சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (24)

மீண்டும் ஒரு முன்குறிப்பு : சூஃபிஸத்தில் ஈடுபாடுள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும். மற்றவர்கள்? சிக்கவும் !

இந்த அத்தியாயத்தில் மட்டும்,   வழக்கமாகப் பின்னால் போடுவதை முன்னால் போடுகிறேன் . விளக்கக் குறிப்புகளைச் சொன்னேன் 🙂

AB : Astral body , இஸ்மு – மந்திரம் ,  மலக்கானியத் – வானவர்தன்மை , ஷைத்தானியத் – தீயசக்தி , ரஹ்மானியத் – நல்லசக்தி , இன்சானியத் – மனிதத்தன்மை , நஃப்ஸானியத் – பேராசைப்படும் ஷைத்தான்தன்மை , ரியாலத் – ‘SS’ பயிற்சி , இல்மு – அறிவு , ஈமான் – மார்க்க நம்பிக்கை , வாஸலாத் / அஸ்மாலைன் – மாந்திரீகப் பயிற்சி , மிஸ்கீன் – பிச்சைக்காரர் , ஜம் – ஒரு பயிற்சி ,  ஹாலராத் – மைபோட்டு ’கணக்கு’ பார்க்கும் முறை , புர்தாஷரீஃப் – பூஷரி இமாமின் கவிதைகளை ஓதுதல் , ஹன்வாய்- குதம் , சல்பலக் – புணர்ச்சி , அதாபு – தொந்தரவு

இருக்கிறீர்களா? அல்ஹம்துலில்லாஹ், வாசியுங்கள்!

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22அத்தியாயம் 23 |

அத்தியாயம் 24

ஆபிதீன்

*

26.07.1996ல் கொடுத்த ‘இஸ்மு’ :

‘பி சத்வத்திக வபி குத்ரத்திக வபி ஜலாலத்திகல்லாஹூம்ம யா அஜீஜ் யா கரீம்
யா பாஷித் யா ரஹீம் இர்ஹம்னி வஃபத்னி யா முஜீபத்தஃவாத் யா gகனி யா முgகுனி
யா gகுன்னா யா ஹக் யா முபீன்’ – 19 Times / Body Gap 4 அடி/ AB நிற்பது 14 அடியில்.

02.08.96ல் கொடுத்த ‘இஸ்மு’ :

‘பி சத்வத்திக வபி குத்ரத்திக வபி ஜமாலத்திக வபி ஜலாலத்திக்கல்லாஹூம்ம யா அஜீஜ் யா கரீம்
யா பாஷித் யா ரஹ்மான் யா ரஹீம் இர்ஹம்னி வ ஃபத்னி யா முஜீபத்தஃவாத் யா gகனி யா முgகுனி
யா ஹக் யா முபீன்’ – 19 Times / Body Gap 3 அடி.

09.08.1996ல் கொடுத்த ‘இஸ்மு’ :

‘சுபுஹானல் அஜீஜில் கரீம் சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன் யா காதிர் யா ஜமீல் யா ஜலால்
யா அஜீஜ் யா கரீம் யா பாஷித் யா ரஹ்மான் யா ரஹீம் இர்ஹம்னி வஃபழ்னி யா முஜிபத்தஃவாத்
யா gகனி யா முgகுனி அ குனினா யா ஹக் யா முபீன்’ – 25 Times/ Body Gap 2 அடி

16.08.1996ல் கொடுத்த ‘இஸ்மு’ :

‘சுபுஹானல் அஜிஜில் கரீம்சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன் சுபுஹானல் ஹன்னனில் மன்னான்
யா பாஷித் யா ரஹ்மான் யா ரஹீம் இர்ஹம்னி வஃபழ்னி யா முஜிபத்தஃவாத் யா gகனி யா முgகுனி
அகுனினா யா ஹக் யா முபீன்’ – 31 Times

பயிற்சி :

மூச்சுப்பயிற்சி முடிந்து காலிலிருந்து தலைவரை உணர்ந்து , பிறகு கற்பனையில் எழுவதற்கு முன் , Body, Milky white கலரில் இருக்கும். ஜட்டியும் milky white. பிறகு கற்பனையில் எழுந்து ஓதவேண்டும். ஓதிவிட்டு, படுத்து, AB பிரிந்ததும் (AB வழக்கம்போல bodyயின் Nature Colorல் – ஜட்டி மட்டும் milky white) ஓதிவிட்டு, படுத்து, PBயிலிருந்து EB, IB இரண்டடிக்கு பிரியும். அப்போது PB- Milky white color, EB – Light Scarlet Red, IB – Light Blue. இரண்டு Bodyகளும் PBயுடன் mergeஆனவுடன் PB – Sky Blue colorல் மாறி இருக்கும். பிறகு AB, PBயுடன் merge ஆனதும் மறுபடி PB, Milky White கலராகி எழுந்து அமர்ந்துதான் இஸ்மு ஓதவேண்டும். ( EB, IB கலர் மாறினாலும் ஜட்டி மட்டும் Milky White)

23.08.1996ல் கொடுத்த ‘இஸ்மு’ :

‘சுபுஹானல் அஜீஜில் கரீம். சுபுஹானல் ஃபத்தாஹில் மத்தீன். சுபுஹானல் ஹன்னானில் மன்னான்
சுபுஹானல் வதூதில்ஹக். சுபுஹானல் ரஜ்ஜாக்கில் முபீன் யக்ஃபிர்லி வர்ஹம்னி
யா முஜீபத்தஃவாத் யா முனீரல் ஆலமீன் யா ஹக் யா முபீன்’ – 41 Times / Body Gap 1 அடி. கலர், முந்தைய ஸ்டெப்-ஐ விட அடர்த்தியாக (Dark).

*

23.02.1996 கேஸட் தொடர்ச்சி :

‘இடமும் காலமும் ஒண்ணா இருக்கனும்… ஏண்டா, ஒரு சேர்-ஐப்போட்டு அமைதியாக ஒரு இடத்திலெ உட்கார்ந்து எழுதிப்பாருங்க. அந்த சேர்லெ உட்காரும்போதெல்லாம் அந்த மனப்பான்மை வரும். ஏன் இப்படி சொல்லக்கூடாது? ‘மலக்கானியத்’துதான் சேர்லெ கலந்து இக்கிதுண்டு சொல்லக்கூடாதா? அதுபோக, மனித உணர்ச்சியையே பலதரம் பிரிக்கும்போது ஷைத்தானியத், ரஹ்மானியத்துண்டு சொல்லியிக்கிறேன். மலக்கானியத் இருக்கு, இன்சானியத் இருக்கு, நஃப்சானியத் இருக்குண்டு ஏன் சொல்லலே? உங்களுக்கு பக்குவம் பத்தலே. அதனாலெ , ‘ரியாலத்’தை கரெக்டா செய்யிங்க, ஜாக்கிரதையா – அக்கறையா செய்யிங்க. இதைவிட சிறந்தது ஒண்ணும் கிடையாது’

‘மாறுபட்ட உலகம் இருக்குங்குறதை நீங்க பார்க்கும்போது , கண்ணால பார்க்குறதா நெனைக்க வாணாம்; பிட்யூட்டரி; கிளாண்ட்ஸாலெ பாருங்கண்டு சொல்லியிக்கிறேன். நீங்க பார்க்குறது கண்ணுண்டு நெனைக்கிறீங்க; கண்ணல்ல. இது outer sense. Innner Sense ஒண்ணு இருக்குது. அதுதான் பாக்குதுண்டு சொல்லியிக்கிறேன். அப்பப்ப லேசுலேசா திணிச்சிட்டுதான் அங்கங்கே வந்திருக்கேன். திணிக்கிம்போது (உங்க) கண்ணு ஆடுது! சரியா புரியலே. அதுக்கு மேலே திணிக்க முயற்சி பண்ணுறது முட்டாள்தனம். செரிக்காது. வாந்தி வந்துடும். இப்பக்கூட பக்குவமான நிலையிலெ இல்லை நீங்க. ஆனா எதுக்கும் ஒரு அவுட்லைன் போட்டுவச்சாக்கா பின்னாலெ புரிய ஆரம்பிக்கும்டுதான் சொல்லுறேன்’

*

‘அதிர்ச்சி குழப்பம்லாம் இல்லாம ஸ்ட்ராங்கா இருந்தாக்கா ‘இல்மு’ வர ஆரம்பிக்கும். அந்த ‘இல்மு’ வர ஆரம்பிச்சா பொண்டாட்டியோட முறையா உறவு வைக்கிம்போது பாம்பு கடிச்சாகூடத் தெரியாது… தெரியாதது மட்டுமல்ல, விஷமே ஏறாது. இதை நம்ம செட்டு புள்ளைங்கள்ட்ட சொல்லிக்கிட்டிக்கிம்போது சேத்தான்பாவா – அவனை மாதிரி கழிசடை உலகத்திலேயே கிடையாது – ‘அந்த இன்பத்திலே தெரியாது’ண்டான். அவன் எவ்வளவு தறுதலையா போனாங்குறதுக்கு இன்னும் ஒரு எக்ஸாம்பிள் (சொல்றேன்)..

(நம்ம) செட்லெ சேருறதுக்கு பெரிய ஆளுலாம் கெஞ்சுவானுவ. முடியாதுண்டுடுவேன். செட்லெ சேர்ந்தா , ஃபர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்சன் என்னா தெரியுமா? நான் பக்கத்து வீட்டு வாசல்லெ உட்கார்ந்திருப்பேன் பார்த்துகிட்டு. அப்ப பொண்டுவள்ளாம் கறிக்கடைக்கு போவாஹா. அப்ப பார்த்து (வாசலை) கழுவ சொல்வேன்! கழுவுனா ஊரு என்னா சொல்லும்? ‘பணக்காரனை மடக்கி போட்டுட்டான்!’ங்கும். அதனாலே ,வந்துட்டுப் போ; செட்ல சேர்க்க முடியாது! பணக்காரனா இந்தாலும் உள்ளே வந்தா equalதான் – எல்லா செட்புள்ளையிலோடும். அந்த காலம்..

இந்த சிஸ்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி மத்றஸாலெ – ஒரு ரூம்லெ – ஒரு காரியம் செஞ்சிக்கிட்டிந்தேன் . அப்ப திடீர்ண்டு மல்லிகைப்பூ வாசம் அடிச்சது எனக்கு. பக்கத்து ஜன்னலுக்கு பின்னாலெ குளம் இருக்கு. அக்கரையிலேர்ந்து அந்த வாசம் வர்றதுக்கு வாய்ப்பில்லே. இது… ரூமுக்கு கிட்டே காட்டுனா எப்படி வாசம் அடிக்குமோ அப்படி அடிச்சிச்சி. எந்த எடத்துல உட்காரக்கூடாதோ அந்த அளவுக்கு நெருங்கி (ரூம்லெ உள்ளவனுவ) உட்கார்ந்திருந்தானுவ. விஷயத்தைச் சொல்லி , அவன்ற சட்டையப் புடிச்சி, அங்கே உட்காராதே..இங்கே வா’ண்டு இழுத்துவச்சி பேசிக்கிட்டிக்கிறேன் . சேத்தான்பாவாவும் இருந்தான். எவ்வளவு பெரிய மோசமான மனப்பான்மை! ‘எப்படி இங்கே வாசம் அடிக்க முடியும்?’டு கேட்டான். கேட்டவுடனேயே ‘குப்’புண்டு அடிச்சிச்சி. ‘இப்படித்தான்’டேன். எல்லாரும் உணர்ந்தான். அவனும் உணர்ந்தான். உதறிவுட்டுக்கிட்டு , ‘எங்கேயாச்சும் காத்துல வந்திக்கிம்’டான்! ஈமான் கெட்டதனம் லைஃபையே வீணாக்கிடும். நான் scientificஆ பேசிக்கிட்டிந்திட்டு totally unscientificஆ இப்ப பேசிக்கிட்டிக்கிறேன், which is more scientific! விளங்குதா? விஞ்ஞானத்தை வுட்டு மாறலே.. இது deeper science. more scientific.! அப்பப்ப அனுபவம் வரும்போது தெரியும். இப்ப சொன்ன செய்தியை பாதுகாத்து வச்சிக்குங்க. இந்த உண்மை உங்களுக்கு புரிஞ்சா , கையை நீட்டுன உடனேயே பத்திக்கிட்டு எரியிறது, கையால குத்துனா படத்துலே பொத்தலாவுறது, படத்துலெ குத்துனா நெஞ்சுல இறங்குற செய்வினை , எல்லாம் ஈஸியா புரியும். அதுக்காகத்தான் ‘வாஸலாத்’ வேணும் – ‘அஸ்மா’ லைன்ல இருந்தா. ‘வாஸலாத்’ பண்ணப்பண்ண ‘நாம தனிப்பட்ட ஆளல்ல, நம்மளை சுத்தி எல்லாம் இருக்கு, எல்லாத்தையும் பாக்கலாம், பேசலாம்'(டு புரியும்). இப்ப நீங்க பண்ணுற ரியாலத் ..உடலு, சட்டை, கம்பளிண்டு போட்டுக்கிட்டிக்கிறதாலே உங்களை அணைக்க முடியாது. முச்சம் வுட முடியாது. உங்க சட்டையத்தான் முச்சம் வுடலாம். முச்சமே வுடமுடியாதுண்டு சொன்னா bodyல ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு உறுப்போடு கலந்து உங்கள்ட்டெ எப்படி நான் உறவு வைக்க முடியும்? முடியாது. Astralலெ எல்லா ’டச்’சும் வரும். உங்கள்ற சட்டை மாதிரி, பனியன் மாதிரி, கைலி மாதிரி கீழே கிடக்குறது. அதை நீங்க சப்போர்ட் பண்ணிக்கலாம்.

உடம்புண்டு ஒண்ணும் கிடையாது. எப்ப உடம்புண்டு ஒண்ணும் கிடையாதோ எங்கேயும் பூரலாம், வெளிவரலாம். (இந்தோனேஷிய அதிபர்) சுகர்னோ, வீட்டுலெ இருக்கிம்போது bomb போட்டானுங்க. போட்ட அந்த செகண்ட்லெ (சுகர்னோ) அவன் வூட்டுல இல்லே! இதுக்குலாம் அர்த்தம் இப்ப ஈஸியா புரியும். எப்படி சாத்தியம்டு புரிய ஆரம்பிக்கிம், ‘நாம்’ங்குறது Body அல்ல; Pure Soul..’ – ‘S’

*

03.09.1996

விஞ்ஞானம் எனக்கும் பதில் சொல்ல வேண்டும். சென்றவருடம் , ஏப்ரல் 13 முடியும் நேரத்தில் , ரூமை விட்டு ஒண்ணுக்கு வெளியே வந்த நேரத்தில் , என் வாப்பா வெளியில் நின்றதைப் பார்த்தேன். தூக்கிவாரிப் போட்டது. பயந்து போய் திரும்ப ரூமுக்கு ஓடிவந்து கதவைத் தாளிட்டுக்கொண்டேன். உடம்பெல்லாம் உதறிற்று. மனசு குழம்பிற்று. மார்ச் 13ஆம் தேதி அவர்களுக்கு நெஞ்சுவலி வந்தது. என் பிறந்த நாள். உம்மா வழக்கமாக அன்று நெய்சோறு, தாழிச்சா ஆக்கி மிஸ்கீன்களுக்கு கொடுப்பார்கள். ஏனோ முதல்பிள்ளையான எனக்கு மட்டும் அதைத் தவறாமல் செய்து வந்தார்கள். சபரில் இருந்துவந்து , தங்கை ஹலீமாவின் முதல் கல்யாணத் தோல்வியில் துவண்டு போயிருந்த வாப்பாவிற்கு அந்த சாப்பாடு நெஞ்சுவலியைத் தந்துவிட்டது. அன்று பிழைத்தது மறு பிழைப்புதான். அடுத்த 13-ஆம் தேதி துபாயில் -அவீரில் – என் எதிரில் நிற்கிறார்கள்! இருந்தாலும் , ஒன்றும் நடந்திருக்காது என்று மனதை ஆற்றிக்கொண்டு படுத்த அடுத்த நாள் காலையில் முழிக்கும் முன்னரே அந்த அதிகாலையில் கதவு தட்டுப்பட்டது. நண்பர் ஃபரீதும் செல்லாப்பாவும் நின்றார்கள். ஃபரீது அப்போது விசிட்விசாவில் வந்து வேலைதேடிக் கொண்டிருந்த நேரம். இரண்டு நாளைக்கு முன்பு அவீரிலுள்ள கம்பெனி ஒன்றிற்கும் இண்டர்வ்யூ சம்பந்தமாக வந்திருந்தார்தான். அந்த கம்பெனியில் மறுபடி கூப்பிட்டிருக்கிறார்களா அவரை? ஆனால் இந்த அதிகாலையில் ஏன் வரவேண்டும்? அவர் தனது வழக்கமான நிதானத்துடன் ரூமில் உட்கார்ந்துகொண்டு , ‘நேத்து உங்க வாப்பா கொல்லைக்கு போயிருக்கும்போது தடுமாறி கீழே வுழுந்துட்டாஹலாம்’ என்றார். அதற்குப்பிறகு மௌனமாக இருந்தார். நான் செல்லாப்பா தொடருவான் என்று எதிர்பார்த்தேன். அவன் என்னைப் பார்ப்பதை தவிர்த்தான், கண்ணில் கலக்கத்தோடு. எனக்கு உடம்பெங்கும் அதிர்வு உண்டானது. ‘என்ன ஆச்சி?’ என்றேன், ஃபரீதைப் பார்த்து. வாய் குழறிற்று.

‘போச்சு..!’ – ஃபரீது குனிந்துகொண்டே தலையாட்டியபடி மெதுவாகச் சொன்னார்.

என்ன அழகாக மௌத்தைச் சொன்னார்! என் சீதேவி வாப்பா.. என்ன சொல்ல இரவு வந்தீர்கள்? ஃபரீது குறிப்பிட்ட நேரம் , சரியாக அவர்கள் ஊரில் – உம்மாவின் மடியில் – தலை சாய்ந்த நேரம். இந்த விஷயத்தை உம்மாவிடம் மட்டும்தான் சொன்னேன் ஊரில். அழுதார்கள்.

சர்க்காரிடம் சொல்லியிருக்க வேண்டும்..

*

23.02.1996 கேஸட் தொடர்ச்சி ..

‘எஜமான் (சாஹூல் ஹமீது பாதுஷா) ‘ஜின்’னை ‘வாஸலாத்’ பண்ணலே.. போற பாதையிலே கிடக்குது அது. ஜின்னுங்குறது ஒரு ரூவாண்டு சொன்னா அஹ நூறுரூவா நோட்டுக்கு ட்ரை பண்ணுனாஹா.. ஒரு ரூவா , அது உள்ளே வந்துடும்லெ?!’

’Astralதான் நாம. இந்த manifestation , சில நேரங்கள்லெ , போட்டிருக்கிற சட்டைய கழட்டி மாட்டுனதா தெரியும்; மாட்டப்படும்! அதை லேசுல கழட்ட முடியாது. சட்டையை அலமாரிலெ வச்சிருப்போம். இந்த சட்டையை போட்டிருப்போம். அவ்வளவுதான். அப்படி வரும்போது சொல்லுங்க; ஆனா பயப்படாதீங்க’

*

‘எதற்காகப் படைத்தானோ அதை நீ செய்யவிடுண்டு ‘துஆ’ ஒண்ணு சொன்னீங்க. நாங்க நல்லா வாழனும்டு ஆசைப்படுறோம். அவன் படைச்சது… நம்மளை வந்து..’ – மீராமெய்தீன்

‘அந்த ஆசையே அவன் உங்களை படைச்சபிறகு ஏற்ப்பட்டதுதான்! உங்களை எதுக்காகப் படைச்சானோ அவன்ற ஆசைதான் அது. அவன்ற ஆசையாக செய்ய வுடுங்கண்டுதான் நான் சொல்றேன். மனுஷனுக்கு வர்ற ஆசைபூரா ‘அவன்’ கொடுத்ததுதான், தெய்வத்தன்மை பொருந்தியதுதான். ஏன் செய்யலேண்டு கேட்டா நாம physicalஐயும் emotionalஐயும் intellectஐயும் ஒண்ணா கலந்துக்கிட்டு நாமளா குழம்பிக்கிட்டு அலையிறோம். முனீர்.. அவன் வழிகெட்டுப் போனதுக்கு என்னா காரணம்? உஸ்தாதுட பேச்சைவிட மூளைக்கி அதிகமா வேலை கொடுத்தான். ரொம்பபேரு வீணா போறதுக்கு இதுதான் காரணம் . அப்புறம்..நான் சொல்லும்போது கேட்டுக்குங்க; கேள்விகேட்டு பதில் வாங்க முயற்சி பண்ணாதீங்க. அந்த பதில்லெ உண்மை இருக்காது’

‘இல்லே..எனக்கு டவுட்டு..’

‘டவுட் தானாவே தெளிவாயிடும். இல்லே டவுட்டை வச்சிக்கிட்டு இருங்க. என் பதில்லெ வந்துடும்’

‘இல்லே சர்க்கார்.. ‘அவன்’ற நாட்டம் , நாம கெட்டுப்போயி அலையினும்டு இருந்தா?’

‘பீயை திங்கினும்டு ஆசை வந்திச்சா யாருக்காவது? பீ, ஹல்வா மாதிரி இருந்தாலும் திங்க மனசு வருமா? அப்ப எதுலே ஆசைவருதோ அது முடியும்டு அர்த்தம். ஆனா ரொம்ப பேருக்கு இதுக்குள்ள விலையைக் கொடுக்கத் தெரியலே, பழக்கமில்லாததாலே. மசால் தோசை என்னா விலையோ அதே விலைதான் ஒரு முகம் பாக்குற கண்ணாடிண்டும் நெனைச்சிக்கிட்டிக்கிறோம். ஆனால் நாம physical Bodyலே இக்கிறதுனாலே சிலதுக்கு விலையை அதிகமாகொடுக்கவேண்டியிக்கிது. சிலதுக்கு குறைச்சி கொடுக்க வேண்டியிக்கிது. கூடக்கொடுக்குறது, நாம வளரும்போது குறைஞ்சிடும். வளரலேண்டு சொன்னா குறைச்சலா கொடுக்குறதுக்கு அதிகம் கொடுக்க வேண்டியிக்கிம். எவ்வளவோ வகையிலே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான், கஷ்டப்பட்ட காரணத்துனாலே-யே அதைவிட பன்மடங்கு கடன்பட்டு செலவு பண்ணுறமாதிரி வருது. இதுக்குலாம் என்னா காரணம்? என்னா சொல்றானுவ? ஆண்டவன் சதி செய்யிறான்! ஆமா, அவனுக்கு வேற வேலை இல்லை பாருங்க! அவன் ‘வாடா..வாடா’ண்டு கூப்புட்டுக்கிட்டு , அணைக்கிறதுக்கு ஆசைப்பட்டுக்கிட்டிக்கிறான். நீங்களோ விந்து வெளிவந்த உடனேயே எந்திரிச்சிட்டீங்க! ஏன், சின்ன வயசுலே சொல்லப்பட்டது; விந்து கெட்டது, கெட்டதுண்டு..! அதுலெ என்னா பவர் இருக்குண்டு தெரிஞ்சீங்கண்டு சொன்னா.. நக்குவீங்க. இதெல்லாம் சொல்லிக் காட்டக்கூடிய அறிவல்ல. எழுதப்படாத அறிவு இது’

‘Phsycal Bodyக்கு Architypeங்குறது..?’

‘Astral Forceதான். இதுதான் எல்லாத்தையும் (3 Bodyஐயும்) control பண்ணுது.. இப்பத்தான் கேள்வி கேட்டு பதில் வாங்க முயற்சி பண்ணாதீங்கண்டேன்!’

‘இல்லே..’ரியாலத்’துக்கு உள்ள தெளிவு..’

