தப்பு சுல்தான் அல்ல திப்பு சுல்தான்

‘திப்பு – விடுதலைப் போரின் முன்னோடி’ நூலுக்கு (வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் / தொகுப்பு : வெ. ஜீவானந்தம்) நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து… :

tipu_sultan_portrait_bbc

‘மதவாதம் பெரும் நோயாக நமது சமுதாயத்தைச் சீர்குலைத்துக் கொண்டுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பைத்தியக்காரத்தனமான மதவெறியும், மூர்க்கத்தனமான வழிதவறிய சிந்தனைகளுமே இந்த அவலத்தின் காரணமாகும். இவர்கள் வரலாற்று நாயகர்களைக் கூட பொய்யான கதை கட்டி இனத்தைச் சார்ந்தவர்களாக, மதவெறியர்களாக சித்தரிக்கிறார்கள்.

சிறந்த மனிதாபிமானியும், மத ஒற்றுமையை பேணிய இந்திய வரலாற்றின் ஒப்பற்ற மன்னனுமான திப்பு கூட இத்தைகைய அவதூறுகளிலிருந்து தப்பவில்லை.

இந்தியாவை வென்று அடிமைப்படுத்த வேண்டும் என்ற வெள்ளையர் ஆதிக்கப் பேராசைக்குப் பெரும் தடைக்கல்லாக நின்றவர் திப்பு.

அன்னியர் ஆட்சியை எதிர்த்து, தேசபக்தியுடன் இறுதிவரைப் போராடிய வீறுகொண்ட புலியாக அவர் எதிரிகளை விரட்டினார். இந்தப் பாவத்திற்காகவே இந்துக்களையும் உருவ வழிபாட்டையும் வெறுத்த வெறிகொண்ட முஸ்லீமாக சித்தரிக்கப்பட்டார்.

போலிச் சரித்திரமும், புனைகதைகளும் நீண்டகாலம் நிலைத்து நிற்பதில்லை. உண்மை வரலாறு அவதூறுகளை விஞ்சித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இந்நூல் ஓர் சான்று.

திப்புவின் தலைநகரான சீரங்கப்பட்டினத்தில் மசூதியும், ரங்கநாதர் கோவிலும் அருகருகே எந்த பாதிப்பும் இன்றி உள்ளதை இன்றும் காணலாம். திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் இந்த ஆலயம் அல்லவா முதல் பலியாகியிருக்க வேண்டும்? மாறாக பல இந்துக் கோயில்களுக்கு விலைமதிப்பற்ற கொடைகளை வழங்கிய நடுநிலையாளராகவே திகழ்ந்தார். இத்தகைய நடுநிலையும், பெருந்தன்மையும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் கூட அபூர்வமானதாகவே உள்ளது.

எனவே திப்புவின் மீது வெறுப்பை வளர்க்கும் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவதை தவிர்த்து அவரது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற தேசபக்தி, அதற்காகப் போரிட்டு தன்னையே பலிதந்த தியாகம், மதங்களிடையே காட்டிய நடுநிலைமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பரப்பி வளர்க்க வேண்டியதே இன்றைய முக்கியத் தேவை’

நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்

***

நன்றி : பாவை பப்ளிகேஷன்ஸ்

நூல் தொடர்புக்கு :
பாவை பப்ளிகேஷன்ஸ்
142, ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை – சென்னை 600014
தொலைபேசி : 8532441, 8532973

***

சுட்டிகள் :

மாவீரன் திப்பு சுல்தான் : இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமை  – வாஞ்சூர்

 
1789 இல் அமைச்சர்களுக்கு திப்பு ஆற்றிய உரை