ஒவ்வொருத்தர் கொண்டையும் ஒவ்வொரு விதம்!

தலைப்பை கவனமாக வாசித்தீர்களா? வாசித்திருப்பீர்கள். பச்சப்புள்ள மனசல்லவா உங்களுடையது!  போகட்டும், ஒரு ஓவியரை இங்கே கொண்டுவருகிறேன். அவர் சொன்ன பொன்மொழிதான் அது.  ஓவியர் N. சீனிவாசன். ’கண்முன்னால் வளர்ந்த பையன்களெல்லாம் கலைமாமணி ஆகிவிட்டார்கள்’ என்று கவிஞர் ஒருவர் களிப்போடு அறிமுகப்படுத்திய சீனிவாசன். சீர்காழி ஓவியரல்லவா,  ஆதலால் தனீ…. பிரியம்.  

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற முதுமொழியுடன் மூதறிஞர் தாஜ் அவர்கள் அனுப்பிய சீனிவாசனின் பயோடேட்டா  வை பார்த்து உண்மையில் பயந்துவிட்டேன். Dr. Ashrafi S. Bhagar எழுதிய , ‘Digital Visual Fare : The Artistic Trajectory of N. Srinivasan’ எனும் மின்நூலும் உடன் கிடைத்தது. ஆ, 25 MB!. பிறகு இணைக்கிறேன்.  சகோதரர் சீனிவாசன் பற்றி வெங்கட் சாமிநாதனும் ஐயாவும், நண்பர் பாவண்ணனும் எழுதிய கட்டுரையை முதலில் இங்கே பாருங்கள். இணையத்தில் தேடினால் பல தமிழ் சேனல்களிலும் ஒளிபரப்பான சீனிவாசனின் பேட்டிகள் கிடைக்கின்றன.  ’பொதிகை’யில் வந்ததை மட்டும் அடியில் இணைத்திருக்கிறேன். ரொம்பவும் அமைதியாகப் பேசும் சீனிவாசனை மிகவும் பிடிக்கிறது. உண்மையைச் சொல்லிவிடுகிறேன், சீனிவாசனின் ஓவியங்களைவிட அவருடைய எழுத்து  நன்றாக இருக்கிறது. ’புதியபார்வை’யில் தொடர் எழுதுவதாகச் சொன்ன நினைவு. இந்த கொண்டையைப் பாருங்கள். கொண்டாடுங்கள். – ஆபிதீன்

***

’கலைமாமணி’ N. சீனிவாசன் :

திருத்தமாக செய்யப்பட்ட எந்த ஒரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் அது ஓவியம் அப்படின்னு பாலசுப்ரமணியத்துக்கிட்ட நான் சொல்லிட்டேன். அன்னைக்கு ராத்திரி முழுக்க அவரால தூங்கியிருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா பாலசுப்ரமணீயம் போன்ற எல்லாருமே நம்ம பொதிகை டிவியில பேட்டி எடுக்கிறவங்க மாதிரிதான். என்ன ஒருத்தவங்க பேட்டி எடுத்தாங்க. அப்ப அவங்க என்கிட்ட கேட்ட கேள்வியே படம் வரையறதுன்னா சார்.. கையால நீங்க வரைஞ்சாதானே சார் படம். நீங்க டிஜிடல்ல பன்றேன் கம்ப்யூட்டர்ல பன்றேன்னு சொல்றீங்களே சார், அது எப்படி சார் ஓவியம் ஆகமுடியும் அப்படின்னு கேட்டாங்க.. அதுக்கு நான் அந்த நேரத்துல வெங்கட்சாமிநாதனை துணைக்கு கூப்பிட்டு எம்ப்ராய்டரி பண்ற மாதிரியான விசயம் இல்லம்மா ஓவியம். ஓவியங்கறது கையால வரைஞ்சாதான் படம் அப்படி எல்லாம் இல்லம்மா, இழைத்தல் அப்படிங்கறத மீறி, பார்த்ததை பார்த்தபடியே பதிவு செய்வது என்பதையும் தாண்டி, புகைப்படக் கருவி என்னைக்கு நம்ம நாட்டுல வந்துச்சோ அதுக்கப்புறம் ரியலிசம் அப்படிங்கறதுக்கு ஒரு அர்த்தம் இல்லாம போயிடிச்சும்மா. ரெம்ப்ரண்ட் மாதிரியானவங்க வாழ்ந்த காலத்தில ரியலிஸ்டிக் ஓவியங்கள் முக்கியமாக கருதப்பட்டது உண்டு. ஆனால் இன்னைக்கு நீங்க வந்து ரியலிஸ்டிக்கா பண்ணினீங்கன்னா அதுக்கு அர்த்தம் இல்லாமதாம்மா இருக்கு அப்படின்னு நான் சொன்னேன்.

இப்போ அழகுணர்வோடு செய்யப்பட்ட எந்த ஒரு வேலையின் வெளிப்பாடும் ஒவியம் அப்படின்னு நான் சொல்லிட்ட பிறகு அவங்ககிட்ட நான் சொன்ன பதிலிலேயே பொட்டு வச்சி முகம் கழுவி சுத்தமா பளிச்சின்னு இருந்தாலே அது ஓவியம்தாம்மா அப்படின்னு நான் சொல்லியிருக்கேன். இந்த விசயங்கள் இதுக்கு முன்னாடி நான் ‘அலங்காரம்’ பத்தி பேசினதுலெ இருந்து சொல்லனும்னா பட்டாமணீயார் தாத்தா வீட்டுக்கு எதுத்த மாதிரி ஒர் பத்துபேர் உக்காந்து புளி அரிவாங்க. அவங்க பின்னாடி இருந்த நாம பார்த்தோமா ஒவ்வொருத்தருடைய கொண்டையும் ஒவ்வொரு விதமா இருக்கும். ஒண்ணு வந்து தாழம்பூ கொண்டை,. இன்னொன்று பன் கொண்டை, இன்னொன்னு சும்மா அப்படியே  முடிஞ்சிபோட்ட கொண்டைன்னு ஒவ்வொருத்தரும் விதவிதமான கொண்டை அலங்காரம் பண்ணீயிருப்பாங்க. அத நாம் பார்க்க முடியும். இந்த கொண்டைக்கு அவங்க பயன்படுத்தற வலை, கொண்டை ஊசிகூட, நெளிஊசி, நேர்ஊசி அப்படின்னு பாலவிதமான ஊசிகளை பயன்படுத்தி கொண்டை போட்டிருப்பாங்க. ரெடிமேடா விக்கிற கொண்டைய வாங்கி தலைமுடிகூட சேர்த்து சவரிவச்சி பின்னி அத முடிஞ்சி மேல அழகுபடுத்தி கொண்டை போட்டிருக்கிறத நான் பார்த்திருக்கேன். இந்த கொண்டை போடுறதுக்காகவே பல பாட்டிகள் வந்து எங்க வீட்டுல ஒரு மணிநேரத்துமேல எடுத்துக்கறத நான் பார்த்திருக்கேன்.

வெறும் கொண்டை மட்டும் அலங்காரம் இல்லை. அவங்க கட்டுற புடவையோட கொசுவம் வக்கிற அழகும் அலங்காரம்தான். இப்படி. அலங்காரங்கள் பலவிதமா நான் பார்த்திருக்கேன். அதுல தனிமனிதர்களுடைய அலங்காரம் பத்தி இப்ப நாம பேசுனோம். ஒரு குழுவினுடைய அலங்காரம் இருக்கு. ,மொழி குழுவினுடைய அலங்காரம்னுதான் நான் பார்க்கறேன். வீரம் ஒரு குழுவினுடைய அலங்காரமா நான் பார்க்கறேன். ஒரு கட்டிடத்துக்கு சுதைவேலையும்,  ஓவியமும்,ம் சுவரோவியமும் எப்படி அலங்காரமோ அதுபோல மனித குழுக்களிடையே இருக்கக்கூடிய அலங்காரங்கள் வெவ்வேறானவை. தனிமனிதருடைய அலங்காரம் வெவ்வேறானவை. ஆனா இத எல்லாத்தையும் ஒரு புள்ளியில என்னால சேர்த்த் பார்க்க முடியுது. இதான் மனநிலை அப்படிங்கற அலங்காரம். ஒரு தனிமனிதனுடைய மனநிலையில்தான் அலங்காரம் இருக்கு அப்படீங்கறதுல மிகப்பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த இடத்தில ஓவியம் பத்தி நாம பேசிகிட்டு இருக்கும்பொழுது அலங்காரம் பத்தி பேசாம ஓவியம் பத்தி ஒரு புரிதலை ஏற்படுத்த முடியாதுன்னு நெனச்சிதான் நான் அலங்காரம்கறத பத்தி இவ்வளவு தூரம் பேசிகிட்டு இருக்கேன், ஓவியம் அப்படிங்கறத தாண்டி, படைப்பு அப்படிங்கறதுக்குத்தான் நான் இப்போ சொல்ல வர்ற விசயம்.

திரும்பவும் நான் என்ன சொல்ல வர்றேன் அப்படின்னா சிந்தனை சார்ந்த, சிந்தனை தூண்டக்கூடிய விதத்தில் அமையும் எந்த ஒரு வெளிப்பாடும் ஓவியம்தான். அழகுணர்வோடு செய்யப்பட்ட எந்த ஒரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு அப்படிங்கறதுதான் நான் சொல்ல வர்றது. ஓவியத்துக்கும் படைப்புக்கும் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசமே ஓவியம் அலங்காரமாகக இருக்கலாம், சிந்தனையை தூண்டும் விதத்தில் அமையப்பெறாமல் இருக்குமானால் அலங்காரமாகவும் இருந்துகொண்டு சிந்தனையையும் தூண்டுமானால் அது படைப்பு. ஒரு படைப்பாளனுக்கும் ஒரு ஓவியனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் பார்வையாளன் மனதில் சிந்தனையை தூண்டுபவன் படைப்பாளன், பார்வையாளன் மனதில் சந்தோசத்தை தூண்டுபவன் ஓவியன்.. சந்தோசம் என்பது பார்த்த மாத்திரத்தில் தொற்றிக்கொள்கிற ஒரு விசயம். தொற்றிக்கொண்ட பிறகு ஒரு ஊக்கத்தை கொடுத்து உற்சாகத்தை கொடுத்து சிந்தனையைத் தூண்டி நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மீறிய அவரவர் சார்ந்த துறைகளில் அவரவர்களுக்கான ஊக்கத்தை கொடுப்பது படைப்பு. ஆக பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி, சிந்தித்தவற்றை படைப்பின் மூலமாக வெளிப்படுத்தி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்குமானால் அவன் படைப்பாளி.

**

 
**
நன்றி :  என். சீனிவாசன் ,  தாஜ்

**
தொடர்புக்கு :

N. Srinivasan
C-5, Anna University Staff Quarters
Guindy, Chennai, TamilNadu, India ,
Pin – 600025
Phone : +91 44 2359322
E-Mail : arunmozhithevans@gmail.com

2 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    20/10/2011 இல் 12:02

    அன்பு ஆபிதீன்

    உங்களதுப் பக்கங்களில்
    கலைஞர்கள் பலரின் கூற்றுக்கு
    முக்கியவத்துவம் தந்திருக்கின்றீர்கள்.
    அந்த வகையில்…
    இன்றைக்கு
    ’கலைமாமணி’ N. சீனிவாசன் குறித்த
    ஓர் அறிமுக தகவலை வெளியிட்டிருப்பதில்
    மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

    அவர்…
    சீர்காழிக்காரர்….
    என் நட்புக் குறியவர்..
    அண்ணா யூனிவர் சிட்டியில் பணிப்புரிகிறவர்…
    படைப்புகள் சார்ந்த உலகை நேசிப்பவர்…
    டிஜிடல் சார்ந்த சித்திர நுட்பத்தில்-
    தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர்…
    மேலாய்
    கலைமாமணி பெற்றவர்…
    என்பதையெல்லாம் தாண்டி
    சீனிவாசன் குறித்து சொல்ல நிறைய இருக்கிறது.
    நிச்சயம் எழுதுவேன்.

    //சிந்தனை சார்ந்த,
    சிந்தனை தூண்டக்கூடிய விதத்தில்
    அமையும் எந்த ஒரு வெளிப்பாடும் ஓவியம்தான்.
    அழகுணர்வோடு செய்யப்பட்ட
    எந்த ஒரு வேலையின் வெளிப்பாடும்
    சிந்தனை சார்ந்து இருக்குமானால்
    அது படைப்பு அப்படிங்கறதுதான்
    நான் சொல்ல வர்றது.// – (சீனிவாசன்).

    ஒன்றை நுட்பமாக உள்வாங்கி
    அதுக் குறித்து
    இன்னும் நுட்பமாய் வெளிப்படுத்தும்
    திறன் கொண்டவர்கள் வரிசையில்
    சீனிவாசனைப் பார்க்கிறேன்.
    எங்கள் ஊர் பக்கம்…
    நான் அறிந்து
    இப்படியானவர்கள் அபூர்வம்.
    இச் சிறப்பு ஒன்றுக்கேனும்
    அவர் குறித்து
    கட்டாயம் நான் எழுதனும். எழுதுவேன்.

    ஆபிதீனுக்கு
    நன்றி.
    -தாஜ்

  2. 22/10/2011 இல் 16:09

    //’கண்முன்னால் வளர்ந்த பையன்களெல்லாம் கலைமாமணி ஆகிவிட்டார்கள்’ என்று கவிஞர் ஒருவர் //

    //‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற முதுமொழியுடன் மூதறிஞர் தாஜ் அவர்கள்//

    இப்டில்லாம் யாராவது நம்மள கிண்டல் பண்ணா தேவலங்கிற அளவுக்கு இருக்கு ஸ்வாமி!

    சிரிச்சு மாளல (ரொம்ப நாளைக்கு அப்புறமா)


பின்னூட்டமொன்றை இடுக