‘எனக்குத் தெரியும் எப்படி தெளிவு படுத்துறதுண்டு. நான் கொடுக்குறதை மட்டும் வாங்கிக்குங்க, போதும். முதல்லெ கேள்வி கேட்டு பதில் சொன்னதுனாலதான் காலணாவுக்கு புண்ணியம் இல்லாம போச்சு- எல்லா செய்தியும். அதாவது , சில நேரங்கள்லெ , செய்யிற ஆசையை விட அதிகம் தெரிஞ்சிக்கனும்ங்குற ஆசை வந்துடும் – அதிகமா! அது கூடாது. நான் சொன்னதை அனலைஸ் பண்ணுங்க – ‘ஜம்’முலெ. பதில் கிடைச்சா சரி; இல்லே , டவுட் இருந்தா கேட்டுக்குங்க. அவ்வளவுதான்’ – ‘S’

*

‘Bodyயோட உணர்ச்சி Bodyஐ கெடுக்காத அளவுக்கு emotion இருக்கனும். emotion, பாடியை control பண்ணுறதுக்கு மூளை கரெக்டா இருக்கனும், பக்குவ நிலையிலே வரனும்டு சொன்னேன். வாட்ச் ஓடாம இருந்தா கரெக்டா ஓட வையிங்க, சட்டை கிழிஞ்சிருந்தா தைய்யிங்க, கைலில பொத்தல் இருந்தா அதை சுன்னிக்கி நேரா வைக்காம சூத்தாமட்டை பக்கம் வைங்கண்டு சொல்றேன். அவ்வளவுதான். Nothing More, Nothing Less; அவ்வளவுதான்! இதுலெ உங்களுக்கு அழுத்தமான நம்பிக்கை, what is whatண்டு புரிய ஆரம்பிச்சிட்டா physicic surgeryங்குறது எப்படி சாத்தியம், operationலெ ஒண்ணும் முடியாதது ஓதிப்பார்த்தா எப்படி முடியுதுண்டு தெரியும். உட்கார்ந்த இடத்துலேயே எதையும் செய்யலாம்.

’எதையும் செய்யிற பவர் வந்துட்டு உட்கார்ந்தாலும் நீங்க வளர முடியாது. ஒரு தசுவமணியை கழுத்துல போட்டு , கல்லுள்ள மோதிரத்தை கையிலெ மாட்டிவுட்டு , மந்திரவாதியா ஆக்கி வச்சிடுவானுவ. மந்திரவாதி ஆனீங்கண்டா ஃபர்ஸ்ட் கேள்வி என்னா தெரியும்லெ? எதுர்த்த வூட்டுலேர்ந்து ஒத்தவன் வருவான். ‘மூணு வருஷத்துக்கு முந்தி ஜோப்புல ஒரு ரூவா காணோம், பொண்டாட்டி எடுத்திருப்பாண்டு நெனைக்கிறேன், ‘ஹாலராத்’ போட்டு சொல்லுங்களேன்’ம்பான். ஹூம்ம்.. பெரும் மட்டமான லைன் இது.

’எவ்வளவு நேரம் அசையாம ஆடாம ஒரே நிலையிலெ இருக்க முடியுமோ அவ்வளவுக்கு நல்லது. physical bodyயின் அசைவை கண்ட்ரோல் பண்ணுனா subconcious உள்ள materialலாம் , குப்பை கூளம்லாம் வெளிவர ஆரம்பிக்கும். இல்லே, ஃபோர்ஸ்ஃபுல்லா வரும், இல்லே, ஃபோர்ஸ் மாதிரி தெரியும். அதையும் கண்ட்ரோல் பண்ணுனா unconsciousக்கு வந்துடும்.

’என்னா செய்தி…, என் மனசோட உங்க மனசு இணைய மாட்டேங்குது.. அது நினைக்கிறது உங்களுக்கு விளங்க மாட்டேங்குது.. இந்த ரூட்டு…ம்….. ‘பர்பத்பே அப்னா தேரா’வா ‘சர்பத் பே கிப்னா ‘தேரா”வாண்டோ ஒரு படம் , அந்தக்காலத்துலெ.. அதுல ஒரு துறவி மலைமேலே வாழ்ந்துக்கிட்டு இருப்பாரு. அவர்ட்டெ ஒரு பொம்பளை வேலை செஞ்சிக்கிட்டு இருப்பா. சொல்ற சாமானை – சும்ம்மா அப்படி பார்ப்பாரு துறவி – எடுத்துத் தருவா அவ. கிராஜுவலா டெவலப் பண்ணிப்பண்ணி ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு போனவுடனேயே , அவர் அப்படி நினைச்சி திருப்பின உடனேயே ‘படக்’குண்டு எந்திரிச்சிப்போயி அந்த சாமானை எடுப்பா. அதுக்குப்பிறகு , என்னா வேணும்டு நினைக்கிறாரோ அந்த சாமானை கொடுப்பா. பிளாக் & வொய்ட் படம். பழசு.. இந்த mentality ( உங்களுக்கு) இல்லே.. என் மனசுலே வர்றது telepathically போவனும். ஆனா இங்கே mind alignation வரமாட்டெங்குது. ‘புர்தாஷரீஃப்’லெ பார்த்தேன். outer circleக்கு முன்னாடி inner circle எந்திரிச்சிப் போவுது! ‘தொலையட்டும்’டு வுட்டேன். இருந்த ரெண்டு பேர்ட்டெ காமிக்கலாம்டு பார்த்தேன், எனக்கு அலுப்பா இருந்திச்சி. நான் காட்டலே..’

*

‘மைமூனா.. ஒரு ’ஜின்’னின் பெயர். சர்க்காரின் கூட்டாளி மீராஹூசைன் மரைக்கார் என்பவர் , ஒருநாள் தாங்க முடியாத கஷ்டத்தில், இந்த ஜின்னை ரெண்டு கையையும் நீட்டி கூப்பிட்டுக் கத்தினாராம். மற்ற சீடர்கள் விரண்டோடியிருக்கிறார்கள். ‘அப்போ கேட்டேன் பையனுவள்ட்டெ..’ஏம்ப்பா அதெல்லாம் இப்ப இல்லே.. பொய்டுச்சிண்டு சொல்லியிருக்கேன்லெ.. ஏண்டா ஓடுனீங்க?ண்டு கேட்டேன். ‘முதல்ல இருந்தோமேண்டு இரக்கப்பட்டு வந்துட்டா என்னா செய்யிறது?!’ண்டானுவ!’

*

‘இந்த ‘நஜாத்’ பத்தி சொல்றீங்களே.. ஒரு சிங்கிள் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? லைஃப்-ஐ பத்தி, ஃபோர்ஸ்-ஐப் பத்தி? பாவம்! புத்தி சொல்றதுக்கு நம்மளுக்கு நேரம் கிடையாது. தேவையுமில்லே.’ – ‘S’

‘ஒரு நாளு கனவுலெ.. எனக்கு சொன்னீங்க மாமா.. பத்திகிட்டு ஊரு எரியிதுண்டு..ஏனங்குடி ஊர் தகராறுலெ – அதுக்கு முதல்நாளு’ – மருமகன்

‘அப்படி சொல்றதை.. சிலபேரு, ‘சர்க்கார், ராத்திரி நல்லா புலம்புனீங்க.. எங்களுக்கு சிரிப்பு வந்துடுச்சி’ங்குறாஹா!’ – ‘S’

*

‘வெளி மனுசனை பாருங்கண்டு சொன்னேன். ஏன் அப்படி சொன்னேன்?’ – ‘S’

‘அவங்க குறை நம்மள்ட்டெ இக்கிதாண்டு பார்க்க’

‘ஏற்கனவே இருந்த நம்ம வேற, இப்போ உள்ள நாம்ம வேறதானே? ஏற்கனவே உள்ள பழையதை பார்க்கலாமுலெ உங்க லைஃப்லேயே? இப்ப நீங்க டோட்டலா மாறிட்டதுனாலே , மாறுவதற்கு முந்தியுள்ள நீங்க டோட்டலி டிஃபரெண்ட் பெர்ஸனாலிடிதானே? அந்த ஐடியா ஏன் வரலே?’ – ‘S’

*

‘ஹன்வாய்’ அரிப்பு :

‘எந்தப் பேச்சும் உருப்படியா பேசுறதுக்கு ஜனங்க லாயக்கில்லே.. அவங்க கேட்குற கேள்வியிலெ முக்காலே மூணு வீசத்துக்கு மூணு வீசத்துக்கு மூணு வீசம், அடையிறதுக்கு ஆசையில்லாம கேட்குறாங்க. அவங்கள்ட்டெ பேசுறதைவிட முட்டிக்கிட்டு சாவுறது மேலேண்டு தோணுதா?’ – ‘S’

‘தோணுது’

‘சரி, இந்த நல்ல ரிஸல்ட் எதனாலே வருது?’

‘ரியாலத்தாலே’

‘அதை நல்லா அறியிறீங்களா? அப்போ , எந்தெந்த பழக்கங்கள்லாம் தேவையோ அதை ‘ரியாலத்’ உண்டாக்குதுண்டு சொல்றீங்க, அப்படித்தானே? ‘ரியாலத்’ செய்யிற பழக்கத்துலே, ரியாலத் செய்யக்கூடிய செயல்லெ, ரியாலத் பழக்கமாயிடிச்சா? அப்படி பழக்கமாயிடிச்சிண்டு சொன்னா, எவ்வளவு பெரிய மனக்கஷ்டமா இருந்தாலும் உங்களாலே செய்ய முடியனும். செய்யாம உங்களாலெ இருக்க முடியாது. சூத்து வாயிலெ பீ இருந்தா எப்படி இக்கிம்? அப்படி இக்கிம்! பேண்டுதான் ஆவனும்’ – ‘S’

*

‘சல்பலக்’:

ஒரு சீடர் பேசும்போது பேச்சைத் தொடர்கிற இன்னொரு சீடருக்கு :

‘நீ சொல்லுறது எப்படீண்டா ..’பிரியாணி திங்கிம்போது முந்திரிப்பருப்பு வாயிலெ பட்டுச்சி’ண்டு அவர் சொன்ன உடனேயே, ‘அதை நான் கடிச்சி முழுங்கிட்டேன்’ங்குற மாதிரி இருக்கு! அவர், ‘அவளை அணைச்சி முச்சம் உட்டேன்’டு சொன்ன உடனேயே நீ ‘சல்பலக் பண்ணுனேன்’ங்குற மாதிரியும்தான்! தப்பு தெரியுதா? எல்லோரும் சேர்ந்து ஊர்வலம் பார்த்திருந்தா ஒரு கொடி வந்திச்சி..அதுக்கு பின்னாலெ மனுஷன் உட்கார்ந்திருந்தாண்டு சொல்லலாம்!’

*

‘வாஹிது சாபு பைத்தியக்கார ஆஸ்பத்திரி’ :

‘ஒண்ணு , எழுதப்படிச்சிக்குங்க – படிக்கிறவனுக்கு ‘பாரபைத்தியம்’ புடிக்காம இருக்க. How to write lettersண்டு புத்தகம் கூட இருக்கு. அதுக்கு முன்னாலெ , இங்கிலீஷ் படிச்சிக்குங்க – அதை படிக்கிறதுக்கு. இல்லே, எழுத்தாளனா மாறிடுங்க. எனக்கு ‘அதாபா’ இருக்கு. வெளங்கவே மாட்டேங்குது. நான் ஒண்ணு கேட்க நீங்க ஒண்ணு சொல்ல.. அதுக்குத்தான் நான் சொன்னேன், ‘வாஹிது சாபு பைத்தியக்கார ஆஸ்பத்திரி.. இங்கே டாக்டர் உட்பட பைத்தியம்’டு Board போட்டா ‘சலாமத்’தா பொய்டும்டு. நான் என்னா கேக்குறேன், நீங்க என்னா சொல்றீங்க?’

*

‘துஆ’ :

‘துஆ கிஆ ஒண்ணும் கிடையாது. ஆசைப்படுறதுதான் துஆ. அதை வெளங்கிங்குங்க முதல்லெ. தனித்தனியா பிரிக்காதீங்க. அத்வைதத்தை துவைதமா மாத்தாதீங்க.’

*

‘பட்டம் வாங்குறதும் பென்ஸ் கார் வாங்குறதும் ஆண்டவனுக்கு ஒண்ணுதாண்டு ஆரம்பத்துலே சொன்னீங்க. போனவாரம் ’டாக்’லெ , மசால்தோசை வாங்குறதும் ஒரு பெரிய கண்ணாடி வாங்குறதும் ஒண்ணல்ல’ண்டீங்களே..’ – சீடர்

‘அதை எந்த பேசிஸ்லெ சொன்னேன்?’ – ‘S

‘துஆ கேட்குறதை வந்து.. பெருசா கேளுங்கண்டு..’ – அத்வைதம் துவைதமாகிறது சீடரால்.

‘மசால்தோசையை எந்த பேசிஸ்லெ சொன்னேன்? இப்படி இருக்குமோ..? இந்த பயிற்சி வேற , அந்தப் பயிற்சி வேற, அதுக்கு ஸ்ட்ரென்த் தேவை, மசால்தோசை வாங்குறதும் ஒரு வீடு வாங்குறதும் ஒண்ணுண்டு சொல்லியிருப்பேன். அந்த contextஐ வுட்டுப்புட்டு ரெண்டையும் ஒண்ணாக்குனா எப்படி? ‘மஞ்சள்புடவை உடுத்துனவள்லாம் உங்க பொண்டாட்டிண்டு நெனைக்க ஆரம்பிச்ச என்னாவும் தெரியும்லெ? எந்த contextலெ அதைச் சொன்னேன்? இதை எப்ப சொன்னேன்? அதை சொல்லுங்க இப்ப..’

‘ஆசைப்படும்போது ஏன் சின்னதாகவே ஆசைப்படனும்ங்குறதுக்கு..’

‘ம்..அது கரெக்ட்தான். இதை எப்ப சொன்னேன், எந்த பேசிஸ்லெ சொன்னேன்? சின்னபொருளுக்கு சின்ன instinct தேவை. சின்ன பொருளுக்கு எப்படி இண்ட்ரஸ்ட் கொடுக்குறீங்களோ அக்கறை வைக்கிறீங்களோ, அந்த அளவுக்கு பெருசுக்கு வச்சிக்கொடுத்து பழக்கப்பட்டபிறகு , எல்லாமே ஈக்வல் ஆயிடும். அப்ப ‘விலை’ண்டு கொடுக்க நினைச்ச உடனேயே காரியம் முடிஞ்சிடும். முதல்லெ சொன்னது அந்த கட்டத்துக்குத்தான் பொருந்தும். இப்ப ‘க்ளீயர்’ ஆனிச்சா?’ – ‘S’

எங்கே ஆச்சுது? இன்னொரு சந்தேகம் முளைக்கிறது..! ரவூஃபுக்குத்தான்.

‘சிக்கல் வரும்போது சிக்கலோடு சேர்த்து ரியாலத் செய்யனும்டு சொன்னிங்கள்ளே.. புரியலே அது’

‘இல்லப்பா.. ரியாலத் பன்ற டைம் தனி. அப்ப சிக்கல் வந்து ரியாலத்தை கெடுக்காம இரிக்கனும். ரியாலத்தை எப்போதும் பண்ணலையில்லெ? டென்சனா இந்தா என்னா செய்வீங்க , (ரியாலத்) பன்றதுக்கு முன்னாடி? அந்த டென்சன் வர்ற நேரத்துலெ , ‘நமக்கு ரிலாக்சேஷன் இருக்கு. ரியாலத் இருக்கு. நமக்கு என்ன கவலை?’ண்டு அந்த டென்சனையே ரியாலத்தா மாத்திடனும். ஒரு நாளையிலெ நீங்க நினைக்கிற எந்த நினைப்பும் , செயலும் , ரியாலத்தை மறக்கவே முடியாது. நீ consciously மறந்துடுண்டு (நான்) சொன்னா என்னா அர்த்தம்? அதை ஓதிக்கிட்டு கற்பனை பண்ணிக்கிட்டிருக்க வாணாம்டு அர்த்தம். இப்ப ரியாலத்தோடு சேர்த்து பண்ணுண்டா என்னா அர்த்தம்? ‘நமக்கு இருக்குதே மருந்து.. all cure. வேற வார்த்தையிலே சொன்னா we are all powerful for all நோய்! நமக்கு இதெல்லாம் நத்திங்ண்டு நெனைக்கனும் – மத்த நேரங்கள்லெ. ரியாலத் பண்ணும்போது ரியாலத்தை மட்டும்தான் நினைக்கனும். அப்படி நினைச்சி பழக்கப்பட்டா எந்த டென்சனும் ரியாலத்தில் இருக்காது. ஒரு பேய் படத்தை 50 பேர் தனியா உட்கார்ந்து பார்த்தா 5000 ரூவா தர்ரேண்டு சொன்னேனே.. எதனாலே? அந்த conscious மறந்து பொய்டும். உருவம் வரும்போது உருவமும் நீங்களும் இருக்குற மாதிரிதான் தெரியும். பிராக்டிஸ்லெ வர்ற காட்சிண்டு தெரியாது. அப்ப என்னா செய்வீங்க? அபுபக்கர் ஒரு செய்தி சொன்னாரு.. அப்ப அவர் தன் வூட்டுலெ தனியா இருந்தாரு. நான் கேட்டேன், ‘நீங்க வூட்டுக்கு போறீங்க.. வூட்டுலெ யாரும் இல்லே..ஸ்விட்ச் போடுறீங்க..லைட் எரியலே.. என்னடா இது விளக்கு கொளுத்தனுமே..ண்டு நெனைக்கிம்போது ஒரு கை வந்து நெருப்புப்பெட்டியை கையில கொடுக்குது. என்னாவும்?’.

‘ஒண்..ணும் ஆவாது. காலையிலே கூட்டம் கூட்டமா ‘கண்டுக்க’ வருவாஹா!’ – அபுபக்கர். பழைய துணிச்சல்!

‘இப்ப நெஞ்சைத் தொட்டுப்பார்த்து சொல்லுங்க.. அப்படி வந்தா என்னா செய்வீங்க?’ – இது புதிய சீடர்களுக்கு கேள்வி.

‘நெருப்புபொட்டியை வாங்கி கொளுத்துவேன்!’ – கவுஸ் மைதீன் பயத்தில் உளர, ஒரே சிரிப்பு!

‘காட்சி கண்ணுக்குத் தெரிஞ்சாலோ..சத்தம் கேட்டாலோ.. ’சென்ஸ்’ கை கால்லெ பட்டாலோ பயப்படக்கூடாது. அது ரொம்ப முக்கியம்’ – ‘S’

(தொடரும்)

 

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (23)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21அத்தியாயம் 22 |

அத்தியாயம் 23

ஆபிதீன்

*

23.02.1996 கேஸட்டிலிருந்து ‘S’:

‘பல் இடுக்குல ஒரு துரும்பு மாட்டிக்கிட்டா பார்வை எங்கே அலைஞ்சாலும் கவனம் பூரா துரும்புலதான் இருக்கும். அப்படி நீங்க ரியாலத் பண்ணனும்’
*

‘இப்ப இருக்குற உலக வாழ்க்கையை விட்டு ஏதோ கீழே – debthக்கு போறோம்; இன்னொரு உலகத்தோட ‘டச்’ வைக்கிறோம்குற மாதிரி படுதா?’ – ‘S’

‘நம்மளை மறக்குறோம், அது தெரியுது’

‘நம்மளைண்டா? எல்லாத்தையும் மறந்துடுறோம்! மறந்தபிறகு, மறக்குற நாம Astralதானே? அது எங்கே இருக்கு? இந்த உலகத்தோட கட்டுப்பாட்டுலேர்ந்து விலகி நிக்கிது. Detatchment இருக்கும். வேற ஒரு planetக்கு போறதா நல்லா தெரியும். உத்துப்பாருங்க’

*

‘மூச்சை இழுத்து , அடிவவுத்தாலெ கண்ட்ரோல் பண்ணி , ஒருதரம் (மூச்சை) விட்ட உடனேயே நாம வேற நிலைக்கி மாறுறோம்டு தெரியுதா? எவ்வளவு ‘வீக்’கா செஞ்சாலும் சரி, இது செய்யும்போது, பழைய நிலையிலே நாம இல்லேண்டு தெரியும். அப்ப எங்கே இருக்கிறீங்க? இப்ப, இந்த உலகத்தோட இருக்குறதனாலே இங்கேயுள்ள வைப்ரேசன், இங்கேயுள்ள ‘alien force’லாம் கண்ணுக்கு தெரியாது. அங்கே போனா தெரிய ஆரம்பிக்கும். காட்சிகள்லாம் வரும். சில நேரங்கள்லெ ‘ரியாலத்’ பண்ணுறது கம்ப்ளீட்டா மறந்துபோயி எங்கேயோ இருக்குறமாதிரி தெரியும். சொல்லப்போனா , உலகத்திலேயே அல்ல. உலகத்துலேதான், உலகத்தைவிட ’டீப்’பான ஃபோர்ஸ்லெ நீங்க ஐக்கியமாகிட்டதா தெரியிறதோட.. அதுலெ நீங்க ஒரு பகுதி, இவ்வளவு நாளா யூஸ் பண்ணாம இருந்துறிக்கீங்க அந்த சக்தியைண்டு தெரியும்.’

’இதுலெ’ ‘alien being’ட ‘டச்’ ஏற்பட்டிருக்குதா யாருக்காவது? மேல் உலகத்து சக்திக்குதான் alienண்டு சொல்றது. Three Dimensionக்கு மேற்பட்டது. Four அல்லது Five Dimension கொண்டது. நம்மள்ட்டெ உள்ளதுதான் அது! தெரிஞ்சா சரி, தெரியலைண்டு சொன்னா ஏதாச்சும் காட்சி, உருவம் வந்து பயப்படுறமாதிரி தோணுதா? அப்படி வந்தா பயப்படமாட்டீங்கள்லெ?’டக்’குண்டு அப்ப ஒரு ஆளு வந்து நிண்டா அதிர்ச்சி வராது? பார்ப்பீங்க? ம்..

நாம ‘Sleeping Giant’ கூடத்தான் பேசிக்கிட்டிக்கிறோம், பழகிக்கிட்டிக்கிறோம் – மொழி இல்லாமல்.

