி நரம்புகளை முறுக்கிக் கொள்ளலாம்.

  வாழ்விழந்து, தொழிலிழந்து, கல்வியிழந்து, உறவுகளை இழந்து, உறுப்புகளை இழந்து தறப்பாள் சீலைகளின் கீழ் ஏக்க விழிகளுடன் ஏதேனும் உதவிகளை எதிர்பார்த்திருக்கும் மக்களா, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

  போராடத் தலைவனை அல்லவா எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!

  நீங்கள், இம்முறை வரும் கப்பலில் பீரங்கிகளுக்குத் தேவையான 90 mm குண்டுகளும், சாம் ஏவுகணைகளும், ரி56 க்கான ரவைகளும் கொஞ்சம் ஏற்றிவிட்டால் போதும்.

  புல்லரிக்கும்படியான வெற்றிச் செய்தியை விரைவில் அனுப்பிவைக்கிறோம்.…

 27. 13/11/2011 இல் 20:25

  புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது, புலி எப்படி உருவானது என்று யாருமே பார்க்கவில்லை. இதன் அரசியல் பின்னனி என்ன என்பதும் மறந்தாகிவிட்டது.

  திரிகோணமலையில் அகில உலகப் பொலீஸ் தளம் அமைக்கத் துடித்தபோது அதை தடுக்க எங்கட இந்திரா உம்மா ரகசியமா பிஸ்மி சொல்லி புலியை பொறக்கவச்சாங்க. அது வளரனுமே…? அதுக்கு ஒஹந்த எடம் எங்க டமிள் நாடுதான் அதனாலெ அப்ப இருந்த எங்க கண்ணாடிப் போட்ட புரட்சி தொப்பிவாப்பா மெஹர்பானியிலே அதுக்கு எல்லா பயிற்சியும் கொடுத்தாங்க. இது அவங்க போட்ட புள்ளையார் சுளி. அது ஆலமரமாய் விழுதுவிட்டு கடைசியில் கொம்பேரி மூக்கனாய் மாறி வளர்த்தக் கடா பாய உம்மா இல்லாமப் போனதாலெ புள்ளெ மார்பிலெ பாஞ்சுடுச்சு. புலி ஒரு முறை மனிதனை திண்டுவிட்டால் வேறே எதையும் திங்காதாம் மனுசக் கறிதான் வேணுமாம் அதனால் தான் அதுக்கு ‘man-eater’ னு பேருன்னு சொல்றாங்க. அதே மாதிரி ராஜிவோட நிக்காமெ ரத்தக்காட்டேரியா மாறி சுத்தி உள்ளவங்க ரத்தத்தைக் குடிச்சது தெரிஞ்சக் கதை.

  எங்க டமிளனுக்கு ஒரு சிறப்பு இருக்கு, எல்லாத்தையும் மறந்துடுவான். ஒன்னத்துக்கும் வக்கில்லாத எங்க அரசியல் வாதிங்க பொளப்பை நடத்த இங்கே டிராமா ஆடுறாங்க. அமிர்தலிங்கம் போன்றவர்களையெல்லாம் காவு கொடுத்துட்டு இருக்கிற நீங்க, உங்கட்டேந்து பொங்கி வர்றதை பார்க்க சகிக்காதவங்க நாலு பேரு இருக்கத்தானெ செய்வாங்க, தேசிய உணர்வு இல்லாத தலைவன்(அப்படி சொல்லிக்கொள்கிற) எங்கட்டெ இருக்கிற மாதிரி

  நடந்தது நடந்துப்போச்சு, past is past. இனி நடக்கவேண்டியது, ஒருங்கிணைனந்த ஈழத்தை உருவாக்க எல்லோரும் ஒரு கைகோர்த்து நில்லுங்கள். நான் 79 ல் பார்த்த ஈழத்தை மீண்டும் பார்க்கமுடியும் என நம்புகிறேன்.

 28. வன்னியிலிருந்து அருள் said,

  13/11/2011 இல் 21:34

  2009 மே க்கு முன் நாங்கள் வீரத்தோடு செத்துக் கொண்டிருப்பதற்காக மாதா மாதம் கோடி கோடியாகப் பணம் வந்துகொண்டிருந்ததே!
  இப்ப, வயித்துப்பாட்டுக்கும், குந்த ஒரு குடில் கட்டிக் கொள்ளவும், பிள்ளையளுக்குக் கழிசான் சட்டை வாங்கிக் குடுக்கவும், கல்வி குடுக்கவும் காசு தேவையாய்க் கிடக்கு. எல்லாத்தையும் ஏன் நிற்பாட்டிப் போட்டியள்? ஆராவது சொல்றீங்களா?

