அகமியம் தளத்திலிருந்து விளக்கம்

என்ன வினோதம்! இன்று காலை 11 மணிக்கு சலீம்மாமாவை சந்திப்பதாக இருக்கிறேன். ‘சின்ன எஜமான்’ என்று அழைக்கப்படும் தாதாவின் ஹத்தம் ஆயிற்றே இன்று…சந்திப்பார்களா? சலீம்மாமா எழுதி மர்ஹூம் வாஹித் பாடிய அருமையான பாடலை முதலில் கேளுங்கள் :
அலங்காரவாசலுக்கு முன் பந்தல் போடப்பட்டிருக்கிறது. சுத்துவட்டாரத்து ஜனங்கள் விதவிதமாக நேர்ந்துகொண்டு பலமாதிரி ஐட்டங்களை கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். (நாலைந்து பராட்டக்களைக் கூட நேற்று பார்த்தேன்!). எனக்கும் நேர்ந்துகொண்டு , ‘என்ன கட்டலாம் மச்சான்?’ என்றாள் அஸ்மா.
’என்னைக் கட்டித் தொங்கவிடு புள்ளே!’
தமாஷ் கிடக்கட்டும், இன்று இணையத்தைத் திறந்தால் சலீம்மாமாவின்  ஒரு பாடல் சம்பந்தமான விளக்கம்  அகமியம் தளத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. ஆக, ஆபிதீன் பக்கங்களை மூன்றாவது நபரும் பார்க்கிறார். சந்தோசம்தான். இறைவன் இருட்டில்தான் இருந்தான் என்கிறார்கள். முன்பு எப்படியோ , ஜனநாயகத்தை நிலைநாட்டுகிறேன் என்று ’நேட்டோ’ படைகள் ஏதாவது ஒரு நாட்டில் நுழையும்போதெல்லாம் இருட்டில்தான் – நம் வள்ளலார் சொல்வது மாதிரி , ‘உரிமை நாயகன்’ – இருப்பதாக எனக்குப் படும்.  என் சந்தேகத்தை விடுங்கள். அகமிய விளக்கத்தைப் பாருங்கள். நன்றி. –ஆபிதீன்
***
’அகமியம்’ மெயில் :
அப்துல் கையும் எழுதி தங்களின் இணையத்தளத்தி்ல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ள ‘இறைவனும் இருட்டும்’ என்ற பதிவுக்கு (பார்க்க : https://abedheen.wordpress.com/2009/04/15/qaiyum_on_salim/ ) பதிலாகவும் விளக்கமாகவும் அமையும் பதிவு :
 
‘இருட்டில் இருந்தான் இறைவன்’ என்று நாகூர் சலீம் அவர்கள் பாடிய பாடல் சரியானதே அதற்கான விளக்கத்தை இலங்கையில் வாழ்ந்து அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மகான் குருபாவா அவர்கள் இலங்கையில் வெளிவந்த “ஞானச் சுரங்கம்” என்ற பத்திகைக்கு எழுதிய கட்டுரை.
 
பதிவைப் படிக்க :

http://www.ahamiyam.co.cc/2011/10/blog-post_206.html

***

Thanks :

Ahamiyam
The Islamic Sufism web in Tamil

3 பின்னூட்டங்கள்

 1. 31/10/2011 இல் 11:10

  //ஒரு மனிதன் தன்னுடைய அறிவையும் இறைவனுடைய அருளையும், ஈமானையும் கொண்டு அவனுடைய இல்மும் அறிவும், குணங்களும் பெறாதகாலம் ஒரு இன்ஸானுக்கு இருட்காலம், ஒரு மனிதன் தன்னிலே நன்மையை விளங்கி விருத்தி செய்யும்போது அது அவனுக்கு பிரகாசமான ஒளிவின் காலம்.// அற்புதமான விளக்கம்.

  “உதயம், உச்சம், அந்தி, மறைவு என்பது என சூரியனை முன்னிட்டு சொல்லப்படும் பொழுதுகளெல்லாம் நமக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகள் தானே தவிர உதயம், உச்சம், அந்தி, மறைவுஎன்பது சூரியனுக்கில்லை. (சூரியனும் ஒரு சிருஷ்டி என்ற வகையில் அதற்கும் ஆரம்பம், முடிவு இருக்கும் என்பது தனி விஷயம்.)” என என் குருநாதர் சொல்வார்கள்.

  மறைந்த பொக்கிசமாக இருந்தேன் என்ற இறைக் கூற்றான நபி மொழி, சிருஷ்டிகளை படைக்கும் முன் ‘அமா’விலலிருந்தான் எனும் நபிமொழியின் அடிப்படையில் இருளில் இருந்தான் என்று சிலரால் சுட்டிக் காட்டப்படுவதும் இவ்வாறு வரும் தொடர்பு நிலையை குறிக்கும் வார்த்தைகள் தான்.

  ஞானவான்கள் விளக்கத்திற்காக சொல்லும் பரிபாஷைகள் அந்த பாதையில் பயணிப்பவர்கள் ஒரு வகையில் விளங்கி கொளவதற்காக சொல்லப்படும் உருவகங்கள். பொது அர்த்தத்தில் சொல்லப்படுவை அல்ல. வீரன் என்பதை விளக்க வீர சிங்கம் என ஒருவனை சொன்னால் வால் இருக்கிறதா என பார்க்கக் கூடாது.

  மீன்கள் விற்கும் சந்தையில் விண்மீண்களை விற்ற பைத்தியக்காரன் என கண்ணதாசனைப் பற்றி அப்துற் ரஹ்மான் கூறியது இங்கே நினைவுக்கு வருகின்றது.

 2. moulavi h.m.m. fasmin rabbanee said,

  31/10/2011 இல் 11:28

  அகமியம் சூப்பர் ஆப்தீன் பக்கமும் சூப்பர்.
  ஞானவான்கள் அடி ஒட்டி நடப்பவர்கள் இரு இணையத்தையும் பார்வையிடலாம்.அவர்களுக்கு அது சுவர்க்கம். மற்றயவர்களுக்கு அது?
  குரு பாவா தன்ஸீஹ் எனும் அரூப நிலையையும் தஸ்பீஹ் என்னும் ரூப நிலையையும் விளக்கியுள்ளார்கள். அகமியத்தை அகம் தௌிய வழி செய்த ஆப்தீன் பக்கங்களுக்கு இறைவனின் அருள் வருள் மாரியாகப்பொழிய!

 3. 31/10/2011 இல் 12:19

  பாடல் அருமை!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s