வாய்ச்சவடாலில் மட்டும் குறைச்சலே இல்லை! – வண்ணதாசன் கவிதை

நண்பர் பொன்.வாசுதேவன் கூகிள்+ல் ஷேர் செய்திருந்தார் இதை (இந்த வரி கவிதை அல்ல!). வழக்கம்போல சென்ஷி மூலம் கிடைத்தது. பகிர்கிறேன், நன்றியுடன். ஆமா, இதுல மட்டும் கொறச்சலே இல்லே.. – ஆபிதீன்

***

vannadasan-dsc_0130

நிதானமாக குடிக்கத்
தெரியவில்லை.

அவசரப்படாமல்
‘அனுபவிக்கத்’ தெரியவில்லை.

வேண்டியது கேட்டுச்
சாப்பிடத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்
சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்
பேசத்தெரியவில்லை.

அவசியத்துக்குக் கூடக்
கோவப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்
இரண்டாம் மனுஷியை
சினேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்
பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்
பார்க்கத் தெரியவில்லை.

அபிப்பிராயங்களைச்
சொல்லத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்
தெரியும் என்ற
வாய்ச்சவடாலில் மட்டும்
குறைச்சலே இல்லை.

***
நன்றி : வண்ணதாசன்

« Older entries