அல்-ஃபராபி : அருட்கொடையாளர் -8

’அனாவசியமாக ஆற்றலை வீணடிப்பதுதான் தத்துவம்’ என்று கிண்டல் செய்யும் ஓஷோ,  அதே ஆற்றல் தியானமாகவும் ஆக முடியும் என்பார். இது ஜாபர்நானாவின் தியானம்….

***

அறிஞர் அல்-ஃபராபி

இசை – என்று உலகம் பிறந்ததோ கூடவே இசையும் பிறந்துவிட்டது எனலாம். இயற்கை மீட்டும் இசைக்கு எதையும் ஈடாக்க முடியாது. தூரத்தே விழும் அருவியின் இரைச்சலும், அருகில் ஓடும் நீரோடையின் சல சலப்பும், மரங்களின் இடையே கிழித்துக்கொண்டு வரும் காற்றின் ஓசையும் எந்த இசைக்கும் ஈடாக்க முடியுமா? குயிலின் கூ…கூ..வுக்கும் வண்டுகளின் ரீங்காரத்துக்கும், புல் புல்லின் சீழ்க்கைக்கும் முன்னால்….!?  இசைக்கு மயங்காத மனித இனமோ இல்லை புல்லினமோ இருக்கமுடியாது, ஏன் பயிற்கள் கூட இசையினால் வளம்பெறுகிறது என அறிவியல் கூறுகிறது. இத்தகைய இசையை  இஸ்லாத்தில் வெறுக்கப்பட்டது, அறவே கூடாது, கவிஞர்கள் வீணர்கள் என்றெல்லாம் வலியுறுத்துகிற அறிஞர்கள் ஒரு பக்கம். இல்லை, இது வெறுக்கப்படவுமில்லை கூடாததுமல்ல; ஏற்புடையதுதான், கீழ்த்தர உணர்ச்சியைத் தூண்டக்கூடிய இசையை இஸ்லாம் வெறுக்கிறது  என இசையை வேறுபடுத்திக் காட்டும் அறிஞர்கள் வேறொரு பக்கம்.  இசையே கூடாது, இசைக் கருவிகளை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மன்னர்களும் வரலாற்றில் உண்டு. இந்திய துணைக் கண்டத்தைப் பொருத்தவரை  வடக்கில் இசையில் விற்பண்ணர்களாக இஸ்லாமியர்கள் மிகைத்து நிற்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.

இசை வெறுக்கப்படவேண்டியது என்றால் பாங்கொலி ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். மாறாக மக்காவில் சொல்லும் பாங்கிற்கும் மதினாவில் சொல்லும் பாங்கிற்கும், நமதூரில் சொல்லும் பாங்கிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. குர்ஆனை ஓதுபவர்களிடையே வித்தியாசம் காணப்படுகிறது. காரணம் ஒலி, நடை, சந்தம்,  இவைகளில் ஏற்படும் அதிவுர்களின் ஏற்ற இறக்கம். குர் ஆன் கவிதை வடிவில் இருப்பதால்தான் ராகம் சேர்த்து ஓத முடிகிறது, மனனம் செய்ய முடிகிறது. உரை நடை வடிவில் இருந்தால் இசைக்கவும் முடியாது மனனமும் செய்ய முடியாது. தவிர நபி தாவுத்(அலை) அவர்களுக்கு அருளிய ‘சபுற்’ வேதம் தூய இசை வடிவிலானது என்பது வரலாற்று உண்மை. எனவே இசைக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு என்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

இசையைப் பற்றி ஆராய்ந்து அதற்காக நூல் எழுதியிருக்கிறார் பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த ஒரு அறிஞர், தத்துவஞானி, பல் மொழி வல்லுனர் என பல்வேறு துறைகளில் அறிஞரான இஸ்லாமிய சிந்தனையாளர் அல் ஃபராபி

AL-FRABI – (AD 870-950)
The Second Teacher

அல் ஃபராபி, அபு நாஸர் அல்-ஃபராபி,  எனவும் அல் ஃப்ராரபியஸ் என மேற்கத்தியர்களாலும் அழைக்கப்படுகிற  இவரின் முழுப் பெயர் ‘அபு நாஸர் முஹம்மது இப்னு அல்-ஃபராபி’ என்பதாகும். (‘முஹம்மது இப்னு முஹம்மது இப்னு தர்கான் இப்னு உஜ்லக் அல்-ஃபராபி’ என்பதும் சிலர் கருத்து). அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு இரண்டாம் ஆசிரியர்(al Mu’allim al-Thani) என்ற சிறப்பையுடய இவர் தத்துவம், தர்க்கம், மூலதத்துவம்(Metaphysics), இசை, அறவியல்(Ethics), இறைஇயல்(Mysticism), அறிவுநெறியியல்(Epistemology), அறிவியல் என பல துறைகளில் சிறந்து விளங்கிய இவர், எழுபது மொழிகளில் பேசும் ஆற்றல் படைத்தவர். தன் வாழ்நாளில் ஆறு அப்பாஸிய கலிஃபாக்களின் ஆட்சியைக் கண்டவர்.

வாழ்க்கை வரலாறு

இவர் துருக்கிஸ்தானிலுள்ள அல் ஃபராப் அருகிலுள்ள வஸிஜ்என்ற சிறிய கிராமத்தில் பிறந்ததார். இவரது பிறந்த பகுதி பற்றி தெளிவான குறிப்பு ஏதுமில்லை, ஆனால் சமகாலத்தில் வழ்ந்த சிலரின் வாய்மொழி வழியிலும் அல்லது யூகத்தின் அடிப்படையிலுமே இளமைக் கால சரிதைக் கிடைக்கிறது.  சிலர் ஈரானின் வடமேற்கு எல்லை காஸ்பியன் கடலின் சற்றே தூரத்து ஃபராப் என்றும் மத்திய ஆசியாவிலுள்ள ஒதரார்  (பழைய பெயர் ஃபராப்)ல் பிறந்ததாகவும் சொல்கின்றனர். வரலாற்றாசிரியர் இப்னு அல் நதீம்  கூற்றுபடி இவர் கொரஸான் மாகாணத்திலுள்ள ஃபர்யாப் என்ற இடத்தில் பிறந்தார்(மின் அல்-ஃபர்யாப் மின் அர்ளு கொரஸான்) என அறிய முடிகிறது.

ஆப்கானிஸ்தானிலும் ஃபர்யாப் என்ற பகுதி உள்ளது. இப்படி பிறந்த பகுதி தெளிவின்மை இருப்பதுபோல் பிறந்த வருடம் 872 என்பது ஒரு சிலரின் கருத்து என்றாலும் எகோபித்த முடிவு  கி.பி. 870 என்பதாகும். தனது எண்பதாவது வயதில் கி.பி. 950 டிஸம்பர் 14 க்கும் 951 ஜனவரி12 க்கும் இடையில் டெமாஸ்கஸில் இறந்தார்.

இப்னு கல்லிகான் என்ற துருக்கி வரலாற்றாசிரியர் சொல்கிறார், அல்-ஃபராபி வஸிஜில் கவுரவமான துருக்கி பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஆனால் மத்திய கால வரலாற்றாசிரியரான  இப்னு அபி ஒசைபியா வும், முஹம்மது இப்னு மஹ்மூது அல்-ஷஹ்ருஜி(கிபி 1288) யும் மேற்கத்திய வரலாற்றாசிரியர் Peter J. King ம் இவர் பாரசீக மரபை சேர்ந்தவர் என்கின்றனர். மேலும் இவர் சூஃபி மரபை சார்ந்த மிக உன்னதமான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் பாரஸீகத்தை சேர்ந்தவர்கள். இவர் தந்தை  துருக்கிஸ்தான் கலிஃபாவுக்கு பாதுகாவலராக அல்லது உயர் ராணுவ அதிகாரியாக இருந்தார். இளமைக் கால கல்வி சொந்த நகரான ஃபராபிலும், பின் புக்கராவிலும் நிகழ்ந்தது.

முப்பதாண்டு காலத்திற்குப் பிறகு கி.பி. 901 ல் மேற்படிப்பிற்காக பாக்தாத் வந்தார். அங்கு அவர் நெஸ்தோரிய கிருஸ்துவரும், மொழிபெயர்ப்பு வல்லுனரும், கிரேக்க தத்துவ ஞானியுமான அபு பிஷர் மத்தா பின் யூனுஸிடமும் பின் மற்றொரு நெஸ்தோரிய கிருஸ்துவரான  யுஹன்னா பின் ஹைலானிடமும் தத்துவம், தர்க்கம்(Aristotelian logic), அறிவியல் ஆகியவற்றைக் கற்றார். பாக்தாத் வந்த பின் சுமார் 40 ஆண்டு காலம் அங்கே இருந்ததாகவும் அப்போது பல்வேறு மொழிகளைக் கற்று அவற்றில் நிபுணத்துவம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

இப்னு கல்லிகானின்(இறப்பு 1282) இவர் குர்து இனத்தை சேர்ந்தவர் என்பதால் தன் தேசத்தை நிலை நாட்ட இப்னு அபி ஒசைபியாவின் கூற்றை மறுத்து அல்-ஃபராபி துருக்கியைச் சேர்ந்தவர் குடும்பப் பெயர் ‘நிஸ்பா அல்-துர்க்’ என்கிற கூற்றை பல அறிஞர்கள் மறுக்கின்றனர்.  அல்-ஃபராபியின் மாணவர் யஹ்யா பின் அதியும் இப்னு அல் நதீமும் சமகாலத்தவர்கள், எனவே நதீமின் குறிப்பை ஆதாரமாக வைத்து கூறும் இப்னு அபி ஒசைபியாவின் குறிப்பே சரியானதாக இருக்கும் ஆகவே அல்- ஃபராபி பாரசீகத்தை சேர்ந்தவர் என்பதே வரலாற்றாசிரியர்களின் முடிவு.  எப்படி இருந்தாலும் 40 ஆண்டு கால வாழ்வுக்குப் பின் கி.பி. 941 ல் ஹலப்(அலப்போ) சென்றார். அங்கு ஹம்தானி வகுப்பைச் சேர்ந்த சிரியாவின் ஆட்சியாளர் சைஃப் அல்-தவ்லா என்பவரால் நீதிபதி பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின் கெய்ரோ, ஹெர்ரான், டெமாஸ்கஸ் என பயணப்பட்டாலும் பாக்தாதுக்கே திரும்பிவிடுவார்.  முடிவில் டெமாஸ்கஸிற்கு வந்து  மரணம் வரை அங்கே வாழ்ந்தார். நீதிபதியாக சிறிது காலம் பணியாற்றிய பின்  ஆசிரியராகப் பணியாற்றியபோது நூல்கள் எழுதினார். ஆசிரியர் பணியும் எழுத்தும் தன் தலையாயக் கடமையாக்கிக்கொண்டார். பிந்திய காலத்தில் தனது சமூகத்தை மாற்றி அமைப்பதிலும் சூஃபிஸத்திலும் உத்வேகம் கொண்டிருந்தார்.

