உள்ளேயும் வெளியேயும்
ஆனந்த்
ஒரு மாபெரும் மரத்தையும்
சூழ்ந்து நின்ற வெளியையும்
மழை பெய்த மாலை ஒன்றுடன்
சேர்த்து விழுங்கினேன்
காலையும் மாலையும்
கூடு திரும்பும்
பறவைக் கூட்டங்களும்
நிகழ்கின்றன உள்ளே
காலமும் ஓடுகிறது
வெளியே
அக்கோடிக்கும் இக்கோடிக்கும்
நீளும் சிறகு விரித்து
வண்ணங்கள் கடந்த
இந்தப் பறவை மட்டும்
மெல்லப்பறந்து
கொண்டு இருக்கிறது
எங்கு
எப்போது
என்பதுதான்
புரியவில்லை.
***
நன்றி : ஆனந்த், காலச்சுவடு (1991 சிறப்பிதழ்)
***
தொடர்புடைய சுட்டி :
கரைந்துபோகும் கணம்-ஆனந்தின் ‘உள்ளேயும் வெளியேயும்’ :
பாவண்ணன் (உயிர்மை கட்டுரை)