உதவிக்கரம்

முகநூலில் ஆசிப்மீரான் பகிர்ந்தது, நன்றியுடன் இங்கேயும்…

அமீரகத்தின் துணை அதிபரும், துபாயின் ஆட்சியாளருமான மாட்சிமை மிகு ஷேக் முகம்மது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மலையாளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி. தமிழ் சமூகத்தின் சார்பிலும் மாட்சிமை மிகு ஷேக் முகம்மது பின் ராஷீத் அல்‌ மக்தூம் அவர்களுக்கு நன்றி!!

*****

சகோதர சகோதரிகளே, இந்தியாவில் கேரள மாநிலம் கடினமான பிரளயத்துக்குள்ளாகியிருக்கிறது.இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரளயம் இது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து விட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கின்றனர். ஈத் அல் அல்ஹாவை முன்னிட்டு இந்திய சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட மறக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமீரகம் மற்றும் இந்திய சமூகங்கள் ஒன்றாக இயங்க வேண்டும். உடனடி உதவிகளை வழங்குவதற்காக நாங்கள் ஒரு கமிட்டியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இந்த முயற்சியில் தாராளமாக நன்கொடை எல்லோரிடமும்‌ நாங்கள் வேண்டுகிறோம். அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் உடனிருந்தார்கள். பிரளயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்துணையாக இருக்கவும், உதவவும் நமக்கு தனிப்பட்ட உத்தரவாதமிருக்கிறது – குறிப்பாக ஈத் அல் அல்ஹாவுடைய புனிதமும் இறையருளும் நிறைந்த இந்த சந்தர்ப்பத்தில்..