எழுபது மொழிகளில் ஆற்றல் பெற்ற இவர் இரசவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்ததார். இவரது பிறப்பில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் மரணத்திலும் தெளிவான செய்தி இல்லை.  டெமாஸ்கஸில் இயற்கையான மரணம் எய்தினான் என்ற செய்தியும் உள்ளது.  இவரிடமிருந்த தாழ்ந்த உலோகத்தை தங்கம் அல்லது வெள்ளியாக மாற்றக்கூடிய மூலகக் கல்லை பறிப்பதற்காக டெமாஸ்கஸிலிருந்து அஸ்கலான் செல்லும் வழியில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு என்கிறது நியு வேல்டு என்சைக்ளோபீடியா.

பங்களிப்பு

தர்க்கம், கணிதம்,  மருத்துவம்(Medicine), இசை, தத்துவம், மனோயியல், சமூகவியல் என பல துறைகளில் இவரின் பங்களிப்பு மகத்தானது. இவர் எழுதிய அனேக நூல்களில் கிடைப்பது என்னவோ சில, மற்றவை மறைந்துவிட்டன அல்லது 13ம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் தாருல் ஹிக்மா (House of Wisdom) தீக்கரையானபோது அவைகளும் எரிந்திருக்கலாம். 117 நூல்களில் 43 தர்க்கம், 11 மூலத்தத்துவம் (Metaphysics), 7 நன்னெறி(Ethics), 7 அரசியல் அறிவியல், 11 விளக்கங்கள்(Commentaries), 17 இசை, சமூகவியல், மருத்துவம்(Medicine) ஆகியவை. அவற்றில் சிறப்பு வாய்ந்தது கித்தாப் அல்-மதீனத்துல் ஃபளீலா(The Ideal City).

தத்துவம்

அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ தத்துவங்களின் தாக்கம் பெற்றிருந்த அல்-ஃபராபி, தத்துவத்துக்கும் மதத்திற்கும் இடையே தனித்தன்மை வாய்ந்த மேன்மையை உருவாக்கிய முதல் இஸ்லாமிய சிந்தனையாளர் ஆவார். இவரின் சிந்தனை, கோட்பாடு மற்றும் கற்பனையைவிட தூய்மையானதான அறிவு கண்ணோட்டம் அரசியல், சமூகவியல் சார்ந்த நடைமுறை வாழ்க்கை வழிமுறை மற்றும் உண்மைத் தத்துவத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. குர்ஆனுடன் தத்துவ உண்மையைப் போதிப்பது, தூய்மைப் படுத்தும் நோக்கமாக இருப்பதே மதத்தின் உ ண்மை வடிவம் என்கிறார். மதத்தைவிட தத்துவம் தூய்மையானது ஏனென்றால் அது அறிவார்ந்த சமூகத்தில் சோதிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டிருக்கிறது, ஒரு தத்துவவாதி இந்த உலகத்தில் தன் யதார்த்தத்தைத் தேடிக்கொள்கிறான். மதம் தன்னை தத்துவக் கருத்து வழி நிலைப் படுத்திக்கொள்கிறது. ஆக ஒவ்வொரு கலாச்சாரமும் தனது சொந்த குறியீட்டை நிறுவிக்கொள்கிறது, எனவே தத்துவம் மதத்தைவிட மேலானது என அல்-ஃபராபி நம்பியதோடு நின்றுவிடாமல் மதம் அதன் இன்னொரு பக்கத்தை திறப்பதற்காக தத்துவக் கருத்துக்களை ஏற்படுத்தவேண்டும் என்றார். என்றாலும் பாமரர்கள்(uneducated) தத்துவக் கோட்பாடை புரிந்துக்கொள்ள மதம் அவசியமாகிறது என்கிறார்.

இவர் எழுதிய முதல் நூல் ‘இலட்சிய நகரம் (அல் மதீனத்துல் ஃபளீலா-The Ideal City). இது ப்ளாட்டோவின் ‘குடியரசு’ என்ற நூலைத் தழுவி இருந்தது. இந்நூலில் அல்-ஃபராபி ஒரு கற்பனை சமுதாயத்தின்(a virtuous society) மீது தன் கோட்பாட்டை நிறுவுகிறார். இதன் அரசியலமைப்பு, இஸ்லாமிய நம்பிக்கையை ஒட்டியதாக தத்துவம், நடைமுறை அறிவியல், கணிதம், மதம் சார்ந்த ஒன்றான கட்டமைப்புடன்  இருக்கவேண்டும் என்கிறார். இந்நூலில் முதற் பகுதி மூலதத்துவம்(Metaphysics), இதில் தத்துவம் மற்றும் மதம் பற்றிய தனது கோட்பாட்டை விரிவாக்கம் செய்கிறார். இரண்டாம் பகுதி உளவியல் குறித்து விவாதிக்கிறார். மனித உளவியலில் புறவய உலகில் ஏற்படும் சலனங்கள், சிதிலங்கள் குறித்த பார்வையாக இருக்கிறது. மூன்றாம் பகுதி முழுமையான நல்லதோர் மக்கள், அரசு என்ற கோட்பாட்டை நிறுவி சமுதாயம் அடையவேண்டிய இலக்கை தெளிவுபடுத்துகிறார்.

அல்-ஃபராபியின் அரசியல் தத்துவத்தில் மக்களின் மகிழ்ச்சி(சாஅதா-sa’adha)க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இலட்சிய நகரம் (மதீனத்துல் அல் ஃபளீலா) இலட்சிய சமுதாயம்(அல்-இஜ்திமத்துல் ஃபளீலா) என்ற நூலிலும் நன்னெறிகள் மூலம் மகிழ்ச்சியைப் பெற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்கிறார்.

மேலும் சமூக மனோயியலைப் பற்றி கூறும்போது தனிமையில் அல்லது தனிமைப் படுத்தப்பட்ட ஒரு மனிதன், தன்னால் எதையும் சாதித்திட முடியாது அடுத்தவருடைய உதவி இல்லாமல். எனவே ஒவ்வொரு மனிதனும் அயலாருடன்(neighborhood) இணக்கம் இருக்கவேண்டும் என்கிறார். இலட்சிய நகரத்தின் 24ம் அத்தியாயத்தில் எதிர்கால கனவும் அதன் புரிதலும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியதின் அவசியத்தைக் கூறுகிறார்.

ப்ளாட்டோவின் கணக்கீடு போலவே அல்-ஃபராபியும் ஆட்சியாளரைப் பற்றி கூறும்போது அவர் சுறுசுறுப்பும் புத்திக்கூர்மையும் வாய்ந்தவராக இருக்கவேண்டும். அவர் நல்லொழுக்கம் அமையப்பெற்று சரியான தடத்தில் செல்பவராக மட்டும் இருந்திடாமல் நல்ல பேச்சாற்றலும், அன்பும், எளிதாக புரிந்துக்கொள்ளும் தன்மையும், நல்ல நினைவாற்றலும், உடலாரோக்கியமும் இருக்கப் பெற்று மக்கள் தங்கள் திறன்களை அறிந்து மகிழ்வுடன் சரியான தடத்தில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்கிறார்.

தர்க்கவியல்

தத்துவஇயலில் அரிஸ்டாட்டில் ப்ளாட்டோவின் கொள்கையை உள்வாங்கியவர், தர்க்க சாத்திரத்தில் அதை விரிவுபடுத்தவில்லை. பல, அரிஸ்டாட்டில் சாராக் கொள்கையாக இருக்கிறது.  Al-Farabi was the first muslim logician to develop a non-Aristotelian logic. He established logic within Islamic culture, and this is why he is known as the ‘Second Teacher’ (after Aristotle). தர்க்கத்தை கோட்பாடு ஒன்றாகவும் நடைமுறை மற்றொன்றாகவும் இரண்டாகப் பிரிவுப் படுத்தி, முன்னதில் மூலதத்துவம்(Metaphysics), உளவியலையும் இரண்டாவதில் அறிவியல் மற்றும் அரசியலை விரிவாக்குகிறார். மேலும்  எதிர்பாராமல் நிகழப்போவதைப் பற்றி  இலக்கணத்துக்கும் தர்க்கத்துக்கும் அறிவுப்பூர்வமான தொடர்பின் யூகம் அரிஸ்டாட்டிலின் கொள்கையிலிருந்து அல்-ஃபராபி வேறுபட்டு நிற்கிறார்.

தர்க்கத்தின் வாயிலாக இஸ்லாமியப் பண்பாட்டில் ஓர் கலாச்சார ஒற்றுமையை நிலை நிறுத்தவேண்டும் என விரும்பினார். எனவே இவரது தத்துவத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் அரசியல் விஞ்ஞான அமைப்பு குர்ஆன் வழியில் அமைந்துள்ளது.  அறிவின் நோக்கம் இறை அறிவாக இருப்பதால் மனிதன் செய்யும் சாதனை அவனது  அறிவு மற்றும் நுட்பத்திறனின் உயர் நிலை. எனவே கல்வி, சமூக அந்தஸ்துக்களில் மிக முக்கியமான  ஒன்று என வலியுறுத்துகிறார். 

