“Art is a lie that makes us realize the truth.” – Pablo Picasso
*
*
Thanks to : HistoMephistix , Daniel Vanderbilt & Giritharan
*
தொடர்புடையவை :
‘குவர்னிக்கா’ – பிக்காஸோவின் ஒப்பாரிப் பாடல்
Simon Schama’s Power of Art -Picasso Guernica
13/01/2016 இல் 12:12 (ஓவியம், பிக்காஸோ)
“Art is a lie that makes us realize the truth.” – Pablo Picasso
*
*
Thanks to : HistoMephistix , Daniel Vanderbilt & Giritharan
*
தொடர்புடையவை :
‘குவர்னிக்கா’ – பிக்காஸோவின் ஒப்பாரிப் பாடல்
Simon Schama’s Power of Art -Picasso Guernica
23/10/2011 இல் 00:00 (பிக்காஸோ)
குவர்னிக்கா – போரின் கொடுமை பற்றிய அனைத்துலகத் தோற்றம் – ஜோஸப் பலாவ் இ ஃபேபர்
(யுனெஸ்கோ கூரியரின் (பிப்ரவரி 1981) பிக்காஸோ சிறப்பிதழிலிருந்து…)
***
பாரிஸில் 1937 இளவேனில் இறுதியில் தொடங்கவிருந்த பன்னாட்டுக் கண்காட்சியில், ஸ்பானிய அரங்கிற்காக பெருந் திரையோவியம் அல்லது சுவரோவியம் ஒன்றைத் தீட்டுவதற்காக ஸ்பானிய அரசு அவ்வாண்டு ஜனவரியில் பிக்காஸோவை நியமித்தது.
ஜனவரி 8இல், 9 செவ்வகக் கட்டங்கள் கொண்ட பன்முகச் செதுக்குச் சித்திரத்தட்டம் ஒன்றை இவர் தயாரித்தார். ஒவ்வொரு கட்டமும் ஒரு நீதிக் கதையைச் சித்திரித்தது. இது ஒரு கேலிச் சித்திரம் என்பதைக் குறிக்கும் வகையில் இதற்குப் ‘ஃபிராங்கோவின் கனவும் பொய்யும்’ எனப் பெயரிட்டிருந்தார். இதில் நாட்டுப்படம், எருது, பறக்கும் குதிரை ஆகியவை மட்டுமே கேலிச்சித்திரமாக செதுக்கப்படவில்லை.
அன்றே இரண்டாம் தட்டம் ஒன்றைச் செய்யலானார். இதனையும் ஒன்பது செவ்வகங்களாகப் பகுத்தார். ஒரு கட்டத்தை அன்றே நிரப்பினார். மறுநாள் மேலும் இரண்டைப் பூர்த்தி செய்தார். மற்ற ஆறு கட்டங்களையும், ‘குவர்னிக்கா’ ஓவியம் முடிவுறும்போதோ அல்லது அதன் பின்போ நிறைவு செய்தார். முதல் தட்டத்தில் போலவேம் இதிலும் பிரதான உருவமாக எருது விளங்கியது. இவ்வுருவத்தை இவர் ஜனவரி 9இல் வரைந்தார்.
