எங்கள் செல்லப்பிள்ளை இவன். எழுத்தாளர் சென்ஷியின் மகன். டென்சனாக இருந்தால் இவனுடைய குறும்புகளைப் படிப்பேன். அதில் ஒன்று இது. தங்கை யாழினி எழுதியது. நண்பர் ஜெயமோகன் நிராகரித்த பத்மஸ்ரீ விருதை இவனுக்கு அளிக்கிறேன்!
***
கொஞ்ச நாளாவே ஆஹில் சாப்பிட படுத்தியெடுக்குறான். நொந்து நூடுல்ஸா மட்டும் இல்ல நானு இடியாப்பமாவே ஆயிட்டேன். சும்மா நேத்து ஒரு பொழுது சேதியை சொல்றேன்.
காலைல எழுந்து வந்து ஆஹில் “ம்மா எனக்கு இன்னிக்கு பூரி வேணும் செஞ்சு தடுடீங்ளா” ன்னு கேட்டான்.
“சரிடம்மா செஞ்சு தரேன்”
நைட்டும் ஒழுங்கா சாப்பிடலை பிள்ளன்னு அவசர அவசரமா பூரி செஞ்சு உருளைக்கிழங்கு மசாலாவும் செஞ்சு அஃப்ராவையும் ஆஹிலையும் சாப்பிட கூப்பிட்டேன். அஃப்ரா ரெண்டு பூரியை எடுத்து சாப்பிட உக்காந்தா.. ஆஹில் திரு திருன்னு முழிச்சிட்டே என்ன பாத்தான்
”
ஏண்டா மயிலா.. சாப்பிடு”
ம்மா.. எனக்க்கு.. எனக்க்கு.. இட்டலி சாப்பிடதான் ஆசவடுது..
அம்மா இட்லி வேணுமான்னுதானே கேட்டேன் நீதானே பூரி வேணும்னு சொன்ன ஒழுங்கா சாப்பிடு..
அடுவன்டு.. அடுவன்டு.. எனக்கு படட்டா (பரோட்டா) வேணும் அடான் பூரி கேட்டேம்மா..
அப்ப அதானே கேக்கணும் நீ ஏன் பூரி இட்லின்னு கேக்குற.. உனக்கு என்ன வேணும்னே தெரிஞ்சிக்க தெரிலையா..
எனக்கு பூரி வேணுல்ல அடான் இட்டலி கேட்டேன்..
அவ்வ் என்னதாண்டா வேணும். உங்கப்பாகூட சமைச்சதை பொட்டாட்டம் சாப்பிட்டு எந்திரிப்பாரு.. இப்ப சாப்பிட போரியா இல்லையாம்மா..
. ……,……………..
(கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு)
ம்மா.. ம்மா..
வேணா தங்கா… அம்மா உன்கூட டூ. எது செஞ்சாலும் சாப்பிட மாட்டேங்குற
“இடுங்க.. “
வேகமாஉள்ள போய் பூரியை தட்டுல வச்சு எடுத்திட்டு வந்து பக்கத்துல உக்காந்தான்.
ம்மா நானு சாப்பிடப்போடேன்..
ம்ம்
அவசரமா ரெண்டு பூரிய சாப்பிட்டிட்டு “கோச்சுக்காடிங்கம்மா ப்பீஸ்”னு கொஞ்சிட்டு கொஞ்சம் முத்தமும் தந்தான் பூரிவாயன்.
இதே போல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சேட்டை செஞ்சான்.
ம்மா மித்து ஃபூட் (ஃப்ரூட்) கொண்டு வர சொன்னாங்க.. எல்லாரையும்..
நீ ஃப்ரூட்ஸ் கொண்டு போனியேடாம்மா இன்னிக்கு..
இல்லம்மா நீங்க ஃபூட் தரல.. ஆப்பில்தான் தந்தீங்க.. ப்பீஸ் எனக்கு ஃபூட் தாங்க.. இல்லன்னா மித்து திட்டுவாங்க
இந்த கட்டத்தை கடக்க நான் டோராவா மாறி கதை சொல்லி சொல்லி கவுக்க வேண்டியதாயிடுச்சு..
*
எழுத்தும் புகைப்படமும் : யாழினி