 29. வை.ஜி.எம்.தரன் said,

  14/11/2011 இல் 12:17

  ஏனுங்க, எல்லாரும் மேலே உள்ள கதையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறீங்களுங்களா?
  சரித்தான், இலக்கிய அலசல் என்றாலே இப்டிப் பூடகமாய்த்தான் பல்வேறு பூராயங்களையுந் தொட்டுப் போய்க் கொண்டிருக்கும் போல ……!

 30. ஸபீர் ஹாபிஸ் said,

  14/11/2011 இல் 14:14

  வன்னியிலிருந்து அருள் எழுதியுள்ள பின்னூட்டம் மனதை நெகிழ வைக்கின்றது.

  போராட்டம் இடம்பெற்ற போது, அஞ்சி வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்கள்தான், ஈழத்தில் விடுதலைப் புலிகளின் போஷகர்களாக இருந்தனர்.

  ஆனால், போராட்டம் யாருக்காக நடத்தப்படுகின்றது எனக் கூறப்பட்டதோ அந்த்த் தமிழ் மக்கள், இன்று எல்லாமும் இழந்து அநாதைகளாய், விதவைகளாய், அகதிகளாய் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களைப் பாதுகாத்து அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவுவது பற்றிச் சற்றும் அந்த போஷகர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

  நாடுகடந்த தமிழீழம் போன்ற பெயர்களில், மீண்டும் சொத்துகளைக் குவிக்கவும் அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளவும் படாடோபமாக அவற்றை அனுபவித்து மகிழவுமே அவர்கள் முயன்று வருவது யாரையும் விசனங்கொள்ளச் செய்யும்.

  இன்று இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் குறிப்பாக, வடபகுதி தமிழ் மக்களின் அவல நிலைக்கு இந்தப் போஷகர்களே முழுப்பொறுப்புமாவர்.

  விடுதலைப் புலிகளைப் போஷித்து, இலங்கையில் படுகொலைகள், குண்டுவெடிப்புகள், இனசம்காரங்கள் என எண்ணற்ற அழிவுச் செயல்கள் இடம்பெறக் காரணமாயிருந்த அவர்கள், இனியேனும், மனந்திருந்தி, தமது சொத்துகளையும் வளங்களையும் ஆக்கபூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்த முன்வருவார்களாயின், அவர்கள் தமது முந்தைய பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடியவர்களாகிப் போகலாம்.

  ————–

  பிற்குறிப்பு; விடுதலைப் புலிகளின் அட்டகாசங்கள் பற்றி அறிய கீழுள்ள இணைப்பில் அழுத்தவும்

  http://irukkam.blogspot.com/2010/06/blog-post_14.html

  • 14/11/2011 இல் 14:29

   //அவர்கள், இனியேனும், மனந்திருந்தி, தமது சொத்துகளையும் வளங்களையும் ஆக்கபூர்வப் பணிகளுக்குப் பயன்படுத்த முன்வருவார்களாயின்//

   அய்யய்யே, அதெல்லாம் வேணாங்க;
   எல்லாத்தையும் அவங்களே வச்சுக்கிட்டு……
   சும்மா இருந்தாலே போதும்.

 31. வ.செல்வராஜரட்ணம் said,

  14/11/2011 இல் 16:07

  கைய குடுங்க மஜீத்.

 32. 14/11/2011 இல் 19:33

  அரசியல் சதுரங்க சுதாட்டத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தானே, சபீர் ஹாபிஸ் சொன்னது போல் சுகம் குவிப்பது அவர்கள். நிச்சயம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். அரசியல் பின்னனியினால் உருவாக்கப்பட்ட புலிகள் செய்த கொடூரங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்வதிலிருந்து எப்போதும் தப்பவே முயற்சித்தது. ராஜிவ் கொலையைக்கூட தான் செய்துவிட்டு தான் செய்யவில்ல என சப்பைக்கட்டுக் கட்ட என்னவெல்லாம் செய்தது என்பதற்கு இதோ ஒரு சாம்பிள். இன்று கல்ஃப் நியூசில் வந்தது…