அறிவுநெறியியல் (Epistemology)

அரிஸ்டாட்டில் மற்றும் நியோபிளாட்டோனிய கோட்பாடுளை உள்ளடக்கியதாக அல்-ஃபராபியின் இக்கோட்பாடு இருக்கிறது. ‘ரிசாலா ஃபில் அக்ல்’ (epistle on intellect) என்ற நூலில் அறிவாற்றலை ஆறு வகையாகப் பிரிக்கிறார். முன்மதி ; பொது அறிவு; அடிப்படை  உண்மைகளைப் புரிந்துக்கொள்ளும் இயற்கையாக அமையப்பெற்ற விவேகம்; நல்லவை கெட்டவைகளைத் தெளிவாகப் புரிந்துணரும் அனுபவத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற அப்பழுக்கற்ற மனசாட்சி; புத்திக்கூர்மை அல்லது அறிவாற்றல்; எல்லா அறிவுகளும் தெய்வீகத் தன்மைப் பெற்றது என உணரும் ஆற்றல். ஐந்தாம் பிரிவான புத்திக்கூர்மையை நான்காக வகைப்படுத்துகிறார். 1.உள்ளார்ந்த அறிவாற்றல் (potantial intellect-அக்ல் பில் குவ்வா); 2. நடைமுறை அறிவாற்றல்(actual intellect-அக்ல் பில்-ஃபில்); 3.முயன்று பெற்ற அறிவாற்றல் (acquired intellect-அக்ல் முஸ்தஃபாத்); 4. இயக்க அறிவாற்றால்(active intellect-அக்ல் அல்ஃபால்). ‘கித்தாப் இஹ்சா அல்-உலூம்'(The Book of Enumeration of Science) – மதவியலையும் தத்துவயியலையும் அல்-ஃபராபியினால் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பேரகராதி என சொல்லலாம். இதில் மொழி அறிவியல், தர்க்கம், கணிதவியல்(arithmatic, geometry, optics, astronomy, music, weights and mechanics), இயற்பியல், மூலதத்துவம், அரசியல் விஞ்ஞானம்(jurisprudence and scholastic theology) என ஐந்து வேறுபட்ட அறிவியலை விரிவாக்குகிறார்.

இசை

இசைத்துறையில் அல்-ஃபராபியின் பங்களிப்பு மகத்தானது. இவரது இசைப் பற்றிய ஆய்வுகள் அரபுலகம் மட்டுமல்ல மேற்கத்திய இசைக்கும் தூண்டுகோலாக இன்றும் இருக்கிறது. இவர் எழுதிய ‘கித்தாப் அல்-மியூசிக்கா அல்-கபீர்(The Grand Book of Music) என்ற இசைப் பற்றிய நூலில் பிதகோரஸின் இசைக்கோளத்திலுள்ள பிழைகளை  சுட்டிக்காட்டுகிறார். ஒலியானது புறசூழலின் அதிர்வுகளிலிருந்து எழும்பும் ஒன்றாக இருக்கிறது, இசை அதிலிருந்துதான் பிறக்கிறது, அதை அனுபவிப்பதன் மூலம் ஒலியின் சாரத்தை உணரலாம் என்கிறார். வேறு வார்த்தையில் சொன்னால் இவரைப் பொருத்தவரை ஒலியின் ஸ்பரிசமே இசையாகும்.  இசை, ஆன்மாவுக்கு இதமளித்து நோய் தீர்க்கும் மருந்தாகும் என அவரது நூலில் குறிப்பிடுகிறார். மத்திய கிழக்கின் இசைக் கருவிகளாகிய ‘ரபப்‘-ربابة  மற்றும் ‘கானுன்’-قانون ஆகியவைகள் இவரது கண்டுபிடிப்பு என்கின்றனர் சிலர், இவை பிற்காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டதற்கு வித்திட்டவர் என்கின்றனர் வேறு சிலர்.

கல்வியின் முக்கியத்துவம்

கல்வியின் அவசியத்தைப் பற்றி  education is one of the most important social phenomena என்கிறார் அல்-ஃபராபி. ஒரு மனிதன் சமூக அந்தஸ்து பெறவும் சாதனைகள் மூலம் தனித்துவம் பெறவும் கல்வி இன்றியமையாதது, ஒரு மனிதன் முழுமைப் பெற கல்வி முக்கிய பங்கு வகுக்கிறது, முழுமையான மனிதன்(perfect human/Insaan al-kaamil),  அவன் எண்ணம், செயல், சாதனை, தலமைத்துவம் ஆகியவை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைகிறது. இத்தகையவர் சமுதாயத்தில் இருக்கும்போது சமுதாயம் பயனடைகிறது, மாறாக அவன் சமூகத்தைவிட்டு விலகி நின்றாலோ அல்லது பெற்ற அறிவைப் பயன் படுத்தாமல் இருந்தாலோ காட்டில் வாழும் மிருகத்தைப் போன்றவன் என ஒப்பிடுகிறார்.

உடலுக்கு உணவு தேவைப்படுவதுபோல், கப்பலுக்கு மாலுமி தேவைப்படுவதுபோல், மக்களுக்கு தலைவன் தேவைப்படுவது போல் அறிவுக்கு கல்வி தேவை என்கிறார். கல்வி என்பது வெறும் பெறுவதில் மாத்திரமில்லை அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும்.  எனவே செயல்முறை இல்லாத தத்துவக் கல்வியை ஏட்டுச் சுரைக்காய் எனும் அவர், நற்பண்பை கலைநயத்துடன் இணைத்து “உயர்வே அழகு, அழகே உயர்வு”. இத்தகைய அழகு அறிவாற்றலுக்கு அவசியமானது எனவே முழுமையான கல்வி எதிர்பார்ப்பது தூய்மையான அறிவாற்றலும் நற்பண்பும் ஒருங்கிணைந்து இருப்பதே என்கிறார்.

அரபியில் இமாம்(வழி நடத்துபவர்) என்று சொல்லப்படுவர் சமுதாயத்தை வழி நடத்துபவராகவும், பிரச்சினைகளை தீர்க்கும் சட்ட நுணுக்கம் தெரிந்தவராகவும், நேர்மை மிகுந்தவராகவும், ஆளுமை உள்ளவராகவும், அன்புள்ளவராகவும் இருக்கவேண்டும் என இலக்கணம் வகுக்கும் அதே நேரம் கல்விக்கான நிதியை தர்மம்(ஜக்காத்) நில வரி(கர்ஜ்) இவைகளிலிருந்து ஒரு பங்கு ஒதுக்கவேண்டும். வரி, சுங்கம் இவை இரண்டும் முக்கியமான அம்சங்கள், முன்னதை கல்வி நிலையங்களுக்காகவும் பின்னதை  இளைய சமுதாயக் கல்விக்காகவும் பயன் படுத்தவேண்டும் என்கிறார்.

ஒழுக்கம், மதிப்பீடு, பயிற்சி, வழிகாட்டல், அறிவுரை, செய்முறை விளக்கம் என பல்வேறு நுட்பங்களை கல்வி முறையில் வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஆசிரியரின் தகுதி, பாடம் புகட்டும் முறைகளையும், மாணவனின் நிலைபாட்டையும் விரிவாக விளக்குகிறார்.

தத்துவம் என்பது மிக நேர்த்தியான மனித உள்ளத்திலிருந்து உற்பத்தியாகும் ஒன்று, சில உண்மைகள் சாதாரண உள்ளங்களிலிருந்தும் வெளிப்படலாம், அகிலத்துக்கும் பொதுவானது. தத்துவம் – மனித மனத்தின் உயர்வான செயல்  இறை அதிகாரம் என்கிறார். குர்ஆன் தன் வரைமுறை பண்பாட்டுக்குள்ளேயே உண்மையை குறியீடாக  விளக்குகிறது, உதாரணமாக சொர்க்கத்தப் பற்றி குறியீடாக சொல்வது சாமானியர்கள் புரிவதற்காக, தவிர இஸ்லாம் தன் கலாச்சாரத்தை வேறொரு கலாச்சாரத்தின் மீது திணிக்கவில்லை என்கிறார்.

அல்-ஃபராபியின் தத்துவக்கண்ணோட்டம் அல்-கிந்தியின் தத்துவத்துடன் வேறுபட்டு நின்றாலும் அரபுலக சிந்தனையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது தத்துவத்தால் எழுச்சிப் பெற்றவர்களில் நால்வர் முக்கியமானவர்கள். யஹ்யா பின் ஆதி- இவர் பாக்தாதில் அல்-ஃபராபியிடம் பயின்ற மாணவரும் சீடரும் ஆவார். அபு சுலைமான் அல்-சிஜிஸ்தானி, இவர் யஹ்யாவிடம் பயின்று ஃபராபியின் தர்க்க சாத்திரத்தில் கைவல்யமானவர் எனவே இவருக்கு சிஜிஸ்தானி அல்-மன்திக்கி(logician) என்ற பெயரும் உண்டு. அபுல் ஹசன் முஹம்மது இப்னு யூசுஃப் அல்-ஆமிரி, இவர் ஃபராபியினால் கவரப்பட்டிருந்தாலும் ஒரு நிலையில்(one point) கருத்துவேறுபாடு கொண்டு ஃபராபியை மறுக்கிறார். அபு ஹையான் அல்-தவ்ஹிதி, இவர் யஹ்யாவிடமும் சிஜிஸ்தானியிடமும் பயின்று ஃபராபியின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்.

அல்-ஃபராபியின் தத்துவம் மற்றும் சூஃபிஸக் கொள்கை பிற்காலத்தில் இப்னு சினா, இப்னு ருஷ்த், இப்னு கல்தூன் ஆகிய சிந்தனையாளர்களின் தத்துவக் கோட்பாடுக்கு வழி வகுத்தது. மேலும் கணிதவியலில் எண்கணி வளர்ச்சியின் பங்கில் இப்னு ஹைதம், அல்-குவாரிஜ்மி வரிசையில் இவரது பங்கும் நீள்கிறது. இவரது கணிதவியல் ஆய்வுகள் அரபு மற்றும் மேற்கத்திய கணிதவியல் ஆய்வுக்கு முன்மாதிரியாக அமைந்தன.

தனது இறுதி காலத்தில் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டபிறகு ஹலபுக்கு(அலப்போ-சிரியா) திரும்பி அங்குள்ளவர்களிடம் தத்துவம், அரசியல், அறிவியல் குறித்த உரையாடல்கள் நடத்தினார். ஆட்சியாளர் சைஃபுத்தீன் தௌலாவின்  அரசவையில் ஒருமுறை சொர்பொழிவாற்றியபின் மன்னர் விருந்தளிக்க விரும்பினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் ‘லூட்‘  என்ற இசைக் கருவியில் இசைக்கத்தொடங்கினார். அவரது இசையில் மயங்கிய பார்வையாளர்கள் அழவும் பின் சிரிக்கவும் செய்தனர். இத்தகைய இசையில் வல்லமை பெற்றவர் எஞ்சிய நாட்கள் மன்னருடன் கழித்தார், இது மரணம் வரை நீடித்தது.

