தேர்தல் 2011: கலைஞரா? அம்மாவா?

தாஜ்

இன்று 11.04.2011- திங்கள் காலை!
நல்ல நேரம் முடிந்துபோன தருணம்
எழுதுகிறேன்.
தமிழகத்திற்கு நல்ல நேரம்
முடிந்து போனது எந்த ஆண்டில்?
யூகிக்க முடியவில்லை.
ஆனாலும்….
இந்த பொதுத் தேர்தலை முன்வைத்து
இன்றைக்கு அதை வழங்க
தயாராக இருப்பதாக
எல்லாக் கட்சிகளும்
போட்டிப் போட்டு
சத்தியம்னா சத்தியம் செய்து கொண்டிருக்கிறது.
தாங்கல..!
இன்றோடு…
அந்தச் சத்தியக் கூச்சலும் ஓய்ந்துவிடும்.

மாதத்தின் பல நாட்களில்
இறப்பு செய்திகளை
தாங்கிவந்து கசிந்துருகும்
எங்க ஊர் ஆட்டோக்களில் சில
கொஞ்ச நாளாய்
அரசியல் கட்சிகளின் 
சத்தியத்தையும்/ தர்மத்தையும்
கசிந்துருகித் திரிந்தது.
நம்ம வாழ்க்கையின் சுபிட்சங்கள்
இப்படி…
நடுரோட்டில் அல்லோகோலப் படுவதும்கூட
சத்தியமாய்…
இன்றைக்கு ஓய்ந்து போகும்.
 
நம் கட்சித் தலைவர்கள்
இந்த நொடிவரை
கொள்ளையடித்த சொல்வத்தை
அல்லது அதில் பாதியை
போனபோகிறதென்று
கஜானாவில் விட்டெறிந்தாலே போதும்
இருண்ட தமிழகத்தோடு நம்ம வாழ்வும்
வெளிச்சம் கண்டுவிடும்!.
முன்வருவார்களா?
ம்ஹும்…
மாட்டவே மாட்டார்கள்..

மாறாய்
தேர்தலுக்குத் தேர்தல்
இனாம் தருகிறார்கள்!
அரசு கஜானாவிலிருந்து எடுத்து
வழங்குவதில் என்ன சிரமமாம்?
‘ஊரான் வீட்டு நெய்யாம்…
என் பொண்டாட்டிக் கையாம்!’
என்பார்கள் எங்கப் பக்கம்!
அப்படி ஆகிப் போனது
நம்ம தலைவர்களின் தாராளம்!

இப்படி…
வழங்கோ வழங்கென்று வழங்கி
பொதுமக்களை
‘சடனாக’ குளிரவைத்து
ஓட்டுகளைப் பறிக்கும் வித்தை
அவர்களுக்கு
கைவந்த கலையாகிவிட்டது.

இந்த இனாம்…
இன்றைக்கு ஆடு மாடுவென
தாராளப்பட்டுக் கொண்டிருக்கிறது!
ஆட்டையும் மாட்டையும்
தருவேன் என்று சொல்பவர்கள்
அடுத்த தேர்தல் வரும் போது
அதுகளை மேய்க்க
வீட்டுக்கு ஓர் ஆளையும் தருவார்கள்.
அதுகளை கட்டிப்போட
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள்
கவலைப் படுவது தெரிகிறது..
கவலை வேண்டாம்
மொட்டை மாடிகளில்
அதுகளுக்கு கொட்டகையும் கட்டித்தருவார்கள்.
ஆளும் கட்சியினர் ‘டிவி’ தந்த போது
கேபிள் கனெக்சனை யார் தருவார்கள்?
என கேட்டவர்களுக்கு
தாங்கள் வழங்கும் மாட்டுக்கும் ஆட்டுக்கும்
கொட்டகைக் கட்டித்தர மாட்டார்களாயென்ன?

நாம் வயிற்றெரிச்சல் கொள்ளக் கூட
வகைதொகை இல்லாமல் போய்விட்டது.
கைகளால் மாறிமாறி
தலையில் அடித்துக் கொள்ளனும் போல் இருக்கிறது.

*

எதிர்க் கட்சிகள்
இந்தத் தேர்தலை
ஸ்பெக்ட்ராம் ஊழலை
முன்வைத்துத் தொடங்கி
ஆளும்கட்சிக்குப் போட்டியாக
இனாம் வழங்குவதில் திளைக்கிறது.
ஆளும் கட்சியோ….
தான் சார்ந்த ஸ்பெக்ட்ரான் ஊழலுக்கு
பதில் அளித்திருக்கும் விதம்
மிக ரசனையானது.
வடிவேலுவை கொண்டுவந்து முன் நிறுத்தி
தீர பதில் அளித்திருக்கிறது.
எதிர்க் கட்சிகள்
குழம்போ குழம்பென்று குழம்பி
பிடிபடாமல்
கைப்பிசைந்து நிற்கிறது.