  “LTTE idealogue Anton Balasingham also complined to Solheim that both Prabhakaran and LTTE intelligence chief Pottu Amman insisted for month that their group had no role to play in Rajive Gandhi killing.” …(எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை)

  இவ்வளவு அட்டூழியம் செய்த புலிகளுக்காக கூச்சலிடும் தேசிய உணர்வு அரவே இல்லாத வைகோ, நெடுமாரன், சீமான் போன்றோரினால் உங்களுக்கு எதாவது கிடைக்குமா? இல்லை போனது வருமா? இல்லை அழிந்ததை மீட்ட முடியுமா?

  எனவேதான் சொல்கிறேன் நடந்ததை மறந்து சகோதரனாய், சகோதரியாய், அன்னையாய், பிள்ளையாய் ஒன்றாக கைகோத்து நில்லுங்கள்; பழைய ஈழத்தை உருவாக்குங்கள்.

  கல்ஃப் நியூசின் செய்தி: சொடுக்கினால் பார்க்கலாம்.

  http://gulfnews.com/news/world/india/india-held-secret-meetings-with-ltte-solheim-says-1.929870

 33. வன்னியிலிருந்து அருள் said,

  14/11/2011 இல் 20:22

  “உயிரைக் கொடுத்துப் போராடத் தயாராக இருக்க வேண்டும்”, “வித்துடலை விதைக்க வேண்டும்” , “7ஆம் அறிவு பார்;த்து வீர ஊசி ஏற்றிக்கொள்ள வேண்டும்”, “தாகம் வடியாது – புதிய பிரபாகரன் பிறப்பான்” என்ற குரல்களை இன்றும் கேட்க நேரும் துர்ப்பாக்கியத்தை என்ன சொல்ல? போரால் நசுங்கிய இந்த மக்கள் வாழ்வுக்குப் படும் அல்லல்களைப் பார்த்தபடியே இவ்வாறான முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருப்பதன் கொடுமையை – அபத்தத்தை உங்கள் யாருக்கேனும் உணர முடிகிறதா?

  நமது மக்கள் எவ்வளவு இழிநிலையில் அரைபட்டுக் கிடந்தாலும், ‘நமக்கு மற்றவர்கள் சமதையானவர்கள் இல்லை’ என்ற சிந்தனையிலிருப்பவர்களே இந்த மக்களின் அரசியல் குரலாக மேலோங்கியிருப்பது தமிழ்வாழ்க்கையின் துரதிர்ஷ்டம்தான்!

  நமது ‘சரி’கள் பற்றியே எப்போதும் நம் நினைவிருக்கிறது. நம் சமூகத்தால் உருவாக்கிவிடப்பட்ட அந்தப் புலிகளைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான முரண்டும் பிடிவாத மறுப்புகளுமே நமக்கான அரசியல்ஞானமாகத் தேங்கிவிட்டிருக்கிறது!

  நம்மிடம் சரிகள் இருப்பது போலவே எதிர்த்தரப்பும் தன் சரிகளை வைத்துக் கொண்டுதானிருக்கும் என்ற எளிய உண்மையை மறந்துவிடுகிறோம். பிரச்சினை என்னவென்றால், இந்த சரிகளைப் பேசிக் கொண்டிருப்பதால் ஒருபோதும் சமாதானம் உருவாகி விடுவதில்லை. தங்கள் தங்கள் தவறுகள், குற்றங்கள் குறித்த உணர்வும் பரஸ்பர மன்னிப்புப் பரிமாறலுமே நம்மை சமாதானம் நோக்கிச் செலுத்துவதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

  எதிர்த்தரப்பை இணங்க வைத்து வெல்வதற்குப் பதிலாகக் கோபப்படுத்துவதில் தற்திருப்தி அடைந்து கொள்கிறோம். குரலற்ற மக்கள் மீது துன்பங்களைச் சுமத்தியவாறே ‘ரோச அரசியலை’ தொடர்கிறோம். எதிரிக்கு வில்லங்கம் கொடுக்க முடியுமாக இருந்தால் நாம் மூக்கின்றி இருப்பது பற்றி என்ன கவலை?