ஒரு Bodyயோட இன்னொரு Body சேரும்போது உறவு – உடலுறவு – வைக்கிறமாதிரி தெரியும். ஆக்சுவலா தெரியும். ‘குப்பி’யடிக்கிற மாதிரி! ஒவ்வொரு ஆம்பளைக்குள்ளேயும் ‘அனிமா’ இருக்கு; ஒவ்வொரு பொம்பளைக்குள்ளேயும் ‘அனிமஸ்’ இருக்கு. ஒவ்வொரு ஆம்பிளைட்டேயும் ஒரு பெண்ணிருக்கு; ஒவ்வொரு பொம்பளையிட்டேயும் ஒரு ஆண் இருக்கு. இதை பிறகு சொல்கிறேன். செக்ஸுவல் இண்டர்கோர்ஸுங்குறது லேசான காரியமா நினைக்காதீங்க. உலகத்துலேயே அதைவிட சிறந்த ‘தஸவ்வுஃப்’, ‘ரூஹானியத்’ கிடையாது. இதைச் சரியா செய்யாத காரியத்தினாலே அந்த லாபத்தை நீங்க அடைய முடியாம பொய்டுது. உறவு வைக்கிற Bodyகள்லெ, ஸ்ட்ராங்கா இருக்குற bodyக்கு, ஒரு பொம்பளை, சுகத்தை எப்படி அனுபவிக்கிறாண்டு தெரியும். நாம Active. அவள் passiveலெ? சுத்தமா தெரியும். நான் சொல்றது உண்மை. அந்த உண்மை வெளிவரும். ‘பொம்பளை சுகம்’டு நீங்க இமேஜின் பண்ணிக்கிறது ,மழை பெய்யும்போது தெறிக்கிற துளி மாதிரி, ஆக்சுவல் மழை அல்ல. இந்த உண்மை நீங்க ‘ரியாலத்’, பண்ணிக்கிட்டிக்கிம்போதே வரும். இது அபூர்வமானதுமல்ல, எல்லாத்துக்கும் வரும். இதுக்கு முன்னாலெ.. செக்ஸை மட்டமானதாகவும் அசிங்கமானதாகவும் நினைக்கக்கூடாது. ரெண்டாவது ஷரத்து , அந்நியப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது. பொஞ்சாதி இல்லேண்டு சொன்னா பொம்பளை பத்தி நினைக்கக்கூடாது. நீ யாரோ, அவள் – அந்த படைப்பு – யாரோண்டு இருந்தாத்தான் அந்த அனுபவம் கிடைக்கும். கிடைச்சாகனும். எச்சியை துப்புற மாதிரி கனவு காணுறது, எச்சியை விழுங்குறமாதிரி காணுறது, விந்து சிதறுறமாதிரி காணுறது, இந்த எல்லாத்தையும் விட ‘டாப்’ இதுதான். நீங்கள்லாம் இண்டெல்லெக்சுவல். பொம்பளை Intutional. அவள் பேசுறது பூரா ‘இல்ஹாம்’. ‘ஏன் வழிகாட்ட மாட்டேங்குறா?’ண்டு கேட்டா , உணர்ச்சி வசப்பட்டுட்டா! உணர்ச்சி வசப்படாத நிலையிலே இருந்திருந்தா பொம்பளையிலே நபிமார்கள் வந்திருப்பாங்க. அதனாலெ, சின்னதுக்குலாம் அவ கவலைப்படுவா.. இதுக்கு மேலே இன்னும் மோசம், மத்தங்கள்ற அனுதாபத்தை எதிர்பார்ப்பா. பெண்ணை மட்டும் நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டீங்க.. வுடவே மாட்டீங்க பொஞ்சாதியை. பெரிய ‘பரக்கத்’ வேலை செய்யும். தொட்டதுலாம் துலங்கும். அவளுவ தலை தூக்க ஆரம்பிச்சா நாமள்லாம் தொலைஞ்சோம். காணாப்பொய்டுவோம்! அவ forceஐ மட்டும் யூஸ் பண்ணுனாண்டு வச்சிக்குவோம், உம்மாடி..! நம்ம ரூட்டுக்கு போன பிறகு சில உண்மைகள்லாம் வெளி வந்துதானே ஆவும்! சுகர்னோ (இந்தோனேசிய முன்னாள் அதிபர்) கண்ட ஃபர்ஸ்ட் கனவு – பயிற்சி பண்ணிக்கிட்டிக்கிம்போது – யாரைப்பத்தி செக்ஸா நினைக்ககூடாதோ, நினைப்பே வராதோ, அவளோட உறவு வச்சமாதிரி. அக்கா, தங்கச்சி, சின்னம்மாவை விட பெரிய உறவு, அந்த வார்த்தையை நான் சொல்ல விரும்பலே. இது தானா உங்க கனவுலே வரும். இதெல்லாம் என்னாண்டு கேட்டா… ஒண்ணுமில்லே… புள்ளை, புள்ளைங்கங்குறதுலாம் மாயை.. பெத்ததுக்காக கடமையைச் செய்ய வேண்டியதுதான். இந்த உண்மையை புரிஞ்சிக்கிட்டீங்கண்டா யார்ட்டெயும் எதிர்பார்க்க மாட்டீங்க.

ஒரு Devine Rule ஒண்ணு இருக்கு. Natural Law. It is a law under the law which is controlling the whole world. We are totolly ignorant of these things. அதாவது , எதை நீங்க செய்யிறீங்களோ , அதுக்குப் பின்னாலெ உள்ள மனப்பான்மை, யாருக்கு செஞ்சீங்களோ அவங்கள்ட்டே எதிர்பார்க்காத மாதிரி இருந்திச்சிண்டு சொன்னா , நீங்க செஞ்சது பெர்ஃபெக்ட். செஞ்ச செயல் ஒண்ணுமே அதுக்குள்ள பலாபலனைத் தராம இருக்காது. ஆனா, இதுலெ என்னா தப்புங்குறேன், ஒரு ஆளுட்டெ சர்வீஸ் பண்ணிட்டு அவங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்காதேங்குறேன். அது இயற்கைக்கு மாறானது. காசு? அது தானா வரும்

இந்த compensatory rule இருக்கே.. ரொம்ப ரொம்ப பவர்ஃபுல். ஆனா அது தெரியாததுனாலே நாம தேவையில்லாம அவதிப்படுறோம். ஆனா இதுதான் எல்லா சிஸ்டத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டிக்கிது. இது ‘Alien Being’-ஓடு சம்பந்தமுள்ளது. பத்து நாளா ஓதும்போது வராத பலன் , பதினோராவது நாள்தான் வருது, அடைச்ச கதவு திறக்குதுண்டு சொன்னா அப்பதான் Alien Being வருது. நான் பலதரம் சொல்லியிக்கிறேன், ‘ஒரே இடத்துலே ஓதுங்க, ‘மலாயிகத்’து வந்து சுத்துவாஹா.. ஒருநாளு (நீங்க) இல்லேண்டு சொன்னா ஏமாந்து போயிடுவாஹா’ண்டு, இது சிம்பாலிக்கா சொல்றதுண்டு… உண்மை அதுவல்ல. சிம்பாலிக் அல்ல அது, Truth..!’

*

‘அல்லா..அல்லாண்டு கூப்புடுறீங்களே?’ – கலிஃபுல்லா கேட்டான் – ‘ஏன் சாபுநானா, ‘சாபுநானா’ண்டு உங்களை கூப்புடுறேன். ’சாபுநானா சாபுநானா சாபுநானா’ண்டு கூப்புட்டா எப்படி?’ண்டு. இதை சிங்கப்பூருலெ பேசியிக்கிறான். பெரிய அப்ளாஸ் கிடைச்சிருக்கு. அந்த கேஸட் இங்கே வந்திச்சி. நான் சொன்னேன். ‘சாபு நானா’ண்டு கூப்புட்டா, ‘ஏன்?’ண்டு கேட்டேன்லெ?’ – ‘S’

‘ம்’

‘அல்லா, ‘ஏன்?’டு கேட்டானா?’

‘இல்லெ’

‘கேட்குறவரைக்கும் கூப்புடு!’. இந்த பதில் ரொம்ப சிம்பிள். வாயை அடைக்கிறதுக்காக சொன்ன பதில். இதுக்கே பெரிய அப்ளாஸ் கிடைச்சிச்சிண்டு சொன்னா ஜனங்க எவ்வளவு பெரிய மக்கிப் பயலுவா இக்கிறானுவ! அப்ப.. ‘மலாயிக்கத்’து வருவாஹாங்குறது Fact!’ – ‘S’

*

26.08.1996

நேற்று மாலை ஜெப்பார்நானா ·போன் செய்து ‘ஆபிதீன்.. சர்க்கார்ட்டேர்ந்து புதுசா வந்திக்கிது’ என்றார்.

‘ஈரலா , குடலா?!’

‘அட, எப்படி கண்டு புடிச்சீங்க?!’ என்றார். தமாஷ்கூட இனி செய்யக்கூடாது! இது முள்ளில்லா மீனும் ஆட்டுத்தலையும்! நாளை இரவு சாப்பாட்டுக்குப் பிறகு , சஹருக்கு நோன்பு வைத்துவிட்டு , புதன்மாலை நோன்பு திறந்துவிட்டு , பிறகு அன்றைய இரவும் சாப்பிட வேண்டும். மூன்றுவேளை – முந்தைய நோன்பு போல. ஆனால் ‘இஸ்மு’, மிஸ்கினுக்கு சாப்பாடெல்லாம் கிடையாது. சிறாமீன் தவிர வேறு ஏதாவது முள்ளில்லா மீன் என்று எழுதப்பட்டிருக்கிறதாம். போத்தல், காக்கை, வவ்வால்.. பரவாயில்லை, எங்கும் கிடைப்பதுதான். தவிர முன்னதாகவே வேறு தெரிந்துவிட்டது. ஆட்டுத்தலையை இனி மார்க்கெட்டில் வாங்கி, வக்கி, வக்கணையாக செய்யமுடியாதென்றாலும் ‘தலைக்கறி’, பஜாரில் கிடைக்கும் – பெரும்பாலான தமிழ் ரெஸ்டாரண்ட்களில். இந்த நோன்பு யாருக்காக இருக்கும்? ஈரல் விரும்பிய ஆளுக்கு இன்னும் பசியோ? திடீரென்று சர்க்காருக்கு தனது உஸ்தாதுமார்களின் நினைப்பு வந்தால் , எந்த வீட்டையாவது கூப்பிட்டு , தன் உஸ்தாதுக்குப் பிடித்த பதார்த்தங்களையெல்லாம் சொல்லி ஆக்கச் சொல்வார்கள்தான் – மிஸ்கீனுக்கு கொடுக்க. அப்போது, அந்த வீட்டாரும் மிஸ்கீன்களில் ஒன்றாக மாறிக்கொள்வார்கள்! பெரியவர்களுக்கு செய்யும் விசேஷங்களில் பெரியவர்களுக்கு பிடித்தமானது இருந்தால்தான் பெரியவர்கள் ‘பார்த்து’ சந்தோஷப்படுவார்கள். ஒவ்வொரு அவுலியாக்களுக்கும் ஒவ்வொன்று. எளிமையான அவுலியா என்றால் மொய்தீன் பள்ளித்தெரு சாக்குமஸ்தானைச் சொல்லலாம். தோசையும், மிளகாய் சட்னியும். வெளியூர் ஆட்கள் நாக்கூரில் அன்றைய தினம் நுழைந்தால் ஊரே தோசை வாசத்தில் மணக்கும்தான். ‘தீனியில்லா’ தீன் (dheen) என்பது வீண்! எவர்களாலோ , மனசுக்கு சந்தோஷமாய் நாவுக்கு கிடைக்கிறது ஜாஃபர்சாதிக் அவுலியாவின் பூரியான் மாதிரி. அல்லது , நவீன யுகத்தில் முள்ளில்லா மீனும் ஆட்டுத்தலையும் மாதிரி. சிங்கப்பூர் சீனர்கள் இறந்தவர்களுக்கு படைக்கிற விசேஷம் மாதிரியா? அல்லது ரியாலத் பண்ணுபவர்களின் stamina சம்பந்தப்பட்டதா? எதுவோ, சர்க்கார் சொன்னார்கள், செய்ய வேண்டியது. பிறை 13. ஆவணி அவிட்டம் என்று போட்டிருக்கிறது. இதற்காகக்கூட இருக்கலாம்! இருந்தாலும் குழப்பத்திற்கு விடை நேற்று இரவே கிடைத்து விட்டது. கேஸட் கேட்கும்போது. 15-22.03.1996 கேஸட்டில் வருகிறது. நோன்பு சரி, இந்த ஈரல்+ பல்லுகுத்தி + கிட்னி & முள்ளில்லா மீன்+ ஆட்டுத்தலை என்கிற ‘ஷரத்து’? அதெப்படி சரியாக இந்த கேஸட் பதிலாக கிடைக்கிறது?

‘எடுத்ததுக்கெல்லாம் நான் ஷரத்து வைக்கிறதுக்கு என்னா காரணம்டு கேட்டா , ‘ஷரத்’துக்கு உட்பட்டு நடக்கிற மனப்பான்மை வந்துடும். மீறிக்கிடலாம்ங்கிற மனப்பான்மை வராது. பரவாயில்லை’ண்டு சொன்னா இதையும் மீறுவீங்க. எதை மீறக்கூடாதோ அதையும் மீறுவீங்க. கை கழுவிட்டு டவலால துடைச்சிக்கலாம். பீ பேண்டுட்டு டவலால துடைக்க முடியாதுலெ? துடைச்சீங்கண்டா சூத்து கழுவ எவ்வளவு தண்ணி தேவையோ அதைவிட அதிகமான தண்ணி தேவை – அதை கழுவுறதுக்கு. எதைக் கழுவனுமோ அதத்தான் கழுவலாம். எதை துடைக்கனுமோ அதத்தான் துடைக்கலாம். எது கழுவுறது, எது துடைக்கிறதுண்டு உங்களுக்குத் தெரியாது. அதனாலே மீறக்கூடாது (ஷரத்துக்களை). எப்பவாவது மீறுறமாதிரி வந்துட்டா என்னெட்ட கேட்டுக்கிடுங்க. இது மீறத் தகுந்ததுதானா , மீறக்கூடாதா, பாதிக்குமா, பாதிக்காதாண்டு சொல்லிடுறேன்’

இனி மீறமாட்டேன் சர்க்கார். ஆனால் இது யாருக்காக என்பதையாவது சொல்லக்கூடாதா? ஓதுகிற அறையில் நுழைந்து பார்க்கிற மலாயிக்கத்துகளுக்கா? இவைகள் அல்லது இவர்கள் வருவது உண்மை என்றால் இவர்கள் யார்? இறந்த அத்தனைபேரும் வருவார்களா? இந்த வாழ்க்கை கூட இறந்துபோன பிறகு வாழ்வது மாதிரிதான் இருக்கிறது, நான் கூட பிறர் அறையில் நுழைவேனா, நுழைந்திருக்கிறேனா? என் வாப்பா… அவர்களைப் பார்க்க முடியுமா இப்போது? இன்று பகல் ‘தேரா’வில் கேஸட் (29-03 to 05.04.1996) கேட்டுக்கொண்டிருக்கும்போது என் சார்பாக ரவூஃப் கேட்கிறான், இறந்து போனவர்களுடன் பேச முடியுமா என்பது சம்பந்தமாக. ஹம்பக்! பாவம் விக்கிரவாண்டி (ஆவி எழுத்தாளர்). ‘சும்மா! ரியல் ’ஃபேக்ட்’ அல்ல அது.. இறந்தவங்களைப் பத்தி இவங்கள்ற (மீடியேட்டர்) unconsciousலெ என்னா இக்கிதோ அதுதான் வெளிவரும். ஏன்னா, அதே ஆளை இன்னொரு மீடியேட்டர் தொடர்பு கொள்ளும்போது வேற மெட்டீரியல் வருது, வேற செய்தி வருதுண்டு prove பண்ணிட்டான்!’ என்று பதில் சொல்கிறார்கள் சர்க்கார்.

‘நான் அதைக் கேட்கலே..நீங்க சொன்னீங்களே. ஒரு குறிப்பிட்ட நேரத்துலே ஒரு குறிப்பிட்ட இடத்துலே ஒரு ஆளைப்பத்தி கற்பனை பண்ணுனோம்டா அந்த ஆளு வரும், பேசலாம்டு..’

‘ம்.. இது அட்வான்ஸ்டு ஸ்டேஜ்’

‘என் டவுட் என்னாண்டா , இறந்துபோன எல்லாருக்குமே திரும்ப கண்டினியூ ஆகிற கெபாசிடி இல்லேங்கும்போது நாம நினைக்கிறவங்க, அந்த கெபாசிடி உள்ளவங்களாண்டு எப்படி தெரியும்?’

‘பார்க்க முடியாது. கெபாசிடி இல்லேங்குற மாதிரி ரிஸல்ட் வந்துடும். பார்க்கலாம், அந்த பழைய ரிகார்டு வந்தால் பார்க்கலாம். presentலெ எப்படி இக்கிறாங்கண்டு பார்க்க முடியாது. நடந்து முடிஞ்சதை பார்க்கலாம்’

‘கடந்த வாழ்க்கையை பார்க்கலாமா? புரியலே மாமா..’

‘அட, அவங்க உதாரணமா 50 வருஷம் வாழுறாங்கப்பா. அந்த 50 வருஷம் வரைக்கிம் எப்படி எப்படி வாழ்ந்தாங்கண்டு எடுக்கலாம். இறந்துபோனபிறகுதான் அழிஞ்சி பொய்டுவாங்களே.. அதுக்குப் பிறகு ரிகார்டு இருக்காது.’

‘ஓஹோ! அந்த 50 வருஷ ரிகார்டை அவங்கள்ட்டேர்ந்துதான் வாங்கனுமா?’

‘இல்லெ, அந்த ரிகார்டு இருக்கும். எடுத்துக்கலாம்’

‘நமக்குத் தெரிஞ்சிடும்?’

‘ம்..’ – ‘S’

**

இன்று இரவு ’மச்சி மார்க்கெட்’ போகச் சொன்னேன், மஸ்தான் மரைக்கானை- காலையில். முதல்நாளே சொன்னால்தான் செய்யமுடியும் என்று முன்பு சொன்னானே அவன்.. இப்போது, ‘இதெல்லாம் ஒருவாரத்துக்கு முன்னாலெ சொல்லனும்ப்பா’ என்றான். சொல்லலாம்தான். அப்போது சர்க்காரே இதைச் சொல்லியிருக்கவில்லையே. ஒருவேளை அதனால்தான் அப்படி சொல்லச் சொல்கிறானோ? இன்று இரவு, பெட்டி கட்ட கராமா போகவேண்டும் என்றான், ஃபாத்திமா இடத்திற்கு. மச்சான் அலாவுதீன் இன்று இரவுதான் வரச்சொன்னாராம். கேட்ட எனக்கு எப்படியோ இருந்தது. தனியாக காசுகொடுத்து செய்யச்சொன்னாலும் மறுக்கிறானே என்று. ஒவ்வொரு முறையும் நோன்பில் பஜாருக்குப் போய் அலைந்துதான் கடையில் வாங்கிக்கொண்டு அவீருக்கு வரவேண்டுமா? என்ன இது? புழுங்கிற்று மனது. அடுத்த 10 நிமிடத்தில் மஸ்தான் மரைக்கான் ஃபோன் செய்தான். அலாவுதீன் ஃபோன் செய்தாராம், பெட்டி கட்ட நாளை இரவு வந்தால் போதும் என்று! மீன் வாசம் மணக்கிறது..
*

27.08.1996

அருள்மீனும் ஆட்டுத்தலையும் (1/3) சாப்பிட்டுவிட்டு!

நன்றாகத்தான் இருக்கிறது இந்த காம்பினேஷன். பி.யூ.சி எழுதிவிட்டு ரிஸல்ட்டுக்கு காத்திருந்த நேரத்தில் , கீழக்கரையிலுள்ள சொந்தக்கார கல்யாணத்திற்கு போயிருந்தபோதுதான் இம்மாதிரி விசேஷமான காம்பினேசனை முதன்முதலாக ருசி பார்த்தேன். இடியாப்பத்தில் மோர் ஊற்றி , மாசி சம்பாலை தூவிப்பிணைந்து , அனைவரும் சுழாட்டினார்கள். அதுமாதிரி இப்போது. அடுத்த நோன்புக்கு என்ன, பிரியாணியில் மொளவுத்தண்ணியை ஊற்றிக்கொண்டு திங்க வேண்டுமா? ரெடி! ஆனால் ‘தலைக்கறி’ கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இல்லையேல் இன்று இரவு ‘தேரா’ போய் வாங்கி வந்திருக்க வேண்டும் நான்.

தேராவில் நேற்று கடுமையான லேபர் செக்கிங். ஆட்களை அள்ளிக்கொண்டிருந்ததை பார்த்து தௌஃபீக் தலைதெறிக்க ஓடிவந்திருக்கிறான்.

நானும் ஃபுஜைராவில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்ததிலிருந்து துபாயில் விசா மாற்றும் வரை திருடனாக ஓடிதான் ஒளிந்திருக்கிறேன் என்றாலும் இப்போது திடீரென்று சட்டம் கடுமையாகி விட்டது. வரும் செப்டம்பர் இறுதிக்குள் illegal workers அத்தனைபேருக்கும் கெடு. விசா இல்லாதவர்கள், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அதற்குள் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் அதற்குமேல் பிடிபடுபவர்கள் 30,000 திர்ஹம் கட்டிவிட்டு மூன்று வருடம் ஜெயிலில் இருக்கவேண்டும். இவர்களுக்கு உதவுபவர்களுக்கு 15 வருட சிறைத்தண்டனையும் 15000த்திலிருந்து 100000 திர்ஹம் வரையும் அபராதமும். போலீஸ் ரிகார்டுகள், கள்ளத்தனமாக கடந்த 20 வருடத்தில் 25000 பேர் நாட்டில் நுழைந்ததாக கூறுகின்றன. இதற்கும் பத்துமடங்கு அதிகமான ஆட்கள் நுழைந்திருந்தும் அவர்கள் கள்ளத்தனமாக போலீஸ் ரிகார்டை எடுத்துவிடுவார்கள். அதிகமான ஊடுருவல் என்று பார்த்தால் அரபுநாட்டில் சௌதிதான். புனித ஹஜ்ஜூக்கு புறப்படும்போதே பாதிப்பேருக்கு திரும்பக்கூடாதென்றுதான் சங்கற்பம்! அல்லாஹ்வின் நாட்டம். துபாயில் புனிதம் கம்மிதான். ஆனாலும் இவர்களை ‘சுத்தப்படுத்த’த்தான் வேண்டும்.

தௌஃபீக்கிற்கு விசா validity இருக்கிறதுதான். ஆனால் வேலை தனியாக பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி விசாக்களை – தன்னிடம் வேலையில்லாமல் – விற்கிற அரபிகளுக்கு ஏதும் தண்டனை உண்டா? முதலில் அவர்கள் அரபிகள்தானா? ஆட்களைப் பிடிக்கிற ஆட்களுக்கு முதலில் உருப்படியான பாஸ்போர்ட் இருக்கிறதா? பயந்துபோகிற ஆட்கள் ஆயிரமாயிரமாய் இந்திய பாகிஸ்தானிய தூதரகத்தில் கூடி நிற்கிறார்கள் – வெளியேற. Consulate facing problems as queues get longer என்கிறது பத்திரிக்கை. இந்தியத் தூதுவர் திரு. பிரபுதயால் , தூதரகம் மாலை 5 மணிவரை வேலை பார்த்தும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுக்காமல் இருந்தும் ஒரு நாளைக்கு 500 பேர்களைத்தான் பார்க்க முடிகிறது என்று அலுத்துக்கொள்கிறார். 501வது நபர் அவராகக் கூட இருக்கலாம்!

அந்தந்த கம்பெனி விசாவோடு அந்தந்த கம்பெனிகளில் வேலைபார்ப்பவர்களுக்கு நல்லதுதான். எடுத்ததெற்கெல்லாம் ‘உன்னைவிட பாதி சம்பளத்தில் வெளியில் ஆயிரம் பேர் அலைகிறார்கள்’ என்று அரபி சொல்லமாட்டான் – சம்பளம் கூட்டாவிட்டாலும். ஆனால் குறைந்த காசுக்கு வேலைபார்க்கிற கூலித்தொழிலாளர்கள் இல்லாமல் கம்பெனி ஏது? இனி அம்மாதிரி வேலைக்கு வருபவர்களுக்கு விசாவோடு மற்ற சட்டதிட்டங்களுக்கு உட்படவேண்டும் என்றால் கம்பெனிதான் தாங்குமா? லீவ் சம்பளம், கிராஜுவடி என்கிற கெட்டவார்த்தைகளையெல்லாம் கேட்கவேண்டி வரும். அரபிகளுக்கு சிரமம்தான். ஆனாலும் வழி வரத்தான் போகிறது. இது துபாய். ‘விச்சா’ மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபிக்கும் நகரம். அபுதாபிக்கும் ஷார்ஜாவுக்கும் என்ன, ஆயில் கிடைக்கிறது. துபாயின் ஜீவமரணம் வியாபாரத்தில் இருக்கிறது. சமயத்தில் தன்னை விற்றுக்கொள்வதும் கூட வியாபாரத்தில் ஒரு தந்திரம்தான். அத்தனை illegal workersஐ வெளியேற்றிவிட்டு ’லீகல்’ஆக இனி குறைந்த சம்பளக்காரர்களை கொண்டுவரும் அது. ஆப்ரா தண்ணீரின் லாவகம்.

ஆனாலும் , ஈராக் யுத்தத்திற்கே பயப்படாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்தான். அதுவும் தமிழர்கள் புலிப்பால் குடித்தவர்கள். சிங்கப்பூர் பிரம்படியை விடவா இது? 30,000 திர்ஹம் ஃபைன்? போடு, காசில்லே! சிறையில் அடைக்கிறாயா, சந்தோஷம். சாப்பாட்டுக்காசு மிச்சம்! ஆனால் அங்கும் ‘கந்தூரா’ உடுத்தக்கூடாது என்று சட்டம் அமுலாகுமா? இரண்டு நாளாக இது ஒரு வதந்தி. 500 திர்ஹம் fine..நாட்டுக் குடிமக்கள், அரபுக்காரர்கள் தவிர வேறு எவரும் ‘கந்துரா’ அணியக்கூடாது என்று. பர்துபாயில் ‘கந்துரா’ அணிந்துகொண்டுபோன மலையாளி ஒருவனை போலீஸ் (?) பிடித்து உடைகளை வெட்டி விட்டது. இப்போது நாட்டில் அதிகரித்திருக்கிற கொள்ளை, கொலைகளை கந்துரா அணிந்த வெளிநாட்டுக்காரர்கள் செய்கிறார்களாம். பார்த்தால் ‘பைத்தியக்காரன்’ என்று விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களா? உண்மை தெரியவில்லை. உண்மையாக இருந்தால் அரபி வேஷம் போடும் அரபுக்காரர்களின் அமெரிக்க ஆடைகளுக்கு என்ன சட்டம்?