நாட்கள் சென்றன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கடந்தன. ஏப்ரலிலும் பெரும் பகுதி சென்று விட்டது. பிக்காஸோ தாம் ஏற்ற பணியைத் தொடவில்லை. இதற்குத்த் தேவையான அகத்தூண்டல் ஏற்படவில்லையோ அல்லது ஏற்ற கருப்பொருள் கிடைக்கவில்லையோ எனத் தோன்றியது. திடீரென, 1937 ஏப்ரல் 26இல், ஃபிராங்கோவின் இசைவுடன் நாஜி விமானப் படை குவர்னிக்கா நகர் மீது குண்டுவீசித் தாக்கியது. உலக வரலாற்றிலேயே, முதலாவது சர்வாதிகாரக் குண்டுவீச்சு இதுவேயாகும். இக்கொடுந்தாக்குதல் பற்றிய தமது புனையா ஓவியங்களை மே 1 அன்று பிக்காஸோ வரைந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஏற்கனவே ஒன்பது மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. ஆராகோன் முனையில் கடும்போர் நடந்தது, மாட்ரிட் முற்றுகை பயங்கரமாக நிகழ்ந்தது. பிப்ரவர் 13இல் பிக்காஸோ பிறந்த ஊராகிய மாலகாவினுள் ஃபிராங்கோவின் படைகள் புகுந்தன. அப்போதெல்லாம் வாளாவிருந்த பிக்காஸோ, குவர்னிக்கா குண்டு வீச்சால் மட்டும் ஏன் அகத் தூண்டல் பெற்றார்?
ஒரேயொரு காரணம்தாம் எனக்குப் புலனாகின்றது. ஆரோகான் சண்டையும் மாட்ரிட் முற்றுகையும் மாலகா வீழ்ச்சியும் பல உயிர்களை பலிகொண்டது உண்மைதான். எனினும்,. அவையெல்லாம் சகோதரச் சண்டைகள்தாம். ஆனால், குவர்னிக்காவில், பாதுகாப்பாற்ற அப்பாவிக் குடிமக்கள் மீது இராட்சத பலம் வாய்ந்த இராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இக்கொடுமை கண்டு, பிக்காஸோவின் தார்மீக உணர்வு ஆர்த்தெழுந்தது. அவருள் வெகுண்டெழுந்த ஆவேசம், ‘குவர்னிக்கா’ ஓவியத்தை தீட்டத் தூண்டியது.
… … (குறியீடுகள் பற்றிய விளக்கம் ) … …
***
பிக்காஸோவின் இந்த ஓவியத்தை முழுமையாகக் காணும்பொழுது, இதனை இருபதாம் நூற்றாண்டு மனிதனின் உருவமாகவே நான் காண்கின்றேன். ஏனென்றால், இது மனித குலத்தின் பல்வேறு பாணிகளையும் பருவங்களையும் தழுவி நிற்கின்றது. தங்களது சமயம், வாழ்க்கை முறை, சடங்குகள், சம்பிராதயங்கள், பழக்க வழக்கங்கள், மொழி, நிறம், பண்பியல்கள் அனைத்தாலும் முற்றிலும் மாறுபட்டுள்ள வேறு மக்களும் உலகில் வாழ்கின்றார்கள் என்பதை இன்றைய உலக மக்கள் நண்குணர்ந்திருக்கிறார்கள். இத்தகைய வேற்றுமையிலிருந்து எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரண்டு வழிகள்தாம் உண்டு. ‘நான் செய்வதுதான் சரி; மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு’ என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்தால், தீராத பூசல்கள்தாம் மிஞ்சும். ‘மற்றவர்களின் வாழ்க்கை முறையும் நம்முடையதைப் போல் சிறந்ததுதான்; நாமும் வேறிடத்தில் வேறு சூழ்நிலைகளில் பிறந்திருந்தால், நாம் பகைவர்களாகக் கருதுகின்ற அப்பகுதி மக்களின் மனப்பான்மைதான் நம்மிடமும் குடிகொண்டிருக்கும்’ என்ற உண்மையினை உணர்ந்தும் சகிப்புணர்வையும், நல்லெண்ணத்தையும் வளர்ந்து கொள்வதுதான் இதற்கு மாற்றுவழி. வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டும் மனித வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் இயன்ற வரையில் பிக்காஸோ இந்த ஓவியத்தில் சித்திரித்திப்பதாக நம்புகிறேன்.
