ஆர்.சூடாமணி:
மறக்க முடியாத மறைவு
மறக்கவே முடியாத எழுத்தாளர்
-தாஜ்
***
சமீபத்தில் மறைந்த
எழுத்தாளர் ஆர்.சூடாமணி,
ஆடம்பரமில்லாத
எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
அவர் எழுதி வைத்த உயில்படி
அவரது மறைவுக்குப் பிறகு
வி.எச்.எஸ். ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி,
ராமகிருஷ்ணா மட சாரிட்டபிள் டிஸ்பென்ஸரி
அண்ட் டயக்னாஸ்டிக் செண்டர் அமைப்புகளுக்கு,
சுமார் ஐந்து கோடி ரூபாய்
கிடைத்திருக்கிறது என்கிற செய்தியினை
சமீபத்தில் அறியவந்த போது…
மனம் ஒடுங்கிய நிலையில் துடித்தது.
ஒரு எழுத்தாளர் தனது சுய சொத்தின்
முழு மதிப்புத் தொகையான
இத்தனைப் பெரிய தொகையினை
இப்படி ஒரு மிஷனுக்கு தானமாக வழங்கியதை
இந்திய அளவில்
வேறொரு எழுத்தாளர் இப்படி தானம் செய்து
நான் அறிந்ததில்லை!
இதற்கெல்லாம்
கற்பனைக்கெட்டாத பெரிய மனம் வேண்டும்!
இங்கே சில எழுத்தாளர்கள்
தங்களது எழுத்தை கூவி கூவி
கட்டுக்கட்டான அந்த மைப் பூசிய
காகிதங்களை நல்லக் காசாக்கி….
காலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரியும்
இந்த மண்ணில்….
சூடாமணி மாதிரியானதோர் எழுத்தாளரும்
ஜீவித்திருக்கிறார் என்பதை அறிந்துணர்ந்த போது
கண்கள் கசிந்தது.
கொஞ்ச நஞ்சம்
மீதமிருந்த என் அகச் செறுக்கும்
அந்தக் கண்ணீரோடு கரைந்துவிட்டது.
சரியாகச் சொன்னால்
செய்தியறிந்த சற்றுநேரம் உறைந்தேவிட்டேன்!
அமரத்துவம் கொண்டு
நம் நெஞ்சில் வாழும்
ஆர். சூடா மணியின்
எந்தவொரு நாவலையும்
வாசித்ததில்லை நான்.
குற்றவுணர்வில்
அவமானம் பிடுங்கித் தின்கிறது.
***
வாசிக்க : ஆர். சூடாமணியின் சிறுகதைகள்