‘இதெல்லாம் என்னாப்பா! சட்டம் போடும்போது என்னெட்ட கேட்டுட்டு செய்ய மாட்டேங்குறானுவ இப்பவுலாம்’ என்கிறான் மஸ்தான் மரைக்கான்.

‘சரி, நீதான் ஷேக் ஜாயித் அல்லது ஷேக் மக்தூம். நம்ம ஆளுவளுக்கு உபயோகமா ஒரு சட்டம் போடு இப்ப!’

‘எல்லாரும் ஊருக்கு போய் பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இரி..!’

‘நீ?’ என்று கேட்டேன்.

‘நான் போகமாட்டேன்பா’

‘ஏன், பொண்டாட்டி புள்ள சந்தோஷமா இக்கினும்டுதானே?!’ – செல்லாப்பா வெடைத்தான்.

*

அபுதாபியில் அதிரடி நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது என்று பத்திரிக்கை செய்தி. முதல் அதிரடி : நகர சுத்தம். ரூமுக்கு 20 பேர் இனி இருக்கக்கூடாது. நகரத்தில் ரூமுக்கு இரண்டு பேர்தான். என்ன செய்வோம்? ‘முஸாஃபா’வுக்கு போ, இன்னும் தூரத்திற்கு போ’ மீறி இருந்த கட்டிடங்கள் சிலவற்றில் தண்ணீர் மின்சாரத்தை நிறுத்திவிட்ட அரசு அதை பத்திரிக்கைகளிலும் போட்டது. இவ்வளவு சாந்தமாக தெருவிலும் பூங்காவின் நடைபாதைகளிலும் உட்கார்ந்திருக்கிற நூற்றுக்கணக்கானவர்கள் தென்னிந்தியவர்களைத் தவிர யாராக இருக்க முடியும்? ஃபோட்டோவை நன்றாக உற்றுப்பார்த்தேன். இப்ராஹீம் தென்படவில்லை. துபாய்க்கு ஓடி வந்துவிட்டாரோ? வரும்போது ‘கந்துரா’ அணிந்திருந்தாரா? அல்லது அத்தனை துன்பத்திலும் தங்குமிடம் கொடுக்கிற சவுதியே பரவாயில்லை என்று அல்-கர்ஜூக்கு போய்விட்டாரா? அங்கு கந்துரா அணியலாமா? அல்லது வெளிநாட்டவர்கள் கோவணம் மட்டும் கட்ட வேண்டுமா? அதுகூட வெள்ளை வண்ணத்தில் இருக்கலாமா இல்லையா? இப்போதெல்லாம் கோவணம் அணிந்தவர்கள்தான் கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் கோவணத்தைக் காப்பாற்றிக்கொள்ள கொள்ளை தேவையல்லவா?

**

28.08.1996

நோன்பு முடிந்துவிட்டது. ‘தலைக்கறி’ மட்டும் ஊசிப்போய்விட்டது. நேற்றிரவே ஒருவகை வாசம்தான் , சஹருக்கு. காலையில் கடுமையான வயிற்றுவலி வந்தது. நோன்பை விட்டுவிடலாமா என்று வந்தது. ஆனாலும் 5 நிமிடம் வலியையே பார்த்துக்கொண்டிருந்தேன். வலி ஊசிப்போய்விட்டது! இதெல்லாம் சர்க்காரிடம் சொல்லவேண்டும். மஸ்கட் ஹம்தான் டிரேடிங்கிற்கு ஓட்ஸ் அனுப்புவது சம்பந்தமாக கப்பமரைக்கார் பழைய proformaவை தேடிக் கொண்டிருந்தார். மொயீன்ஷாஹிப், முஹம்மது மம்ஜாரின் சொந்தவேலைக்கு (‘கந்துரா’ வாங்கவோ?) கராமா போயிருந்தார். ஃபைல்களைப் பொறுத்தவரை கப்பமரைக்காருக்குத் தெரியாத இடம் இல்லை. நான் சாதாரணமாக் மொயீன்சாஹிபின் மேசைக்குப் பின்புறமுள்ள சிறிய சாம்பல் கலர் பெட்டியிலுள்ள தொங்கும் ஃபைல்களை பார்க்கச் சொன்னேன். கப்பமரைக்கார் ஒரு மணி நேரமாக தேடியது அங்குதான் இருந்தது. உங்களுக்கு எப்படித்தெரியும் என்றார் சர்க்காருக்கு தெரியுமே! என்னின் எதைத் தூண்டி இப்படி சொல்ல வைக்கிறார்கள்? பார்த்துக்கொண்டே இருக்கிறார்களோ?

இரண்டு மாதமாக என்னை யாரோ உற்றுப்பார்க்கும் உணர்ச்சி இருக்கிறது. அது நானாகத்தான் இருக்க வேண்டும். சர்க்கார் ஏற்படுத்திய நான். ஆனால் பார்க்க பயம். இதுதான் எனது Astral bodyயா? அதை ஒரு புனிதமாகவும் பார்க்கவேண்டாம்தான். ‘ரியாலத்’தில் பிரிந்து சேரும் Astral bodyயின் postureஐ ஒரு சீடர்தான் கேட்டார். ‘அது பின்பக்கமாக திரும்பி போய் அப்புறம் சேரும்போது முன்பக்கமாக வரும்தானே சர்க்கார்?’ என்று.

‘ஆமா போகும்போது சூத்தைக் காமிச்சிட்டே போகும். வரும்போது சுன்னியைக் காட்டிக்கிட்டு வரும்!’ என்றார்கள் ‘S’.

ஒருவேளை , பார்த்து, அவைகள் இல்லாமலிருந்தால் ‘திகீர்’ப்பாயிருக்குமே என்ற பயத்தில் பார்க்கவில்லை நான்?

ஆனால் Astral travel சாத்தியம். 29-03 to 05.04.1996 கேஸட்டில் ரவூஃபின் ’Astral டிராவல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு அவர்களின் பதில்:

‘Body ஒரு இடத்தை விட்டு ஒரு இடத்திற்கு பிரயாணம் பண்ணுறதுதான் Astral டிராவல்’

‘Physical’ஆவா?’ – பரமசிவம்

‘ஒரு ஆளைப்பார்த்தா physicalஆ தெரியும். ஆனா தொடமுடியாது. தொட்டா புரியாது. அவர்களுக்கு நம்மளை தெரியும். ஆனா அவங்க தெரிஞ்சிக்கிறதுக்காக, what is whatண்டு கண்டுபுடிக்கிறதுக்காகத்தான் Astral டிராவலை யூஸ் பன்றதே தவிர பொழுதுபோக்குக்காக, யார்ட்டெயும் பேசிக்கிட்டிக்கிறதுக்காக அல்ல. பேசிக்கிட்டிருக்கனும்டு சொன்னா நம்மள்ட்டெயே எவ்வளவோ ஃபோர்ஸ்கள் இருக்கு. அதோட தொடர்பு ஏற்படுத்தி ,கூப்புட்டு வச்சி , பேசிக்கிட்டு உட்கார்ந்திருக்கலாம். அதுக்காக வெளியூர்லெ போய்த்தான் பேசனும்டு என்னா இருக்கு? இது graphicஆ ஃபோட்டோ எடுக்குறமாதிரிதான் . ஆனா இதுலெ ஒரு பெரிய தொல்லை இருக்கு. எங்கெயாச்சும் நாம டிராவல் பன்றதா வச்சுக்குவோம். அங்கே ஒரு ஆக்ஸிடெண்ட், கொலை நடந்திருக்குண்டா அங்கே நம்மளை எல்லோரும் பார்த்திருப்பாங்க. அவன்ட்டெ போயி விளக்க முடியாதுலெ – நான் Astral டிராவல்லெ போயி அங்கே மயிர் புடுங்கிக்கிட்டு இருந்தேண்டு!’

‘நம்முடைய பெர்ஸனல் காரியங்களுக்காக வேற இடத்துக்கு போக முடியாதா?’ – ரவூஃப்

‘போகலாம்ப்பா.. அந்த நிலைக்கி வந்தபிறகு அதெல்லாம் தேவைப்படாது. பேசுறதுங்குறது கருத்துப் பரிமாற்றம்தானே? அதை telepathically சொல்லிடலாம். அல்லது ரிஸீவ் பண்ணிக்கிடலாம். டிராவல் பண்ணி பேசனும்டு என்னா இக்கிது?’

‘(ஜனங்களுக்கு) சர்வீஸ் பண்ணுறதுக்கு போவலாமுல்லெ?’

‘நீங்க உங்க சக்தியை வளர்த்துக்கிட்டாலே அது பெரிய சர்வீஸ்தான். யார்யார் கூடவுலாம் தொடர்பு வச்சிருக்கீங்களோ அவங்களுக்குலாம் நன்மை கிடைக்கும். இதுக்காக அமெரிக்கா போகவேண்டியதில்லே. இது மாதிரி பண்ணுற அமெரிக்கன் அங்கே எத்தனையோ பேர் இருப்பானுவ’ – ‘S’-ன் சர்வீஸ்.

**

23.02.1996 கேஸட்டின் தொடர்ச்சி :

‘நீங்க பயப்படுவீங்களா?’ண்டு ஏன் கேட்டேன்டா சில நேரத்துலெ ‘அது’ உருவமா தெரியும். பத்து நாளு வராதது பதினோராவது நாளு வரும். வர்றதுக்குள்ள பாதை – மெயின்-ஆன பாதை, மனிதத்தன்மையை அழிச்சிட்டு நீங்க தெய்வத்தன்மையோட நெருங்கனும் .மலாயிக்கத்தோட வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணிக்கிட்டிக்கும்போது நீ இங்கே அழுக்கு சட்டையை போட்டுக்கிட்டு, தலைக்கு எண்ணெய் தடவாம, பொண்டாட்டி புள்ளைய நடுரோட்டுலெ உட்டுட்டு போவனும்டு அவசியமில்லே..ரொம்ப செழிப்பா வாழலாம். ஆனா வெளியே தெரியக்கூடாது. அதுக்கு முதல்லெ தைரியம் வேணும். நானிருக்கும்போது உங்களுக்கு என்னா பயம்?

எது எப்ப நடந்தாலும் சரி. அதிர்ச்சியடையாம இருக்கனும். இதுக்கு பெஸ்ட் வழி என்னா? ரியாலத்துலெ கொசு கடிக்குதா? கடிக்கட்டும்டு கொசுவை மறந்துடனும். டீ குடிக்கும்போது சிந்திடுதா? ஒண்ணு கழுவனும், இல்லெ உட்டுடனும். சிகரெட் குடிக்கும்போது சாம்பல் மேலே வுழுதா? வுழுந்துட்டு போவட்டும்டு இருக்கனும். அப்பத்தான் வலிமை வரும். நீங்க இதெல்லாம் செய்ய வேண்டியதில்லே. ரியாலத்-ஐ மட்டும் கரெக்டா செய்யுங்க. நீங்க நினைக்கிறமாதிரி சாதாரண ஹிப்னாடிக் பயிற்சி அல்ல இது’ – ‘S’

‘கிட்டத்தட்ட 15 வருடத்துக்கு முன்னாடி இந்தமாதிரி பயிற்சிலாம் எனக்கு தராமலே மேலிடத்து தொடர்புகள்லாம் கிடைக்கிறமாதிரி, பவர் வந்தமாதிரிலாம் இருந்திச்சே.. கனவுலெ.. அப்ப என்னா மனநிலை?’ – மீராமெய்தீன்.

‘சரி, ரசூலுல்லாவை பார்க்க கூட்டிட்டு போகும்போது திரையை நீக்குறதுக்கு முன்னாடி விந்து வந்திடுச்சி உங்களுக்கு. ஏன் நீங்க முழிச்சீங்க? விந்து எவ்வளவு உசத்தி தெரியுமா? என்னா பொருள் அது..!’

‘அப்ப சிம்பிளா கூட்டிட்டுப் போனீங்களே..இப்ப இவ்வளவு பயிற்சி..’ – இழுக்கிறார்.

‘ஆமா அப்ப சிம்பிளா கூட்டிட்டு போனேன். நான் கூட வந்தேன் அப்ப. இப்ப உங்களையில்ல போகச் சொல்றேன்? முதல்லெ டார்ச்லைட்டை நான் கையிலெ வச்சிருந்தேன். இங்கே பார்த்துவாங்க , இங்கே பார்த்துவாங்கண்டு கையைப் புடிச்சிட்டு போனேன். இப்ப நான் இருக்க மாட்டேன். நீங்களே பார்த்துக்குங்க. சொல்லிக்கொடுப்பேன். நான் இறந்து பொய்ட்டா யார் கூட்டிட்டி போவாங்க? ‘அம்போ’ண்டு நிப்பீங்க நடுரோட்டுலெ. அப்படி நிக்கக் கூடாதுண்டுதான் பாக்குறேன்’ இல்லை, அப்படி உட்டுடுவா?’ – ‘S’

*

‘இப்ப இம்ப்ரூவ்மெண்ட் வருதுண்டு சொன்னா, இவ்வளவு நாளா என்னென்னமோ பண்ணிப் பார்த்தீங்களெ..இந்த மலச்சிக்கல் நீங்குறதுக்கு. பீ கட்டியாத்தானே போனிச்சி? இப்ப மட்டும் சாதாரணா ஏன் வருது? கோபத்தை அடக்கனும்டு சொல்லி எத்தனை தரம் மண்டையிலெ அடிச்சிக்கிட்டீங்க? இப்ப அது எப்படி கண்ட்ரோல் ஆவுது தானாகவே? நீங்க, இன்னொன்னு கண்ட்ரோல் பண்ணும் நிலைக்கி வளர்றீங்க. அது உங்களை கண்ட்ரோல் பண்ணுது. நான் அதைத்தான் Alien Beingண்டு சொல்றேன். அப்படீண்டா ‘மலக்கு’ண்டுதான் அர்த்தம். அப்ப முதல்லெ ‘மலக்கு’ங்குறது ஒரு சக்திக்கு பேருண்டு சொன்னதுலாம்? பச்சைப் பொய்! யார் சொன்னது? நான் சொன்னது! பச்சைப் பொய்யல்ல, அப்போதைக்கு அப்படித்தான் சொல்ல முடியும். அதுக்கு மேலே சொல்லனும்டா சயின்ஸ் ஆதாரம் காட்டுங்க, எவிடென்ஸை புரூவ் பண்ணுங்கம்பீங்க நீங்க’ – ‘S’

**

30.08.1996. வெள்ளி ’செஷன்’ முடிந்து..

இன்று பகல் ஜெப்பார்நானாவை சந்தித்து புதிய இஸ்முகளை வாங்கி வந்தேன். கவுஸ்மைதீன் எழுதியிருந்த கடிதத்தில் ஆட்டுத்தலை, முள் இல்லாத மீனுடன் அவைகள் இருந்தன. அந்த லெட்டர்ஹெட்-ஐ பார்த்தவுடன் வித்யாசம் தெரிந்தது. சர்க்காரின் Star இப்போது பச்சைக் கலரில் அச்சிடப்பட்டிருந்தது. முதலில் நல்ல சிவப்பில் இருக்கும். இப்போது ரஹ்மானியத்தின் வண்ணம். நான் பார்த்துச் சொன்னவுடன் ஜெப்பார்நானாவுக்கும் தெரிந்தது. ‘அட,ஆமா..!’ என்றார். இது கறுப்பு வட்டத்தின் விளிம்பை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கும் பயிற்சியின் விளைவால் உண்டான பார்வையால் அல்லது ரியாலத்தின் ஊடுருவிப்பார்க்கும் குணமா? ஆனால் பார்வையில் வித்யாசம் இருக்கிறதுதான்.

நேற்றுபகல் , சேத்தபொண்ணின் கல்யாண கேஸட்டில் மீதமிருந்த டேப்பில் , அஸ்ரா – அனீஸின் பழைய வீடியோ கேஸட்டை ரிகார்டு செய்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பிருந்த அனீஸின் சிரிப்பில் , அதன் பேரழகில் , என்னை மறந்து சொக்கி அவனை மானசீகமாக முத்தமிட்டேன். இன்று காலை அஸ்மாவுக்கு ஃபோன் பண்ணும்போது சொன்னாள்.

‘நேத்து உங்க மகன் உங்களை ரொம்ப தேடுனான், திடீர்ண்டு. அவன் உங்களை பார்த்தானாம். வாப்பா வந்தாஹலே.. எங்கேண்டு கேட்டான்.. புள்ளக்கி ரொம்ப நெனைப்பு போலக்கிது..’

நினைப்பா? நான் அவன் பார்த்த, தேடிய நேரம் கேட்டேன். சரியாக நான் அவனை இங்கே முத்தமிட்ட நேரம் – வீடியோவில் பார்த்துக்கொண்டே! பார்வை கூர்மை பட்டிருக்கிறதுதான். ‘உங்க வேலை உங்களை வளர்க்குறதுதானே தவிர பவர் வேலை செய்யுதாண்டு பார்க்குறதல்ல’ என்ற சர்க்காரின் குரல் கேட்கிறது. It is quite natural – துபாய் தண்ணிக்கு தலைமுடி கொட்டுவது போல!

ஜெப்பார்நானா அறையில் உட்கார்ந்திருந்த தஸ்தகீர்நானாவுக்கு , வந்த ஒரு மாதத்திலேயே தலைமுடி பாதியாகப் போயிருந்தது. ‘சே.. இந்த துபாய் தண்ணி’ என்று அந்த மார்க்கண்டேயர் வெறுத்துப்போய் சொன்னார். பாலையில் இத்தனை வசதியான தண்ணியை வரவழைக்க அரசு படும் பாட்டையும் தண்ணீராய் மில்லியன்களை செலவழிப்பதையும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை. இவரை குளிக்கவிட்டதே தப்பு! தண்ணியின் அருமை உணர்ந்துதான் பெரும்பாலான பட்டான்கள் குளிப்பதில்லை! தஸ்தகீர்நானா காவிரிமைந்தன். அதன் காற்றே போதும் ; குளித்துவிட்டாற்போலத்தான். அவருக்கு வந்த எரிச்சலை இன்னொரு காவிரிமைந்தனான ஜெப்பார்நானா விசிறினார் : ‘ஒண்ணு பண்ணுங்களேன், மஸாஃபி தண்ணி பாட்டில் வாங்கி குளிங்களேன்!’

‘ஏன் தண்ணி பாட்டில்? குளிச்சிட்டதா, குளிக்கிறா கற்பனை பண்ணிக்கிட்டா முடிஞ்சிபோச்சி!’ – நானும் காரியக்காரன்தான்.

‘இது ரியாலத்தை வெடைக்கிற மாதிரில இருக்கு’ என்று தஸ்தகீர் வெறுப்போடு என்னை சந்தேகப்பட்டார்.

நகைச்சுவையே கலக்காமல் கற்பனையில் குளிக்க ஆசைப்படுகிறார் போலும்! மகனார் அனீஸுக்கும்கூட கற்பனை இருக்கிறது. அவன் சிறுவயதில் தன் ஜட்டியைக் களைந்து ஆர்ட் பிரஷ்ஷால் சுத்தம் செய்தவன். ‘நான் ஆர்டிஸ்ட்டோ இல்லையோ, இவன் பெரிய ஆர்டிஸ்ட்’ என்று சர்க்காரிடமும் இதை சொல்லியிருக்கிறேன். இப்போது அனீஸ் படமெடுக்கிறானாம். நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு , தன் லாத்தா அஸ்ராவை , ‘டீ விசிறிவிடு எனக்கு… நான் படமெடுக்கப்போறேன்’ என்றானாம் டைரக்டராக. அஸ்மா சொன்னாள்.

‘நல்லவேளை, படமெடுக்குறேண்ட்டு உன் புள்ள ஜட்டியை களைஞ்சி காமிக்காம இருந்தானே!’ என்றேன்.

‘அது நீங்க செய்யிற வேலை!’

அவள் ஏப்பம் விடும் சத்தத்தை ஒருமுறை வெடைத்ததற்கு , ‘பேசாத உங்க சூத்தே இவ்வளவு பெரிய சத்தத்தை வுடும்போது பேசுற என் வாயிலேர்ந்து சத்தம் வந்தா என்னாவாம்?’ என்று என்னை வாயடைத்தவள் அவள். இப்போது ஃபோன் வேறு வந்துவிட்ட பெருமை! அடுத்த மாதத்திலேர்ந்து – அட, நாளைன்னையிலிருந்து – Etisalat மேலும் ஒரு திர்ஹத்தை குறைத்துவிட்டது. நேரத்தை அதிகப்படுத்தி , அதிக ஃபோன் செலவில் வந்து நிற்கலாம். அதன் கொடூரமான லாபக்கணக்கை அதிகப்படுத்த. ‘தண்ணி call’க்கு சமமாக வந்துவிட்டால் நல்லதுதான். சர்க்காரிடம் கொஞ்சநேரம் பேசலாம். இன்று குரல்கேட்டு வைத்தது போலில்லாமல். நோன்பு வைத்ததைச் சொன்னேன்.

‘சரி’.

‘வேறு செய்தி சர்க்கார்?’.

‘ஒண்ணுமில்லே’.

சரி!

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார்
ரியாலத் – ‘SS’ பயிற்சி
தஸவ்வுஃப் – ஆன்மீகப் பயிற்சி
ரூஹானியத் – இறைசக்தி
இல்ஹாம் – உதிப்பு
பரக்கத் – அருள்
மலாயிகத் – வானவர்
சஹர் – நோன்பு பிடிக்கும் இரவு நேரம்
இஸ்மு – மந்திரம்
மிஸ்கின் – பிச்சைக்காரன்
அவுலியா – இறைநேசர்
தீன் – மார்க்கம்
ஆப்ரா – கால்வாய் / படகு
கந்தூரா – அரபிகள் அணியும் உடை
ரசூலுல்லா – ரசூலின் நபி. அல்லாஹ்வின் நபி . முஹம்மது நபி (ஸல்)
ரஹ்மானியத் – நல்லசக்தி
வெடை – கிண்டல்
Etisalat – டெலிஃபோன் கம்பெனி
தண்ணி call – ஊரிலிருந்து டெலிஃபோன் அழைப்பை பெறும் முறை

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (22)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21

அத்தியாயம் 22

ஆபிதீன்

*

03.02.1996 கேஸட் தொடர்ச்சி :

‘Body கிடக்குது.. Physical Body – இது உடம்பு. அடுத்தது Emotional Body – இது உணர்ச்சி Body; உணர்ச்சிக்கான உடம்பு. அடுத்து மூளைக்குள்ள உடம்பு. இதை பார்க்கும்போது ‘மூளை’, ‘Intellect’ண்டு ஏன் சொல்லனும்டு கேக்குறேன். பார்த்தா தெரியலையா? இதை சூஃபியாக்கள் செய்யும்போது , ‘இது Intellectual Body’, ‘This is Emotional Body..’ அப்படீண்டா சொல்லிக்கிட்டிப்பாங்க? நான் சின்னபுள்ளையில ஒண்ணு செஞ்சேன், அது மாதிரி செய்யிறீங்களோ? தொழுகைக்குள்ள ஷரத்துகளில் ஒண்ணு , நேரம் அறியிறது. நான் மணியை உத்துப்பாத்துப்புட்டுத்தான் போவேன்! அப்பத்தான் ஒத்தஹ சொன்னாஹா , ஒரு நாளு. ‘இப்ப என்னா டைம், என்னா தொழுவப் போறோம்?’ ‘அஸர் தொழுவப் போறோம்’. ‘அதான் வாஹிது சாபு.. என்னா தொழுவப்போறோமோ அதுக்குள்ள நேரம். இதைப் பாக்கனும்டுதான் அர்த்தமே தவிர அலங்காரவாசல் மணிக்கூண்டை பாக்குறதல்ல!’ண்டாஹா. அப்படித்தான் நீங்க செய்யிறீங்க’

‘கரெக்டா வேலை செய்யிது சர்க்கார்.. கலைச்சி , கோர்க்கும்போது உள்ளுறுப்பும் வெளியுறுப்பும் பெர்ஃபெக்டா அமையனும்டு மனசுல நெனைச்சுக்கனும்லெ?’