Sources:

http://www.absoluteastronomy.com/topics/Al-Farabi

http://www.encyclopedia.com/doc/1G2-3404707939.html

http://www.arabicmusic4u.com/al_faraabi.htm

http://www.absoluteastronomy.com/topics/Al-Farabi

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=276

http://www.newworldencyclopedia.org/entry/Al-Farabi

http://users.ox.ac.uk/~worc0337/authors/al-farabi.html

http://wzzz.tripod.com/FARABI.html

http://muslimmedianetwork.com/mmn/?p=2785

http://forum.urduworld.com/f1006/great-phylosopher-al-farabi-336751/

http://www.muslimphilosophy.com/ip/rep/H021.htm

http://en.wikipedia.org/wiki/Al-Farabi

http://www.ibe.unesco.org/fileadmin/user_upload/archive/publications/ThinkersPdf/farabie.pdf

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

(வாரியாரின்) ஏகத்துவமும் (ஆலிம்சாவின்) எதிர்வாதமும்

திருநீற்றை கை நிறைய எடுத்து பூசிக்கொண்டிருந்த வாரியார் சுவாமிகளைப் பார்த்து, ‘பெரியவரே, ஏன் நெற்றியில் வெள்ளை அடிக்கின்றீர்?’ என்று ஒரு இளைஞன் நக்கலாகக் கேட்டிருக்கிறான். ‘தம்பி.. குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள்’ என்று சூடாக பதில் தந்தாராம் சுவாமிகள்!  நண்பர் தமிழ்மாறனின் பதிவில் அதைப் படித்து சிரித்துக்கொண்டிருந்தபோது வாரியாரின் பிரசங்கம் ஒன்றை நம் ஜாஃபர்நானா அனுப்பியிருந்தது ஞாபகம் வந்தது. அதைப் பதிவிடுகிறேன். வஹாபிகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்! – ஆபிதீன்

***

ஜாஃபர்நானாவின் குறிப்பு :

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் !  என்னண்டா , எதாவது வித்தியாசமான செய்தின்னு எனக்குப் பட்டுச்சுன்னா உடனே கத்தரியை எடுத்து கத்தரிச்சு வச்சுக்குவேன். ஆனால் அதை ஒழுங்காப் பாதுகாக்கணும்னு தோணவே தோணாது. அங்கெங்கேயோ வச்சிருப்பேன், எதையாவது தேடும்போது எதாவது கெடைக்கும் அப்படி கெடச்சதுதான் இந்த பத்திரிக்கைக் கட்டிங். 12-12-1975 லெ தினமணி பத்திரிக்கையிலெ வந்துச்சு. அதெ நான் வேறே எழுதி எதுக்குப் பக்கத்தை வேஸ்ட் பண்ணுவானே, நீங்களே படிச்சுக்குங்க.

அதெ படிக்கிறதுக்கு முந்தி…. இஸ்லாத்தோட நிலைப்பாடு எல்லாத்துக்கும் தெரியும், விளக்கவேண்டிய அவசியமில்லை ஆனா…..ல் பெட்ரோலியத்தில் அரேபியாவின் மோகத்தில் முளைவிட்ட மில்லினியம் ஆலிம்சாக்கள் சிலர் “அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என்கிறார்கள். எங்க ஜஃபருல்லாஹ் நானாகூட சிலாகித்து ஒரு கவிதை எழுதினார்கள். இதுக்கு அதை ஒப்பீடாகப் பதியப்படுகிறது!- ***

***

போனஸ் : முத்தைத் தரு பத்தித் திருநகை..

பகுத்தறிவாளர் ராஜி ( محمد زکریای رازی)

ஹமீது ஜாஃபர் நானாவின் அருட்கொடையாளர்கள் வரிசையில் ஏழாவதாக…அபு பக்கர் முஹம்மது பின் ஜக்கரியா ராஜி. எழுமின்!

***

பகுத்தறிவு எப்போது தோன்றியது…? இந்தக் கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல, என்னைப் பொருத்தவரை மனிதன் எப்போது தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போது பகுத்தறிவு தோன்றியது என்பதே என் கருத்து. அவன் நிலை தடுமாறியபோது வழி காட்டியது மதம் என்பதும் என் கருத்து. இதைப் பற்றி அதிகமாக சிந்திக்க எனக்குத் திராணி இல்லை. ஆனால் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய அறிஞர், தத்துவவாதி, மருத்துவர், இரசவாதி இப்படி பலவகையில் பரிணமித்தவர் சிந்தையினாலோ அல்லது வேறு எதுவினாலோ பகுத்தறிவாளராக இருந்தாரென்றால் சற்று வினோதம்தான்; தான் கொண்டிருந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தாரென்றால் அது அதைவிட வினோதம்; வெறும் கொள்கையுடன் இருந்திடாமல் நூல்கள் எழுதியிருக்கிறாரென்றால்…!

கொள்கை அவரைப் பொறுத்தது, அது எப்படி இருந்தாலும் அவரது ஆய்வுகள், சாதனைகள், கண்டுபிடிப்புக்கள், அவற்றின் பலன்கள் இன்று வரை மதித்துப் பாரட்டப்படுகின்றன. அவரைப் பற்றி இதோ…..

 
Mohammed ibn Zakariya Al-Razi (864-930 A.D)

முழுப் பெயர்: அபு பக்கர் முஹம்மது பின் ஜக்கரியா ராஜி, 

இன்றைய ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரேய்(RAYY) எனும் சிறிய நகரத்தில் கி.பி 864-ல் பிறந்து, பிறந்த ஊரிலேயே கி.பி.930-ல் மரணம் அடைந்தார்.  (இப்போது அது டெஹ்ரானின் ஒரு பகுதி) இளமைக் காலத்தில் இசையின் மீது காதல்கொண்டு லூட் கலைஞராக இருந்து பின் மருத்துவத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இசை, மருத்துவம், கணிதம், இரசாயனம், தத்துவம் என பல்கலை அறிஞரான இவர் ஹுனைன் பின் இஸ்ஹாக்கிடமும் அலி பின் ரப்பான் அல்தப்ரியிடமும் கல்வி பயின்றதாகத் தெரிகிறது. பல்வேறு தலைப்புக்களில்  184 நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ள இவர் கிரேக்க மருத்துவத்திலும் (யுனானி), பாரசீக, இந்திய மருத்துவத்திலும் புலமைப் பெற்றிருந்தார். இன்றைய இரசாயனத்துக்கும் பொறியியல் வேதியியலுக்கும் உறுதுணையாக இருக்கும் sulfuric acidஉம் மருத்துவத்துறைக்கு பயன்படும் ethanol யும் அதனை தூய்மைப்ய் படுத்தும் முறையையும், கெரோசின் உட்பட பல வேதிக்கூட்டுப் பொருள்களைக் கண்டுபிடித்தார். இஸ்லாமிய உலகின் சிறந்த சிந்தனையாளரான இவரது கீர்த்தி ஐரோப்பிய உலகின் மருத்துவத்திலும் அறிவியலிலும் பரவி நிற்கிறது.

பாரசீகத்தில் பிறந்ததால் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் டெஹ்ரானில் Raji Institute ம் கெர்மன்ஷாஹ் என்ற இடத்தில் ராஜி பல்கலைக் கழகமும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் ‘ராஜி தினம்'(‘Pharmacy Day’) ஈரானில் அனுசரிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் சுருக்கம்

பகுத்தறிவாளரான ராஜி தான் கொண்ட கருத்தினை வெளிப்படுத்துவதில் தடுமாற்றமோ, தயக்கமோ, அச்சமோ கொள்வதில்லை. அதே நேரம் சம காலத்து மற்ற அறிஞர் பெருமக்களையும் மதிக்கத் தவறுவதில்லை.

இளமைக் காலத்தில் ஆபரண வியாபாரியாகவும், நாணய மாற்றுபவராகவும் இருக்கவேண்டியவர் இசையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார். இரசவாதத்தில் (alchemy) ஈடுபாடுகொண்டார். அவரது முப்பதாவது வயதில் இரசவாதப் பரிசோதனையினால் கண் நோய் ஏற்பட்டு, அந்நோயைக் குணப்படுத்தும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். அதுவே அவர் மருத்துவராகக் காரணம் என பைஹாக்கியும் பைரூனியும்  கூறுகின்றனர்.  ராஜி தன் முப்பதாவது வயதில் பாக்தாது சென்று அலி பின் சஹல் ரப்பான் அல்-தபரி(a Jewish convert to Islam, belonging to the famous medical school of Tabaristan or Hyrcania). என்பவரிடம் மருத்துவம் பயின்றதாகவும், அதி விரைவிலேயே மருத்துவம் பயின்று நூறுக்கும் குறையாமல் மருத்துவ நூல் எழுதியதாகவும் தவிர இரசவாதம் அல்லாது இயற்கை அறிவியல், கணிதம், வானவியல் பற்றிய 33 ஆய்வுகளைத் திரட்டியதாகவும் பேராசிரியர் ஹமீது அப்துல் ரஹீம் இயாத் (Prof. of Chemistry at the Faculty of  Science, University of Cairo) கூறுகிறார். (ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கிடம் மருத்துவம் பயின்றதாக சில தளங்கள் கூறுகின்றன). மருத்துவம் இப்னு ரப்பான் அல் தபரியிடம் பயின்றாலும் தத்துவம் அல்-பல்கியிடம் கற்றதாகவும் பின் பல இடங்கள் பயணம் செய்த தருவாயில் தத்துவத்திலும் பண்டைய அறிவியலிலும் போதிய அறிவைப் பெற்றதாக இப்னு அல்-நதீம் கூறுகிறார்.

