‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனின் கவிதை – கூகுள் ப்ளஸ்ஸிலிருந்து…
*
அப்படியே கக்குங்கள் அப்படியே கக்குங்கள்
அனற் பிழம்பே யாயினு மதில் வெந்து சாம்பலாகிறேன்
சைவம் முற்றி எழும்பாய் கழிகிறீர்கள்
கஜ கரணம் போட்டாலும் சாத்தியமில்லை
ஒட்டி புளுகுவதே உண்மை -காட்டாக
புண்ணில் கோலிட்டு முன்குத்தி பின் பிடுங்கி
கங்கையை படுக்கைக்கு விளித்தது மாமாவின்
தாட்சண்யம் மற்றும் தயவு தானே
சோறு போடுகிறேன் சோறு போடுகிறேன் எனும் தொண்டுள்ளம்
சோளக்காட்டிற்கு இட்டுச்சென்று நாக்குச்சுட்டு
அந்தோ நமக்கு நல்லதே செய்கிறது
பத்து இலக்கம் தட்டி பேச தடையாகவிருப்பது
பணிச்சுமையேயன்றி நேரமில்லை என்பதொரு அப்பட்டமான நுண்ணரசியல்
உறைந்த நிலை குளிர்மையே சமித்துக்கொண்ட கோபம்
நீக்கு போக்கான சாக்குகளில் மலிந்திலங்குவது சாதகமான துவக்குகளே
நடைகளில் பாவனையாய் மறைந்து நிற்ப தொய்யாரமே
தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை -புண்ணியரே
தனக்கு தனக்கென்றால் புடுக்கும் களைவெட்டும்
*
நன்றி : ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணன்
ஓவியம் : Paul Jacoulet