‘ம்..அப்ப, ‘Perfect’ண்டு சொல்வீங்களோ?! உங்களுக்கு வழிகாட்டுறதுக்குள்ளே என் தலையில உள்ள மயிர்லாம் கொட்டிடும் போலக்கிது’

*

குர்ஆனின் மொழி :

‘உங்களுக்குத் தெரியுமா, குர்ஆன் ஷரீஃபே அரபிலெ வரலே! ‘வஹி’ எப்படி வந்திச்சி?’ – ‘S’

‘ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் வந்து..’

‘அரபிலெ சொன்னாஹலா? சொன்னதாக தெரிஞ்சிச்சி! அஹ (ரசூல்) மனசுல ஏற்பட்ட தோற்றம்தான் அது. புரியுதா? ஆக்சுவல்லி, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’டு சொன்னாஹாங்குறது ‘குஃப்ர்’ . அல்லாவை அரபி மொழியிலெ கற்றுக்கொடுக்குறதா அர்த்தமாயிடும். அல்லா பேசுற பாஷைக்கு மொழி கிடையாது, எழுத்து கிடையாது, ஒரு செகண்ட்லெ ஆயிரம் ரிகார்டு பேசலாம். அதனாலெதான் ‘வஹி’ இறங்குன உடனேயே இஹ மயக்கம் போட்டு வுழுந்துடுறாஹா… அதே சமயத்துலே, இந்த வஹி இறங்கும்போது அதை எப்படி எடுத்துக்குறது, transact பண்ணி கொண்டு வர்றதுண்டு முயற்சி பண்ணிக்கிட்டிக்கிம்போது , ஆயத் வந்திச்சி: ‘நீ வஹி வரும்போதுலாம் நாக்கை காட்டிக்கிட்டு இருக்காதே, வார்த்தைகளைப் பின்னாதே, எப்படி பாதுகாக்குறது, எப்படி மக்களுக்கு சொல்லவைக்கிறதுங்குறது எங்களுக்குத் தெரியும்’டு! மணியோசை மாதிரிதான் ‘வஹி’ கேட்கும். மறுபடி மொழி மொழிங்குறீங்களே.. ! மொழியால என்னா மயிரையா புடுங்க முடியும்? பொண்டாட்டி மேலே ஏறி உட்கார்ந்துட்டு , ‘தலை’யை வச்சிக்கிறேன், ‘அமுக்கப்போறேன்’,’உள்ளே உட்டுடப் போறென்’,’போய்க்கிட்டிக்கிது’,’வுட்டுட்டேன்’ண்டு சொல்லிப் பாருங்களேன்! ‘Physical Bodyயை நான் பாக்குறேன்’ ‘Physical Bodyயை கலைக்கிறதுக்கு suggestion கொடுக்குறேன்!’ ஹூம்ம்… அப்ப, வேற ஆளு வந்து கலைக்கனும், அதுக்கு நீங்க suggestion கொடுக்குறீங்க.. அப்படியா? அமைதியா உட்கார்ந்து கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்க. எவ்வளவு பெரிய தப்பு நீங்க பண்ணிக்கிட்டிக்கிறீங்கண்டு தெரியும்’

மூத்த சீடர் , கவனித்து செய்வது பற்றி சர்க்கார் சொல்லியிருக்கிறார்களே முதலில் என்று சொல்லவே சர்க்கார் பதில் சொல்கிறார்கள்: ‘கவனிச்சி செய்ய வேண்டியது கரெக்ட். இன்னதை செய்யிறோம்டு வார்த்தையாலே சொல்லிக்கிட்டுத்தான் செய்யனும்தான். அது ஒரு தனி பிராக்டிஸ். இதுக்கு (‘SS’) செய்யக்கூடாது’.

நினைப்பதைச் சொல்வதாகச் சொன்னதால் வந்த குழப்பம்!

‘ஆனா ஒண்ணு, வார்த்தையை நீங்க போட்டீங்கண்டு சொன்னா தெய்வத்தன்மை வராது அங்கே. வார்த்தைக்கு அப்பாற்பட்டவன் ஆண்டவன். வார்த்தையாலே போட்டு கட்டுப்படுத்துனீங்கண்டு சொன்னா தூரமா பொய்டுவீங்க. ஒரு குழந்தைக்கு முட்டாய் வாங்கிக்கொடுத்தா என்னா சொல்லும்? ‘ஹைய்யா!’ங்கும். ‘முட்டாயி’, ‘தாள் சுத்துன முட்டாயி’, ‘சாக்லெட் கலர் முட்டாயி’, ‘முக்கிப்போட்ட பீ மாதிரி உள்ள முட்டாயி’ண்டா சொல்லுது?!’ – ‘S’

*

‘வார்த்தையை நெனைச்சா உள்ளுக்குள்ளே லேசா நாக்கு ஆடும். கண்ணை மூடிக்கிட்டு பெரிய மினாரா ‘குப்பா’வை பாருங்க. கண்ணு மேலே வரும். வார்த்தையாலே நாக்கசைவு வரும். நாக்கசைவு வந்திச்சிண்டு சொன்னா ‘ரியாலத்’ பலிக்காது. மெயின் நோக்கம் என்னவோ அது கெட்டுப்பொயிடும்’

‘கல்காயில்’ இஸ்மு ஓதும்போது நாக்கு ஆடுது சர்க்கார்’

‘அதெப்படி? அதை கொட்டையாலெயா சொல்லமுடியும்?! ஆனா, கண்ணு பாக்குற இடத்துலே நாக்கு ஏன் அசையனும்?’

‘சில நேரத்துலெ எச்சிலைக் கூட்டுறமாதிரி வருது’

‘இப்ப.. எச்சில் தானா ஊறுதுண்டாக்கா முழுங்கிக்கிடுங்க. எச்சி ஊறுதுண்டா ஊறட்டும். ‘எச்சியாகப்பட்டது ஊறாகப்படுது’ண்டு சொல்லிக்கிட்டிக்காதிங்க! ஓதுற இடத்துலெ – இத்தனை தடவைதான் ஓதனும்டு ‘தலாத்தீன்’, ‘கம்ஸன்’, ‘சபஅன்’ண்டு சலவாத்துக்கு இடையிலே போட்டிருக்கும். ரொம்பபேரு இதையும் சேர்த்து ஓதுவாஹா! நீங்கள்லாம் இப்படித்தான் செய்யிறீங்க!’ – ‘S’

*

அனல்ஹக் :

‘திக்ரு பண்ணனும். பண்ணிக்கிட்டே வர வர வர அந்த சவுண்ட், க்ராஜுவலா கூடிக்கிட்டே போவனும். அப்ப வெறுமனே நாக்குதான் அசையும். மனசுல அந்த பொருள்தான் நிக்கிம். அப்படி அசையும்போது அந்த பொருளுக்குத் தகுந்தமாதிரி நாக்கு அசைய ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு தாண்டுன பிறகு நாக்கு அசையாது. உள்ளத்துலே ஓடிக்கிட்டிக்கிம். அப்படி ஓடிக்கிட்டிக்கும்போது வெளிவந்ததுதான் ‘அனல்ஹக்’ங்குற வார்த்தை. அஹ (மன்சூர் ரலியல்லாஹூ அன்ஹூ) விரும்பிச் சொன்னதல்ல’ – ‘S’

*

20.08.1996

தொடர்ந்து 3வது வேளையாக ஈரலைச் சாப்பிட்டுவிட்டு எழுத உட்காருகிறேன். நேற்று இரவு, சஹருக்கு, அப்புறம் கடைசியாக நோன்பு திறந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து , இப்போது. அப்பாடா, இனி மூத்திர நாத்தம் ரூமில் இருக்காது! ஈரல் நல்ல கறிதான். ஆனால் ஊரில் உம்மா பெரட்டிக் கொடுக்க வேண்டும். அந்த மசாலாவே தனி. என்னதான் இங்கே மஸ்தான் மரைக்கான் படாதபாடுபட்டு வேகவைத்து மசாலாவை அள்ளித் தெளித்தாலும் மீறிக்கொண்டு வந்துவிடுகிறது. ஆஸ்திரேலியா மூத்திரமா இந்திய மூத்திரமா? விலை உயர்ந்த இந்திய இறைச்சி விற்கிற கடையில் வாங்கியதாகத்தான் சொன்னான். வாங்கிக்கொண்டிருக்கும்போது ஜெப்பார்நானாவையும் கிட்னி, ‘பல்லுகுத்தி’க்காக பார்த்ததில் , இது ஏதோ சர்க்கார் சமாச்சாரம் என்று விளங்கிவிட்டது அவனுக்கு லேசாக. ‘ஷோக்கான சர்க்கார்ப்பா சாபு’ என்று கிண்டல் பண்ணினான். நான் ஒன்றும் தெரியாத மாதிரி நடித்துச் சமாளித்தேன். நோன்பு வைப்பதை யாருக்கும் சொல்லக்கூடாதே.. வெறும் இஸ்முவும் நோன்பும் இருக்கும் என்றுதான் ஜெப்பார்நானா சொல்லியிருந்தார். சேர்ந்து 14 வருடத்தில் இந்த மாதத்தில் ஏதும் விசேசம் இருந்ததேயில்லை, இது ஏதோ புதிதாக என்று சொல்லியிருந்தார். ஃபேக்ஸ் அனுப்பவேண்டிய கவுஸ் மெய்தீன் இன்னதுதான் செய்யவேண்டும் என்கிற விஷயத்தை சர்க்கார் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தும் ஏனோ தாமதப்படுத்தி விட்டார். அவரும் அலைந்திருப்பாரோ ஊரில்? அங்கே கிடைக்காத சாமானா? இங்கும் என்ன, வந்த ஃபேக்ஸ் ஒருநாள் முன்னதாகவே வந்திருந்தால் ஷரத்துபடி ஈரல், பல்லுகுத்தி, கிட்னி மூன்றையும் மார்க்கெட்டில் ஃப்ரெஷ் ஆக வாங்கியிருக்கலாம். அத்தனை தொழிலாளர்களின் உறுப்புகளும் தனித்தனியாகக் கிடைக்கும்போது ஆட்டு ஈரலுக்கா பஞ்சம்?

நேற்று காலை ஆஃபீஸூக்கு வந்தது ஃபேக்ஸ்.

‘19.08.1996 அன்று இரவு (பிறை 5) , ஆட்டு ஈரல்+ பல்லுகுத்தி+கிட்னி இந்த மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு , அதன் பாதியை அன்றே (20.08.1996) சஹருக்கும் , அன்று நோன்பு திறந்ததும் இரவு உணவுக்கும் சாப்பிடவேண்டும். அன்று மட்டும் உயிருள்ள வேறு எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது (இதைத் தவிர). ஃபஜர் பாங்கிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும்.ஃபஜர் பாங்கில் , ‘ஹய்ய அலல் ஃபழா’ என்ற வார்த்தையைக் காதால் கேட்டவுடன் , ‘யா ஹக் யா முபீன்’ என்று கிழக்கு நோக்கி அமர்ந்து , 210 தடவை ஓதவேண்டும். தொழுபவர்கள் லுஹர் மட்டும் தொழக்கூடாது. நோன்பு திறப்பதற்கு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மிஸ்கினுக்கு 5 ஆப்பம் (அ) 5 தோசை (அ) 5 பறாட்டா கொடுக்க வேண்டும் , (ஏதாவது ஒன்று). கொடுத்து, மிஸ்கின் போகத் திரும்பியதும் மீண்டும் மிஸ்கீனைக் கூப்பிட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு நாம் திரும்பி வந்து விட வேண்டும், நோன்பு திறந்ததும் டீ, காஃபி, பழங்கள் சாப்பிடலாம். நோன்பு பிடித்திருப்பதை வெளியே சென்று யாரிடமும் தெரிவிக்கக்கூடாது’

‘அய்யய்யே’ என்றார் ஜெப்பார் நானா – ஃபேக்ஸை நேற்று பகல் அவர் ரூமில் கொண்டுபோய் நான் கொடுத்தபோது. ‘இப்ப என்னா பன்னுறது.. மார்க்கெட்லெ காலைலதான் கெடைக்கிம். பஜாரை நைட் ஒரு சுத்து சுத்துறேன்’ என்றார். மெஹ்பூப் ரெஸ்டாரண்ட், திருச்சி ரெஸ்டாரண்ட், அப்பா கடை, அப்துல் ரஹ்மான் கடை, முகவை ரெஸ்டாரண்ட்.. தமிழ்நாடு சலூன் பக்கமுள்ள தமிழ்நாடு ரெஸ்டாரண்ட் அப்புறம் பலுதியாவுக்கு பயந்து நடுங்கி அவ்வப்போது திறந்து மூடுகிற லெப்பைக்குடிகாடு மெஸ், மதுக்கூர் மெஸ்.. நன்றாகத்தான் அலைந்திருக்கிறார். ஈரல் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. கிட்னி ஒரு வகையாக, ஹைதராபாத் ரெஸ்டாரண்ட்டில் ‘கொஞ்சக்கோனு’ இருந்திருக்கிறது. இந்த ‘பல்லுகுத்தி’..! ‘இது என்னா ஊரா?’ என்று முணுமுணுத்தவாறே ஜெப்பார்நானா சொல்லி ஒரு கிட்னியை கொடுத்தார்..

ஃபேக்ஸ் பேப்பர் வரும்போதே சாம்பிள் சாமான்களும் (உம். ‘பல்லுகுத்தி’) வருவதுபோல கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!

இது எதற்கு, யாருக்கு? கேட்கத் தேவையில்லை. ஈரல் Physical Bodyக்காக இருக்கலாம். கிட்னி, Intellectual Bodyக்காக இருக்கலாம். ‘பல்லுகுத்தி’தான் Emotional Bodyக்கு! அதைக் கண்டுகொள்வதும் அடக்கி நம் வசப்படுத்துவதும் சாதாரண விஷயமா? மூன்றும் ஒன்றாகக் கிடைக்காதபோது என்ன செய்வது? Astral Body வருத்தப்பட்டுவிடாதோ?

சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும்.

‘இது மூணுமே ஷரத்தாச்சே! ம்.. ‘ என்று யோசனை பண்ணினார்களாம். பசுநெய், கோதுமை ரொட்டி, சீனியைச் சொன்ன அவர்கள்.. ‘ஆனா உறைப்பு இருக்கனுமே’ என்றும் சொல்லியிருக்கிறார்கள் – குழம்பியபடி. ‘சரி ..கிடைக்கிறதை என்னெட்டெ சொல்லுங்க, நான் பாத்துக்குறேன்’ என்றார்களாம் கடைசியாக. எதுவாக இருந்தாலும், நான் ‘தேரா’தான் போகவேண்டும். இந்தக் காட்டில் சீனிதான் கிடைக்கும். கோதுமை ரொட்டி, குப்ஸ் மாதிரியே அங்கு எல்லா க்ரோசரிகளிலும் இருக்கும். அது இல்லாது போனாலும் சப்பாத்தி வாங்கலாம். நான் சப்பாத்திதான் வாங்கினேன், பெங்களூர் ரெஸ்டாரண்ட்டில். அது சைவ உணவகம் என்பதை மறந்துவிட்டு ‘கிட்னி இருக்கிறதா?’ என்று வேறு கேட்டுத் தொலைத்தேன். ஐயர் முறைத்தார். காசுக்காக துபாய் வரும்போது துலுக்கன் பேச்சை கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் அவர். இந்தியாவுக்கு வா பாய்! சப்பாத்தி+ ஈரல். ஓஹோ!

மஸ்தான் மரைக்கான் துரிதமாக சமைத்துக்கொடுத்தான். ‘நல்லா பெரட்டிக் கொடுப்பா’ என்று சொன்னதும் சட்டுவத்தால் ஈரலை ஒருமுறை தூக்கி , அப்படியெ பெரட்டிப் போட்டான்! பார்சல் கட்டிக்கொண்டு நேற்று இரவே அவீருக்கு திரும்பினேன். Humidityயில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருந்தேன். அறையில் நுழைந்ததும் ஆசுவாசம். இந்த அறைதான் சரி. அங்கே சஹர் நேரத்திற்கு எழுந்து உண்டால் நோன்பு என்று தெரிந்துவிடுமே.. கடைசியில் ‘ஈரல் சாபு’ என்று சர்க்காருக்கு மஸ்தான் மரைக்கான் பெயர்வைத்துவிடப் போகிறான்! ஆபிதீனும் நோன்பு என்று சொல்லாமலிருக்க – இருமுறை டீ போட்டுக்கொண்டு வந்த கப்பமரைக்காரிடம் – ‘வயித்தால போவுது’ண்டு சொல்லவேண்டி வந்தது. அவர் மிக அனுதாபமாய் ‘சுலைமானி’ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்!

*

ஒரு கிலோ ஈரல் 16 திர்ஹம். நான் பாதி எடுத்துக்கொள்வதால் 8 திர்ஹம் தனியே கொடுத்தால் போதும் – மெஸ் காசு என்று இல்லாமல் என்று ஒரு கணக்கு சொன்னான் மஸ்தான் மரைக்கான். எனக்கு கெஸ்ட் என்று இத்தனை வருடங்களில் ஓரிருவர்தான் வந்திருக்கிறார்கள். வாராவாரம் அவனுக்கு கெஸ்ட் வருகிறது. அந்தக் காசையெல்லாம் நானும் பங்கு போடவேண்டும். இப்போது மட்டும் இப்படியொரு கணக்கு!. ஈரல் துடித்தது! காசு சம்பாதிக்கத்தான் துபாய். சகோதரனாவது மண்ணாவது. பெரியம்மாவின் மகன் அவன்.

சின்னம்மா மகன் தௌஃபீக்கிடம்தான் ஃபரீதுக்கு பணம் அனுப்பி வைத்தேன், உண்டியலில். வழக்கமாக ‘MKT’ கமால்காக்காவிடம்தான் அனுப்புவது. கீழக்கரை கடலில் அது சங்கமிக்கும். என்றாலும் பக்கத்திலுள்ள தெரிந்த ஆற்றில்தானே போட முடியும்? அவர் மூன்றாவது முறையாக மூளை பாதிக்கப்பட்டு ஊர் போயிருந்தார். மூன்று முறையும் , நாக்கூர் கம்பெனியில் வேலைபார்த்ததைத்தான் காரணமாகச் சொன்னார்கள். அண்ணன் தம்பி கம்பெனிகள்… விதிவிலக்காக எவர்பிரைட் கம்பெனி மட்டும்தான் இருந்தது. மூன்றுமாதம் போனஸ், மூன்று மாத விடுமுறை, வெள்ளைக்கார வேலை நேரம், நாக்கூர் சாப்பாட்டோடு தங்குமிடம் என்று வேலை பார்த்தவர்கள் அனைவரையும் வயிறு ஊதிப்போகுமளவு தள்ளிவைத்து… தானும் ஒரேயடியாக மயக்கத்தில் படுத்துவிட்டது . எவ்வளவு பெரிய வயிறு! இதைத்தவிர , இங்குள்ள நாக்கூர் கம்பெனிகளுக்கு மூளை மிக அவசியம். எடுத்துக்கொள்வார்கள் மொத்தமாய். அல்லது வேலைநேரம், தொந்தரவு என்று பல கரண்டிகளை உள்ளேவிட்டு குடைந்துவிடுவார்கள். பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும்? தப்பித்து வந்தவன் நான்தான். நான் என்னை இன்னும்கூட உணரவில்லையோ என்னமோ! என்னிடம் தௌஃபீக் சொன்ன கணக்கு , உணரவைப்பதற்காகத்தான் இருக்கும். ‘உங்கள்ட்டெயிலாமா கமிஷன் வைப்பேன் நானா?’ என்று கேட்டான். 1000 ரூபாய்க்கு 97 திர்ஹம் வீதம் வாங்கினான். அவனுக்கு கொடுக்கவேண்டிய 2000 திர்ஹம் வேறிடத்திலிருந்து வராமல் போகவே , ஃபரீதுக்கு ஃபோன் செய்து அவன் வீட்டிற்கு கொடுத்துவிடச் சொன்னான் – 1000 ரூபாய்க்கு 95 வீதம்!

மிஸ்கீனிடம் புரோட்டாவும் காசும் கொடுப்பது மட்டும் முடியவில்லை. ஊரில்தான் மார்ச் இஸ்முவுக்குக்கூட அஸ்மாவை கொடுக்கச் சொன்னேன். அதேபோல் இப்போதும் செய்தேன். இங்கே எங்கே தேடுவது? மிஸ்கீன்களாக இருந்தாலும் கார் வைத்திருப்பதால் ஒத்துக்கொள்ள வேறு மாட்டார்கள். சம்பளம் தராத கம்பெனிகளில் வேலைபார்ப்பவர்களை மிஸ்கீனென்று சொல்லமுடியாது. ஒரு வருடத்திற்குள் கிடைக்காமலா போகப்போகிறது? பஜாரில் கறுப்பு புர்காவை போட்டுக்கொண்டு சில சமயங்களில் மிஸ்கின்கள் உட்கார்ந்திருப்பாகள். ஆணா பெண்ணா? அரபியா , பங்காளியா? பள்ளிவாசல்களிலும் – வாசலில் – பார்க்கலாம். அவர்களிடம் குப்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்ளக்கூடும். புராட்டாவை வாங்கிக்கொள்வார்களா? எப்படியிருந்தாலும் ஆப்பம், தோசையை வாங்க மாட்டார்கள். அல்லது கொடுத்துப் பார்க்கலாமா? எதற்கு வம்பு? அஸ்மாவிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவோமே!

‘என்னத்துக்கும்மா?’ என்றாள் அவள்.

‘சர்க்கார் சொன்னாஹா புள்ளே. சொன்ன மாதிரியே கொடுத்துடு’

என்னத்துக்கும்மாவா?! யாருக்குத் தெரியும்? (‘நான் சொல்றதை மட்டும் கேளுங்க. உங்க புத்தியை இங்கே காட்டவே காட்டாதீங்க. இங்கே மூளைக்கு வேலையே இல்லை’. – ‘S’. 01-08.12.1995 கேஸட்).

‘என்னத்துக்கும்மா?’வில் வேறொன்று தெரிந்தது. இந்த விசேஷம் , உள்வட்டச் சீடர்களுக்கு மட்டும்தான். அவள் வெளிவட்டத்திற்கு வெளியேயுள்ள வட்டமாயிற்றே.. அப்படியானால் ரியாலத்தோடு இந்த கறிகள் தொடர்பு கொண்டவை. எந்த வகையில்? உங்க புத்தியை இங்கே காட்டவே காட்டாதீங்க. இங்கே மூளைக்கு வேலையே இல்லை!

இல்லை சர்க்கார், ஈரலைப் பச்சையாக சாப்பிடச்சொன்னாலும் சாப்பிடுவேன் நான்.

சிறுவயதில் எனக்கு மஞ்சள்காமாலை வந்தபோது ‘பரவை’க்குப் போய் மூலிகை சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்னால் உம்மா ஆட்டுப்பித்தை நிறையமுறை பச்சையாகக் கொடுத்திருக்கிறார்கள். அதில் மஞ்சள்காமாலை அதிகமானது வேறு விஷயம்! அதிலும்கூட குணமாகியிருக்கும் – இப்போதுள்ள நம்பிக்கை இருந்தால். சர்க்கார் என்கிற சக்தியிடம் ஒப்படைத்துவிடுவதில் ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே ‘இந்தியன்’ சினிமா டிக்கெட்டிற்கு அலைவதை விட ஈரலுக்கு அலைவதில் பிரயோசனமிருக்கிறது. கனவில் கமலஹாசன்கூட வந்து கோபித்துக்கொண்டான்.. போடா, உனக்குத் தடா! ‘அந மர்கஜ் உல் இல்ஹாம்..’