மருத்துவம் பயின்ற பின் அல் முக்ததரி மருத்துவமனையில் தன் பயிற்சியைத் தொடங்கினார். அது மருத்துவத்துறையிலும் மட்டுமல்ல இரவாதத்திலும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்தது பயிற்சி காலத்திற்குப் பின் தனது சொந்த ஊரிலேயே ராயல் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கலிஃபா முக்தஃபி (901-907ஆட்சி காலத்தில் மீண்டும் தான் பயிற்சி பெற்ற பாக்தாதின் புகழ் பெற்ற அல் முக்ததரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஒரே நேரத்தில் இரு மருத்தவமனைகளின் பொறுப்பும் இவரிடம் இருந்ததால் பக்தாதுக்கும் ரேயிக்கும் இடையிலுள்ள பல மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இது இறுதியாக ரேயில் தங்கும் வரை நீடித்தது. அவரது பயிற்சி அணுகுமுறை இவைகளினால் கவரப்பட்டு என்நேரமும் நோயாளிகளும், மாணவர்கள் கூட்டமும் அவரைச் சுற்றியே இருந்துவந்தது. ஆசியாவின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் அவரிடம் பயில வந்தனர்.

அவரிடம் பல குழுக்களாக மாணவர்கள் இருந்தனர்(surrounded by several circles of students). அறிவியல் கேள்வி யாராவது கேட்டால் அதற்கான பதிலை முதல் குழு மாணவர்களிடம் எதிர்பார்ப்பார், கிடைக்கவில்லையானால் இரண்டாம் குழு மாணவர்கள் இப்படியே எல்லா மாணவர்களிடமும் கேள்வி வைக்கப்படும், யாரும் சொல்லவில்லையானால் இறுதியாக அவரே விளக்கம் சொல்வார். இப்படி மாணவர்களை ஊக்குவிப்பது போல தன்னிடம் வரும் நோயாளிகளிடமும் அன்பாக நடந்துக்கொள்வார். ஏழை நோயாளிகளிடம் பணமோ பொருளோ வாங்கமாட்டார். ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே மாதிரி வைத்தியம் செய்தார்; தன் மாணவர்களையும் செய்யச் சொன்னார்.

ரேயில் இருந்த காலத்தில் ”கித்தாப் அல் மன்சூரி” என்ற மருத்துவ நூலை எழுதி, அப்போது கவர்னராக இருந்த மன்சூர் பின் இஸ்ஹாக்கிற்கு அர்ப்பணித்தார். அது 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona’s ஆல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது என Encyclopedia of Britannica வும் 15ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது என வேறு சில இணையங்களும் கூறுகின்றன.

அறுவை சிகிச்சைக்காக மயக்கநிலை ஏற்படுத்த முதன்முதலில் அஃபினை உபயோகித்த ராஜி, அந்திம காலத்தில்  கண் நோயுடன் பூ விழுந்து(cataract) முடிவில் பார்வையை முற்றிலுமாக இழந்தார். நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு மருத்துவர் அவரைக் காண வந்தவர் தான் கொண்டுவந்துள்ள களிம்பை(ointment) இட்டால் குணமாகும் என சொல்லவே கண்ணில் எத்தனை அடுக்குகள்(layers) இருக்கின்றன என கேட்க, வந்தவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. “கண்ணைப் பற்றி அடிப்படை ஞானமே தெரியாத உன்னிடம் நான் மருத்துவம் பார்ப்பதா?” என மறுத்துவிட்டார். பின்  தப்ரிஸ்தானிலிருந்து வந்த அவருடைய பழைய மாணவர் ஒருவர் பார்த்துவிட்டு தான் குணப்படுத்துவதாக முன் வந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இனி வைத்தியம் பயன் தராது என சொல்லி அதையும் மறுத்துவிட்டார். இது நடந்து சில நாட்களுக்குப் பின் 27, அக்டோபர் 925 (ஹி. 313, ஷஃபான் 5) அன்று இறையடி சேர்ந்தார் என அல்-பைரூனியின் குறிப்பு கூறுகிறது.
 

பெரியம்மையும் தட்டம்மையும்(Smallpox vs measles)

 “Smallpox appears when blood ‘boils’ and is infected, resulting in vapors being expelled. Thus juvenile blood (which looks like wet extracts appearing on the skin) is being transformed into richer blood, having the color of mature wine. At this stage, smallpox shows up essentially as ‘bubbles found in wine’ – (as blisters) – … this disease can also occur at other times – (meaning: not only during childhood) -. The best thing to do during this first stage is to keep away from it, otherwise this disease might turn into an epidemic.”

This diagnosis is acknowledged by the Encyclopaedia Britannica (1911), which states: “The most trustworthy statements as to the early existence of the disease are found in an account by the 9th-century Persian physician Rhazes, by whom its symptoms were clearly described, its pathology explained by a humoral or fermentation theory, and directions given for its treatment.”
                                                                    
ஏறக்குறைய ஒரு டஜன் முறைக்குமேல் லத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட “அல்-ஜுதரி வல்-ஹஸ்பாஹ்” என்ற நூலில் பின் வருமாறு விளக்குகிறார். இது அம்மை நோய் பற்றி அக்காலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாகும். இவர்தான் முதன் முதலில் பெரியம்மைக்கும் தட்டம்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிந்து விளக்கம் கொடுத்த முதல் மருத்துவராவார்.

தொடர்ச்சியான காய்ச்சல், முதுகு வலி, மூக்கில் அரிப்பு, இரவில் கெட்டக் கனவுகள் இவைகள் பெரியம்மை நோய் உடன் தோன்றுவதற்கான அறிகுறிகள். இதை தொடர்ந்து உடல் முழுவதும் வலியும் காய்ச்சலும், முகத்தில் வீக்கம் தோன்றும் அது சில சமயம் தோன்றி மறையும், கன்னமும் கண்களைச் சுற்றி அழற்சியான நிறம் உண்டாகி நன்றாக சிவக்கும். மேலும் உடல் கனமும், அமைதி இன்மையும், முறுக்கலும், அடிக்கடி கொட்டாவியும் அனுபவப்படும். தவிர தொண்டை வலியும், நெஞ்சில் வலியும், இருமலும், மூச்சுவிட சிரமமும் உண்டாகும். மேலும் தொண்டை கரகரப்பு, கடின உமிழ்நீர்(thick spittle), வாந்தி வருவது போன்ற உணர்வு, மன உளைச்சல் ஆகியவையும் உண்டாகும். 
தட்டம்மைக்கு (measles) வாந்தி வருவதுபோல் குமட்டல், மன உளைச்சல், அமைதியற்ற நிலை, முதுகுவலி இவைகள் பெரியம்மைக்கு ஏற்படுவதைவிட அடிக்கடி தோன்றும். இரண்டுக்குமே உடம்பு முழுவதும் சூடும், குடல் அழற்சியும், உடல் சிவந்து மினுமினுப்பும், பல் எயிறில்(gum) சிவப்பும் அனுபவப்படும்.

****1980 ல் அம்மை நோயை உலகம் முழுவதும் முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக உலக சுகாதார மையம் பிரகடனப் படுத்தியுள்ளது****

ஒவ்வாமையும் ஜுரமும் (Allargies and fever)

வசந்த காலத்தில் ரோஜாப்பூவை நுகருவதால் சிலருக்கு மூக்கழற்சி ஏற்படுகிறது, அபு ஜயித் பல்கி என்பவருக்கும் ஏற்பட்டது அது தொடர்பான அவரது ஆய்வு கட்டுரையில், இது கால மாற்றத்தில் ஏற்படும் அழற்சியாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது ஏற்படும் ஒவ்வாமை அல்லது சளி பிடித்தல் போன்றது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவதாகும், இது நமக்கு இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் தன்மைக்கு(natural defense mechanism) உகந்ததாகும் என விளக்குகிறார்.

மருந்துக்களின் நெறிமுறை

மருந்துக்கள் தயாரிப்புப் பற்றிய இவரது தொகுப்பும் mercurical ointments ன் பயனை அறிமுகப்படுத்தியதும் பல வகைகளில் பயிற்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. Also he developed  apparatus such as mortars, flasks,  spatulas and phials which were used in pharmacies until the early twentieth century.

தொழில்முறை ரீதியாக பயிற்சி முறைகளையும், மருத்துவ மேன்பாட்டினையும் மனோதத்துவ ரீதியான யோசனைகளை அறிமுகப்படுத்தியவர், போலி மருத்துவர்களையும், கிராமப் புறங்களில் கடை விரிப்பவர்களையும் கடுமையாகச் சாடுகிறார். அனைத்து மருத்துவப் பிரச்சனைகளுக்கும், அனைத்து நோய்களுக்கும் விடை காண்பது இயலாத காரியம் என  தேர்ச்சி பெற்ற மருத்துவர்களுக்கு எச்சரிக்கிறார்.  இதில் முடிவு என்பது கிடையாது மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்ப்பதால் மட்டுமே புதிய அறிவு கிடைக்கும், அதை மக்கள் பயனுறும்படி செய்யவேண்டும் என்கிறார். குணமாகும் வியாதியையும் குணப்படுத்த முடியாத வியாதையையும் வகைப்படுத்தும் ராஜி புற்று நோய், குஷ்டம் போன்ற குணப்படுத்தமுடியாத நோய்களுக்காக மருத்துவரைக் குறைகூற முடியாது என்று கூறும் அதேசமயம் பெண்கள், பதவியில்  இருப்பவர்கள், இளவரசர்கள் போன்றோர் தங்களது மருத்துவர்களுக்கு செவி சாய்க்காமல் முறையாக வைத்தியம் செய்துக்கொள்ளாமல் இருப்பதைப் பற்றி பரிதாபப்படுகிறார்; அதே நேரம் , நோய்வரும்போது உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கவேண்டும் என அனைவருக்கும் அறிவுரை கூறுகிறார்.

மருத்துவம் பற்றி நூல்களும் கட்டுரைகளும்

“கித்தாப் அல்-ஹாவி ஃபில் திப்” என்ற பெயரில் எழுதிய ஒன்பது தொகுப்புக்களைக் கொண்ட மருத்துவப் பேரகராதியில் ஒவ்வொரு பகுதியிலும் கிரேக்க, அரேபிய மருத்துவ முறைகளைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தருவதோடு அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் கொள்கைகளை கண்டனம் செய்கிறார்.  தன் மருத்துவ அனுபவத்தில் கண்ட வியாதிகளையும் அதன் சிகிச்சை முறையையும் அடிப்படையாக வைத்து பல நூல்களில் கிடைத்த ஆதாரங்களையும் அதில் வடித்துள்ளார். His innovative views on many subjects in this book alone, many scholars consider Razi the great medical doctor of the Middle Ages. இந்நூல் ஃபரஜ் பென் சாலிம் என்ற யூத மருத்துவரால் 1279 ல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டபின்னறே ஐரோப்பாவில் பிரபல்யமானது.