மக்களோ எல்லாவற்றையும் மறந்தவர்களாக
கூட்டம் கூட்டமாய்
வடிவேலுவை போய் பார்ப்பதிலும்
அவரது குரல் இனிமையில் திளைப்பதிலும்
ஸ்பெக்ட்ராம் ஊழலுக்கு
பதில் தேடி சமாதானம் ஆகிவிட்டார்கள்!

ஒரு வகையில்…
மக்கள் சமாதானப்பட்டுப் போனதும் சரியே!
அவர்களது பார்வையில்
ஊழல் ஒருபோதும் பிரச்சனையே இல்லை.
காலம் காலமாக பார்த்துச் சலித்துப் போன
‘டப்பா’ படம்!
யார் அந்த இடத்தில் இருந்தாலும்
புறங்கைத் தேனை நக்கத்தான் செய்வார்கள்
என்பது அவர்கள் அறியாதவர்களா என்ன?
தவறு செய்யாதவர்களை
மக்களுக்கு என்றைக்குமே பிடிக்காது என்பதும்
யதார்த்த நடப்பு தியரி!
திருடாத திருடனை
போலீஸ்காரனுக்கும் பிடிக்காது.

*

நேற்று முன் தினம்
எங்கள் ஊருக்கு
திமுகவின் இன்றைய ஆணிவேர்…
வடிவேலு அவர்கள் வந்தார்கள்!
அதற்கு முந்திய தினம்
திருமதி. குஷ்பூ வந்தார்!
அந்தப்பக்கமும்
சில நடிகைகள் சில நடிகர்களும்
வந்து போனார்கள்.
எந்த கூட்டணிக்கு
நாங்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதை
அவர்கள் மூலம் அறிந்தோம்.

இன்னொரு நட்சத்திரப் பேச்சாளர்
குமரி முத்து
எங்க ஊருக்கு
இன்னும் வரவில்லை.
வந்திருக்கும் பட்சம்
அவரைக் காண போயிருப்பேன்
இடையிடையே அவர் சிரிக்கும்
வெடிச் சிரிப்போடு
நானும் சேர்ந்து சிரித்திருப்பேன்.
கொண்ட கவலை எல்லாம் மறைந்திருக்கும்.

*
ஓட்டுப் போடும் நாளில்
நான்….
‘பேதி மாத்திரை’ சாப்பிடுவது வழக்கம். 
பொழுதும் பாத் ரூமில் இனிதே கழியும்!
இதை வாசிக்கு வாசகர்கள்
நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்…
.
ஓட்டுச் சாவடிக்குப் போய்
ஓட்டைப் போட்டு
நாட்டை சரிப்படுத்த முடிகிறதோ என்னவோ
பாத் ரூமுக்குப் போய் போய்
வயிற்றையாவது நீங்கள் சுத்தப்படுத்தலாம்!
சுகாதாரத்திற்கும் நல்லது.

*

எல்லாம் சரி…
தலைப்பு சார்ந்து
கலைஞரா? அம்மாவா?
என நான் இன்னும் சொல்லவில்லையென
கிசுகிசுக்கின்றீர்களா?
அதற்கென்ன சொன்னால் போச்சு.
அது ரொம்ப சுலபம்
நீங்களே கூட அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு சீட்டில் கலைஞர் என எழுதுங்கள்
இன்னொரு சீட்டில் அம்மா என்று எழுதுங்கள்
இரண்டையும் சுருட்டி, குலுக்கிப் போட்டு
ஒன்றை எடுங்கள்
யார் ஆட்சியென தெரிந்துவிடும்.
நான் அப்படித்தான் அறிந்தேன்.
‘வரமாட்டார்’ என்று
பத்திரிகைகள் சொன்னவரே வந்திருந்தார்!!

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com

9 பின்னூட்டங்கள்

    • 17/04/2011 இல் 15:16

      நான் கிளி ஜோசியம் பாத்தேன். (கிளி தமிழ்நாட்டுல இருந்து 10 நாளைக்கு முன்னாலதான் வந்து இறங்குச்சு) அதுவும் அப்டிதான் சொன்னுச்சு, வரமாட்டார்னு சொல்லப்பட்டவர்தான் வருவாராம்.(இவங்க்யதான் வருவான்ய்ங்க) பாக்கலாம்.

  1. 11/04/2011 இல் 19:47

    தாஜு, நீங்க பேதி மாத்திரை சாப்பிடாலும் இல்லே வந்துக்கிட்டே இருந்தாலும் கைதாங்களா தூக்கிக்கிட்டுப் போவார்கள். அப்படி போனா குறைஷி கும்மா குத்துவார் அதனாலெ மாத்திரை சாப்பிடாமலெ வூட்டுலெ இருக்கலாம்.

    அது சரி அம்மா அம்மாங்கிறீங்களே? யாருக்கு அம்மா? எவருக்கு அம்மா? அஹத்தான் ever செல்வியாச்சே! உங்களுக்கு எப்பொ அம்மாவானாஹ?

