அடங்குங்கப்பா..! – அபு ஹாஷிமா

ஃபேஸ்புக்கில் அண்ணன் அபு ஹாஷிமா எழுதியிருந்தது பிடித்திருந்தது. இங்கே பகிர்கிறேன். ஆன்மீகம் பிடிக்காதவர்கள் தம்பி பழனிகுமாரின் பகடியை இங்கே படித்துவிட்டு பயங்கரமாக சிரிக்கலாம்! – AB
***

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் …
உமையா ஆளுநர்.
அவனிடம் படைத்தளபதியா இருந்த ஒருவன் அழகான விலை உயர்ந்த ஆடை அணிந்து வீதியில் நடந்து சென்றான்.
நடையில் திமிர்
பேச்சில் திமிர்
பார்வையில் திமிர்
எல்லோரையும் விட தான் உயர்ந்தவன் என்ற
எண்ணத் திமிர் !
சூபி ஒருவர் அவனைக் கவனித்தார்.
” தம்பி கொஞ்சம் அடங்கி நட ” என்று அவனிடம் சொன்னார் .
அவனுக்கு கோபம் வந்து விட்டது .
” ஏய்…நான் யார் தெரியுமா ? யாருகிட்டே பேசுறே தெரியுமா ? என் அந்தஸ்து என்னான்னு தெரியுமா ? பரதேசிப் பயலே …”
அப்படின்னு அவர்மேலே கோபப்பட்டான்.
அவருதான் பக்கிரிசாவாச்சே… பயப்படுவாரா ?
அமைதியா சொன்னார்..
” நீ யாருன்னு நல்லாவேத் தெரியும். தெரிஞ்சுதான் சொல்றேன்.. அடங்கு ” என்று.
” தெரியுமா ? தெரிந்துமா என்னோடு பேசுகிறாய் ? சொல்லு ..சொல்லு … நான் யாருன்னு சொல்லு ?” அப்படின்னான்.
” நீ ஒரு அற்பத்துளி விந்திலிருந்து பிறந்தவன் . ஒரு அருவருப்பான இடத்திலே இறந்து அடங்கப்போறவன் . பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவிலே உன் குடலில் மலத்தை சுமந்து கொண்டு அலைபவன் . போதுமா இன்னும் சொல்லணுமா ?” ன்னு சூபி கேட்டாரு.
” போதும் அய்யா…போதும்னு சொல்லிட்டு பணிவா நடக்க ஆரம்பிச்சான்… அந்த வீரன்.
இங்கே கொஞ்சம் பேரு பெருமையில இல்லாத நெஞ்சை நிமித்திகிட்டு மாவு இடிக்கிரதை பார்த்தா…
அடேங்கப்பா… வானத்தில இருந்து குதிச்சு வந்த புனிதர்கள் மாதிரி … என்னா பெருமை…என்னா பெருமை …
அடங்குங்கப்பா…

*

Thanks to : Abu Haashima

இன்னொரு சுட்டி :

ஈரத்தை இழந்த மரங்கள் – அபு ஹாஷிமா