  நம் அறிஞர்கள் கலைஞர்கள் பிரமுகர்கள் எனப்படுவோரும், மக்களுக்காகக் குரல் தருவதாகக் காட்டிக் கொள்வோரும் வீரம், ஆண்மை, ரோசம், பழம்பெருமை என்பவற்றைச் சொல்லி வன்முறை எதிர்ப்பு உணர்வைக் கைவிடாதிருப்பதே உயர்வான மனித மதிப்பீடுகளாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பகைவரைப் பணிய வைத்தல் என்பதற்கான வன்முறையை ஓர் அற நடவடிக்கையாகக் காட்டும் முயற்சியையே தொடர்ந்து மேற்கொண்டு மக்களது வாழ்வுச்சிதைவை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

  இப்போதும் சாதாரண மக்கள் வாழ்வை அழித்துக் கொண்டிருப்பதையே இவர்கள் வீரம் எனும் பண்பாக விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். எதார்த்த நிலையை மறைத்து இவர்கள் காட்டும் பழம்பெருமை மதிப்பீடுகள் பற்றிய முழக்கங்களால் மக்களை மயக்கநிலையில் வைத்திருப்பதுடன் வாழவொட்டாமலும் வதைத்து வருகிறார்கள்.

  இவர்களது “துரோகி” வாழ்த்துரைக்குப் பயந்து நம் பெரும்பான்மைக் குரல்களை அடைத்துவிட்டு “Nஙூ” என விழித்தபடி இருக்கிறோம்.

 34. வன்னியிலிருந்து அருள் said,

  15/11/2011 இல் 12:33

  சிவகுமாரைப் (ராஜன்) போலவே எனக்கும், யாரையும் சந்தேகத்துடன் விட்டுவிட விரும்பாத பழக்கதோஷம் இருப்பதால்…… இதுவுமது…….

  வன்முறையின் தோல்வியை இவ்வளவு குரூரமாக அனுபவித்த பிறகும், அதைவிட்டு வேறு வழிமுறைகளை யோசிக்க மாட்டாதவர்களாக அல்லது யோசிக்க விடாதவர்களாக இன்னும் பலர் இருப்பது ஒருவகையில் நம் சமூகத்தின் சாபக்கேடுதான்.

  வெறுப்பை ஒருபோதும் வெறுப்பினால் சாந்தப்படுத்த முடியாது. பகையை பகையினால் வெல்வது சாத்தியமில்லை என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் அறிந்து கொண்டுவிட்டதுதான் என்றாலும், இன்னமும் வன்முறையை நியாயப்படுத்தக் கிடைக்கும் ஊகங்களையும் உணர்ச்சி வேகங்களையும் கொட்டி அழிவதிலேயே முனைப்பாயிருக்கிறோம் நாம்.

  மிகப் பயங்கரமான சூழல் மாசு நம் மனங்களினுள்ளேதான் மறைந்து கிடக்கிறது. எமது அறியாமையிலும், ஆணவத்திலும், ஆத்திரத்திலும், அடையாளங்களை முன்னிறுத்தி ரோசப்படுவதிலும், பழிக்குப் பழி வாங்குவதிலும், பகை வளர்த்து அழிவதிலும் இதை வெளிப்படுத்தி வருகிறோம். காந்தி சொன்னது போல, திருப்பித் தாக்குவதுதான் உயிர் வாழ்வதற்கான நியதி என்று நம்புவது போல நடிக்கின்றோம்.

  எங்களுக்குப் பிரச்சினைகள் உண்டு. அந்த நெருக்குதல்களிலிருந்து மீள வேண்டிய தேவை உண்டு. இதையெல்லாம் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நமது தீர்வுக்காக நாம் வன்முறை வழியை நாடி அதில் மிகப் பலமும் அடைந்து வருகிறோம் என்று நம்பியது எவ்வளவு பெரிய மாயையாகப் போயிற்று? அந்த வன்முறைப் பலத்தை நசுக்கிவிடக் கூடிய பெரிய வன்முறைப் பலத்தை மிக எளிதாக எதிர்;த் தரப்பு திரட்டிக் கொண்டுவிட முடிந்ததைக் கண்டோம். பேரளவிலான அழிவுகளையும், சமூக மனோபலத்தின் வீழ்ச்சியையுமே அந்த வன்முறை வழி மிச்சம் வைத்துவிட்டு முடிந்தது.