    • 12/04/2011 இல் 11:15

      நானா, என்னா அப்டி சொல்லிப்புட்டீங்க? தாஜ்பாய் ’அம்மா’வுடன் இணையப்போகிறார் என்று நினைக்கிறேன். அ முதல் ஔ வரை அம்மாவாயிற்றே! திருச்செந்தூர் திரு. ஆதித்தன் MBA., LLB., அருளியவற்றைப் பாருங்கள். (9.3.2011 துக்ளக்கில் வந்த ஒருபக்க வண்ண விளம்பரம் இது) :

      அகிலத்தின் அட்டதிக்கும் அச்சமகற்றி அமைதியளித்தாய்!
      ஆலயங்களில் ஆன்றோர் ஆசியுடன் ஆகாரமளித்தாய்!
      இளையோர் இன்னலகற்றி இன்புற இருசக்கரவாகனமளித்தாய்!
      ஈரைந்தாண்டு ஈடிணையின்றி ஈகையை ஈந்தளித்தாய்!
      உந்தன் உள்ளத்து உறுதிக்கு உயர்வாய்!
      ஊக்கமுற்றோர் ஊடே ஊருக்கே ஊக்கமளிக்கிறாய்!
      எங்கும் எட்டா எத்த(வீ)ரப்பனை எட்டிப்பிடித்தாய்!
      ஏழைகள் ஏக்கமகற்ற ஏற்றமிகு ஏவலளித்தாய்!
      ஐவிரலாதவனை ஐயமின்றிஅகற்றி ஐந்து ஐந்தாய்யாள்வாய்!
      ஒருதாய்மக்களென ஒற்றுமையாக்கி ஒப்பின்றி ஒளிருவாய்!
      ஓட்டுக்கள் ஓட்டுச்சாவடியில் ஓங்கி ஓலைநாயகியாவாய்!
      ஔவையின் ஔவியமற்ற ஔசித்தியத்தில் ஔவையாவாய்!

      • தாஜ் said,

        12/04/2011 இல் 17:52

        கருணாநிதி அவர்களையும்,
        ஜெயலலிதா அவர்களையும்
        தமிழக மக்கள் பெருவாரியாய்
        கலைஞர் என்றும்
        அம்மா என்றும்தானே அழைக்கிறார்கள்!
        தவிர,
        ஜெயலலிதா அவர்களை
        இன்னும் நான்
        பெண்சார்ந்தவர் என்றே நினைக்கிறேன்.

        பெண்களை
        அம்மாயென்று
        அழைப்பதென்பது
        ஆக சிறந்த
        தமிழ் அழைப்பாக..
        பண்பாடாகவும் கருதுகிறேன்.

        இப்படியாக அழைக்கும் போக்கு
        என்னிடம் வெகு காலமாகவே உண்டு.

        அந்தக் கட்டுரையில்
        குஸ்பூ அவர்களைக் கூட
        மரியாதைக் கொண்ட வார்த்தைகளால்தான்
        விளித்திருந்தேன் என்பதை
        நீங்கள் காண வேண்டும்..

        *
        ஆபிதீனின்
        அபாண்ட குற்றச்சாட்டுக்கு
        தனியே கட்டுரையே எழுத வேண்டும்.
        அரசியலா? எனக்கா? ம்ஹும்!
        சான்ஸே இல்லை!
        எத்தனை லட்சம் கொடுத்தாலும் ம்ஹும்!
        லட்சமெல்லாம் வேண்டாம்…
        எதற்கும்…
        ஓர் இரண்டாயிரம்
        அல்லது ஆயிராம்…
        இன்னும் கூட
        ஒன்று ரெண்டு குறைவாக
        இருந்தாலும் பரவாயில்லை….
        முதலில்…
        கொடுக்கச் சொல்லுங்கள்… பார்ப்போம்!
        அதற்கு குறைந்தெல்லாம் கட்டுப்படி ஆகாது.
        நான் யாராக்கும்?
        – தாஜ்

  2. maleek said,

    12/04/2011 இல் 02:39

    வரும்ம்ம் ….வராது.

  3. 12/04/2011 இல் 19:33

    பொம்பளையெ அம்மான்னு கூப்பிடுறதுலெ தப்பில்லை தாஜு, ராட்சசி(நான் சொல்லலை சுப்ரமணிய சாமி சொன்னது)யெ அம்மான்னு கூப்பிடலாமா?

    • தாஜ் said,

      13/04/2011 இல் 16:10

      ‘கீழப்பாக்க கேஸ்’
      சொன்னதையெ’ல்லாம்
      மேற்கோள் காட்டிறீங்களே நாநா!
      சுப்ரமணிய சாமி…
      ரொம்ப சினேகிதமோ?
      -தாஜ்

      • 14/04/2011 இல் 09:52

        //ரொம்ப சினேகிதமோ? // சிநேகிதமில்லை; பக்கத்து படுக்கை!


ஹமீது ஜாஃபர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி