திருவாத்தான் – நாட்டுப்புற சிறுகதை

ஆங்கில மூலம் : ஏ.கே. இராமானுஜன்,
தமிழில் : சிறுமேதாவி, ஓவியம் : கொ.வடிவேல்
(படைப்பு தகவு (ஜூலை-ஆகஸ்ட் 2018) இதழில் இருந்து, நன்றியுடன்…)

திருவாளத்தான் வேறு. இவன் திருவாத்தான். நாட்டுப்புறங்களில் கோமாளித்தனமாக இருப்பவர்களை திருவாத்தான் என்று அழைக்கும் பழக்கம் உண்டு என்கிறது விக்கி.கதை எனக்குப் பிடித்திருந்தது. படித்துப் பாருங்கள். – AB
*

thiruvaathan - art1ஒரு ஊர்ல ஒரு திருவாத்தான் இருந்தான். அவனுக்கு அண்ணன்மார் ரெண்டு பேரு இருந்தாங்க. அவனுக்கு உண்மையான பேர் இருந்தாலும், அதைச் சொல்லிக் கூப்பிட்டால் அவன் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான். ‘திருவாத்தா’ என்று கூப்பிட்டால்தான் அவன் என்னான்னு கேட்பான். அதனால், அந்தப் பேரே அவனுக்கு நிலைத்துவிட்டது. அவன் ஒன்னும் தெரியாத அப்பாவியாக இருந்தான். அவனுக்குப் பொய் சொல்லவோ, ரகசியத்தை மனசுல வெச்சுக்கவோ தெரியாது. அந்த ஊர்ல இருக்கும்

குறும்புக்கார மனிதர்கள் ஒரு விஷயத்தை ஊர்முழுதும் பரப்ப வேண்டுமென்றால், அந்த விஷயத்தைத் திருவாத்தானிடம் சொல்லிவிட்டு, “இது ரகசியம், யார்கிட்டேயும் சொல்லக்கூடாது” என்று சொல்லிவிடுவார்கள். திருவாத்தான் அதை ஊரிலுள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு, தன் அண்ணன்மாரிடமும் வந்து சொல்வான். பிறகு,சத்தமாக “ஞாபகம் வெச்சுக்கோ.. இத யாருக்கும் சொல்லக்கூடாது” என்பான். அவ்வளவு திருவாத்தான் அவன்.

மேலும்… (Click the Images to Read)
Page 1 | Page 2 | Page 3 | Page 4 | Page 5 | Page 6

*

நன்றி : படைப்பு தகவு