  உலகில் உண்மைகளும் நம்பிக்கைகளும் பலவாறாக உள்ளன. ஒரு உண்மைக்குப் பின்னாலுள்ளவர்கள் இன்னொரு உண்மையை நம்புகிறவர்களோடு ஒத்துப்போக முடிந்தால் முரண்பாடு ஏற்படாது. ஆனால் யதார்;த்தத்தில், தங்களது நம்பிக்கைதான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புவதே ஒவ்வொருவரினதும் இயல்பாயிருக்கிறது. தாம் நம்பாத மற்றையதைச் சகித்துக்கொள்ள முடியாமல் போவதால் மோதல் உருவாகிறது. அவரவர் உண்மையை நிலைநாட்ட வன்முறையும் சரி என்றாகிவிடுகிறது. முற்றுண்மை இதுதான் என்ற நம்பிக்கையே வேறுபாடுகளைத் தாங்க முடியாமல் செய்துவிடுகிறது.

  ஒவ்வொருவருக்குமோ அல்லது ஒவ்வொரு குழுவுக்குமோ தனித்தனி உண்மை இருக்கும்போது, அந்த இருதரப்பும் வாழ்வதற்குரிய நியாயம் வன்முறையால் எப்படி உருவாகும்? ஒரு உண்மையை அழித்து மறு தரப்பை நிலைநாட்டுதல் எப்படி நாகரிகமடைந்த மனிதகுலத்தின் ஏற்பாடாக இருக்க முடியும்? வன்முறையின் பலவீனத்தையும், மனிதவிரோத பிற்போக்குத் தன்மையையும் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்ளாமல் நம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது, வாழ்வுக்கு வழிகாண முடியாது.

 35. ularuvaayan said,

  15/11/2011 இல் 19:14

  சிவகுமாரின் ‘கலைந்து போன கனவு ராஜ்ஜியம்’ ஒரு மௌன யுத்தத்தை தொடங்கி விட்டிருப்பது ஆரோக்கியமானதே .நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது எஸ். எல். எம்.ஹனீபா அவர்களுக்கு என நினைக்கிறேன் .சிவகுமார் போன்ற புதிய சிந்தனைகளை தூண்டிவிடும் எழுத்தாளர்கள் எமது சமூகத்தில் மிக மிக குறைவாகவே உள்ளனர். சிவகுமாருக்கு உள்ள வரலாற்றுக் கடமைகளில் ஓன்று அவரின் எழுத்து என்பதை அவர் புரிந்து கொள்ள இந்த சிறுகதையின் மீதான மீள் ஆய்வு பயன்பட்டிருக்கிறது. சிவகுமார் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என உளறுவாயன் குழுவினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் .

 36. மதுவந்தி said,

  16/11/2011 இல் 01:13

  சிவகுமார் எதிர் கொண்ட வாழ்க்கையின் தனிப்பட்ட மனநிலையைக் காட்டும் காலப்பதிவு தான் இந்தக் கதை. அவரின் எழுத்துக்கள் அற்புதமானது என்பது யாவரும் அறிந்தது தான், நான் இதிலே ஆரம்ப கால இஸ்லாமிய போராளிகளின் தியாகங்களை மறக்கவில்லை, குறைகூறவும் இல்லை, விடுதலைப் புலிகளின் தலைமையும் அந்த நன்றி உணர்வில் தான் தன்னுடைய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்கு இம்ரான்-பாண்டியன் என்ற இஸ்லாமிய சகோதரருடைய பெயரை வைத்திருந்தார். என்னுடைய பதில் அதன் கீழ் பின்னூட்ட மிட்ட தமிழீழத்தை எதிர்பவர்களுக்கானதாக இருந்ததே அன்றி பழைய தியாகங்களை மறந்தன்று. ஏனெனில் சிவாவின் கதையில் வந்த சில கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் இயங்கு முறைமையில் உடன்பாடில்லாத தன்மையைக் காட்டினாலும் விடுதலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தையும் சுமந்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. யாருக்கெதிராகப் போராப் புறப்பட்டோமோ அவர்களை இறுதிவரை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைப் பிடித்தவர்கள், ஒன்றில் புலிகளுடன் சேர்ந்தார்கள் அல்லது அரசுடன் சேர்ந்து புலிகளை எதிர்க்காமல் விலகி நின்றார்கள். அதற்கு உதாரணமாக தம்பாப்பிள்ளை மகேஸ்வரனும் பாலகுமாரனும் இருக்கிறார்கள், ஆனால் மற்றவர்கள் என்ன செய்தார்கள்? புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற வன்மத்தில் யாருக்கெதிராகப் போராட வந்தார்களோ இடையில் அவர்களோடே சேர்ந்து நின்று விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக நினைத்து விடுதலைப் போராட்டத்தையே எதிர்த்தார்கள். அவர்கள் எதற்காகப் போராட வந்தார்களோ அந்த மையக் கொள்கையே சிதறிப் போனது. ஆனால் புலிகள் அவர்கள் எதற்காக போராட வந்தார்களோ அதற்காகவே இறுதிவரை போராடினார்கள். உலகில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் ஒரு போதுமே இலவசமாகக் கிடைத்து விடவில்லை. தவிரவும் நானும் தனிப்பட்ட முறையில் நிறைய இழப்புக்களையும் நிறைய வலிகளையும் சம்பாதித்தவள் தான், அதற்காக நான் என் கொள்கையையோ மனத்தையோ சோர்ந்து போக விடவில்லை. உங்கள் பிரச்சனை என்ன புலிகளை அழிக்க வேண்டும், புலிகளைத் தூற்ற வேண்டும் என்பது தானே தவிர விடுதலை குறித்த ஆரோக்கியமான உரையாடல் அல்ல. கதையில் இருந்து விலகி புலிகள் மீதான உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வு பின்னூட்டங்களைப் பார்த்த பின்னர் தான் நான் எழுத வேண்டி வந்தது. “என்று தணியும் இந்த அடிமையின் மோகம்” :((