*

இன்று எப்ஸன் பிரிண்டரின் ரிப்பன் மிகப் பழையதென்று , மாற்றுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். அதைப்பார்க்காமல் , மொயீன்சாஹிப் பிரிண்ட்-அவுட் வரவில்லையென்று சொல்லிக்கொண்டிருந்தார். பாகிஸ்தான் ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும் உள்ள பிரச்சனைகளில் உள்ள கவலையாலோ அல்லது தன்னைவிட தன் தம்பி அங்கு ஃபைஸல் பேங்க்-இல் அதிகம் சம்பாதிக்கிற கவலையாலோ , நிதானம் இழந்திருந்தார். ஊர்போய் வந்தவரின் பேச்சில் உம்மாவை விட தம்பிதான் இருந்தான். வீனாபோபானிக்கு ஃபோன் பண்ணச் சொன்னேன். குஜராத்திக் கிழவி. இம்சை பண்ணிய கணவனைத் தூக்கியெறிந்துவிட்டு , தனியாளாக பிரிண்டிங் ஆர்டர் எடுத்து தைரியமாக வாழும் பெண்மணி. துபாய், பெண்களுக்கு தனி தைரியத்தைத்தான் தருகிறது. பகல் சாப்பாட்டுக்குப் போகும்போதுகூட ஒரு அரபிப்பெண் – எங்கள் வேனுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த வேனில் போய்க்கொண்டிருந்தவள் – கதவுக்கு வெளியே கையை நீட்டிக்கொண்டு , நடுவிரலை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டு மற்ற விரல்களை மடக்கிக்கொண்டாள். நடு விரல் ஆடிக்கொண்டிருந்தது! கந்துரா அணிந்திருந்த பலுச்சி டிரைவரை அரபி என்று நினைத்துக்கொண்டாளோ அல்லது எல்லாருக்கும் அப்படித்தான் காட்டுவாளா? இவள் ‘சின்னத்து’ பண்ணியவள் என்றான் டிரைவர். ஊரில்கூட சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஆண்களுக்கு ‘சின்னத்து’ செய்வதில் விஞ்ஞானம் இருக்கிறது – மதத்தையும் தாண்டிக்கொண்டு. பெண்களுக்கு ஏன்? சும்மா ஸ்டைலுக்கு! வீணாபோபானிக்கு சுன்னத் செய்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அலிமம்ஜாரிடம்தான் கேட்கவேண்டும்!

வீணாபோபானிக்கு ஃபோன் செய்யச் சொன்ன அடுத்த நொடியில் ஃபோன் வந்தது. ‘ஆபிதீன் சொல்லிட்டாரு. அவளாத்தான் இக்கிம்’ என்றார் கப்பமரைக்கார். அவள்தான்! சர்க்கார்., என்னை என்ன செய்கிறீர்கள்? நேற்றைய விசேஷத்தில் ஒரு தவறு செய்தேன். ‘இஸ்மு’வை மேற்கு நோக்கி அமர்ந்து ஓதி விட்டேன். கிழக்கில் அமர்ந்து ஓதியிருந்தால் நேரிலேயே வந்திருப்பாளோ அல்லது draft printer, laser printerஆக மாறியிருக்குமோ?! எப்படியோ, இந்த சின்னச் சின்ன அதிசயங்கள் போதும் இப்போது. மாற்றங்கள் வந்துகொண்டிருப்பதற்கு அறிகுறி.

‘சரி, மாற்றம் வந்திருக்கு.. வந்துகிட்டே இருக்கா? எதனாலெ வருதோ அது என்னா? மத்தவங்க யாருக்கு வரலையே… 25 வருடங்களுக்கு முன்னாலெ ஒரு ஆளைப் பார்த்தேன். இப்பவும் பார்த்தேன். அதேமாதிரிதான் இருக்கான். இப்ப உங்களுக்கு ஒரு சில வாரங்களுக்குள்ளே மாற்றங்கள் வருதே. காரணம் என்னா?’ – ‘S’ . 01-08.12.19954 கேஸட்.

‘நீங்க இக்கிறீங்க’ – சீடர்கள்

‘நான் இக்கிறேனா?! நான் கொடுத்த ‘ரியாலத்’துண்டு சொல்லுங்களேங்க!’ – ‘S’

இல்லை, ரியாலத்தும் ஈரலும்!

அக்ரிமெண்ட் டைப் அடித்து, மெடிகல் ரிஸல்ட் உள்ள லேபர் ஆஃபீஸூக்கு முதலாளி போக, என் ‘பத்தாகா’வும் வேண்டும் என்று நேற்று கப்பமரைக்கார் கேட்டார். என் பர்ஸ் எங்கே? அதில்தான் வைத்திருந்தேன். அரபுநாடுகள் அத்தனையிலும் அவைகளை உடம்பில்தான் வைத்துக்கொள்ள வேண்டும். ஜெராக்ஸை நம்ப மாட்டார்கள். மூளையைக் கசக்கிக்கொண்டு டென்சனாக ஆனேன். எங்கே வைத்தேன், அல்லது தொலைத்தேன்? சர்க்காரின் உருவம் தெரிந்தமாதிரி இருந்தது. ரிலாக்ஸ் ஆக உடம்பை வைத்துக்கொண்டு , அமைதியாக ஒரு கணம் அமர்ந்தேன். சுத்தமாக பர்ஸ் இருக்கும் இடம் தெரிந்தது. என் ஜோப்பு அல்ல! பேக்-அப் டிஸ்கெட் வைக்கிற அலமாரியில் வைத்திருக்கிறேன். சென்று பார்த்தேன். இருந்தது.

அமைதியாக உட்காரமுடியும் ஓரிடத்தில் , மணிக்கணக்காக இப்போது. இதேபோல் ஒரு சீடரும் சொல்கிறார். அந்த டிசம்பர் முதல்வார கேஸட்டில். ‘அசைவுகளில், எண்ண ஓட்டத்தில் மாறுதல் வரனும்’ என்று சர்க்கார் சொல்வதற்கு. ‘எங்கே, அலங்கார வாசல்லையா?’ என்று சர்க்கார் வெடைக்க ஒரே சிரிப்பு. ‘இல்லை இல்லை மாமா..’ – சீடர்.

‘அதானே பார்த்தேன்..! இங்கே உள்ளவனுவ நாயைப்பத்தி நாலுமணி நேரம் பேசியிருக்கானுவ அங்கே உட்கார்ந்து! இவ்வளவுக்கும், ‘பேச்சைக்குறை’ண்டு நான் மூணு மணிநேரம் பேசுனதை கேட்டுட்டுப் போயி!’ .

*

‘அப்பாற்பட்ட சக்தி ஒண்ணு நம்பள்ட்டெ நிக்கிது. நம்மளை ஏமாற வுடலேண்டு தெரியுது..’ – சீடர்

‘உண்மைதான். அப்பாற்பட்ட சக்திலாம் ஒண்ணுமில்லேங்க. நாமதான் அது! பிராக்டிஸ் வேலை செய்யும்போது , உண்மையான நாம அதுதான்!’ – ‘S’

*

இன்று சுகமாக வெளிக்கு இருந்துகொண்டிருக்கும்போது என் முன்னால் இருந்த பெரிய பிளாஸ்டிக் வாளியில் கண் சென்றது. அதன் மேல் , கைப்பிடி உள்ள குவளையை மாட்டியிருந்தேன். தண்ணீர் வாளியில் நிரம்பிக்கொண்டிருந்தது. அதன் அடியில் தண்ணீர் பட்டு, தண்ணீர் உயர உயர- வாளியிலிருந்து கழன்றுகொண்டு குவளை மிதக்க ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே வாளியின் அடியில் அது அமர்ந்திருந்தால் , இவ்வளவு நேரம் மிதக்கும் சுகத்தை , இழக்காமல் இருந்திருக்கலாம். பிடிவாதம் அல்லது விதி. ஆனால் தண்ணீர் அதனைப் பொருட்படுத்தாது தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டது சந்தோஷம்தான். என்ன சுகம்..

**

21.08.1996

கிட்னியுடன் ஒரு பழைய புத்தகத்தின் ஜெராக்ஸையும் ஜெப்பார்நானா கொடுத்தார் அன்று. ‘ஹகீகத்துல் இன்சான்’. இரங்கூன் விக்டோரியா அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது. வருடம் 1902. ஜெராக்ஸ்கூட அப்போதுதான் எடுத்தமாதிரி இருந்தது. ரியாலத்திற்கு சம்பந்தமான பழைய புத்தகம் தன்னிடம் இருப்பதாக முன்பு ஜெப்பார் நானா சொல்லியிருந்தார்தான். அதை எங்கே வைத்தார் என்று தேடிக்கொண்டிருந்தார். ‘உங்கள்ட்டெ உள்ள புத்தகங்கள், சர்க்கார் கேஸட்கள் எல்லாத்துக்கும் ஒரு இன்டெக்ஸ் போட்டு லிஸ்ட் வச்சிக்கிட்டா , எது எது எந்த எந்த இடத்துல இக்கிதுண்டு ‘டக்’குண்டு கண்டுபுடிச்சிடலாம் நானா. நான்லாம் அப்படித்தான் வச்சிக்குறேன்’

‘நல்லதுதான் இப்படி செய்யிறது. அந்த லிஸ்ட்-ஐ கொடுங்களேன். எனக்கு ஏதாச்சும் தேவைப்படுதாண்டு பார்க்கலாம்’

‘அத மறந்துட்டு வூட்டுலெ வச்சிட்டு வந்துட்டேன் நானா!’

அவர் சிரித்தார். ஆனால் மறக்காமல் அன்று எடுத்துக்கொடுத்துவிட்டார். எழுதியது , வழுத்தூரில் அடங்கியிருக்கும் அவுலியாவாம். சர்க்கார் மஷாயிகுல் காமில் செய்து சய்யது அப்துல் காசிம் சாஹிபு காத்ரீகத்தஸல்லாஹூ சிர்ரஜூல்லஜீஜ்யவர்களால் இயற்றப்பட்டது என்று போட்டிருந்தது. அதனுடன் ‘அஸ்றாறுல் புறுஹான் பீ அகுமாலில் இன்சான்’ இருந்தது. இன்சான்கள் அமல் செய்வதற்கு வலுப்பமான ரகசியமென்று பேர் வைத்தார்களாம் அரபியில். (‘ஹகீகத்துல் இன்சா’னுக்கு மானுடர்களின் அடிமுடியை வெளியாக்கும் அறிவென்று அர்த்தம்)

‘அதுல் ஹக்காயிக்குவென்கிற கிதாபில் முகம்மதி புனுயசீறு நஹூமுஹூல்லா அவர்களால் ஒரு கல்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:-

அல்லாஹூத் தாஅலா (கதீது குதூசியில்) உண்மையான ஆதமுடைய மக்களின் சரீரத்திலொரு தசைக்கட்டியையுண்டு பண்ணியதிலொரு மாளிகையை யெடுத்தேன், அதில் நின்றொரு இதயத்தையெடுத்தேன், அதில் நின்றொரு கல்பையெடுத்தேன், அதில் நின்றொரு சிம்மாசனத்தையெடுத்தேன், அதில் நின்றொரு குகையையெடுத்தேன், அதில் நின்றொரு ‘அக்லை’யெடுத்தேன், அதில் நின்றொரு ‘றூகை’யெடுத்தேன், அதில் நின்றோரறிவையெடுத்தேன், அதில் நின்றொருரகசியத்தையெடுத்தேன், அந்த ரகசியத்தில் நானென்று திருவுளமாயிருக்கிற தாயும்…

அல்லா பட்ட கஷ்டத்தைவிட அதிகம் படவேண்டும் – அந்த புத்தகம் படிக்க. அரதமிஷ்க்ருதத்தில் வேறு எழுதப்பட்டிருந்தது! இந்த டைரியின் எழுத்துகூட நூறுவருடம் கழித்து , தமிழில்லாதது என்று சொல்லப்படலாம். எல்லாம் மாறுகிறது. மாறாதது , மனிதப்படைப்புகளில் மலமொன்றுதான் பாவா!

கல்புகள், இருப்புகள், நட்சத்திரங்கள் போக , இருப்புகள் படமாக வரையப்பட்டிருந்தன. விஷயங்கள் மிகக்கடினமான பாஷையில் சொல்லப்பட்டிருந்தன. அந்த காலத்திற்கு அது சரி. அதைப்புரிந்துகொள்கிற அளவுக்கு சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.

தளவாய் ம.சின்னவாப்பா மரைக்காயரென்கிற அகுமது பந்தர் மரைக்காயரவர்களும் சீடர்களுள் ஒருவர். அவர் நாக்கூர் என்று போட்டிருக்கவே விசாரித்ததில், ‘அட, நம்ம பர்மா பார்ட்டி’ என்று ஒருவர் பதில் சொன்னார். ஆக, நாக்கூர் ஆள்தான் அவர். சாற்றுகவி ஒன்று சாத்தியிருந்தார்.

‘தேனுகுக்குஞ் சோலை செறிதிரு வழுத்தூரின்
கோனப்துல்காசீமால் கோர்வைசெய்த பானலத்த
அஸ்றாறுல் புறுஹான்பீ அகுமாலுல்லானின்சானில்
விசுவாசம் வைப்பீர் விரைந்து’ என்று வெண்பா. பிறகு ஆசிரிய விருத்தம். பிறகு அறுசீர்க்கழிநெடிலயாசிரிய விருத்தம். விசுவாசம் வைத்தால்?

‘மீமில்லா அஹ்மதைத் தேடு … …மிஃ
றாஜில் நீ ஐனில்லா அறபியைக் கூடு
நீ இல்லாத் தலமெத்த நாடு.. அந்த
நியமம் தெரிந்து நீ நின்று கூற்றாடு’ என்று , பாவாவின் ஆனந்தக்களிப்பு வரலாம் விரைந்து.

‘நபி சல்லல்லாஹூ அலைஹிவசல்லமவர்கள் சைகாகிறவர் நபியைப் போலென்றும், எவனுக்கு சைகில்லையோ அவனுக்கு தீனில்லையென்றும் எவனுக்கு ஷைகு இல்லையோ அவனுக்கு சைகு சைத்தானென்றும் எவனொருவன் காமிலான சைகாயிருக்கவில்லையோ அவனிடத்திலொருவன் முறீதானால் அவனுக்கு அந்த ஷைகு சைத்தானென்றும் எவனுக்கு பைஅத்தில்லையோ அஹ்ல இஸ்லாமில் அவன் முஷ்ரிக்கென்றும் அறிவைத் தேடுவது ஆண் பெண்ணடங்கல் பேரிலும் பறுலாயிருக்குமென்றுந் திருவுளமாயிருக்கிறார்கள்’ என்று பாவா சொல்லியிருந்தார்கள்.

ரசூலுல்லாஹ் அப்படி திருவுளமாயிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் என் ‘சைகு 1996’ சொன்னது ஒன்று உண்டு :

‘அறிவை அடையிறதுக்கு மூணு வழி. ஒண்ணு, யோகம். இன்னொன்னு சூஃபிஸம். மூணாவது நம்ம ரூட். இதுலெ நம்ம ரூட்டு (மட்டும்) ஸ்பெஷல். எப்படி? கைமா போட்ட மசால் வடை மாதிரி!’

‘பர்மா பார்ட்டி’க்கு அந்த காலத்தில் வடை கிடைத்ததா, கிடைத்ததும் வடைதானா என்று தெரியவில்லை. வடையாக இருந்தாலும் இப்போது ஊசிப்போனது. சர்க்கார் சுடுகிற வடை இன்றைய நாக்கிற்கு இன்றே சுடுவது, கைமாவோடு அல்லது ஈரல்+கிட்னி+பல்லுகுத்தியோடு.

*

23.08.1996 வெள்ளி ‘செஷன்’ முடிந்து.

நேற்று இரவு , மஸ்தான் மரைக்கான் ஃப்ளாட் வாசலில் என்னசெய்வது இப்போது என்று நினைத்து நின்றுகொண்டிருந்தேன் ஐந்து நிமிடம். கதவு பூட்டப்பட்டிருந்தது. வியாழன், அரைநாள் ஆபீஸ் இருக்கிற ஆட்கள் வழக்கமாக இருப்பார்கள்தான். ஆனால் இன்று என்ன வேலையோ? மஸ்தான் மரைக்கானும் படத்திற்கு போய்விட்டானோ? இதற்கு மேல் ஹலால்தீன் ரூமுக்கு போவதற்கு அலுப்பு. இப்போது மஸ்தான் மரைக்கான் வந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்த அடுத்த நொடியில் பெரிய குசு சத்தம். மஸ்தான் மரைக்கான் வந்துவிட்டான்! அவன கையிலும் சாவி இல்லை ஆனால். இன்றைக்கு ஏதும் கோபப்பட விஷயமில்லையே என்று கோபப்பட்டு குதிப்பவன் அவன். குதித்தான். 6 வாரமாகிறது தௌஃபீக் கையில் சாவியை கொடுத்து டூப்ளிகேட் போடச்சொல்லி. அதைச் செய்யவில்லை, தன்னுடையதையும் எடுத்துக்கொண்டு ‘சோத்துப் பத்தாகா’வை வைத்துக்கொண்டு வெளியே சுற்றுகிறான்’ என்று. பஜாருக்குப் போய் , எதிர் ரூம் ஆளிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு வந்தான். நான் ரிலாக்ஸ்டாக நின்றுகொண்டிருந்தேன், தௌஃபீக்கைப்பற்றி யோசித்தபடி. மஸ்தான் மரைக்கான் வந்து கதவைத் திறந்ததும் கிச்சன் ஜன்னல் வழியாகக் குதித்து அவன் அறைக்குப் போனால் தௌஃபீக்கிடமிருந்து ஃபோன். ‘நானா.. டூப்ளிகேட் சாவியைப் போட்டுட்டேன்!’ என்றான். 6 வாரமாகப் போகிறது. நான் நினைத்தது இன்று. வடை!

இந்த வெள்ளி கேட்டது 08.03.1996 கேஸட். டென்சன் பற்றிப் பேசி சீடர்களை படு tensionக்கு உள்ளாக்கினார்கள் சர்க்கார். அது வரும் விதம், பூறும் விதம், அடங்கும் விதம்… நான் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘Tension வரும்போது அசையாதீங்க! ‘Take it in your straight’. Stimulationக்கும் Relaxationக்கும் இடையில் உள்ள நிலையைப்பற்றி பேசுகிறார்களாம்.

‘அந்த ரெண்டுக்கும் இடையிலே உள்ளதுக்கு பேரு என்னா சர்க்கார்?’ கவுஸ்மைதீன்

‘ம்.. இஞ்சிப் பச்சடி!’ – ‘S’

‘இஞ்சிப் பச்சடி’யை -பகல்தான் – மாங்காய்ப்பச்சடி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணர்ந்தேன். ஃபாத்திமா, உம்மா மாதிரி செய்திருந்தாள். அவள் வரும் 27-ஆம்தேதி ஊர் போகிறாள். இரண்டு வருடத்திற்கொருமுறை வந்து இரண்டுமாதம் மட்டும் மாப்பிள்ளை ஊரில் இருப்பதில் பிள்ளை தரிக்கவில்லை என்று இங்கே வந்து இரண்டு வருடம் சேர்ந்து இருந்தும் பிள்ளை தரிக்கவில்லை. வருத்தமாய்தான் திரும்பி போகிறாள். வருத்தத்துடனேயே நான் கொடுத்த சில்வர் ‘செட்’டையும்வாங்கிக் கொண்டாள். நெக்லஸ், கைச்செயின், காது தொங்கல்கள் கொண்டது. ஆபீஸில் போனமாசம் வாங்கியது. காஷ்மீரிலிருந்து வருகிறோம் என்று வந்தான். விற்கத் தெரியாத சேல்ஸ்மேன் முக்தார் அப்பாஸூக்கு வந்திருக்கிறானே! ‘ஊத்’ கொண்டு வந்தாலே ஒரணாவுக்கு கேட்கிற அர்பாப்களிடம் வேலை பார்ப்பவர்களிடம் காட்டினால்? ஆனால் டிசைன் மிக அழகாக இருக்கிறது என்று அஸ்மாவுக்காக வாங்கினேன். இப்போது ஊர்போய் , உறவை புதுப்பிக்கப்போகிற (?) தங்கைக்கு ஏதும் வாங்கிக்கொடுக்க கையில் காசில்லாமலேயே அந்த சில்வர்-செட்டைக் கொடுத்தேன். தங்கமாயிருந்தாலே சில்வர்தான் அன்பளிப்பு கொடுக்கிற நிலையில் செம்புக்கு சில்வர் கொடுப்பது மேலல்லவா? முகம் சுளித்தது அவளுக்கு. நான் டென்சன் அடையவில்லை. இதில் அடைய என்ன இருக்கிறது? ஆனால் அவள் ஊர் வரும் விபரத்தை செல்லாப்பா , ஊருக்கு ஃபோன் செய்து தெரியப்படுத்தியபோது உம்மா டெல்லி பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து மறுபடியும் அப்ளிகேஷன்களை – பெயர்கள் சம்பந்தமாக – திருப்பி அனுப்பி விபரம் கேட்டிருக்கிறான் என்று சொல்லவே அவன் டென்சன் ஆகி என்னிடம் சொன்னான். நான் மாங்காப்பச்சடியை நிதானமாக சாப்பிட்டேன், அதே சுவையுடன்! நான் ‘H’. தீன்ஆ ‘H’. ஆபிதீனா?

இஞ்சிப்பச்சடி ஆபிதீன் என்று தூதரகத்திற்கு எழுதிப்போடவெண்டும். உடனே பாஸ்போர்ட் அனுப்பி விடுவான்!

*

நான் இஞ்சிப்பச்சடி என்று ரவூஃபுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆகஸ்ட் முதல்தேதி கடிதம் எழுதும்போது ஜூலை மாதத்தில் ரியாலத்தில் இஸ்மு’வின் மாற்றங்களைச் சொல்லவில்லை போலும். மிக முக்கியமாக ‘ஜம்’ இப்போது 3 மணி நேரத்திலிருந்து 1 1/2 மணி நேரமாக ஆகிவிட்டதையும் தெரிவிக்கவில்லை. கலிஃபா ஆகிவிட்டானோ என்னவோ.. ஊரிலிருந்து வந்த தஸ்தகீர் கொண்டுவந்தது என்று ஜெப்பார்நானாதான் புது இஸ்முகளைக் கொடுத்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாரமாக :

a). பி ஜலாலத்திகல்லாஹூம்ம யா ஹக் யா முபீன் யா வதூது யா கரீம் இர்ரஹ்மி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் உஆ கனி யா முக்னி
(19) Times . Body Gap = 6 அடி.

b). பி சத்துவத்திகல்லாஹும்ம யா வதூது யா கரீம் யா பாஷித் யா ரஹீம் இர்ரம்னி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் யா கனி யா முக்னி
(14 ) times. Body Gap = 6 அடி.

c). பி சத்துவத்திகல்லாஹும்ம வபி ஜலாலத்திகல்லாஹூம்ம யா அஜீஜ் யா கரீம்
யா பாஷித் யா ரஹீம் இர்ரஹம்னி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் யா கனி யா முக்னி
யா ஹக் யா முபீன்.. (17 ) times. Body Gap = 6 அடி.

குறிப்பு : ‘b’-இலிருந்து , கற்பனையில் நீரோடை மட்டும்தான். அந்த பசுமையான மலை இப்போது இல்லை.

