பைபிள் வசனமும் என் பதிலும்

யாத்திராகமம் 23 :5

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக.

முந்தாநாள் இந்த வசனத்தை என் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் பகிர்ந்ததும் நண்பர் கென் ‘If it is in the day of REST :))’ என்று கமெண்ட் கொடுத்தார். அதற்கு என் மறுமொழி : அட, இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காலையில் மொபைலை எடுத்ததுமே அந்த ஆப் (Tamil Bible 3.7) திறந்தது. அதில் என் பெயரைத் தேடினால் கழுதை சம்பந்தமாக எல்லாம் வந்தது. அதிலொன்றை பகிர்ந்தேன், அவ்வளவுதான்!

நான் ஒத்துக்கொண்டதை பலர் லைக் செய்திருக்கிறார்கள். நல்லது, கழுதை நான் நேற்று கேட்ட உஸ்தாத் அமீர்கானின் ‘Jhanak Jhanak Payal Baje’ கானத்தை இப்போது கேட்பீராக!

வஸ்ஸலாம்.