 37. மதுவந்தி said,

  16/11/2011 இல் 01:15

  ”அரசுடனும் சேராமல்” என்று மாற்றி வாசிக்கவும்

  • வ.செல்வராஜரட்ணம் said,

   16/11/2011 இல் 15:43

   நிறைய இழப்புக்களையும் நிறைய வலிகளையும் சம்பாதித்த பிறகும், கொள்கை சிதறாது, மனம் சோராது, மக்களே உயிர்மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கும் மதுவந்தி போன்றவர்களைக் காணவும் கேட்கவும் அறியவும் நேரும்போதுதான்
   நாமும் தமிழராய்ப் பிறந்ததன் தவம் இன்னதென்றறிந்து இறும்பூதடைய முடிகிறது…
   தனிப்பட்ட காழ்ப்புணர்வுப் பின்னூட்டங்களைப் பார்த்து அடைந்த தளர்ச்சியிலிருந்து மீண்டு பழையபடி தமிழராய்ப் பெருமிதம் ஓங்குகிறது.….மதுவந்திக்கு மனப்பூர்வ நன்றிகள்.

   மற்ற மக்களையும் துரோகிகளையும் விடுங்கள். நமது தூய தமிழ் மக்களிலேயே 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் எமதிந்தப் போராட்டத்தில் செத்துமடிந்ததுக்கு,

   சிங்கள அரசு காரணம் – சிங்கள மக்கள் காரணம் – முஸ்லிம்கள் காரணம் – மலையகத் தமிழர்
   காரணம் – நமக்குள்ளேயே இருக்கும் துரோகத் தமிழர் காரணம் – இந்தியா காரணம் – நோர்;வே காரணம் – ஜப்பான் காரணம் – சீனா காரணம் – பாகிஸ்தான்
   காரணம் – இஸ்ரேல் காரணம் – அமெரிக்கா காரணம் – ஐ.நா. காரணம் – ரஷ்யா காரணம் – கியூபா காரணம் – லிபியா காரணம் – ஈரான் காரணம் – காட்டிக் கொடுத்தோர் காரணம் – கடல் காரணம் – காற்று மாறி வீசியது காரணம் – வானம் காரணம் – வராமல்போன கப்பல்கள் காரணம் – ஊடுபார்த்து ஆமியிடம் உயிர்ப்பயத்தில் ஓடிப்போன சனம் காரணம் – வெள்ளைக்கொடி மதிப்பறியா விரோதிப்படை காரணம் – சர்வதேசக் கிளையினர் காரணம் – செல்போன்களை மூடிவைத்துவிட்டு ஓடி ஒளித்த தமிழ் எம்பிமார் காரணம்……

   தமிழீழ விடுதலைப் புலிகளும்
   தலைவரும்
   நாங்களும் காரணமில்லை
   காரணமில்லை – நாங்கள் காரணமில்லை – நாங்கள் காரணமில்லை – நாங்கள் காரணமில்லை

   இறுதிவரை போராடினோம். இனியும் போராடுவோம். இழப்பின்றி இலவசமாய்க் கிடைப்பதில்லை விடுதலை!

