ஆடுகள் – எஸ். வைதீஸ்வரன்

 

ஆடுகள் – எஸ்.வைதீஸ்வரன்

சாலையோர மூலையில்
கொலை செய்த கையோடு
பீடியும், டீயுமாக
பிடிப்பா ரற்று நின்றவனை

நான் பார்த்ததுண்டு.
புறமுதுகில் கண்ணற்று பிறந்ததனால்
போலீஸ்காரர் பொறுப்பற்று
போக்குவரத்து நடுவில் நின்றிருந்தான்,
என நினைத்தேன்.

கும்பல் தெரியும் பட்டப் பகலில்
கொஞ்சமும் பதட்டமின்றி
சங்கிலி யறுத்து, பெண்ணிடம்
மேலும் வம்புகள் செய்து போன
கயவரை நான் கண்ணாரப் பார்த்தேன்.

அவனையும் சட்டம்
அசட்டை செய்தது.

‘ஏனோ வீட்டுநினைப்பின் அவசரத்தில்
தவறிவிட்டானோ?
ஏதுமறியா மீசை முகத்துடன்
எட்டி நடந்து போகிறானே, கான்ஸ்டேபிள்?’
எனப் பதறினேன்.

‘நாட்டுக்குள் நல்லவர்க்கு
நாதியில்லை, நீதியில்லை
கொலைகாரர்கள் திருடர்கள்
குளிர்விட்டுப் போனார்கள்.
நிலைகுலைந்து நாசமாச்சு
நகரத்து மக்கள் வாழ்வு!’

எனத் தான் மனங்கொதித்து
நாற் சந்தி சிவப்பு விளக்கில்
கோபமுடன்
காத்திருந்தேன், வாகனத்தில்.

கூச்சலிட்டு விசிலடித்தான் ஒரு
கூர்மையான போலீஸ்காரன்.

‘கோட்டைத் தாண்டி நிக்கிறியே,
குத்தமின்னு தெரியலையா, மிஸ்டர்?
சோடா கடை யண்ட போயி நில்லு-
கோர்ட்டுக்குப் போனா
கூட கொஞ்சம் செலவாகும்…’ என்றான்.

ஆடுகள் தான்
எப்போதும்
அறுபடப் பிறந்தவைகள்.

***

தினமணிசுடர்-ல் (ஜனவரி,1995) வெளியான கவிதை இது. (ஓவியர் : லோகு).   வைதீஸ்வரன் ஐயாவின் மேலும் சில கவிதைகள் : ‘திண்ணை’யில்.

நன்றி : எஸ். வைதீஸ்வரன், தினமணிசுடர்

8 பின்னூட்டங்கள்

 1. 08/05/2011 இல் 10:30

  arumai.. 🙂

 2. 08/05/2011 இல் 11:21

  அருமை.
  வேறு வார்த்தை ஏது?

 3. தாஜ் said,

  08/05/2011 இல் 13:29

  பெரியவர் வைதீஸ்வரன்
  சிறந்த கவிதைக் கலைஞன்.
  கவிஞர் சுகுமாரன்
  இவரை தனது ஆதர்சம் என்றிருக்கிறார்!
  மறுக்கமுடியாது.

  பெரியவர் வைதீஸ்வரனின்
  நல்லக் கவிதைகள்
  ஏராளம் உண்டு.
  தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கலாம்.
  ‘கிணற்றில் விழுந்த நிலா’ என்கிற
  அவரது முதல் கவிதை
  இன்றைக்கும் பேசப்படுகிறது.
  – தாஜ்

 4. 08/05/2011 இல் 15:53

  //’கிணற்றில் விழுந்த நிலா’// சென்ஷி, காதில் விழுந்ததா?!

 5. 08/05/2011 இல் 19:05

  “தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கலாம்.”

  ஏன் தாஜு, ஆபிதீன் வேலைகளுக்கிடையிலெ எதோ செய்யிறாரு. நீங்க பல்லை புடிச்சுப் பார்க்கிற மாதிரில்ல இருக்கு.

  • தாஜ் said,

   08/05/2011 இல் 23:02

   //வேலைகளுக்கிடையிலெ எதோ செய்யிறாரு.//

   வேலைன்னா?
   -தாஜ்

  • மஜீத் said,

   08/05/2011 இல் 23:18

   ஜாஃபர் நானா, (ஆபிதீன்) பல்லப்புடிச்சுப் பாக்குறது அடிப்படை உரிமைல ஒண்ணு! அதைப் புடிச்சுப்பாக்க வேணாம்:-)

 6. 10/05/2011 இல் 08:10

  இங்கு ( ஈழத்தில்) பலியாடுகள் அதிகம்.அங்கே சோடாக்கடை, இங்கு மொபைல் போனுக்கு ரீலோடு, அல்லது உப்புக்கருவாடு
  வைதீஸ்வரன் ஐயா நெத்தியடி ! வாழ்த்துக்கள்.
  அறபாத்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s