குறைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது? – ஷாஜஹான்

‘தன் கையே தனக்குதவி’ என்ற தலைப்பில் சகோதரர் ‘புதியவன்’ ஷாஜஹான் இன்று ஃபேஸ்புக்கில் எழுதிய ‘சுளீர்’ குறிப்பு இது :

அன்னூரில் தங்குகிற ஒவ்வொரு நாள் காலையிலும் சாலையில் சந்திக்க நேர்கிறது இந்தப் பெண்மணியை. வலது கையில் முழங்கை வரை இல்லை. அதில்தான் பக்கெட் தொங்கிக் கொண்டிருக்கும். ஓடி ஓடி தண்ணீர் பிடித்து வருவார். இடது கையால் கடை வாசல்களைக் கூட்டிப் பெருக்கி தண்ணீர் தெளிப்பார். விடுமுறைகளே இல்லாத இவருடைய வாழ்க்கையைப் பார்க்கையில் நீங்களும் நானும் குறைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது….

shajahan-vaazhkkai-fb-1

***

நன்றி :  ஷாஜஹான்