ஓவியர் என்ற முறையில் பிக்காஸோவின் கடந்த காலக் கலைத் திறனுக்கு ஒரு தொகுப்புரையாக ‘குவர்னிக்கா’; திகழ்கின்றது. இதில் சித்திரிக்கப்பட்டுள்ள மாறுபட்ட பாணிகளும் பருவங்களும், மிகவும் எதிரிடையான நுட்பங்களுங்கூட சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே, ‘குவர்னிக்கா’ ஒரு போர் ஓவியம் மட்டுமன்று; அது மானுட சகவாழ்வைப் போதிக்கும் நீதியோவிமுமாகும். பிக்காஸோ கொண்டிருந்த அதே மானோதிடமும், உணர்ச்சியும் கொண்டிருந்தால்தான், இதைப்போன்ற ஒத்திசைவான ஓவியத்தில் இத்தைகைய சுமுக உணர்வினைக் கொடுத்திட இயலும் என்பதையும் இது அறிவுறுத்துகின்றது. இந்த உணர்ச்சிக்குப் பெயர்தான் அன்பு. அவதியுற்றவர்கள் மீதான – கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் மீதான – அபரிமிதமான அன்பு காரணமாகவே , இவர் சாகாவரம் பெற்ற இந்த அற்புதப் படைப்பினைத் தீட்டினார்.
*
தமிழில் : இரா. நடராசன்
*
’பிக்காஸோவின் படைப்புகளைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும் அதன் புதுமை என்னைக் கவர்கின்றது. அவரிடமுள்ள திறமைக்கும் ஈடில்லா ஆற்றலுக்கும் அவர் அப்பாற்பட்டு நிற்கின்றார். “நான் பொதுவாக மோசமாக வரைகின்றேன்; அதனால் நான் பிழைத்தேன்” என்று கூறிய அவர், அதே உறுதிப்பாட்டுடன் தம்மையும் மற்றவர்களையும் எதிர்க்கின்றார். இதுவே, அவரது சிறப்புக்கு உண்மையான அளவுகோல்’ – குவர்னிக்கா ஓவியத்தை – 1962 உலகக் கண்காட்சியில் – பார்த்து பிரமித்த ஜப்பானிய ஓவியர் டாரோ ஒக்கமோட்டோ (’குலை நடுங்கும் கொடுங்கனவு’ கட்டுரையில்).
***
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:PicassoGuernica.jpg
31/05/2011 இல் 12:30 (பிக்காஸோ, Osho / ஓஷோ)
‘…everybody is loving – the father is loving, the mother is loving, the husband is loving, the wife is loving, the children are loving, the teachers are loving. Everybody is loving and the total result is always a world war.’ என்று கிண்டல் செய்யும் ஓஷோவை யாருக்குத்தான் பிடிக்காது? ஓஷோ கிழிக்கும் ஓராயிரம் விஷயங்களில் ஒரு ஓவியரும் உண்டாம். அது பிக்காசோ. போலித்தனங்களை ஓஷோ கிழிப்பாரேயொழிய நவீன ஓவியங்களை வெறுப்பவர் என்று சொல்ல முடியாது. வழிவழியாய் வந்த வணக்கமுறைகளை உடைக்கும் ஓஷோ , பழைய ஓவிய மரபுகளை மாற்றுபவர்களுக்கு எதிராக எப்படி இருக்க இயலும்? ‘Creativity is the greatest rebellion in existence’ என்று முழங்கும் (இதுவும் கிண்டலோ?) ஓஷோ முட்டாளா என்ன? சரி, ’ஜோக்’ என்ற அளவில் தாஜ் அனுப்பிய ஓஷோவின் கிண்டல்களை இங்கே பதிவிடுகிறேன்.
