எனக்குப் பிடித்த நகுலனுக்கு பிடித்தமானவர் (மறைந்த) ஷண்முக சுப்பையா. கல்லூரி காலத்தில் படித்து ரசித்த அவரின் ஒரு கவிதை இன்று என்னமோ நினைவில் ஆடுகிறது. அது இணையத்திலும் இல்லையாதலால் பதியலாமே என்று … (தலைப்பு ஞாபகமில்லை. நண்பர்கள் தெரிவிக்கலாம் )
**
வீட்டைச்சுற்றி
தோட்டம் போட்டேன்
தோட்டம் சுற்றி
வேலி போட்டேன்
வேலி சுற்றி
காவல் போட்டேன்
காவலைப்பற்றி
கவலைப்பட்டேன்.
**
நண்பர் பாஸ்டன் பாலாஜியின் நகுலன் அஞ்சலித் தொகுப்பிலிருந்து ஷண்முக சுப்பையாவின் வேறொரு பழைய கவிதையும் கிட்டியது. இதுவும் எனக்குப் பிடித்தமானது. அந்த எளிமை யாருக்குத்தான் பிடிக்காது?
அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்க சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
ருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை
**
இப்படி எழுதுங்களேன் அப்துல் கையும்…!
கூடவே நகுலனின் நாவல்கள் பற்றி நண்பர் சன்னாசியின் பதிவையும் படியுங்கள்.