   மீண்டும் எமது மக்களைப் பெருமளவில் அழிக்கப் போகும் உங்கள் பட்டியலில் இன்னும் யார் யாரெல்லாம் சேரப்போகிறீர்கள் என்பதை வரலாறு சொல்லட்டும்……

 38. தாஜ் said,

  17/11/2011 இல் 02:23

  சபாஷ்
  செல்வராஜரட்ணம்
  -தாஜ்

 39. இந்திரை said,

  17/11/2011 இல் 18:48

  வீர ரத்தம் ஏற்றிக் கொண்டு வாருங்கள் பேசலாம் என்கிறார் தமிழ்நதி. அடிமை மோகம் ஒழிந்தால்த்தான் உண்டு என்கிறார் மதுவந்தி. ஆக எம்மைச் சு+ழவூள்ள மற்றவர்கள் திருந்தினால்த்தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவூ கிட்டும் என்ற நப்பாசையை விடுவதாயில்லை. இறுதியூத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது எல்லாரையூம் சாடினோம் இதில் எங்களின் பங்களிப்பு என்னவாக இருக்கலாம் என்ற ரீதியில் சிந்திக்கவே நாம் விரும்புவதில்லை. புலிகள் தெற்கில் தொடராகக் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவிப் பொது மக்களைக் கொலை செய்த போதெல்லாம் ‘எப்பிடி காட்டீட்டாங்கள் எங்கட பொடியள்’ என்று உள்ளுர மகிழ்ந்திருக்கிறௌம். மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் புத்திஜீவிகளையெல்லாம் புலிகள் மண்டையில் போட்டபோது புல்லுருவிகள் களையப்படத்தான் வேண்டும் என்றவகையில் எழுதிக்குவித்தார்கள் எங்கள் பேராசான்கள். இன்றும் ….ஒரு வேளை உணவூக்காக மற்றவர்களிடம் கையேந்தும் அவல நிலையில் நம்மவர்கள் இருந்தும் அதற்கான காரணத்தை மற்றவர்களிடம் மட்டுமே தேடிக்கொண்டிருக்கிறம்.
  இந்நிலையில் உளறுவாயன் குழுவினர் குறிப்பிட்டது போல சிவகுமார் போன்ற புதிய சிந்தனை கொண்டவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதென்பது இலகுவானதல்ல.
  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்வரை மாற்றுக் கருத்து என்ற சொல்லுக்கே இங்கே இடமிருக்கவில்லை. மீறி வந்த கருத்துக்களும் அரச ஊடகங்களிலேயே வந்தன. அவற்றை அரசுக்கு வக்காலத்து வாங்குவோரின் கருத்துக்களாக துரோகிகளின் கருத்துக்களாக இலகுவில் நிராகரிக்க முடிந்தது. இன்றும் இந்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவதற்கில்லை.
  சிவகுமாரின் கதையை மீள் பிரசுரம் செய்து ஆரோக்கியமான கதையாடல்களுக்கு வழிவகுத்த ஆபிதீன் அவர்கள் நிச்சயம் நன்றிக்குரியவர். இவ்வாறான தொடர்ச்சியான விவாதங்கள் எம்மவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