நவீனஓவியம் புரியவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து நகைக்கவே தோன்றும் எனக்கு – அது எவராக இருந்தாலும். மற்ற எல்லாமும் புரிந்து விட்டதோ உங்களுக்கு? புரியவில்லையென்றால் தொடர்ந்து பாருங்களேன் ஐயா. கருத்துமுத்துக்களை உதிர்ப்பதில் அப்படியென்ன அவசரம்? வான்’கோவுக்கும் வான்கோழிக்கும் வித்யாஸம் தெரியாதா? போலிகள் நிறைய உண்டுதான் – எல்லா துறைகளிலும் இருப்பதைப் போல. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டால் வேறுபாடு தெரிந்துபோய்விடும் சுலபமாக . உதாரணமாக, தாஜ்ஐயா கவிதைகளை தொடர்ந்து வாசியுங்கள்; நல்ல கவிதை எது என்பது தெரிந்துவிடும். ஆபிதீன் கதைகளைப் படியுங்கள்; நல்ல கதை எது என்பது தெரிந்து விடும்! – நாகூர்ரூமி. எல்லாம் பயிற்சிதான். கவிதையோ கதையோ எழுத முடியாவிட்டால் பிரச்சினை இல்லை. விமர்சகனாகி விடலாம்!
’பிக்காஸோ சிரிப்பு’களுக்கு முன்பாக – ‘Laughter is my message’ புத்தகத்திலுள்ள ஏழாயிரம் ஜோக்குகளில் ஒரு ’எடுபட்டபய’ ஜோக்கைச் சொல்கிறேன். மிருகங்கள் உறவுகொள்வதைப் பார்ப்பதில் சிறுவன் ஓஷோவுக்கு அலாதி பிரியம் (அப்படியே நாகூர் புள்ளைங்க!). உறவுகொள்ளும் மிருகங்களின் கண்களில் சந்தோசத்திற்கு பதிலாக ஒருவித அவஸ்தையே தென்படுவது ஏன் என்ற சந்தேகம்தான் காரணம். they feel the bilogical slavery என்கிறார். அதை அப்புறம் பார்க்கலாம். நாய்கள் ‘வேலை’ செய்வதைப் பார்ப்பதற்கு அதன்பின்னேயே மைல்கணக்காகப் போகும் இந்த ஓஷோவைப் பார்த்து தந்தைக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது. ’வினோதமான பையனாக இருக்கிறாயே. ஜனங்கள் கேலி செய்கிறார்கள், தெரியுமா?.’ என்கிறார் தந்தை.
‘சரியான வேலைமெனக்கட்டவர்கள்… நான் ’ஸ்டடி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன் அப்பா.’
‘மை காட்! வேறு எதையாவது ஸ்டடி பண்ணக்கூடாதா?’
ஒஷோவின் பதில் : ‘This is the most essential thing!.’
ஓஷோ ஜோக்குகளுக்காகவே ஒரு தளம் இருக்கிறது! ’ Why do you tell jokes?’ Osho: First, Religion is a complicated joke. If you don’t laugh at all you have missed the point; if you only laugh you have missed the point again. It is a very complicated joke. And the whole of life is a great cosmic joke. It is not a serious phenomenon — take it seriously and you will go on missing it. It is understood only through laughter.’
எவ்வளவு சீரியஸான ஆள் நம்ம ஓஷோ!
***
தாவித்தாவி ’தாவோ’ படிக்கும் தாஜ் குறிப்புகள் :
சமீபத்தில் நான் ரசித்த
ஓஷோவின் பேச்சை (எழுத்தில்)
வாசகர்களின் பார்வையில் வைக்க நினைத்தேன்.
காலம் கைக்கூடவில்லை.
என்றாலும்…
தீர முயல்வேன்.
இப்போது..
பிக்காசோ குறித்த அவரது
நகைச்சுவை மட்டும்.
*
பிக்காசோவின் ஓவியமும்,
ஓஷோவின் பேச்சும்
எனக்கு
ஒரே தரவரிசையிலான
ரசனையைத் தருவது.
பிக்காசோவின் ஓவியங்களை (நகல்)
சௌதி,
‘ARAMCO’ என்னும் ‘அமெரிக்கன்
அரேபியன் ஆயில் கம்பெனி’யின்
பணம் பெருத்தச் சுவர்களை
வியந்துகொண்டு போன காலத்தில்
சில இடங்களில் கண்டு
மணிக்கணக்கில் நகர மறந்திருக்கிறேன்.