”மன் லா யஹ்ளுருஹு அல்-தபீப்”(من لا يحضره الطبيب) பொது மக்களின் நலனைக் கருதி மருத்துவக் கையேடு ஒன்றை எழுதிய முதல் பாரசீக மருத்துவராவார் ராஜி.  இது பாமர ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும், பயணிகளுக்கும் வரப்பிரசாதமாகும். 36 அத்தியாயங்கள் கொண்ட இந்த கையேடட்டில் சாதாரணமாக சமையலறையிலும் கடைத்தெருவில் கிடைக்கும் சில பொருட்களும், சாதாரணமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் பொருட்களையும், உணவு முறைகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். தலைவலி, ஜுரம், இருமல், வயிற்று வலி, கண் காது வலி போன்ற நோய்களுக்கு பாட்டி வைத்தியம் போல் மருத்துவம் கூறியுள்ளார். உதாரணமாக தலைவலியும் ஜுரமும் வந்தால் இரண்டு  பங்கு ரோஜாப்பூ எண்ணெயுடன் ஒரு பங்கு வினிகரையும் சேர்த்த கலவையில் துணியை முக்கி எடுத்து நெற்றியில் இறுக்கமாக வைத்திருந்தால் நோய் போகும் என்பது போன்ற வைத்திய முறைகளை அதில் குறிப்பிட்டுள்ளார்.

Doubts About Galen (Shukuk ‘ala alinusor)

சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், கேலன் உட்பட பல கிரேக்க அறிஞர்களின் கொள்கைகளிலிருந்து ராஜி மாறுபடுகிறார்.  மனம், உடல் இவ்விரண்டையும் பிரிவுறச் செய்தால் மாத்திரமே உன்னத மனமும் தன்னைப் பற்றிய உயர்வான கருத்தும் ஏற்படும் இது ஒரு நோயாளியின் மேன்மைக்கு உகந்ததாகும் என்பது கிரேக்க அறிஞர்களின் கருத்தை மறுக்கும் அவர், ஒரு நோயாளியிடம் நட்புடன் பழகி ஆதரவும் அன்பும், அளித்து மனவலிமை ஏற்படுத்துவதன் மூலமே விரைவாக குணமடைய வழிவகுக்கும் என்கிறார். உடம்பில் நான்கு தனித்தனி திரவப் பொருள்கள் இருக்கின்றன, அவை உடலின் இயற்கையான உஷ்ண நிலையை சீராக வைத்திருப்பதின் மூலம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்கிறார் கேலன். உஷ்ணமான பானத்தை கொடுப்பதன் மூலம் உடம்பின் உஷ்ணத்தைக் கூட்டமுடியும் அதேபோல் குளிர்ச்சியான பொருளினால் குறைக்கவும் முடியும் என்கிறார் ராஜி. இதேபோல் பல கேலனின் பல கொள்கைகளுக்கு மாறுபடுகிறார் ஜக்கரியா ராஜி. 

இரசாயனமும் இரசவாதமும்

ராஜி வடிவமைத்த பல ரசாயன உபகரணங்களில் சில இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனங்களை பிரித்தெடுத்தல், வடித்தெடுத்தல் முறைகளில் இவர் பயன்படுத்தியமுறையால் (dry distillation)  கந்தக திரவம் மற்றும் ஆல்கஹால்(ethanol) இருந்து சல்ஃபூரிக் ஆசிடை கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பும் ஜாபிர் இப்னு ஹய்யானின் கண்டுபிடிப்பும் பின்பு பாரசீக ரசவாதிகளுக்கு பயனளித்ததாக அறியப்படுகிறது.

இரசவாதத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும்  இரசவாதத்தில் உலோகங்களின் தன்மைகளையும் குணங்களையும் அறிய முடிகிறது கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்  தாழ்ந்த உலோகத்திலிருந்து தங்கம் தயாரித்தார்கள், தயாரிக்கமுடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் அதன் சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் உறுதியாக சொல்லமுடியாது என்றாலும் அதைப் பற்றி இன்னும் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று ராஜி சொல்வதாக இப்னு அல் நதீம் அல் பக்தாதி   குறிப்பிடுகிறார்.

Razi divides his subject matter into three categories as he did in  his book “al-Asrar”-The Secret.(அவரது பழைய மாணவரும், உற்ற நண்பரும், உடனிருந்தவருமான அபு முஹம்மது இப்னு யூனுஸுக்காக எழுதியது)

  1. Knowledge and identification of drugs from plant, animal, and mineral origins and the choicest type of each for utilization in treatment.
  2. Knowledge of equipment and tools used, which are of interest to both  the alchemist and the apothecary.
  3. Knowledge of the seven alchemical procedures and techniques such as sublimation and condensation of mercury, precipitation of sulphur and arsenic calcination of minerals (gold, silver, copper, lead, and iron), salts, glass, talc, shells, and waxing.

இன்றைய நவீன இரசாயனத்தில் உட்பொருளாகப் பேசப்படும் கணிமத்தை ஆறு வகைகளாகப் பின்வருமாறு பிரிக்கிறார்.

  1. Four SPRITS: mercury, sal ammoniac, sulphur, and arsenic.
  2. Seven BODIES; silver, gold, copper, iron, black lead (plumbago), zinc, and tin.
  3. Thirteen STONES including marcasite, magnesia, malachite, tutty, talcum, lapis lazuli, gypsum, and glass (then identified as as made of sand  and alkali of which the transparent crystal Damascene is  considered the best).
  4. Seven VITRIOLS including alum, and white, black, red, and yellow  vitriols (the impure sulphates of iron, copper, etc.).
  5. Seven BORATES including the tinkar, natron, and impure sodium borate.
  6. Eleven SALTS including brine, common (table) salt, ashes, naphtha, live  lime, and urine, rock, and sea salts. Then he separately defines and describes each of these substances and their choicest kinds and colors and possible adulterations.

இதைத் தொடர்ந்து எழுதிய சிர்றல் அஸ்ரார் என்ற “ரகசியத்தின் ரகசியம்”(secret of secret) என்ற புகழ்வாய்ந்த நூல் அடிப்படை இரசாயன வினைகளை மருந்தகத் துறைக்கு முக்கியத்துவமாக அமைந்தது ஐரோப்பிய உலக்கு பெரும் பயனை அளித்தது. இவர் இரசவாதம் பற்றிய நூல்கள் பெரும்பாலும் ஃபார்ஸி மொழியில் எழுதியுள்ளார்.

On Religion

Razi wrote three books dealing with religion; they were: The Prophets’ Fraudulent Tricks (Arabic مخارق الانبياء), The Stratagems of Those Who Claim to Be Prophets (Arabic حيل المتنبيين), and On the Refutation of Revealed Religions (Arabic نقض الادیان). He offered harsh criticism concerning religions, in particular those religions that claim to have been revealed by prophetic experiences. Razi asserted that “[God] should not set some individuals over others, and there should be between them neither rivalry nor disagreement which would bring them to perdition.” 
He argued, On what ground do you deem it necessary that God should single out certain individuals [by giving them prophecy], that he should set them up above other people, that he should appoint them to be the people’s guides, and make people dependent upon them? Concerning the link between violence and religion, Razi expressed that God must have known, considering the many disagreements between different religions, that “there would be a universal disaster and they would perish in the mutual hostilities and fighting. Indeed, many people have perished in this way, as we can see.”

He was also critical of the lack of interest among religious adherents in the rational analysis of their beliefs, and the violent reaction which takes its place:
If the people of this religion are asked about the proof for the soundness of their religion, they flare up, get angry and spill the blood of whoever confronts them with this question. They forbid rational speculation, and strive to kill their adversaries. This is why truth became thoroughly silenced and concealed.

Al-Razi believed that common people had originally been duped into belief by religious authority figures and by the status quo. He believed that these authority figures were able to continually deceive the common people “as a result of [religious people] being long accustomed to their religious denomination, as days passed and it became a habit. Because they were deluded by the beards of the goats, who sit in ranks in their councils, straining their throats in recounting lies, senseless myths and “so-and-so told us in the name of so-and-so…”

He believed that the existence of a large variety of religions was, in itself, evidence that they were all man made, saying, “Jesus claimed that he is the son of God, while Moses claimed that He had no son, and Muhammad claimed that he [Jesus] was created like the rest of humanity” and “Mani and Zoroaster contradicted Moses, Jesus and Muhammad regarding the Eternal One, the coming into being of the world, and the reasons for the [existence] of good and evil.” In relation to the Hebrew’s God asking of sacrifices, he said that “This sounds like the words of the needy rather than of the Laudable Self-sufficient One.”

Criticism

ராஜியின் தத்துவங்களையும் மதக்கோட்பாட்டினையும் அபு ரைஹான் பைரூனி இப்னு சினா உட்பட பல அறிஞர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். The Hermetical writings and religious views of al-Razi were criticized by al-Biruni, and during a debate between Avicenna and al-Biruni, Avicenna wrote the following criticism on al-Razi: “Or from Muhammad ibn Zakariyya al-Razi, who meddles in metaphysics and  exceeds his competence. He should have remained confined to surgery and to urine and stool testing—indeed he exposed himself and showed his ignorance in these matters”.

ராஜி எழுதிய அனேக நூல்களை, குறிப்பாக “இல்ம் அல்-இலாஹி” என்ற புத்தகத்தயும் சம காலத்தில் வாழ்ந்த அபு அல்-ரப்பான் அல்-பல்கி (chief of the Mu’tazilah of Baghdad) மறுக்கிறார், அவற்றில் தவறுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் ராஜியின் “தஃப்தில் லத்தத் அல்-நஃப்ஸ்” என்ற புத்தகத்தை ஷுஹைட் இப்னு அல்-ஹுசைன் அல்-பல்கி என்பவர் மறுக்கிறார். அதேபோல் ராஜியின் “ஆலம் அல்-நுபுவ்வாஹ்” வை அஹ்மத் இப்னு ஹம்தான், இப்னு அல்-தம்மர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல் பல அறிஞர்கள் ராஜியின் மதரீதியான கொள்கையில் மாறுபட்டு நிற்கின்றனர். சிலரின் மறுப்புக்கு எதிர் மறுப்பும் ராஜி தெரிவித்துள்ளார். அவரது கொள்கை எப்படி இருந்தாலும் தொண்டை(work) அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

Quotes on Rhazes

“Rhazes was the greatest physician of Islam and the Medieval Ages.” – George Sarton

“Rhazes remained up to the 17th century the indisputable authority of medicine.” – The Encyclopaedia of Islam.

“His writings on smallpox and measles show originality and accuracy, and his essay on infectious diseases was the first scientific treatise on the subject.” – The Bulletin of the World Health Organization (May 1970)

“In today’s world we tend to see scientific advance as the product of great movements, massive grant-funded projects, and larger-than-life socio-economic forces. It is easy to forget, therefore, that many contributions stemmed from the individual efforts of scholars like Rhazes. Indeed, pharmacy can trace much of its historical foundations to the singular achievements of this ninth-century Persian scholar.” — Michael E.  Flannery

***

Sources:

http://wzzz.tripod.com/RAZI.html
http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Razi.html
http://www.nlm.nih.gov/exhibition/islamic_medical/islamic_06.html
http://www.muslimphilosophy.com/ip/rep/H043.htm
http://www.pre-renaissance.com/scholars/al-razi.html   
http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi  
http://geniusworld.8m.com/Razi.html
http://www.farhangsara.com/razi.htm
http://www.encyclopedia.com/topic/Abu_Bakr_Muhammad_Ibn_Zakariyya_Al-Razi.aspx
http://www.learn-persian.com/english/Razi_Zakariya.php
http://www.alchemywebsite.com/islam14.html  Razi
http://193.62.111.58/broughttolife/people/~/link.aspx?_id=F36DB07EC689475B88C8A399905F10BD&_z=z
http://www.thelivingmoon.com/44cosmic_wisdom/02files/Muhammad_ibn_Zakariya_al-Razi.html#Criticism

**

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

உந்துசக்தியே ஆசைதான்! – ஜாஃபர்நானா

ஹைய்யா, அருட்கொடையாளர் வரிசையில் ஹைய்யான்!  வம்பை மண்ணாக்குபவர்களைத் தேடி அலைந்தபோது ‘செம்பை பொன்னாக்கிய’ (?!)  ஜாபிர் இப்னு ஹைய்யானைத் தந்தார் ஜாபர் நானா. வாழ்க. கெமிஸ்ட்ரி படித்த மஜீத்பாய் கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன். செய்யட்டும்; ஹைய்யான் மட்டும் இப்போதிருந்தால் அரபுநாடு ஏன் போகிறோம்? சரி, நானா காட்டிய முந்தைய அருட்கொடையாளர்கள் : 1 அல்-பைரூனி , 2 இப்னு அல் ஹைதம் , 3 அல்-குவாரிஸ்மி ,4  இப்னு அல்-நஃபீஸ் , 5  ஹூனைன் (Johannitious) . பகுத்தறிவாளரான ஜக்கரியா ராஜி அடுத்து வருவார் ஏழாவதாக, இன்ஷா அல்லாஹ். வெட்டித்தனமாக உட்கார்ந்திருப்பதால்,  ‘விறகுவெட்டி கிஸ்ஸா’ வந்தாலும் வரும் நடுவே. பார்க்கலாம். – ஆபிதீன்

***

ஜாபிர் இப்னு ஹைய்யான் –  அருட்கொடையாளர் – 6

ஹமீது ஜாஃபர்

மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே அவன்கூட ஆசையும் தோன்றியது. ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால் நிச்சயமாக அவன் நடமாடும் மரமாகத்தான் இருப்பான். உந்து சக்தியே ஆசைதானே! அவனிடமிருக்கும் ஆசைகளில் மிகைத்து நிற்பது இரண்டு மட்டுமே ஒன்று பெண், அடுத்தது பொன் (இதில் பொருளும் அடங்கும்). பெண்ணை அடையவேண்டுமானால் பொருள் வேண்டும். அப்பொருள் பொன்னாக இருந்தால்…  ஏன் இன்றுகூட பொன்னை வைத்துதானே ஒரு நாட்டின் நாணயம் மதிப்பீடப்படுகிறது.

குறுக்குவழி என்பது அவன் கூடப்பிறந்தது; சுலபமாக அடையவேண்டும் –  அது பெண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும். பெண்ணை அடைய பொன் ஒரு ஆயுதம், ஆனால் பொன்னை அடைய…. அதில் பிறந்ததுதான் ‘ரசவாதம்’-الكيمياء(Alchamy)செம்பை பொன்னாக்கும் வித்தை. இது, பண்டை காலத்தில் வஞ்சகமில்லாமல் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. இதை யாரும் அல்லது எந்த நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது. ரசவாதத்தால் செம்பு பொன்னானதோ இல்லையோ இரசாயனம் பிறந்தது, பல்வேறு அமிலங்கள் கிடைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இரசவாதத்தை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

பாரசீகத்தின் ரசவாதியாக இருந்து பின் இரசாயனத்தில் புரட்சி செய்த இரசாயனத்தின் தந்தை என பொதுவாக அழைக்கப்பட்டவர் ஒருவர் என்றால், அவர் ஜாபிர் இப்னு ஹைய்யான் ஆவார்.

JABIR IBN HAIYAN  (721 – 803/815 B.C)
Father of Chemstry      

அபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் என்ற முழு பெயரைக் கொண்ட இவரை லத்தீன் மொழியில் அறியப்படுவது Gaber. பாரசீகத்தின் தூஸ்(Tus) பகுதியில் ‘அத்தர்’ தயாரிப்பவரின் மகனாக கி.பி. 721ல் பிறந்தார். கூஃபா(kufa-Iraq)வில் இமாம் ஜாஃபர் சாதிக்  அவர்களிடமும் யஜிதுடைய மகன் இளவரசர் காலிதிடமும் கல்வி பயின்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன, எனவே இளமைக் காலத்திலேயே தூஸிலிருந்து கூஃபா வந்திருக்கவேண்டும். இவரது பிறப்பைப் பற்றி தீர்மானமான முடிவு இல்லை. இவரை ‘அல் ஹரானி’, ‘சூஃபி’ எனவும் சிலரால் அழைக்கப்பட்டார். இளமைப் பருவத்தில் பர்மகி விஜிர்(Barmaki Vizir) என்று சொல்லப்படும் கலிஃபாவின் முதலமைச்சர்/மிக உயர் நிலை அதிகாரியுடைய அரவணைப்பில் மருந்துகள் தயாரிப்பில் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். ஆனால் பர்மிகியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இவரும் இருந்ததால்  மரணம் (கி.பி 803)வரை கூஃபாவில் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டார். He shared some of the effects of the downfall of the Barmakis and was placed under house arrest in Kufa, where he died in 803. (Barmaki priestly family of Iranian origin, from the city of Balkh in Khorāsān, who achieved prominence in the 8th century as scribes and viziers to the early ʿAbbāsid caliphs. – Encyclopædia Britannica.)

அல்-கீமியா(الكيمياء) என்ற அரபு மொழியில் வழங்கப்படும் இரசாயனம் பற்றிய சோதனைகள் பண்டைய அரபு மக்களிடையே வெகுவாக இருந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்னு ஹைய்யானின் தந்தை அத்தர் தயாரிப்பவராக இருந்ததால் இரசாயனத்தின் மீது ஆர்வம் இயற்கையாக ஏற்பட்டது என்று ஏற்றுக்கொண்டாலும் தன்னுடைய ஆசிரியர் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களிடமிருந்து இரசவாதத்தையும் இரசாயனத்தில் calcium, evaporation, distillation and crystallization முதல் அனைத்து இராசயன முறைகளையும் கற்றுக்கொண்டதாக அவரே குறிப்பிடுகிறார்.(When he used to talk about Chemistry, he would say “my master Ja’far as-Sadiq taught me about calcium, evaporation, distillation and crystallization and everything I learned in Chemistry was from my master Ja’far as-Sadiq.” Ibn Hayyan was deeply religious, and repeatedly emphasizes in his works that alchemy is possible only by subjugating oneself completely to the will of Allah and becoming a literal instrument of Allah on Earth, since the manipulation of reality is possible only for Allah.)  எப்படியானாலும் இவருடைய பரிசோதனையில் கிடைத்த வெற்றி இன்றைய இரசாயனத்துக்கு அடிகோலியது. இவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட விரிவான ஆராய்ச்சி நூல்களில் 22 நூல்கள் இரசாயனத்தையும் இரசவாதத்தையும் பற்றியது. 

(குறிப்பு: ’பூரியான் ஃபாத்திஹா’ ஓத மட்டும் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களை நாம் வைத்துள்ளோம், அதில் விறகுவெட்டியார் கதை வேறு..!)

படிகமாக்கல்(Crystallization), காய்ச்சி வடித்தல்(Distillation), நீற்றுதல்(Calcination), தூய்மைப் படுத்தல்(Sublimation) பற்றிய இவரது தெளிவான விளக்கம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டது.  இதன் ஆராய்ச்சிக்காக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார். இவரது சோதனைக்கூடம் பல நூற்றாண்டுகள்வரை அழிந்த நிலையில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெள்ளீயம், காரீயம், இரும்பு(Tin, Lead, Iron) இவைகளுடன் சில இரசாயனங்களையும் சேர்த்து தங்கமாக மாற்றும் முறை நடைபெற்றதாகவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூஃபா நகரம் புணரமைப்பின் போது அவருடை சோதனைச் சாலைப் பகுதியில் ஏராளமான தங்கமும் வேறு சில நூதனமானப் பொருள்களும் (mystetious substances) கண்டெடுக்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது.

முதன் முதலில் வடிகலன்(alembic) ஒன்றை உருவாக்கி தாதுக்கள் மற்றும் அமிலங்கள் ஆய்வில் சாதனைப் புரிந்தார். இரசவாதத்தில் நடத்திய சோதனைகள் அல்லது சாதனைகளுக்கப்பால் பெருமளவில் புதிய இரசாயனக் கலவைகளை உருவாக்கி, செயல்முறை இராசயனத்தை (applied chemistry) மேம்படுத்தினார். இது பயன்முறை அறிவியலுக்கு(applied science) வித்திட்டது. ஏறக்குறைய 19 வகையான மூலகங்களின் spcific weight கண்டறிந்து அதன் ரசாயன நிகழ்வுகளையும் விளக்கியுள்ளார்.  chemical processes such as distillation, crystillazation and sublimation.