 40. seelan jeyaa said,

  02/01/2012 இல் 19:38

  vdf;Fr; rpy re;Njfq;fs;
  m) fijapd; ciuahlypy; cs;s gy tupfs; nraw;ifahf cs;sd. fUj;Jfisr; nrhy;YtNj Mrpupaupd; Nehf;fkhapUe;jNj fhuzkh? gppur;rhu nebAs;s fij vg;gb ey;y fijahFk;? fij ,d;Dk; nrt;tp;jhf;fk; nra;ag;glNtz;Lk;.
  M) Gypfs; kl;Lk;jhd; khw;Wf; fUj;jhsu;fisf; nfhd;whu;fsh? Vida ,af;fq;fs;> K];ypk; jug;Gfs; ;( MAjf; FOf;fs;> ,uhZtj;jpYs;Nshu;> ke;jpupfs; – vk.; gp. f;fspd; ghJfhtyu;fs;) jkpou;fisf; nfhy;ytpy;iyah?
  ,) n[ahde;j%u;j;jpapd; ‘mopf;fg;gl;l jkpo;f; fpuhkq;f;s;’ E}iyAk;> filrpf; fhyfl;l rupepfupy; epuh[; Nltpl; vOjpa fl;LiuiaAk; Nfs;tpg;gltpy;iyah?
  K];ypk; ,af;fq;fs; ey;yJ!@ kf;fSf;fhfg; Nghuhb> jpahfq;fs; Gupe;J> ,UgJ Mz;LfSf;F Nkyhf tpLjiyg; gpuNjrq;fis Ngzpa Gypfs; kl;Lk;jhd; $lhjtu;fsh? GypfSk;; kw;iwatu;fisg; Nghy; jtWfs; nra;jtu;fs;jhd;@ jtWfs; nra;ahj Gul;rp – Nghuhl;lk;> cyfpy; vq;fhtJ cz;lh?
  c) ,Wjp ,yl;rpak; fpl;ltpy;iynad;why; Nghuhl;lk; tpau;j;jkhfptpLkh? mg;gbahdhy;
  ,d;W rPuope;Jtpl;l rPdh> u];ah ehLfspy; Kd;G Nrh]yp]j;Jf;fhfg; Nghuhbanjy;yhk; tPzh? mjw;fhf jk;ik tUj;jpatu;fnsy;yhk; kjpg;Gf;Fupatu;fsy;yth?
  C) “ xz;ZNk Gupay;y ,e;j cyfj;jpNy! “
  – rpd;dhd;

 41. 03/01/2012 இல் 09:30

  சகோதரர் சின்னானின் பின்னூட்டம் ஒருங்குறியில் :

  எனக்குச் சில சந்தேகங்கள்
  அ) கதையின் உரையாடலில் உள்ள பல வரிகள் செயற்கையாக உள்ளன. கருத்துகளைச் சொல்லுவதே ஆசிரியரின் நோக்கமாயிருந்ததே காரணமா? பிரச்சார நெடியுள்ள கதை எப்படி நல்ல கதையாகும்? கதை இன்னும் செவ்வி;தாக்கம் செய்யப்படவேண்டும்.
  ஆ) புலிகள் மட்டும்தான் மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றார்களா? ஏனைய இயக்கங்கள், முஸ்லிம் தரப்புகள் ;( ஆயுதக் குழுக்கள், இராணுவத்திலுள்ளோர், மந்திரிகள் – எம.; பி. க்களின் பாதுகாவலர்கள்) தமிழர்களைக் கொல்லவில்லையா?
  இ) ஜெயானந்தமூர்த்தியின் ‘அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்க்ள்’ நூலையும், கடைசிக் காலகட்ட சரிநிகரில் நிராஜ் டேவிட் எழுதிய கட்டுரையையும் கேள்விப்படவில்லையா?
  ஈ) இந்திய இராணுவம் நல்லது – அதனுடனும் இலங்கை இராணுவத்துடனும் இணைந்து தமிழ் மக்களை அழித்;த ஏனைய தமிழ், முஸ்லிம் இயக்கங்கள் நல்லது!@ மக்களுக்காகப் போராடி, தியாகங்கள் புரிந்து, இருபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் பிரதேசங்களை பேணிய புலிகள் மட்டும்தான் கூடாதவர்களா? புலிகளும்; மற்றையவர்களைப் போல் தவறுகள் செய்தவர்கள்தான்@ தவறுகள் செய்யாத புரட்சி – போராட்டம், உலகில் எங்காவது உண்டா?
  உ) இறுதி இலட்சியம் கிட்டவில்லையென்றால் போராட்டம் வியர்த்தமாகிவிடுமா? அப்படியானால்
  இன்று சீரழிந்துவிட்ட சீனா, ரஸ்யா நாடுகளில் முன்பு சோஸலிஸத்துக்காகப் போராடியதெல்லாம் வீணா? அதற்காக தம்மை வருத்தியவர்களெல்லாம் மதிப்புக்குரியவர்களல்லவா?
  ஊ) “ ஒண்ணுமே புரியல்ல இந்த உலகத்திலே! “
  – சின்னான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s