பின் காலத்தில்…
மலேசியாவில் காணக்கிடைத்த
ஆர்ட் கேலரியில்
அவரது சித்திரங்கள்
சிலவற்றை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
தவிர
’நெட்’டில்,
காணக்கிடைக்காத
அவரது சித்திரங்கள் சிலவற்றையும்
கண்டிருக்கிறேன்.
அந்தக் காணுதல் பெரிய அனுபவம்.
ஓஷோவின் புத்தகங்கள்
பலவற்றைப் படித்திருக்கிறேன்.
அவரது ‘ஸ்பெஷல்’ ஆன்மீகத்தை நாடி
அவரைத் தேடி
அவரிடம் வந்து குவிந்த சீடர்களிடம்
அவர் பேசிய பேச்சுகள்தான்
அவரது புத்தகங்களாக வெளிவந்திருக்கிறது.
இத்தனை அழகாகப் பேசும்
இன்னொருவரை
இந்தியா நிச்சயம் கண்டிருக்க முடியாது!
*
தற்போது…
நான் வாசித்துக் கொண்டிருக்கும்
ஓஷோவின் புத்தகமான
‘தாவோ ஒரு தங்கக்கதவு‘ நூலில்
தனது சீடர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு
ஓஷோ பதில் அளிக்கிறார்.
ஒரு சீடர்…
ஓஷோவிடம்,
பெர்டோல்ட் ப்ரெட் (Bertolt Brecht) போன்று
மதத்தையும் ஆன்மீகத்தையும்
வெறுத்து ஒதுக்கியவர்கள் பற்றி
கேள்வியொன்றை கேட்கிறார்.
அந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் போக்கில்
அவரது பேச்சில்
பிக்காசோ வந்து போகிறார்.
பிக்காசோவின் நவீன ஓவியம் குறித்து
ஓஷோவிடம்
விமர்சனம் இருக்கும் போல் தெரிகிறது.
தவிர,
நவீன கவிதைகள் மீதும்
நவீன இசையின் மீதும் கூட
தனது விமர்சனத்தை வைத்திருக்கிறார்.
”நவீன கலை அசிங்கமாக இருப்பதன் காரணம்
அதில் ஆன்மீக சாரம் இல்லை.
இந்தக் காலத்துக்
கவிதையும் அசிங்கமாகத்தான் இருக்கிறது.
இந்தக் காலத்து இசை அதைவிட மோசம்.
அதில் சங்கீதம் இல்லை,
வெறும் சப்தம்தான் இருக்கிறது” என்கிறார்!
இந்த விமர்சனம்
அவரது பேச்சினூடே வெளிப்படுகிறது.
அந்த வெளிப்பாடு
சிறு நகைச்சுவைக் கதைகளாக
நாம் ரசிக்கத் தக்கவைகளாகவும் இருக்கிறது.
மற்றபடி
பிக்காசோ குறித்த
ஓஷோவின் விமர்சனத்தை
நான் ரசிக்கிறேன் என்பதால்…
அவரது விமர்சனத்திற்கு
நான் கை உயர்த்திவிட்டதாக ஆகாது!
– தாஜ்
***
ஓர் அமெரிக்கக் கோடீஸ்வரன் பிக்காசோவைத் தேடி வந்தான்.
“எனக்கு உடனடியாக உங்களுடைய ஓவியங்கள் இரண்டு வேண்டும். என்ன விலை கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவரிடம் சொன்னான்.
பிக்காசோவுக்கு குழப்பம். அவரிடம் ஒரே ஓர் ஓவியம்தான் தயாராக இருந்தது. இன்னொரு ஓவியத்தை வரைய பல நாட்கள், மாதங்கள் கூட ஆகலாம். அதனால் ஓர் உத்தி செய்தார் பிக்காசோ. இரண்டு ஓவியங்களுக்கும் மிக அதிகமான விலையைச் சொன்னார். அதிக விலையைக் கேட்ட செல்வந்தன் பயந்து போய், ‘எனக்கு ஓர் ஓவியமே போதும்.’ என்று சொல்வான் என்று அவர் எதிர்பார்த்தார்.
