நாகூர் ரூமி என்னைப் பார்க்க வந்திருக்கிறார் – நதீம் சின்னபிள்ளையாக இருந்தபோது. அறையில் நானும் மகனும் இருந்திருக்கிறோம். ரூமியோடு தனியாக, சுதந்திரமாகப் பேச விரும்பினேனாம். எனவே நதீம் அறையைவிட்டு வீட்டுக்குள் போகவேண்டும். அதற்கு நான் என்ன செய்தேன்? ரூமி சொல்கிறார் :
“வாப்பா (குழந்தைகளைக் கொஞ்சும்போது மகன் வாப்பாவாகிவிடுவார். மகள் ம்மாவாகிவிடுவாள். இதெல்லாம் எழுதப்படாத கொஞ்சல் இலக்கணம்). நீ இந்த ரூம்லயே இரிக்கணும் என்னா?” என்று சொன்னார். உடனே பையன், “இல்ல, நா வெளியே போவேன்” என்றான். அவர், “ம்ஹும், நீ இங்கதான் இருக்கணும்” என்று மறுபடியும் சொன்னார். “முடியாது, நா வெளியே போவேன்” என்று சொன்ன மகன் வெளியிலும் போய்விட்டான். ”அப்பாடா, போயிட்டான். போ என்று சொன்னால் இருப்பேன் என்று சொல்வான். எது சொன்னாலும் அதற்கு நேர் எதிராகத்தான் செய்வான்” என்று சொல்லிவிட்டு கதைவைச் சாத்தினார்!
அவர் எழுதியிருப்பது உண்மை. ஹக் அல்லாஹ் நூர் அல்லாஹ்!
இன்றுவரை அப்படித்தான் சொல்கிறேன் நாகூர் அழகனிடம். ஒரு விசயத்தில் மட்டும் பலிக்கவில்லை. ’காலேஜுக்கு போவாதே வாப்பா’ என்றேன். ‘சரி வாப்பா’ என்று போகாமலே இருக்கிறான்! இன்னொரு வேடிக்கை, அற வழியில் போராடும் மாணவர்களை குண்டர்கள் அடிப்பதை சென்ஷிசார் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய, அதை ‘லைக்’ செய்திருக்கிறார் சாதிக்சார். சே, எங்கு பார்த்தாலும் ஊடக வன்முறை.. ‘கையில நதீம் கோக் வச்சிக்கிறது எதுக்கு? உங்கள குறி பாத்து அடிக்கத்தான்!’ என்று இந்த அஸ்மா வேறு! என்ன செய்யலாம் ரூமி சார்?
Click here to enlarge Photo
***