காலத்தச்சன் கவிதை

கூகுள் ப்ளஸ்ஸில் நேச மித்ரன் பகிர்ந்த காலத்தச்சனின் கவிதை, நன்றியுடன்…

*
பத்து என்கிற பத்மபனாபனுடன்
கழித்த
நேற்றைய மாலை
மறக்கவே முடியாது
சிகரெட் பிடித்தான்
கிடார் இசைத்தான்
பைக்-கை
சர்வீஸ் விடனுமென்றான்
அம்சவேணியை
மன்னித்துவிட்டேன் என்றான்
எப்பப் பாத்தாலும்
பீய மிதிச்ச மாதிரியே
மூஞ்ச வச்சிக்கற
சந்தோசமா இருடா மாப்ள என்றான்
முதுகிழவியை
சாலையை கடக்க உதவிவிட்டு
LIFE IS BEAUTIFUL என்றான்
அமர்ந்திருந்த சுவரிலிருந்து உற்சாகமாய்க் குதித்து
என்னமோ தெரியலடா
எல்லாரையும் பிடிக்குது என்றான்
நான்தான் புரிந்துகொள்ளவில்லை
நேற்றிரவே
பத்து
தூக்கிட்டுக்கொண்டான்.

*

venkythillai-kaalathachan

நன்றி : காலத்தச்சன்