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார் என்பதன் சுருக்கம்
ஷரத்து – விதிமுறை
வஹி – இறைச்செய்தி
குஃப்ர் – இணைவைத்தல்
ஆயத் – (இறை) வசனம்
குப்பா (gubba) – மினாராவின் ‘தலை’
ரியாலத் – (‘SS’) பயிற்சி
தலாத்தீன் – 30, கம்ஸன் – 50 , சபஅன் – 70
சலவாத் – ரசூல்(ஸல்)ஐ புகழ்ந்து சொல்வது
அனல்ஹக் – நானே இறைவன்
சஹர்- நோன்பு பிடிக்கும் இரவுநேரம்
பல்லுகுத்தி – ஆட்டின் உள்பகுதிகளில் ஒன்று
இஸ்மு – மந்திரம்
ஃபஜர் – அதிகாலை தொழுகை
பாங்கு – தொழுகைக்கான அழைப்பொலி
லுஹர் – பகல்நேரத் தொழுகை
மிஸ்கின் – பிச்சைக்காரன்
பலுதியா – முனிசிபாலிடி
சுலைமானி – பால் கலக்காத டீ
அந மர்கஜ் உல் இல்ஹாம்.. – நான் அறிவின் மையம் (ஒரு மந்திரம்)
கந்துரா – அரபிகள் அணியும் நீள அங்கி
சின்னத்து – கத்னா எனப்படும் மார்க்கச் சடங்கு
பத்தாகா – ID
அலங்கார வாசல் – நாக்கூரில் ஒரு இடம்
அமல் – செயல்
கதீது குதூசி – குர்-ஆனில் இடம்பெறாத – ஹதீஸில் இடம்பெற்ற – இறைச்செய்தி
கல்பு -இதயம்
ரூஹ் – உயிர்
பாவா – பெரியோர்களை அழைக்கும் விதம். பிச்சைக்காரர்களையும் அப்படி அழைப்பதுண்டு!
சைகு – குரு

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (21)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20|

அத்தியாயம் 21

ஆபிதீன்

*

05-12.01.1996 கேஸட்டிலிருந்து சர்க்கார் :

அல்லாஹ்வோட தெய்வத்தன்மை விந்துலதான் அதிகம்.

கெட்ட எண்ணம் சீக்கிரம் டெவலப் ஆகும். அதேமாதிரி நல்ல எண்ணம் டெவலப் ஆவத்தான் ‘ஜம்’

எவன் சிற்றின்பத்தைச் சுவைக்கவில்லையோ அவனுக்கு பேரின்பம் கிடைக்காது – ஜாமி (சூஃபி)

உலகத்திலேயே terrible force – செக்ஸ். விந்து உற்பத்தியாவது இறக்குவதற்காக அல்ல; ஆனா பீ உற்பத்தியாறது பேலுறதுக்குத்தான்.

நபிமார்கள்லெ ஈஸா அலைஹிவஸ்ஸலாமும், அவ்லியாக்கள்லெ நம்ம எஜமானும் (ஷாஹூல் ஹமீது பாதுஷா) Distinct Type. பெரிய ஃபோர்ஸ் அது. விந்தை எச்சியில் எடுக்கும் அளவு ஃபோர்ஸ்.

*

19-26.01.1996 கேஸட்டிலிருந்து :

Once ஆரம்பிச்சா முடிக்கிறது கடமை.

பொதுவான எந்த சட்டமும் விதி விலக்குகள் இல்லாததல்ல.

தீர்மானிக்கப்பட்ட காரியம் அரைவாசி வெற்றி கொள்ளப்பட்ட காரியம்.

எந்தப் பொருளைப்பத்தி அதிக மகிழ்ச்சி அடையிறீங்களோ அந்த காரியம் நடக்காது. மகிழ்ச்சி அடையிற காரணத்துனாலதான் நழுவுற வாய்ப்பு உண்டாவுது.

உங்களுக்கு சொல்லிக்கொடுக்குற பாதை, 12 வருஷம் காட்டுல போயி தவம் செஞ்சாங்களே..- அந்த ரிஸல்ட்டை ஊரிலிருந்தே அடையக்கூடிய பாதை. அதைத்தான் சொல்லிக்கிட்டிக்கிறேன்.

எப்ப ஒருத்தன் (நம்மைப் பார்த்து) எரிச்சல் படுறானோ , atleast நாம வாழுறோம்டு அவன் நினைக்கிறாண்டு அர்த்தம். அந்த எண்ணமே நம்மளை வாழ வைக்கும். அல்லது , actually நாம வாழுறோம், அவனுக்குத் தெரியுது, எரிச்சல் படுறான்! மத்தவன் எரிச்சல் படாம வாழுறது வாழ்க்கையல்ல. (மத்தவன்) எரிச்சலை வாங்கித்தான் வாழனும். at the same time, அது நம்மள பாதிக்காத அளவுக்கு control பண்ணிக்கனும். More Powerful than anything elseங்குறதல்ல, we are more powerful than that person.. அந்த அளவு இருந்தாலே போதும்.

*

26-01 to 02.02.1996 கேஸட்டிலிருந்து :

நீங்க உதவி செஞ்சிட்டு, ‘உதவி செஞ்சேன்’டு சொன்னாலே , நீங்க செஞ்சது உதவி இல்லேண்டு அர்த்தம்.

உலகத்தை சொர்க்கமாக்க பெண்களால் முடியும் – இளைஞன்
சொர்க்கமாக்க முடியும். நரகமாக்கவும் முடியும் – middle aged
பொம்பளையால ஒரு மயிரும் புடுங்க முடியாது – கிழவன்

எவ்வளவு கோடி கஷ்டம் வருமோ – அதை விளங்கும்போது – அவ்வளவு கோடி வெற்றி வரும்.

‘அடலைபுடலை’யாக வந்தால் முழுவெற்றி. ‘அடலை’யாக வந்தால் பாதி வெற்றிதான்.

கஷ்டத்திற்கு பிறகு வெற்றிங்குறது பாமரர்களுக்கு. நமக்கு கஷ்டமே இல்லை. கஷ்டத்தை நம்ம சக்தி வளர விடாது. (சிரமத்தை சிரமமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் குணம் வந்திருப்பதால்) கஷ்டத்தை வெல்ல முடியும்ங்கிற நம்பிக்கையால வெற்றி வரனும்.

தனக்குரிய நன்மையை பிறருக்கு தீங்கு செய்யாமல் அடைபவன்தான் கெட்டிக்காரன்.

Second natureஆக மாறுவதுதான் cosmic habit force. பழக்கமாக்கிடுங்கங்குறதைத்தான் வேற வார்த்தையிலெ சொல்றேன்.

ஆட்டுக்குட்டியைப் புடிச்சி உங்க கதையை சொன்னா எப்படி?

*

02-09.02.1996 கேஸட்டிலிருந்து :

அல்லாஹ்வை வணங்குறவங்க தன்னை மறந்து வாழனும். தன்னை மறந்திருக்கோம்டு எந்த செகண்ட்லெ நெனைக்கிறீங்களோ (அல்லாஹ்) அப்ப இல்லே!

இதை புக் ஃபார்முலெ கொண்டு வரணும். ஒண்ணு, உள்வட்டத்துக்கு (inner circle). அடுத்து, எல்லோருக்கும். ஏண்டா, ‘தப்பு செய்யிறதை விட தப்பு செய்துட்டு காரணம் காட்டுறது தப்பு (rationalisation)’ என்பதை ஜனங்கள்ட்டெ சொன்னா குழம்பிடுவாங்க. புஸ்தகத்தைப் படிச்சிட்டு ஒரு இஞ்ச், ஒரு அடி(யாச்சும்) வளரணும்.

ஒருத்தன் யாராக இருக்க நினைக்கிறானோ – (இந்தக்) கையை நீட்டுற இடத்துலெ – அதுவாக அது நடக்கும். இப்ப நீங்க பறக்க நினைச்சீங்கண்டு சொன்னா பறக்கலாம்; நீங்க நம்பனும்! நம்புறதுண்டா என்னா அர்த்தம்? சின்ன காரியத்துலேர்ந்து நம்பி நம்பி பழக்கப்படுத்திக்கிட்டே வரணும். அதைவிட – இந்த காத்துல பறக்குறதைவிட – எவனும் பண்ணாத சாதனையை, business lineலெ நாலுபேருக்கு வேலை கிடைக்கிறமாதிரி , செய்யனும். கூட்டம் போட்டு (காத்துலெ பறந்து ) காசு வசூல் பன்னுறதுலெ என்னா லாபம் இருக்கு? செய்யலாம்; முதல்லெ வரக்கூடிய மலர்ச்சி மனசுல வரணும். Faith! ‘Definiteஆ முடியும். with in our reach’ங்குறது தெரியும். வெறும் நம்பிக்கையல்ல, சுத்தமா தெரியும்.

எப்ப கோடி கோடியா வந்தாலும் ஆச்சரியப்படாத நிலைமை உங்களுக்கு வருமோ அப்ப கோடி கோடிங்குறது பத்து ரூவா மாதிரி வரும்.

(பொண்டாட்டியோட) உறவு வைக்கிம்போது ரிலாக்ஸ்டா பண்ணனும். குழந்தைய போட்டு பெரட்டுறமாதிரி பண்ணனும். அப்பத்தான் இடையிலே உருவிட்டுப்போயி , பிசினஸ் விஷயமா ஆற அமர ஃபோன்லெ பேசிட்டு, திரும்பி வந்து – செஞ்சாலும் வித்யாஸம் தெரியாது. பீ பேலும்போது முக்கக்கூடாது. உலக்கைப் பீயை ’ஸ்மூத்’தா பேலனும். மூத்திரம் பேயும்போதும் முக்கக்கூடாஅது. சொஹமா வரணும்.

சந்தோஷப்படக்கூடாது. எதுக்குச் சொல்றேண்டா, சந்தோஷப்படுற அதே நேரத்துலெ ‘இன்னும் எவ்வளவோ அடைய வேண்டி இக்கிதே’ண்டு நெனைங்க. ‘டக்’குண்டு நார்மலா இருக்கலாம்.

*

11.08.1996

விசா, வரும் 15ஆம் தேதியோடு முடிகிறது. சுதந்திர தினம்? இல்லை. புதுப்பிக்க வேண்டும். ஹலீமாவின் பிள்ளைக்கு ‘நாப்பது’ சடங்கை ஒத்திப்போட்டிருக்கிறார்கள். ஒருவாரத்தில் வருகிறது. மஸ்தான்மரைக்கானின் பட்டப்பெயர் பொருத்தம்தான். ‘சொலேர்ப்பு’!. மாப்பிள்ளை வீட்டு சார்பாக 700 பேர் , நம் வீட்டு சார்பாக 300 பேர் என்று விசாரித்துச் (?) சொன்னான். ஊரில் ஒருகிலோ கறி 100 ரூவா..

‘700 பேரா குறையார்லேர்ந்து வர்றாஹா? இரிக்காதுப்பா’

‘அட, ஃபாத்திமாட்டெ நேத்து உம்மா சொன்னாஹலாம் , ஃபோனுலெ, என்னா பண்ணுறதுண்டு தெரியலேண்டு. 700 பேர்தான்’

‘இருக்காது. 699 பேர்தான் இக்கிம். ஆனா..’

‘ஆனா?’

‘குறையார்லேயே 500 பேர்தானே மொத்தம் இருப்பாஹா?’ என்றேன்.

‘ஆதம் ஹவ்வாவுக்கு பொறந்த கொழந்தைண்டு பாக்குறதுக்கு கூடப்பேரு வருவாஹா’ – செல்லாப்பா பொருமினான்.

முகலாயா அரச பரம்பரையைச் சேர்ந்த நாம் தட்டுப்பிச்சை எடுக்கலாமா? அவன் பொருமல் சரிதான் போலும்.

‘சொலேர்ப்பு’ எடுத்த செல்லாப்பா , வீட்டிற்கு ஃபோன் போட்டு ஒரு பிடி பிடித்தானாம். இப்போது ‘சொலேர்ப்பு’ இல்லை. அவர்கள் 200 பேர்தான் வருகிறார்கள். எப்படியும் குறைந்தது 25000 ரூபாய் ஆகும். ‘இந்த மாப்பிள்ளை பையன் பேந்தப்பேந்த முழிச்சிக்கிட்டு இந்தாக்கா இந்த சமயத்துலெ? எடுத்துச் சொல்லனும்.’ என்று உறுமினான். நாங்கள் உறுமலாமா? என் உம்மா எங்கள் இருவரின் முதல் பிள்ளைகளுக்கும் தன் சம்பந்திகளிடம் சண்டைபோட்டு 100 பேருக்கு சாப்பாடு வாங்கினார்கள். அஸ்ராவுக்கு இவ்வளவு செலனானது என்று அஸ்மாவும் சொல்லவில்லை. அப்போது நான் சௌதியில் , பிரச்சனையில் இருந்த சமயம். அனீஸின் நாப்பதுக்கு வந்தபோதுதான் சொன்னாள். அதுக்கு ‘சிம்பிளா 500 குண்டாசோறு கொடுத்து விடலாம் என்று என் தலையில் குண்டாவை தாழிச்சாவோடு கவிழ்த்தாள். நான் 50 குண்டாதான் கொடுத்தேன். அவளுக்கு வருத்தம்தான். மருமகனின் ‘நாப்பது’ சடங்கை பங்குபோட வேண்டும் இப்போது. அதேசமயம் மருமகனுக்கும் ஏதாவது நகை போடவேண்டும். தங்கைக்கோர் பூதம்! இப்படி செலவு அதிகமாவதால் சர்க்கார் சொல்வதுபோல வருமானத்தைப் பெருக்க முடியுமா? ’சுன்னத்’ பண்னுவது செலவு. சாமானை முழுதாக வெட்டிப்போட எதற்கு செலவு சர்க்கார்? ஆனால் அப்படி வெட்டிய சாமான்களை கையில் வைத்துக்கொண்டால்தான் ஆண்பிள்ளைகள்.. நான் இதற்கு ஒரு பைசாவும் கொடுக்க முடியாதென்று கடிதம் போட்டுவிட்டு , ‘அலி’யாக மாறினேன் இன்று – கற்பனையில்!

*

14.08.1996

மூன்று நாளாக எதுவும் எழுதமுடியவில்லை. அரசாங்கம் அலைக்கழித்துவிட்டது. பேசாமல் , ஒரு கவுண்டர் திறந்து விசா ரினீவல் பண்ணுவார்கள், 500 திர்ஹம் கொடுத்துவிட்டு துபாய் முத்திரையிட்ட 50 கிராம் ஒட்டக இறைச்சியை சாட்சியாக வாங்கிக்கொண்டு , போய்க்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டால் முடிந்து போயிற்று. ஆனால் அரசாங்கம் என்றால் வழிமுறைகள் என்று இருக்கிறதே.. 300 திர்ஹத்துக்கு அனைவரும் மெடிகல் கார்டு எடுத்தே ஆகவேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தை ‘கட்’ பண்ணிவிட்டு லாபம் காண்பிக்கு கம்பெனிகள் கண்டிப்பாக இதற்கும் அவன் தலையில் கை வைக்கும். நல்லவேளையாக முக்தார்-அப்பாஸ் இன்னும் அந்த நிலைமைக்கு வரவில்லை. அரசாங்கத்திற்கு இப்போது அதிகப் பணம் தேவைப்படுவதை அது கருணையுடன் பார்க்கிறது. துபாயின் விமான நிலையம் , கி.பி 2000 வருடத்திற்காக 500 மில்லியன் டாலரில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ‘சிந்தகா’ ஏரியாவை நவீனப்படுத்த பலகோடிகள் செலவழிக்கப்படவிருக்கிறது என்று அறிவித்து நாலு வருடங்களாகின்றன. நிறைய மேம்பாலங்களும் உருவாகின்றன. முக்கியமானது டிரேட் செண்டர் பக்கத்தில் உருவாவது. ஷேக் முஹம்மது எழுப்பும் அவரது புதிய மாளிகை நிச்சயமாக பாதுகாப்பு கருதித்தான். அவரது பாதுகாப்பு துபாயின் பாதுகாப்பு. எனவே அனைவரும் மெடிகல் கார்டு எடுங்கள். ’ரஷீது ஆஸ்பத்திரி’யில் தாங்க முடியாத கூட்டம் என்று அங்கு போனவர்கள் சொன்னதால் , நான் ‘தேரா’வின் ஈத்கா மைதானம் பக்கமுள்ள ‘குவைதி ஆஸ்பத்திரி’க்குப் போனேன். காலை 6 மணிக்குப் போயிருக்கும்போதே 50 பேர் குறைந்தது இருந்தார்கள். ஒவ்வொரு வினாடியும் புதுப்புது ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை , நீண்ட வரிசையின் தலைப்பக்கத்தில் , அரபி தெரிந்த தாதாக்கள் புகுந்து கொண்டார்கள். நான் ஏழரை மணிவரை நின்ற இடத்திலேயே நின்றேன். என் முன்னால் 500 பேர் இருந்தார்கள் இப்போது. அப்போதுதான் ஒரு போலீஸ்காரன் கொச்சை உருதில் பேசிக்கொண்டு அனைவரது கையிலிருந்தவகளையும் சோதித்தான். நல்லவன். என்னைப்பார்த்து ‘மெடிகல் கார்டு மாஃபி? அஸ்ஸலாமு அலைக்கும்!’ என்று வெளியே கையைக் காட்டினான். அவன் கூடவே வந்த ஒரு கிழ அரபிப் பொன்னையன் ‘ஹிந்தி..ஹிந்தி..’ என்று நெஞ்சிலடித்துக்கொண்டு சிரித்தான்.

அங்கே மெடிகல் கார்டு கிடையாதாம். மெடிகல் க்ளீன்-அப் மட்டும்தான். மெடிகல் கார்டுக்கு? ஈரானி ஆஸ்பத்திரி, மக்தும் ஆஸ்பத்திரி, அல்-தொவாலி பிரைவேட் ஆஸ்பத்திரி எங்காவது எடுத்துக்கொண்டு வரவேண்டுமாம். இது குவைதி ஆஸ்பத்திரி. நான் அங்கிருந்து நடந்தே ’நாசர் ஸ்கொயர்’ வந்தேன். டாக்ஸி காசு கம்பெனி கொடுக்காது. அல்தொவாலியிலுள்ள இந்திய செக்ரட்டரி , கம்ப்யூட்டரை தட்டிக்கொண்டே விதிமுறைகள் சொன்னாள். கம்ப்யூட்டரைப் பார்த்துத்தான் சொன்னமாதிரி இருந்தது. ஸ்பான்சர் லெட்டர் வேண்டும், அல்லது டெனன்ஸி காண்ட்ராக்ட் வேண்டும். ஸ்பான்சர் கடிதம் ’நோ அப்ஜெக்சன்’ சொல்ல. என்னிடம் இல்லை. கப்பமரைக்கார் , டெனன்ஸி காண்ட்ராக்ட், Dewa பில்-ன் நகல் கொடுத்திருந்தார். அது கம்பெனிக்குள்ளதல்லவா? மறுத்தாள். இரண்டாவது நாள் , பலுச்சி டிரைவர் ரஜப் தன் நண்பன் வேலை செய்கிறான் என்று பர்துபாய் அல்ரஃபா கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான். பஸ் ஸ்டாண்ட் பக்கமிருந்தது. நண்பர்கள் வழி சொல்லவே இருக்கிறார்கள். ‘அவீர் ரோடு’ ‘ராஸ்-அல்-கோர்’ என்று சொல்லாதே, வேறு இடத்திற்கு போகச் சொல்லுவார்கள்’ என்றான் அவன். ’எங்கே இருக்கிறாய் யா ரஃபீக்?’ ‘கராமா’.’கராமாவில்?”பர்ஜுமான் செண்டருக்கு எதிரில்’.

வேலை சுலபமாக முடிந்து விட்டது! இதுவும் ‘குவைதி ஆஸ்பத்திரி’தான். ஆனால் இங்கே மெடிகல் கிளீன்-அப் கிடையாது. காலையில் போனால் வேலை முடியும் என்று அனைவரும் நம்புதாலேயே காலையில் கூட்டம் அதிகமாகிவிடுகிறது என்று , அங்கிருந்து 10 திர்ஹம் டாக்ஸி. அன்று ‘தேரா’ குவைத் ஆஸ்பத்திரியில் (இது இலவச மருத்துவமனை முகாம் மாதிரி போர்டபிள் (கேபின்)ல் – தர்ஹா வாலை மாதிரி – இருந்தது, தனியாக – வெயிலை நெருப்பாக மாற்றும் மின்விசிறிகளுடன்) டைப்பிங் மட்டும் அடிக்க முடிந்தது, இரண்டு மணி நேரத்தில். என் பெயர், கம்பெனி பெயர், தேதி, என் வேலை.. அரபியில். இது வெளியிலிருந்து அடித்து வரக்கூடாது. மூன்றாவது நாள் காலை ஐந்தரை மணிக்கு போய்ச் சேர்ந்தேன். நான் பதினோறாவது ஆள். முதலில் உட்கார்ந்தவன் இறந்துபோகிற மாதிரி இருந்தான். என்று வந்தானோ? அல்லது இங்கேயேதான் எப்போதும் இருக்கிறானா?

அன்று 200 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டும் பெரிய உத்யோகஸ்தர் 9 மணி வரை வரவில்லை. கூட்டத்தில் அந்த கூடாரம் பிய்ந்துவிடும்போல இருந்தது. சடாரென்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. கைகளால் மட்டும் பேசும் அந்த அடர்ந்த வெண்தாடிக்கிழவர் வந்துவிட்டார். ஹஸன் வந்துவிட்டார்..ஹஸன் வந்துவிட்டார்… வந்தவர் , உள்ளேபோய் உட்கார்ந்து விட்டார் ஒருமணி நேரம்! எச்சில் ஊறவைத்துக்கொண்டிருக்கிறார் போலும். சாதாரண எச்சியா காறெச்சியா என்று தெரியவில்லை. ஆனால் வெயிலில் கொதித்து , ஒன்றும் பண்ண இயலாமல் முழித்த கூட்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கத்தான் செய்தது. வாழ்க்கைக்கு எச்சில் மட்டும் போதாது. விறுவிறுவென்று வந்த அரபி ஒருவன், அனைவரின் கையிலிருந்தவைகளைப் பிடுங்கி, கத்தையாக உள்ளே எடுத்துச் சென்றான். ஒவ்வொரு ஆளும் 200 திர்ஹம் என்றால் ஓரிரு நிமிடத்தில் அவன் கையில் 20000 திர்ஹம். அப்படியே வெளியேபோனால் யாரிடம் சொல்வது? அவன் கேட்ட அதிகாரத்தில் , யாரும் மறுக்கவும் முடியவில்லை. யார் அவன்? அவன் யாரோ, ஆனால் நிறைய எச்சில் உள்ளவன். சுரக்கும் வேகமும் அதிகம் போலும். அடுத்த கால்மணி நேரத்தில் எல்லோர் கையிலும் அனுமதி – ப்ளட் டெஸ்ட்டுக்கு. கூட்டம் அதிகம் இல்லாமலிருந்தால் எக்ஸ்-ரேயும் இருந்திருக்குமாம். அப்படியானால் , இந்தக்கூட்டத்தை விட இன்னும் ஒருமடங்கு கூட்டம் அதிகமா இருந்தால் , ப்ளட் டெஸ்ட்டும் கிடையாது! நாலு நாள் கழித்து டெஸ்ட் ரிஸல்டை வாங்கப் போகவேண்டும். இது யார் வேண்டுமானாலும் போய் வாங்கலாம். அதாவது , இந்த வினாடியின் விதிமுறை. மெடிகல் கார்டு? அது இரண்டுமாதம் கழித்து தயாராகும். பிரைவேட்-இல் ஓரிருநாளில் கொடுத்துவிடுவார்கள்தான். குவைதி ஆஸ்பத்திரியின் கிளைதானே ரஃபா கிளினிக்? மெடிகல் கார்டும் இப்போது அவசியம் இல்லை. இம்முறை துபாய் வந்ததிலிருந்து உடம்புக்கு எந்த சீக்கும் இல்லை. கம்ப்யூட்டர் முன்னால் கண்ணாடி இல்லாமல் (E.G Coated Glass) உட்கார்ந்தால் ஒரு தலைவலி கூட வரவில்லை. வேறுமாதிரி தலைவலி வரலாம். அது நீடிக்காது. ஆனால் நீடிக்கிற தலைவலி , பிளட் டெஸ்ட் ரிஸல்ட் கிடைத்த பிறகு இமிக்ரேஷனில்தான் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் எவ்வகை தலைவலியாக இருந்தாலூம் ரிலாக்ஸ்டாக தாங்கிக்கொள்ளும் பக்குவம் மனசுக்கு இருக்கிறது. இருந்துதானே ஆக வேண்டும்?!

