கவிஞர் அபி – விஷ்ணுபுரம் விருது

ஜெயமோகனின் இணையதளத்திலிருந்து, நன்றியுடன்..

அன்புள்ள நண்பர்களுக்கு

கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா

இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த விவாதங்கள் நிகழவிருக்கின்றன.

இவ்வாண்டும் இலக்கியநண்பர்கள் கலந்துகொண்டு விழாவையும் கருத்தரங்கையும் சிறப்பிக்கவேண்டும் என விரும்புகிறேன்

ஜெயமோகன்

*
தொடர்புடைய பதிவுகள் :
லா.ச.ரா. : ‘என்னைப் பற்றி என்னைவிட அதிகம் அறிந்தவர் அபி’

நேர்காணல்:- “கவிஞர் அபி”

நாகூர் ரூமிக்கு இன்னொரு விருது

இனிய நண்பர் நாகூர் ரூமி ‘ஷெய்கு சதக்கத்துல்லா அப்பா இலக்கிய விருது’ (2019) . பெறுகிறார் இன்று. வாழ்த்துகிறேன். அவர் அனுப்பிவைத்த ’நபிமொழிக் கவிதைகள்’ நூல் நேற்று கிடைத்தது. ’நபிமொழியை நாலு லைனில் சுருக்கு , நாகூர் ரூமி புக்ஸ்-ஐப் பெருக்கு’ என்று அப்போதே சிறுவிமர்சனமும் MeWeல் செய்துகொண்டேன் – சும்மா தமாசுக்காக (அடுத்த நொடியில் அவருடைய 52வது புத்தகம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது ஃபேஸ்புக்கில்!) நல்ல வேகம். சாகித்திய அகாதமி விருதும் சீக்கிரம் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.

’எண்ணி எண்ணி சேர்க்காதே பொருளை, இறைவன் கொடுக்க மாட்டான் அருளை’ என்று நண்பர் எளிமையாக – ஹகீம் இப்னு ஹிஷாம் சொன்ன ஹதீஸை –  எழுதும்போது அருமையாகத்தான் விரட்டுகிறார் நம் இருளை 🙂  இவை எல்லாமே அவருடைய வலைப்பக்கத்திலும் இருந்தாலும் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

*

முஆத் இப்னு ஜபல் என்ற தோழரை
யெமன் நாட்டுக்கு ஆட்சியாளராக
அனுப்பியபோது அருமை நபி சொன்ன
அறிவுரை இதுதான்:

மனதை வருத்துவது பாவம்
அதுவே நமக்கான சாபம்
அஞ்சிக்கொள்ளுங்கள் அன்பரே
அநீதி இழைக்கப்பட்டவரின் உள்ளம்
அல்லாஹ்விடம் உடனே செல்லும்

அவர்களது நெஞ்சம்
இழைக்கப்பட்ட அக்கிரமத்தால் வலிக்கும்
அவர்களது பிரார்த்தனையோ
அக்கணமே அக்கணமே பலிக்கும்

ஏனெனில்
அவர்களது பிரார்த்தனையில் குறையில்லை
அல்லாஹ்வுக்கும் அதற்குமிடையில் திரையில்லை

(முஸ்லிம், அ: இப்னு அப்பாஸ். 01 – 121)

Visit : https://tinyurl.com/nabi-mozhi11
*

நன்றி : நாகூர் ரூமி

இலக்கிய ஆ(ளு)மை விருது!

நாற்பது வருடங்களாக மெல்ல நகர்ந்துகொண்டிருந்த நாகூர் ஆமையைத்  தன் காரில் தூக்கிப்போட்டு வெற்றிக்கோட்டைத் தாண்டவைத்த சகோதரர் ஆசிப்மீரான் , தன் முகநூலில் எழுதியது :

“அண்ணே!! உங்களை இலக்கிய ஆளுமையா தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப் போறாங்க”

“எனக்கெதுக்கு ஆசிப்பு விருதெல்லாம்? யாராவது கேக்குறவங்களுக்குக் கொடுக்கச் சொல்லுங்க” என்று வழக்கம்போல கிண்டல் செய்து ஒதுங்கிக் கொள்ள நினைத்த ஆபிதின் அண்ணனைப் பிடித்து இழுத்து வந்து ஒருவகையாக விருது வாங்க வைத்து விட்டோம்.

அவனவன் விருதுக்கு அலைகையில் இவரை விருது வாங்கச் சம்மதிக்க வைப்பதற்கே நாற்பது நிமிடம் பேச வேண்டியிருந்தது.

விருதை வழங்கிய அபுதாபி மக்கள் மன்றத்திற்கும், ஆபிதீன் அண்ணனுக்கான காணொளியை உருவாக்கிய Jazeela Banuவுக்கும் அண்ணனைப்பற்றிய குறிப்புகள் தந்த Sen She பக்கி சாருக்கும், அண்ணனின் அரிய புகைப்படங்களைக் கடத்தித்தந்த Mcsyaazini Yaazini க்கும் நயம் முஸ்லிம்கள் கூட்டத்தைச் சேர்ந்த மஜீத் அண்ணன், சாதிக் அண்ணனுக்கும், அமீரக வாசகர் குழுமத்திற்கும் நன்றி!!

புகைப்படங்கள் உதவி : சுப்ஹான் பீர் முஹம்மது

*

அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்திற்கும் அமீரக வாசகர் குழுமத்திற்கும் நன்றி. தம்பி ஃபிர்தௌஸ் பாஷாவுக்கு என் அன்பு. விருது தனக்கு கிடைத்த மனநிலையில் , ‘அவனுடைய வாழைப்பழத்தின் ருசியே அலாதிதான்.. நகுலனுக்கு ஒரு சுசீலா😘 என்ட தம்பி ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா.. ‘ என்று கூத்தாடியிருந்தார் மதிப்பிற்குரிய என்  ஹனிபாக்கா . வாழ்த்திய எல்லோருக்கும் , குறிப்பாக நண்பர்கள் தாஜ்,  நாகூர் ரூமி, அப்துல் கையூம், தம்பி ஜாஃபர் சாதிக் ஆகியோருக்கும் என் நன்றி.  – ஆபிதீன்

*

‘ஆயிரம் PDF வாங்கிய அபூர்வ’  சென்ஷி எழுதிப் பகிர்ந்த காணொளி :

எழுத்தாளர் ஆபிதீன் எழுத்துகளை வாசித்தவர்களால் அவரது அன்பெனும் மாயச்சூழல் குறித்த வர்ணிப்பை உணர்ந்து கொள்ள இயலும். அமீரகத்தின் இலக்கிய ஆளுமை விருதை அபுதாபி மக்கள் மன்றத்தின் சார்பில் எழுத்தாளர் ஆபிதீன் அண்ணன் பெற்றுக்கொண்டபொழுது நிகழ்வில் எழுத்தாளர் பற்றி வெளியிடப்பட்ட காணொளி. குரல் தந்த ஆசிப் அண்ணாச்சிக்கும், குறைந்த நேரத்தில் தன்னுடைய பணிசூழலுக்கு இடையே புகைப்படங்களை வடிவமைத்துத் தந்த ஜெசிலா டீச்சருக்கும் என் மனமார்ந்த நன்றி!. தங்களின் மேலான பார்வைக்கு..

நன்றி : கானல் அமீரகம்