என்றுமே எனையாளும் பரம்பொருளே…

திருச்சி யூசுப் பாடிய இந்தப் பாட்டு மனதை என்னமோ செய்கிறது. இதே மெட்டில் அண்ணன் ஹனிபா பாடிய பாடலும் உண்டு (லாயிலாஹா இல்லல்லாஹ்).  ஜனாப் முஹம்மது ரஃபி  (இன்று அவர் நினைவுநாள்!) பாடியதுதான் மூலம். அந்த பாடல் சட்டென்று ஞாபகம் வரவில்லை எனக்கு . பைத் சபாக்களிலும், மௌலூது சபைகளிலும் இன்றும் பாடப்படும் பிரபலமான அந்த பாடல்/மெட்டு தம்பி இஸ்மாயிலுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.  சரி,  இது ரொம்ப பழைய ரிகார்டிங்.  முப்பது வருடமிருக்கும். ஒருவழியாக ஒப்பேற்றி mp3யாக்கி பதிவிடுகிறேன். ’வேண்டாத வழிகாட்டும் சுகமெதற்கு?’ என்று நீங்களும் பாடாமல் இசை கேளுங்கள். மனக்கவலை நீங்கிவிடும், இன்ஷா அல்லாஹ்.

**

**

என்றுமே எனையாளும் பரம்பொருளே
இன்று நான் வேண்டுகின்றேன் உன் அருளே
நின்று நான் பாடுகின்றேன் உன் புகழை
நித்தம் நான் வாழ்வது உன் கருணை மழை

(என்றுமே)

அல்லாஹூ என் பிழையைத் தீர்த்திடுவாய்
அல்லாது உனையன்றி யார் அருள்வார்
பொல்லாத வழியின் துயர் போக்கிடுவாய்
நல்லோர்கள் பாதை தன்னில் சேர்த்திடுவாய்

(என்றுமே)

நான் என்னும் அகந்தை கொண்ட நெஞ்செதற்கு?
நாயனே உனை நினையா மனமெதற்கு?
வேண்டாத வழிகாட்டும் சுகமெதற்கு?
வேதனையைத் தீர்ப்பதெல்லாம் உன் பொறுப்பு

(என்றுமே)

ஆன்மாவை அடக்கப் பார்க்கும் ஆசை வலை
அன்றாடம் தேடிக்கொண்ட பாவ மலை
உன் தூதர் காட்டிவைத்த அமைதி நிலை
உள்ளம் அதை மறந்ததனால் மனக் கவலை

(என்றுமே)

**

நன்றி : அசனா மரைக்கார்

13 பின்னூட்டங்கள்

 1. 31/07/2011 இல் 14:44

  /ஆன்மாவை அடக்கப் பார்க்கும் ஆசை வலை
  அன்றாடம் தேடிக்கொண்ட பாவ மழை
  உன் தூதர் காட்டிவைத்த அமைதி நிலை
  உள்ளம் அதை மறந்ததனால் மனக் கவலை/
  அருமையான வரிகள்.

  • 31/07/2011 இல் 15:18

   /அருமையான வரிகள்./ ஆமாம் அமீன். எழுதிய கவிஞரின் பெயர் தெரியவில்லை என்பதும் என் கவலை..

 2. தாஜ் said,

  31/07/2011 இல் 17:38

  ஆபிதீன்…
  இந்த மாதிரியானப் பதிவில்
  என்னென்ன பாடல்களையோ
  பதிய விடுகின்றீர்கள்.
  சரி.
  ஓரு நேயர் விருப்பத்தை
  பாதிய விடுங்களேன்.
  நேயர் நானேதான்.

  குரல்:ஆபிதீன்
  பாடல்:இஸ்டம்
  -தாஜ்

  • abedheen said,

   01/08/2011 இல் 10:00

   தாஜ், நோன்பு சமயத்தில் ஒரு முஸ்லிம் பாட்டுகூட போடக்கூடாதா? சமி யூசுஃப் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி என்றுதான் திருச்சி யூசுப். நேற்றைய என் மனநிலையில் அவர்பாடும் விதம் மனசுக்கு அமைதி தந்தது. வந்த அமைதி , உங்களின் நேயர் விருப்பம் கேட்டபிறகு இன்று போய்விட்டது! சரி, சில நண்பர்கள் ஹனிபா பாடல்கள் டவுன்லோடு செய்ய சுட்டி கேட்டிருந்தார்கள் – தனி மெயிலில்.
   இந்த சுட்டி உதவும் : http://pudupatti.com/Pudupatti/Downloads.php?en&MainMenuId=1&SubMenuId=5&DownloadsId=6&DownloadsCategoryId=&Mode=Read

   • 01/08/2011 இல் 13:14

    //தாஜ், நோன்பு சமயத்தில் ஒரு முஸ்லிம் பாட்டுகூட போடக்கூடாதா?//

    அதைத்தானே தாஜும் கேக்குறாரு?
    ஆபிதீன் குரலில் ‘இஸ்டம்’ பாடல் வந்தால் அது ‘முஸ்லிம்’ பாட்டாத்தானே இருக்கும்?

    “அமைதி” …………. திரும்பி வந்துருச்சா, இப்ப?

 3. 01/08/2011 இல் 17:26

  இஸ் பரி துனியா மெய்ன் கோயி பி ஹமாரா நா ஹுவா – பரோசா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.

  இங்கே கேளுங்கள்:

 4. 01/08/2011 இல் 17:28

  Nana Salam, Ramadan Kareem,

  This song is from the movie :Barosa

  The song is: Is bhari duniya mein koi bhi hamara na hua

  See here: http://www.youtube.com/watch?v=_hxuFywS_L4&feature=related

 5. syed abuthahir said,

  02/08/2011 இல் 07:40

  I like this very much . jazakallahu

 6. 03/09/2019 இல் 18:14

  கண்டுபிடித்து விட்டேன்.. நன்றிகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s