அன்பு சகோதரர் ஆபிதீன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்கள் வலைத்தளத்தில் என்னைப் பற்றியத் தேடுதலைக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெத்தாவில் 30 ஆண்டுகள் பொது மேலாளராகப் பணிபுரிந்து தற்பொழுது சென்னைவாசியாகி மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலுக்கும் அண்ணா நகரின் கொழுத்தக் கொசுக்களுக்கும் பழகிக் கொண்டிருக்கிறேன். சொர்க்கத்தின் காலடிகள் ( சிறுகதைத் தொகுப்பு ) கனவுகள் காத்திருக்கின்றன ( விகடன் நாவல் ) பிரசுரமான புத்தகங்கள். மேலும் பல சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. குங்குமத்தில் சிரியா பற்றிய பயணக் கட்டுரை வெளிவந்துள்ளது. வாய்ப்பு இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
அன்பு
***
சகோதரர் ஷாஜஹான் அவர்களுக்கு..
ஆம். நானும் என் நண்பர்களும் உங்களை நீண்ட நாட்களாக தேடுகிறோம். தொடர்புகொண்டதற்கு நன்றி. உங்களுடைய சிறுகதை ஒன்றை ஜெயமோகன் ரொம்பவும் சிலாகித்திருந்தார் , அவருடைய கதையை விட நன்றாக இருந்ததென்று அசோகமித்திரன் தேர்ந்தெடுத்ததாக. தலைப்பு இப்போது ஞாபகம் இல்லை. அதுதான் இலக்கியச் சிந்தனை பரிசுபெற்றதா என்பதும் அறியேன். அந்தக் கதையை உங்கள் புகைப்படத்துடன் (+ அனுமதியுடன்) அனுப்பினால் உடனே என் பக்கங்களில் வெளியிடுவேன். ஒருவேளை எந்த சிறுகதையென்று உங்களுக்கும் ஞாபகம் இல்லையேல் இணையத்தில் இதுவரை வெளிவராத ஏதாவது ஒரு சிறுகதை அல்லது கட்டுரை அனுப்புங்கள். அப்படியே அண்ணாநகர் கொசுக்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.
நன்றி.
அன்புடன்,
ஆபிதீன்
***
Dear brother Abedeen,
Assalamu Alaikkum, I was really elated to receive your email and express my heartfelt thanks for what all you have written. InshaAllah I will forward my writing soon. I am mailing in English because this desk top is yet to be loaded with Tamil fonts. Are you in Saudi Arabia now ? Please visit us while in Chennai. I too have a blog but write very occasionally . www.blossomingspace.blogspot.com . There I have written some of my poems ( English & Tamil ) as well as the translation of my story Kolam.
Ok salams to all
Regards
C J Shah Jahan
Business Partner Director
Kidzee Anna Nagar ZEAL Leadership Training ,
Chennai 600040 Alwarpet, Chennai 600018
***
ஆபிதீனின் குறிப்பு :
’சனதருமபோதினி’யில் எழுதிய ஷாஜஹான் இவர்தானா என்ற சந்தேகம் இப்போதும் நீங்கவில்லை. போகட்டும், சகோதரர் C.J ஷாஜஹான் அவர்களின் – தமிழக அரசு பரிசு பெற்ற – ’கோலம்’ சிறுகதை இங்கே இருக்கிறது – ஆங்கிலத்தில். நண்பர்கள் யாராவது தெலுங்கிலோ ஹிந்தியிலோ அதை மொழிபெயர்த்து அனுப்பினால் உடனே இங்கு பிரசுரிக்கப்படும். நன்றி !