http://paamaranpakkangal.blogspot.com/2012/06/blog-post.html
*
Thanks to : Vasu Sir
15/01/2020 இல் 15:45 (வாசு பாலாஜி)
01/08/2017 இல் 09:24 (வாசு பாலாஜி)
‘மூலம்’ என்றொரு நாவல் நானும் எழுதியிருக்கிறேன். இப்போ அது எங்கிருக்கோ தெரியவில்லை, எப்போதாவது – யார் பெயரிலாவது – அது வெளிவரும், இன்ஷா அல்லாஹ். அது போகட்டும், இது கூகுள் ப்ளஸ்ஸில் ஐயா வாசு கடுப்புடன் எழுதியது. செம! – AB –
வாசு பாலாஜி : மூலத்துல வெளிமூலம்னு ஒன்னு உண்டு. ஆசன வாய சுத்தி வாரது. உக்காந்தா கடுக்கும். ராத்திரி தூங்கறதும் பெரும்பாடு. இவிங்க தூங்கப் போறப்ப தண்ணி கொண்டுட்டு போறாங்களோ என்னமோ அமிர்தாஞ்சனம் (ஆரம்ப கேஸ்) ஜண்டு பாம் ( மீடியம் கேஸ்) மஞ்சாகலர் டைகர் பாம் (முத்துன கேஸ்) பாட்டில் இல்லாம படுக்க போகமாட்டாங்க.
பாய்ல ஒரு கால மடிச்சி ஒருகால குத்துக்கால் போட்டு வலது கைய ஊன்றி ஒத்த சூத்துல உக்காந்துக்கிர்ரது. நல்லா உக்கார முடியாது. கடுக்குமே. அப்புறம் கண்டிஷனுக்கு தக்கன தைலத்த பீச்சாங்கை விரல்ல எடுத்து குத்துக்கால் போட்ட பக்கம் வேஷ்டிய தள்ளி ஆசன வாய சுத்தி தடவிக்குவாங்க.
அடங்கொய்யால ஏற்கனவே புண்ணா இருக்கும்..அதுல இதப் போயாடான்னு நினைப்போம். அவங்க முகத்தப் பார்க்கணும்..அரைக்கண் மூடி, லேசா சுளிக்க ஆரம்பிச்சி எரிச்சல் ஏற ஏற ம்ம்ம்..ஹா…ஸ்ஸ்ஸ்..ஹப்பா..ப்ச் ப்ச்னு ஃபர்ஸ்ட் கோட்டிங், செகண்ட் கோட்டிங்னு போய்க்கினிருக்கும். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் ஒத்த பக்கமே தடவிக்கினு அப்பிடியே படுக்கும்போது முகத்தப் பார்க்கணும்..அப்படி ஒரு பரவச நிலை. இந்த எரிச்சல்ல கடுப்பு மறைய நல்லா தூங்கிடுவாங்க. காலைல கக்கா ரூமா லேபர் ரூமான்னு தெரியாம கதறுவாங்கதான்..ஆனாலும் அந்த பரவசமிருக்கே பாத்தவனுக்கு பைத்தியம் புடிக்கும்.
எதோ காலணா அரையணா சேத்தாடா வைக்கிற வட்டி கெடியாது போன்னு ஒரு பக்கம், கேசு பெட்ரோல்ல கொள்ளையடிக்கிறது போதாதுன்னு மானியம் கெடியாது, டெய்லி விலை மாறும்னு ஆப்பு வைக்கிறது இப்பிடி சாமானிய மக்கள சுத்தி சுத்தி அடிச்சி கொலையா கொன்னாலும் பாத்தியா மோடி மேரி வருமா..தில்லுக் காரன்யா, ரெய்டுட்டான் பாரு, கருப்பு பணமே காணோம், பாலாறு ஓடுது, தேன் மழையா பெய்யுதுன்னு போஸ்டப் பார்த்தா இந்த மூலக்கேசுதான் கவனம் வருது.
போஸ்ட் பட்டன அமுக்கீட்டு, தனியா அலறுவாய்ங்களா இருக்கும்:)
*
நன்றி : வாசு பாலாஜி
05/07/2017 இல் 10:47 (இசை, மஹாராஜபுரம் சந்தானம், வாசு பாலாஜி)
கூகுள் ப்ளஸ்ஸில் வாசுபாலாஜி சார் போஸ்ட் :
ராத்திரி யூ ட்யூப்ல சஞ்சய் கச்சேரி அப்லோடிருக்குன்னு மெசேஜ் வந்தா க்ளிக்கி ஒரிஜினலா டுபாக்கூரான்னு பாக்கலாம்னா கெளவி அய்ய்யய்ய..மனுஷா அலுத்து சலுத்து தூங்க வேணாமா..இந்த தரனன்னா எளவ ஹெட்ஃபோன் போட்டுண்டு கேட்டா என்னான்னு கத்துவா.
சரி பிசில கேக்கலாம்னு வச்சா ‘யப்பா! கொல்லாதப்பா..சைன்னு’ கதவ டமால்னு போட்டு போவா மொவ.
தூங்குனாமேரியுமாச்சு, ஆளு எஸ்ஸாவாம பாத்துக்கிட்டா மேரியுமாச்சுன்னு வாசப்படில தல வச்சி கொர்ரிட்டிருந்துச்சு கோவாலுபக்கி.
இந்த பாட்ட வச்சா எழுந்து நின்னு, நீயெல்லாம் ஒரு மனுசனாய்யா? ராத்திரியெல்லாம் தூங்கி டயர்டாகி, காலைல தூங்கி அலுத்து ஒரு நாயி நிம்மதியா தூங்க முடியுதாய்யா இந்த ஊட்லன்னு எழுந்து போய் பெட்ல தூங்குது எச்ச நாயி..
Virutham-Kanda Guha-Ragamalika..Brindavani,Darbarikannada,Hamsanandi
Thanks to : Shobana Prakash
*
ஆபிதீன் பதில் :
அதிகாலை நேரத்தில் ஆல் இந்தியா ரேடியோவைத் திருகி சங்கீதம் கேட்கும் வாப்பாவைப் பார்த்து உம்மா சொல்வார்கள்: “களிச்சல்லபோறஹலுக்கு நேரம்காலம் கிடையாது.” பாடுகிறவர்களைச் சொல்கிறார்களாம்!