சிவராம காரந்தின் சிந்தனை

சிவராம காரந்த்-ன் ‘அழிந்தபிறகு’ நாவலில் ’முதிய குடும்பி’யான யசவந்தர் சொல்வது:

”ஒரு விஷயம், பாருங்கள், நமது மூதாதையர்களான பல்வேறு முனிவர்கள் உலகம், பிறப்பு முதலியவற்றைப்பற்றி இது இப்படி, இதுவே உண்மை, இதுதான் இறுதியான முடிவு – என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள் அல்லவா? அவற்றை வேதம் என்றாவது சொல்லுங்கள், உபநிடதம் என்றாவது சொல்லுங்கள் – தவத்தினால் அறிந்துகொண்டது என்றோ கடவுளே வந்து காதில் கிசுகிசுத்தது என்றோ சொல்லுங்கள். எனக்கு ஓர் ஐயம், இந்த உலகம், படைப்பு முதலியவற்றைப் பற்றி நான் ஏதோ சிறிது படித்துத் தெரிந்துகொண்டிருக்கிறேன். உயிர்க்கூட்டத்தின் இந்த யாத்திரை எங்கோ தொடங்கி எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. பயணம் தொடங்கிய எவ்வளவோ காலத்திற்குப் பிறகு, வழியில் இரயில் நின்ற இடத்தில் வண்டியேறும் பிரயாணியைப்போல மனிதன் என்னும் பிராணி உள்ளே நுழைந்தான். நுழைந்தவன், நுழைந்ததுபோலவே இறங்கியும் விட்டான். வாழ்வு என்னும் பயணம் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதனுடைய குறிக்கோள் இன்றுவரை தெரியவில்லை. இன்னும் கடக்கவேண்டிய வழி எண்ணிப் பார்க்க முடியாத அளவு நீண்டிருக்கிறது. அத்தகைய வேளையில் அவன் எப்படிப்பட்டவனேயாகட்டும், ‘நான் இதன் இரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன், இதுவே உண்மை’ என்று முழங்குவானானால் அது நகைப்பிற்குரியதாகிறதல்லவா?”

தமிழாக்கம் : எம். சித்தலிங்கய்யா

***

Thanks : NBT