மூணு நாள் அலைச்சலும், இழுத்தடிப்பும் எந்த எரிச்சலையும் உண்டு பண்ணாதது ஆச்சரியம். ஒவ்வொருநாளின் இழுத்தடிப்பிலும் எனது பங்கின் தவறைத்தான் அலசச் சொன்னது மனது. காத்திருக்கும் நேரங்களிலும் சுற்றிலும் உள்ளவர்களின் தேவையற்ற பரபரப்பை – சக்தி இழப்பை – அளந்து கொண்டிருந்தேன். what we are today is the result of what we were in the past.. ரியாலத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் விரலசைத்தால் அண்டசராசரமும் அசைவது போல இப்போதைய நிலையில் செய்யமுடியாதுதான். குறைந்தது , போகிற காரியம் தாமதமாகும் என்று முன்பே தெரிவதோ, அல்லது ஈடுபட்டபின் உடனே நடந்தேறிவிடுவதோ ஏன் முடியவில்லை? ஓ, அரசு இயந்திரத்தை அளப்பது அண்டசராசரத்தை அசைப்பதை விடக் கஷ்டமானதோ? இருக்கலாம். இருந்தாலும் , சிக்கலான எதுவும் , ஒரிருநாளில் சரியாகி விடுகிறது. நேற்றைய கஷ்டம் இன்று இல்லை.

‘எந்த வகையில் ஸ்ட்ரென்த் கூடியிருக்குது? தெளிவு, அண்டர்ஸ்டாண்டிங்.. ஞாபகசக்தி, அடையமுடியும் என்கிற நம்பிக்கை, ஆணவம் கொள்ளாத பெருமிதம்?’ – ‘S’

தெளிவு. அசைவுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் வந்ததா , அடையமுடியும் என்கிற நம்பிக்கையால் வந்ததா சர்க்கார்?

‘முதல்லெ சொறிஞ்சிக்குவீங்க அடிக்கடி. இப்ப சொறியிறதில்லே.. அடிக்கடி ஸ்மோக் பண்ணுவீங்க. பண்ணுறதில்லே இப்போ. அல்லது ஸ்மோக் பண்ணும்போது தன்னை மறந்து ஸ்மோக் பண்ணுவீங்க, இப்ப கவனிச்சி பண்ணுறீங்க. இல்லே, கொட்டைய சொறிஞ்சாக்கூட ‘தலை’யை மட்டும் தனியாவும் அடியை தனியாவும் சூத்தை மட்டும் தனியாவும் சொறிஞ்சிக்கிறீங்க! சொறியும்போது தெரியுது, முதல்லெ போட்டு வெளாடுனீங்க! இது பயிற்சி அல்லவோ? அப்படிச் சொல்லுங்களேன் ஏதாவது. ஏன், கொட்டைங்குறது தூரமா உள்ள பொருளோ? அதுக்குத்தானே எல்லா பணமும்? ஏன் கொட்டைண்டாலே எல்லார்ட முகமும் மாறுது? என்னா காரணம்? சொல்லுங்களேன் என்னமாச்சும்.. தானா மாற்றம் வருதுண்டு காட்டுங்க. பாசிடிவ் மாத்தம்’ – சர்க்காரின் 01-08.12.1994 கேஸட். ஆனாலும், சென்ற உடனேயே போன காரியம் முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஒருவேளை ‘தேரா’ மஸ்தான் மரைக்கான் ரூமில், பால்கனியில் படுத்துக்கொண்டு , இரைச்சலுக்கிடையே ‘SS’ பண்ணிவிட்டுப் போனது பவர்-ஐ குறைத்துவிட்டதோ என்னவோ!

ஊரிலிருந்து வந்த தஸ்தகீர்நானா என்கிற உள்வட்டச் சீடர் ஒருவர் – என் அவீர் அறையைப் பார்த்துவிட்டு – ‘நாங்க 10 மாசம் பண்ணி அடையிறதை நீங்க ஒரு மாசத்துல அடைஞ்சிடலாம்’ என்றார். 10 மாசம் ஊரில் அவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் கற்பதை ஓரிருநாளில் ஆஃபீஸில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்து, வந்த வேலைக்கு தயார் பண்ணிய குஷியில் ஐஸ் வைக்கிறாரா? அவர் சொல்வதைப் பார்த்தால் என் பவருக்கு இரண்டு நாள் கூட அவருக்கு செலவழித்து இருக்கக்கூடாது. ஒரு பார்வை. அப்படியா?! அவர் என் அறையின் சூழல் பற்றிச் சொன்னது சரிதான். தௌலத்காக்காவின் தம்பி ஜின்னா முன்பெல்லாம் அடிக்கடி வருவார் – பழைய தமிழ்ப் படம் போட்டுப்பார்க்க வசதியாக இருக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல என்று பக்கத்திலுள்ள மலையாள ரெஸ்டாரண்டில் வேலைபார்க்கிற பொடியன் ஒருவனை – ‘பையன்வேலை’ பண்ண – அவர் அழைத்துவந்து என்னைக் கெஞ்சியபோதுதான் தெரிந்தது. ஒரே ஒரு நாள். நான் கூட ஒரு சொருவு சொருவிக் கொள்ளலாமாம்! அட நாயே.. இதற்குத்தான் குடவுனுக்கு அடிக்கடி என்னைக் கூப்பிட்டுப் போய் விருந்து கொடுத்தாயா? அங்கு 23 மணி நேரம் மூட்டை தூக்கிக்கொண்டு மீதி ஒருமணி நேரத்தில் சமைத்தும் கொடுக்கிற நாக்கூர் பண்டாரியின் ஸ்பெஷல் ஐட்டங்களை பார்சல் கட்டி கொண்டுவந்து ரூமில் கொடுத்தாயா? என்ன பாசம் என்மேல்!

‘ஜின்னா… என்னா இது, என்னை அசிங்கப்படுத்துறீங்க.. இதெல்லாம் இங்கே வச்சிக்கிடாதீங்க…சே!’

அவன் யாருடைய தம்பி என்பதை நிரூபித்தான் அடுத்த நொடியில் .

‘ஹே.. பார்த்தீங்களா..சும்மா தமாஷ் பண்ணுனேன்; இதுக்கு ஏமாந்துட்டீங்களே!’

தமாஷ் பண்ணும் ஆளின் முகம் ஏன் இப்படி வெளுத்துப்போய் தொங்குகிறது.? அவர் அதற்குப்பிறகு ரூமுக்கே வரவில்லை. பிஸியாம்.

தஸ்தகீருக்கோ இது ‘பவர்’-ஐக் கூட்டும் அறை..! தாசில்தார் ஆஃபீஸில் 24 வருடம் வேலைபார்த்துவிட்டு , ‘புண்ணியமில்லை’ என்று இங்கே வேலைதேடி அவர் 50 வயதில் வந்ததற்குக் காரணம் , ஊரில் தனக்கு இதுபோல் அமையாததாலென்கிறாரா? சரி நானா, இங்கே தங்கிக்கொள்ளுங்கள், என் வேலையை எடுத்துக்கொண்டு ; நான் நாவப்பட்டினம் தாசில்தார் ஆஃபீஸில் இருக்கிறேன்!

‘ஊர்லேயே இருந்துக்கிட்டு உங்க புள்ளைய ஒரு முச்சம் வுடுறதுக்கு ஈடாகுமா இந்த அரபுநாட்டு வாழ்க்கைலாம்?’ என்று சர்க்கார் கேட்டார்கள் – பயணம் கிளம்பிய அன்று. அனீஸையும் அஸ்ராவையும் அஸ்மாவையும் முத்தமிட்டுக் கிடைக்கும் பவர்-ஐ விட இந்த அறை கொடுக்கப்போகிறதா? ஆனாலும் , துபாயில் ‘SS’ பண்ண இந்த அறையை விட சிறந்த அறை கிடைக்காதுதான். அதில் வந்த பவர்தான் 3 நாள் இழுத்தடிக்கிறதா? ஊரில் ‘S’ கொடுக்கிற ‘ஸ்டெப்ஸ்’ இங்கே குழப்பமாகக் கிடைப்பதைக் காரணமாகச் சொல்லலாமா? வந்த தஸ்தகீர் ஒன்றை உறுதிப்படுத்தினார்.

ரியாலத்தின் இப்போதைய ஸ்டெப்ஸ்-ல் Astral Body கீழே பார்க்கும்போது மற்ற மூன்று Bodyகளும் தரையில்தான் படுத்திருக்கின்றன. ஒன்றின்மேல் ஒன்றாக அல்ல, ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக, 6 அடி இடைவெளியில். ரவூஃப் எழுதியது சரிதான் ஆனால் அவன் வரைந்த முறை தப்பு. நான் வரைந்து அவனிடம் தெரியப்படுத்திய கடிதத்திற்கு இன்னும் பதிலில்லை. அப்புறம்.. தஸ்தகீர் நானா , ‘முக்கோணத்தின் வண்ணம் க்ரீம் அல்ல’ என்றார். வெள்ளையாம். ’பவர்’ கூடத்தான் செய்யும்! ‘சுமையை தூக்குண்டா தூக்கிட்டு போவாங்க இவங்கள்லாம். எதுக்காக தூக்கனும், யாருக்கு கொடுக்கனும் அல்லது எங்கே இறக்கி வைக்கனும்டுலாம் இவங்களுக்கு தெரியாது’ என்று ஜெப்பார் நானா கூட குறைபட்டார் ஃபோனில்.

‘இதுலாம் ஏன் தெரியனும் நானா? சர்க்கார் சொல்றாஹா, செய்றோம். அவ்வளவுதானே?’

‘அட நீங்க ஒண்ணு ஆபிதீன். இவங்கள்லாம் தெளிவுக்கு கேள்வி கேட்காம ஊமையா உட்கார்ந்து குழப்புறதுனாலதான் இப்படி குழப்பம்லாம் வருது’ – ஜெப்பார் நானாவுக்கு கோபம்.

சீடர்கள்தான் என்ன செய்வார்கள்? இவ்வளவு சீனியர் ஆன ஜெப்பார்நானாவுக்கு ஜனவரி 1996 கேஸட் கேட்டபிறகுதான் – ரிலாக்சேஷனுக்கு மூச்சு விடுவதற்கு – கண்டிப்பாக தொண்டையில் அடக்கக்கூடாது என்று தெரிகிறது. சர்க்காரும் 25 வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கலாம். அவர்களும் என்ன செய்வார்கள்? இதெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நினைத்திருக்கலாம். சூத்தால் மூச்சுவிடும் சீடர்களின் தகுதிகள் அவர்களுக்கு தெரியாதது வியப்புதான்.

ரிலாக்ஸ்!

*

15.08.1996

ரவூஃபின் கடிதம் வந்தது. என் Diagramதான் சரி. தரையில்தான் மூன்று Bodyகளும் இருக்கின்றன. ஆனால் ஜெப்பார்நானா சரியா, ரவூஃப் சரியா என்றெல்லாம் கேட்பது ‘UnAbedeenic’ ஆக (ரொம்ப ரொம்ப) இருந்ததாம். ‘ஒன்று ஜாஃபரைக் கேள், அல்லது என்னைக் கேள்’ என்றிருந்தான். அப்படியா? சரி சர்க்கார்! அவனுக்கு இப்போது சனி, ஞாயிறு விடுமுறை. ஆகவே மாதத்தில் ஒருமுறைதான் வெள்ளி செஷனை அட்டெண்ட்பண்ண முடிகிறது. மாதம் ஒருமுறை சர்க்காரை நேரில் பார்க்க முடிகிறதே உன்னால் ரவூஃப், எங்களின் கஷ்டங்களை நீ புரிந்து கொள்வது கஷ்டம் என்று பதில் போட்டேன் – Abedeenicஆக இல்லாமலும், UnAbedeenicஆக இல்லாமலும். அப்போதுதான் ரவூஃப்தனமாக அவன் எழுதமாட்டான்!

ரவூஃபுக்கும் ‘பவர்’ கூடியிருக்கிறது. ஏப்ரல் மாத சர்க்காரின் பேச்சை எனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறான். அனுப்பும்போது , ‘டெஸ்ட்’டுக்கு என்று நினைத்து அனுப்பியிருக்கிறான். அது எனக்கு கிடைக்காததால் இனி கேஸட்கள் அனுப்பப் போவதில்லையாம். கடிதங்களை டெஸ்ட்டுக்கு என்று எழுதுவதில்லை அவன். சப்ளை கோளாறு!.

*

17.08.1996

நேற்று காலை சரியாக 6 மணிக்கு உட்காரமுடியாதோ செஷன்-ல் என்றிருந்தது. ரியாலத் பற்றிய கேஸட்களில் இது முக்கியமானது என்று 23.02.1996 கேஸட்டை ஜெப்பார்நானா கொடுத்திருந்தார். கேட்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்தப்பக்கம் என்னை வழக்கமாக இறக்கிவிடுகிற ‘ஹத்தா’ பஸ் மிகத்தாமதமாக வந்தது. ‘கோல்டு ஸூக்’ பக்கம் வந்திருக்கிற புது பஸ் ஸ்டாண்டுக்கு இனி அப்படித்தான் வருமாம். பழையபடி ‘சப்கா’ பஸ்ஸில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு , கோல்டு ஸுக் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து , புறப்படுமாம். அதுபற்றிய எந்த அறிவிப்பும் இல்லை போர்டில். மாற்றத்தின் காரணம் பாஸஞ்சர்கள் நிறைய ஏறவில்லை. ஏன் ஏறவில்லை என்று பலுதியாவில் மீட்டிங் கூட நடந்ததாம். டிரைவர்கள் ரூட்டை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் டிரைவர்களையும் பஸ்ஸையும் மாற்றச் சொல்லியிருக்க வேண்டும். துபாய் to அபுதாபி ரூட்டுக்கு வாங்கப்பட்ட அதி நவீன பஸ்கள். அரசுகளுக்கிடையில் உள்ள ஆயிரம் அபிப்ராய பேதங்களுக்கிடையே மாட்டிக்கொண்டு நாலைந்து மாதமாக ஓடாமலே தூங்கவே, ‘ஹத்தா’வின் மேல் கரிசனம். டிரைவர்களின் மூலச்சூட்டின் வேகத்தில்தான் அவைகளின் ஏசிகளும் பழுதாகியிருக்க வேண்டும். வேலைக்கு எடுக்கும்போது முக்கியத் தகுதியாக, எரிந்துவிழும் தகுதிதான் ஏற்கப்பட்டிருக்கிறது. ஏனோ துபாயில் உள்ள டிரைவர்களுக்கு தன்னுடைய டிரைவிங் லைசன்ஸ் தகுதி என்பது மட்டுமே உலகத்தின் அற்புதமான விஷயம் என்று நினைப்பு. மூலத்தைக் கொடுப்பதாலா? சௌதி , மற்ற அரபு நாடுகளில் கொடுக்கப்படுவதை விட சம்பளம் கூட என்பதாலா? ‘மாதர் சோத்’ என்று சொன்னான் அந்த டிரைவர். இன்னும் வார்த்தைகள் அத்துமீறின. ‘இது இந்தியா’ என்ற நினைப்பா? ‘உன் அக்காளின் சாமானா?’.

அந்த பங்காளி கொண்டுவந்திருந்த பையிலிருந்து சமையல் எண்ணெய் பாட்டில்கள் மேலிருந்து கீழே விழுந்து சிதறியதில் பாஸஞ்சர்கள் நடக்கும் இடம் -பஸ்ஸினுள் – வழவழ என்று ஆகிவிட்டது. அதற்குத்தான் ‘மாதர்சோத்’. கேட்டவர்கள் உறைந்து போனார்கள். சில பட்டான்களும் இருந்தார்கள். ஆனால் என்னைப்போல சோதாக்களோ என்னவோ. இல்லையேல் கழுத்தைப் பிடித்து உயரே தூக்கியிருப்பார்களே.. ஆனால் எந்த ஜாம்பவான்களும் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்டதில் சண்டையை வளர்த்தால் தனக்கு வரும் பிரச்சனைகளை உணர்ந்தவர்கள். ‘இது உன் அம்மாவின் சாமான் அல்ல. பத்து லட்சமாக்கும்’ என்றான் அவன். அப்படியானால் சொல்பவனின் அம்மாவின் சாமான். அதனால்தான் அழைப்பு மணி இல்லை போலும் – நிறுத்த. தட்டினால்தான் கதவு திறக்கப்படும்! பத்துலட்சம் உள்ளே போன சாமானாயிற்றே..பத்துலட்சம் தடவை தட்டுங்கள்.

சில பேர் லேசாக முணுமுணுத்தார்கள், இந்த வார்த்தைகள் சரியில்லை என்று. முணுமுணுப்புகளுக்கு நாயாய் குரைத்தான். ஆனால் ஏழெட்டு மொழிகளில் குரைத்தான் அந்த நாய். பங்காளி, தன் சட்டையைக் களைந்து எண்ணெய்க்கரையை வெளியேற்ற பிழிந்து பிழிந்து மறுபடி சுத்தமாக துடைக்கும் வரை ஓரத்தில் நின்றது பஸ். ரூட் மாறிய பஸ். ஷேக்முஹம்மதுவின் மாளிகை பக்கம் போகவில்லை. டிரேட் செண்டர் வழியாக சுற்றிக்கொண்டு… Golden Falcon Round-about லிருந்து Bank Street வழியாக Wafi Shopping Centre .. AlWasal Hospital. இடையில்தான் எண்ணெய் சிந்தியது. AlWasalக்குப் பிறகு அந்த சாமானில் பழுது. வேறொரு பெரிய சாமான் வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறினார்கள். டிரைவர்களுக்கு இதனால் சூடோ? ஆனால் மௌனமாகக் கவனித்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். இதற்கு ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதவேண்டும் என்ற நினைப்பு மட்டும் இருந்தது. ஆனால் ஆக்ரோஷமாய் டிரைவரின் மென்னியைப் பிடிக்கவில்லை. கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் உடனடியாக டிரைவர் பாதிக்கப்படுவான். நிர்வாகம் கடுமையானது. இது தேவையா? சரி, இதில் என் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? இது ‘ஜம்’ டைம்.

சர்க்காரை மனசுக்குள் வரவழைத்து கேள்வி கேட்டேன். ஒரு ஜன்னலை , என் ஜன்னலாக பாவித்து, வேகமாய் ஓடி மறையும் மரங்களையும் கட்டிடங்களையும் ரிலாக்ஸாக பார்த்தபடி Productivityஐ உண்டு பண்ணினேன்.

அந்த டிரைவருக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? ‘மாதர்சோத்’துக்கும் ‘பெஹன்சோத்’துக்கும் உள்ளதா? நான் குழம்பியபடி கேட்டுக்கொண்டிருந்தேன். தட்டிவிட்டாலும் அதேதான் வந்தது. எப்போது நாத்-அல்-ஷிஃபா வந்தது? எப்போது ’எப்கோ பெட்ரோல் ஸ்டேசன்’ வந்தது என்பதெல்லாம் தெரியாது. திடீரென்று யாரோ தட்டி விட்டாற்போல இருந்தது. எழுந்து நின்று , என்னையறியாமல் ‘பத்துலட்ச’த்தின் மேற்கூரையை தட்டினேன் பலமாக. சரியாக நான் இறங்கும் இடம். 20 நிமிடம் நான் எங்கோ இருந்திருக்கிறேன்!

சற்று அசந்திருந்தால் ஹத்தாவில் ஒருமணி நேரம் கழித்து என்னை இறக்கிவிட்டு , ‘மாதர்சோத்’ என்றிருப்பான் அந்த டிரைவர். நான் அசந்தாலும் என் இஸ்மாயில்தம்பி ராவுத்தர் அசர வேண்டுமே.. ராவுத்தர் கெட்டிக்காரர். பளபளப்பு காட்டி டிக்கெட் விலையை ஏற்றிவிட்டு பழுதான சாமானைக் காட்டினால் அவர் ஏமாறமாட்டார். இதில் ‘மாதர்சோத்’தையுமா அவர் கேட்பார்? அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. பஸ்ஸில் விழுந்த கதை மாதிரி ஆபிதீனுக்கும் எண்ணெய்பிசுக்கும் அழுக்கும் நிறைய இருக்கிறது. அதைக் கழுவ வேண்டும். அதற்காகத்தான் தட்டிவிட்டார். அவர் ஆபிதீனுக்கு நண்பர். முதலில் அவருடன் எல்லாம் பழக்கம் வருமா என்று ஆபிதீனுக்கு அவநம்பிக்கை. இப்போது ஆபிதீன் சின்னவன் அல்ல.

‘எதைவிட நீங்க பெருசுண்டு நெனைக்கிறீங்களோ அது உங்களுக்கு வரும். எதைவிட சின்னது நாமண்டு நெனைக்கிறீங்களோ அது லேசுல வராது. எதையுமே பெருசா நினைக்கக்கூடாது. அதுக்கு மனசு அமைதி இருக்கனும். Proper தூக்கம் இருக்கனும். டயட் கண்ட்ரோல் வேணும். உணர்ச்சி கண்ட்ரோலா இருக்கனும். ‘ரஹ்மானியத்’ நம்மளை கண்ட்ரோல் பண்ணனும். வேற வார்த்தையில் சொன்னா, ‘குளிப்பாட்டப்படுகிற மைய்யத் குளிப்பாட்டுகிறவன் கையில் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கனும்’. that means, உங்க ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மேம்பட்ட, உங்களைவிட ஆழமான, உங்களை விட பவரான ஒரு சக்தியினுடைய இயக்கமாகத்தான் நீங்க அசையனும். ஒப்படைச்சிடனும். எப்பவுலாம், ‘ஆண்டவனை என்னை எதற்காகப் படைத்தாயோ அதைச் செய்யவிடு’ங்குற வார்த்தை கரெக்டா இருக்கும். அவனுக்குத் தெரியும், பிள்ளைக்கு என்னா வேணும்டு தாய்க்குத்தான் தெரியும்’ – ‘S’

– 03.02.1996 கேஸட். இதில் , கற்பனையின்போது – கற்பனை செய்கிறோம் என்ற உணர்வுடன் – பேசிக்கொள்கிற சீடர்களை வெடைக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. கற்பனையில் மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் நூல்கடைத்தெரு வீட்டில் இருந்தபோது – இருபது வருடங்களுக்கு மேல் இருக்குமா? – சீடருக்கு ரசூலுல்லாவை காட்டிய அதிசய நிகழ்ச்சி வருகிறது. பிறகு ஏன் அந்த சீடர் இன்னும் சீடராகவே இருக்கிறார் இப்போது – ‘SS’ பயிற்சியில் சேர்ந்துகொண்டு? ரசூலுல்லாவை பார்க்கிற நொடிக்கும் முன்னால் அவருக்கு ‘தண்ணி’ வந்துவிட்டது! அப்படியானால்..முக்கியமான கேஸட்தான். சர்க்காரின் பேச்சும் வேகமாக இருந்தது. அவைகளை முழுதாக பின்னர்தான் எழுத வேண்டும். இப்போது குறிப்புகள் மட்டும். இல்லை, முக்கியமானவைகள் மட்டும். ‘Alien force’ பற்றியுள்ள கேஸட்..! Step 31ன் போது Astral Body, பிற Bodyகளை கலைத்து, சேர்த்து உருவாக்கும்போது அவைகள் தன் கண்ட்ரோலில் இருப்பதாக நினைப்பதாக சீடர் சொல்கிறார் (அப்படி சர்க்கார் சொன்னதாக அவர் விளங்கியது!).

‘பனியான்.. முட்டைபுராட்டாண்டு இருந்தாக்கா ‘பனியான்’டு சொல்லிட்டுத்தான் திம்பிங்களோ? ‘பனியான்’ அல்லது இங்கிலீஸ்லெ ‘ப்பேன்யான்’. ஆங்.. வெளங்கலையே.. நினைக்கிறது மொழியல்லவே!. ‘Physical Body, Emotional Body, Intellectual Bodyங்குறது இங்கிலீஷ்காரன்ற சொத்தா? வெள்ளைக்காரன் சுன்னிக்குப் பொறந்ததா அது?’ – ‘S’

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார்’ஐ சுருக்கமாக குறிப்பிடுவது
ஜம் – ஒரு பயிற்சி
’சுன்னத்’ – ஆண்குறியின் முன்தோலை அகற்றும் ’கத்னா’ எனப்படும் மார்க்கச் சடங்கு.
மாஃபி? – இல்லையா?
ஹிந்தி – இந்தியன்
ரஃபீக் – தோழன்
ரியாலத் – (‘SS’) பயிற்சி
ரசூலுல்லா – நபி (ஸல்)

« Older entries Newer entries »