ஆனால் கோடீஸ்வரன் அசரவில்லை. அவர் கேட்ட விலையை உடனே கொடுத்துவிட்டான்.
“எங்கே என் இரண்டு ஓவியங்கள்?” என்று கேட்டான்.
பிக்காசோ வீட்டிற்குள்ளே போனார். தான் வரைந்து வைத்த ஓவியத்தை இரண்டாகக் கிழித்தார்.
“இந்தா நீ கேட்ட இரண்டு ஓவியங்கள்” என்று செல்வந்தனிடம் கொடுத்துவிட்டார்.
அவரது ஓவியங்களை நான்காகக் கூட கிழிக்கலாம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
***
ஒரு பணக்காரப் பெண்மணி பிக்காசோவிடம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தனது படத்தை வரையச் சொன்னாள். பிக்காசோவும் ஓவியத்தை வரைந்தார். அதைப் பார்க்க வந்த அந்தப் பெண்மணி சொன்னாள்,
“எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னுடைய மூக்குதான் சரியாக வரவில்லை. பெரிதாகத் தோன்றுகிறது. அதை மட்டும் கொஞ்சம் திருத்திக் கொடுங்கள்.”
“அது முடியாத காரியம் அம்மணி.” என்றார் ஓவிய மேதை.
“ஏன் முடியாது? நீங்கள் என் படத்தை வரைந்திருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் கேட்ட தொகையை நான் தந்துவிட்டேன். நீங்கள் வரைந்த என் மூக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறேன். திருத்தித் தருவது உங்கள் கடமை.”
“அதைச் சொல்லவில்லை அம்மணி, இந்த ஓவியத்தில் உங்கள் மூக்கு எங்கே இருக்கிறது என்று தேடுவது முடியாத காரியம் என்று சொன்னேன்”. என்றாராம் பிக்காசோ.
*
ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ள நல்ல அழகான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான்.
அவனை அணுகிய ஒரு தரகன், “ஒரு பணக்கார விதவை இருக்கிறாள். மிகவும் அழகானவள். உன்னைவிட ஒன்றிரண்டு வயது பெரியவளாக இருப்பாள். ஆனால் பார்த்தால் அப்படித் தெரியாது. அவளுடைய அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. என்னுடன் வா, அவளைக் காட்டுகிறேன்.” என்று சொன்னான்.
தரகனுடன் போய் பெண்ணைப் பார்த்தான் அவன். அவனால் அவனது கண்களையே நம்பமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் அதுவரை அவ்வளவு அசிங்கமான பெண்ணைப் பார்த்ததில்லை.
ஒரு கண் ஒரு பக்கம் பார்க்கும் போது, மறுகண் அடுத்த பக்கம் பார்த்து கொண்டிருந்தது. மூக்கு கோணலாக இருந்தது. பற்கள் வெளியில் தெத்திக் கொண்டிருந்தன. அவள் தலையில் இருந்து போலி முடி என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட குட்டையாக இருந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.
தரகனின் சட்டையைப் இழுத்துப் பிடித்து அவன் காதருகில் கிசுகிசுத்தான்…
“இவளையா அழகு என்று சொன்னாய்?”
“நீ சத்தமாகவே பேசலாம். அவள் முழுச் செவிடு. உனக்குக் கலா ரசனையில்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உனக்கு பிக்காசோவின் கலை பிடிக்கும் என்று நினைத்தேன். நீ இப்படி ரசனை கெட்டவனாக இருப்பாய் என்று யாருக்குத் தெரியும்?”
***
நன்றி: கவிதா பதிப்பகம், தாஜ்
***
அவசியம் பார்க்கவும் : A 3D Exploration of Picasso’s Guernica