முதன் முதலில் வினிகரை காய்ச்சி வடித்து அசிட்டிக் திரவம்(acetic acid) ஐ தயாரித்தார். காய்ச்சி வடித்து தூய்மைப் படுத்தும் முறையில் மூலிகையிலிருந்து அறுவை சிகிச்சைக்கான ஆல்கஹாலை உருவாக்கினார். மேலும் ஆல்கஹால் கொதிக்கும்போது வெளிவரும் ஆவி எரியும் தன்மையுடையது என்றறிந்தது, பின்னால் ஜக்கரியா ராஜி  ethanol கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட  உபகரணங்களை அதிக அளவில் பரிசோதனைகளுக்காக பயன்படுத்தியுள்ளவரும் இவரே.

பல்வேறு உலோகங்கள், அலோகங்களை உருவாக்குதல், எஃகுவின் தன்மையை மேன்படுத்துதல்(alloying  of steel), துணிகளுக்கு சாயமேற்றுதல், தோல் பதனிடுதல், நீர் புகாத் துணி உருவாக்குதல்(varnishing of water-proof cloth),  கண்ணாடி தயாரித்தலில் மேங்கனீஸ் டைஆக்ஸைடை உபயோகித்தல், துரு ஏறாமல் தடுத்தல், தங்கத்தில் எழுத்துப் பதித்தல், வர்ணம் மற்றும் கிரீஸ்(paints and greases) தரம் கண்டறிதல் முதலானவைகள் இவரது சாதனைகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தவிர தங்கத்தை கரையச் செய்ய aqua regia என சொல்லப்படும் சொர்ணத்திரவம் ஒன்றை உருவாக்கினார். இவர் உருவாக்கிய வடிகலன்(alembic) காய்ச்சி வடித்தல்(distillation) முறையை சுலபப்படுத்தியது. மேலும் இவரது பரிசோதனைகள் தவறுகள் இல்லாத துல்லியமாக(accuracy) இருந்ததாகக் கூறப்படுகிறது.

இயல்புகளை அடிப்படையாக(Based on properties) வைத்து பொருளின் உருவகை(substance) ஐ மூன்று வகைகளாக விவரிக்கிறார். முதலாவதாக ஸ்பிரிட் / சூடுபடுத்துவதால் ஆவியாகும் வகை; இதில் கற்பூரம்(camphor), பாஷாணம்(arsenic), அமோனியம் குளோரைடு ஆகிய உள்ளிட்டவை. இரண்டாவதாக உலோகவகை: இதில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவைகள் அடங்கும். மூன்றாவதாக பொடி(Powder)யாக மாற்றக்கூடிய எல்லாவகைக் கூட்டுப் பொருள்களும். தவிர அலோகம்(non metal) மற்றும் விரைவாக ஆவியாக்கூடிய பொருட்களையும்(volatile substances) பின்பு விவரிக்கிறார்.

இரசவாதி என அறியப்பட்டாலும் அவர் அதில் ஆர்வம் காட்டியதைக் காட்டிலும் அடிப்படை இரசாயன முறைகளையும், இரசாயனக் கலவையினால் ஏற்படும் பிரதிபலன்களையும் அறிவதில் தன்னை அர்ப்பணித்ததால் இரசாயனத்துறையில் பரிணாமம் ஏற்பட இரசவாதம் ஆக்கமாக இருந்தது. இது வேறுபட்டப் பொருட்களின் தன்மை அதன் மாறாத விகிதாச்சாரம் இவைகளை கண்டறியும் தளமாக அமைந்தது.

இப்னு ஹய்யானின் பங்களிப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது nitric acid, hydrochloric acid, citric acid, tartaric acid இவைகளை தயாரிக்கும் முறையாகும், எனவே இவரை இரசாயனத்தின் தந்தை என அழைப்பது தகும் என்கிறார் Max Mayerhaff. ஜாபிர் இப்னு ஹைய்யானின் இரசாயன முறைகளை நேரடியாக ஐரோப்பிய ராஜ்யங்கள் எடுத்துக்கொண்டு வளர்ச்சியடைய செய்தன.

இப்னு ஹய்யான் இரசாயனமல்லாது, மருந்துக்கள்(medicines) பற்றியும், வானவியல் பற்றியும் ஆய்வுகள் நடத்தி நூற்கள் எழுதியுள்ளார். இவருடைய ”கித்தாப் அல் கீமியா”(Book of the Composition of Alchemy)வை ராபர்ட் செஸ்டர்(Robert of Chester) என்பவர் 1144 ம், ‘கித்தாப் அல் சபயீன்'(Book of Seventy) ஐ Gerard of Cremona 1187 க்கு முன்பும் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு பின் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை இரசாயன வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.
 
அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து “மீஜான்” (Book of Balance) என்ற நூலில் உஷ்ணம், குளிர்ச்சி, வறட்சி, ஈரம்(hotness, coldness, dryness, moistness) என இயற்கைத் தன்மையை நான்காகப் பிரித்து விளக்குகிறார். ஒவ்வொன்றும் அகம் புறம்(interior, exterior) என உள்ளது. அகம் 1:3:5:8 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது எப்போதும் 17 ஆல் கூட்டவோ அல்லது பெருக்கவோ முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நான்கு பூதங்களான நெருப்பு, உஷ்ணமும் வறட்சியும் கொண்டது; நிலம், குளிர்ச்சியும் வறட்சியும் கொண்டது; நீர், குளிர்ச்சியும் ஈரமும் கொண்டது; காற்று, உஷ்ணமும் ஈரமும் கொண்டது என்கிறது அரிஸ்டாட்டிலின் பௌதீகம். இந்த நான்கு தன்மைகளில் இரண்டு அகமாகவும் மீதி இரண்டு புறமாகவும் உள்ளது என்கிறார் இப்னு ஜாபிர். உதாரணமாக காரீயம்(lead) குளிர்ச்சியும் உலர்வும் கொண்டது; பொன், உஷ்ணமும் ஈரமும் கொண்டது. (Aristotelian element was characterized by these qualities: fire was both hot and dry, earth cold and dry, water cold and moist, and air hot and moist. In metals two of these qualities were interior and two were exterior. For example, lead was cold and dry and gold was hot and moist.) இவ்வாறு, ஜாபிரின் கொள்கைப்படி வேறுபட்ட உலோகங்களின் தரத்தை மாற்றியமைக்கமுடிகிறது.

இப்னு ஜாபிரின் இரசவாத செய்முறை விளக்கம் இதோ:

In his treatise on the silvering of copper and iron, and in what has become known as “The Discovery of secrets”, Jabir wrote: “You must value and not contradict what is written; remember well how to manage without diminishing or augmenting, take as much as you wish of the stone mixed with its mixture and grind it with some water, mixed with copperas and Sal ammoniac(ammonium chloride) until it becomes black. Then put it very near a very slight heat until it smells like semen. When it has that smell take it away and wash it slowly with some clear water, and then roast it gently until you notice a visible vapour. In this way its water will be driven off, and the stone itself will become light, without losing its essence. Take it off and dip it again into water, powdering it under water, and roast it as before. Its blackness begins to diminish. Take off the stone when it is dry and its water absorbed. Grind it well in some clear water and roast it again. It begins to be green, and then this blackness will disappear. When you see the stone beginning to turn green, be sure you are in the right path. Move it then when it becomes quite green and has the appearance of verdigris. This will show that the process is right, and the stone has lost its Sal ammoniac which would have corrupted it. After powdering it in some water, put it into a vessel well luted with plaster, place it on a gentle fire, and distil off all its water. Be patient and do not be in a hurry to increase the fire which will corrupt it; for you will repent, and your Itallic repentance will never be of avail. When you distil off all its water, take it off, and powder it in the same distilled water. Then return it to the vessel, and renew the distillation.

I recommend you to distil it 700 times like the rods of myrtle, and Indian cane. I have not explained this hint in any one of my books, but in this only. I have told you the opinion of philosophers without diminishing or increase, and have not concealed anything from you. When the stone becomes green we call it myrtle, and when it returns to yellow, we give it the name of Indian cane. You must know that it becomes gradually black from the first to the last. It remains quite black from five to ten roastings; then it slowly becomes green, and has the colour completely in 50 or 70 roastings. This is the end. If the stone acquires these qualities, there will be no doubt of its goodness. Its yellow colour begins bye-and-bye to disappear and the stone will completely lose its clearness in 70 roastings. Then the stone will have the same degree as the sun, and similar coloured rays. It will burn, and become ashes. They are the same ashes mentioned in the books of philosophers. If you continue the same process, the ashes will become quite white. This is the fourth sign, which is the sign of perfection. Therefore you must continue to proceed as before without diminishing or increase. Then it is necessary to augment the fire just a little, and do not fear the corruption. If you continue to distil it you must return the distilled water on it, and in every distillation the water diminishes; therefore it is necessary, every ten distillations, to add some clear water to the distilled water with which you pulverize it. If the stone begins to turn white, you must continue the same process until it turns very white. This will be from 500 distillations. If the fire diminish, and the operator be clever, knowing well the quantity of fire, from 450 distillations (the total is 900 distillations), the stone, you may be sure, will have a complete and real whiteness. In this state you may operate for giving copper and iron a coating of silver. You can also operate on melted crystal, and pearls, and many other minerals.”

source:

http://alshindagah.com/septoct2004/jabir.html

 http://www.webgaza.net/scientists-scholars/Hayyan.htm

http://www.britannica.com/EBchecked/topic/298619/Abu-Musa-Jabir-ibn-Hayyan

http://www.islamic-study.org/chemistry.htm

http://islam.wikia.com/wiki/Alchemy_and_chemistry_in_medieval_Islam

http://www.amaana.org/ISWEB/contents.htm

http://www.findbiography.org/famous-scientists/jabir-ibn-haiyan

http://profiles.incredible-people.com/jabir-ibn-haiyan/

http://en.wikipedia.org/wiki/Jābir_ibn_Hayyān

**

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

« Older entries Newer entries »