ஒன்றிவிடு! – நீதிபதி மு.மு. இஸ்மாயில்

நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்கள் பற்றி ’நாயகன் குரல்’ என்ற தலைப்பில் , விகடன் தீபாவளி மலரில் (1970) வெளியான பகுதி இது. மீள்பிரசுரமாக (பொக்கிஷம் பகுதியில்?) 22/10/2008 விகடனில் இதழில் வெளீயானது. ’அனுஷ்டானம்’, ‘நியம நிஷ்டை’ என்றெல்லாம் ஜஸ்டிஸ்மாமா சொல்வதால் இஸ்லாமியர்கள் பயப்படவேண்டாம். பிராமண நண்பர்களுடன் அவ்வளவு நெருக்கம் அவர்கள்; அவ்வளவுதான். நண்பர் பி.கே. சிவகுமார் கேட்டதற்காக எழுதிய ‘கிணறு’ சிறுகதையில் (அதே 70 பக்கம்! ) கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ‘ஏன் கதையே எழுதலே?’ என்று என்னைக் கேட்பவர்கள் முதலில் எழுதியதை வாசித்தார்களா என்று தெரியவில்லை. போகட்டும், ’எம்.எஸ்.ஸின் தகப்பனார் பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் படத்தை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பரிசளித்தவர் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில். 1990-ல் கம்பராமாயணப் பாடல்களைப் பதிவு செய்தார் நீதிபதி இஸ்மாயில். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தாம் அறிந்திருந்த பி.எஸ்.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பாராட்டிப் புகழ்ந்து பேசிய பிறகு அவரின் பெரிய புகைப்படத்தை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.எஸ்ஸுக்குக் கொடுத்தாராம். வீணையுடன் அமர்ந்திருக்கும் தாயார் சண்முக வடிவு புகைப்படத்துக்கு இணையாக அதை எம்.எஸ்.மாட்டி வைத்தாராம்!’ ( நூல் : ’எம்.எஸ். அன்ட் ராதா’; செய்தி : தினமணி).

அதெல்லாம் இருக்கட்டும், தம்பி இஸ்மாயில்  ‘ஜட்ஜப்பா’ என்ற தலைப்பில்  மு.மு. இஸ்மாயில் பற்றி எழுதும் பதிவுகளைப் படிக்கிறீர்களா? இதுவரை 8 பகுதிகள் வலையேற்றியிருக்கிறார். அபூர்வமான செய்திகளும் புகைப்படங்களும் அதில் உள்ளன. மறைந்த என் சீதேவி மாமனார் – பாங்காக்-ல் இருந்த  ‘நாகூர் ஸ்டோர்’  கடை வாசலில் – நிற்கும்  புகைப்படத்தை (வலது ஓரத்தில், தொப்பியோடு நிற்பவர்தான் என் மாமனார்) அங்கேதான் பார்த்து கண் கலங்கினேன். சரி, ஒன்றுங்கள்… – ஆபிதீன்

***

‘யார் வெளிப்படையான அனுஷ்டானங்களையும் நியம நிஷ்டைகளையும் தவறவிடுவது இல்லையோ, அவர்களைச் சமயப்பற்று மிக்கவர்கள் என்றும் தெய்வ பக்தி மிக்கவர்கள் என்றும் பொதுவாக நாம் சொல்கின்றோம். ஆனால் எந்த அனுஷ்டானமும் நியம நிஷ்டையும் ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்குமேயன்றி அதுவே ஓர் இலட்சியமாக அமைந்துவிட முடியாது. ஓர் இலட்சியம் அல்லது குறிக்கோளை அடைவதற்குச் செய்கின்ற முயற்சிக்கு அவை பயிற்சிகளாகத்தான்  இயங்க முடியும். இந்தப் பயிற்சிகளுக்கு அப்பால், முயற்சியின் முடிவாக அந்தப் பரம்பொருளை அடைந்து , அவனோடு ஒன்றிவிடுவது  என்பதுதான் இலட்சியமாகும்.

உலகிலுள்ள பல்வேறு சமயங்களின் அனுஷ்டானங்களும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன. இப்படி அனுஷ்டானங்கள் வெவ்வேறாக இருப்பதன் காரணமாக இறைவனுடைய உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதில்  மயக்கமும் குழப்பமும் உண்டாகத்தான் செய்யும். ஆனால், எப்பொழுது ஒருவன் இந்த அனுஷ்டானங்களை எல்லாம் கடந்து உணர்வுபூர்வமாக தன்னுடைய இறைவனோடு ஒன்றிவிடுகிறானோ, அப்பொழுது இந்த மயக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடமில்லாமல் போய்விடும்’ – நீதிபதி மு.மு. இஸ்மாயில்

***

நன்றி : ஆனந்த விகடன்

***

சுட்டிகள் :

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்! – தினமணி ( மீள்பதிவு : ANUSHAM)

 நீதிபதி நாகூர் மு.மு.இஸ்மாயீல் – நாகூரி

நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்

நோன்பின் பெருமைகளை எழுதிய ‘கவிக்கோ’ , ‘இறைவனின் அன்புக்கு முன் எல்லாமே கால்தூசு என்ற பக்குவம் நமக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையே தேவையில்லை தனியாக ; ஏனென்றால்- நாமே பிரார்த்திக்கப்படும் பொருளாய் ஆகிவிடுகிறோம்’ என்று கவிதையை முடித்திருக்கிறார். அது கவிதையை இல்லையா என்பதெல்லாம் அப்புறம். சூஃபிஸ சிந்தனையுள்ளவர். சொன்னால்தான் என்ன? ‘ஷிர்க்கோ’ ஆகிவிட்டாராம் சிலருக்கு.  நோன்பு சமயத்தில் இந்தமாதிரி கவிதைகளை ‘போஸ்ட்’ செய்யாதீர்கள் என்று ஒரு குழு மிரட்டியிருக்கிறது. நண்பர் அழுதார். ஆபிதீன் பக்கங்களுக்கு அனுப்புங்கள் என்றதும் அனுப்பிவைத்தார்.  அதைப் பதிவிடலாம் என்றால் ஓரிரு தளங்களில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. அறிவார்ந்த முதுகுளத்தூருக்கோ அல்லது அழகிய கடையநல்லூருக்கோ சென்று படித்துக்கொள்ளுங்கள்.

இன்னொருவர் , ‘பிறையும் வில்லும்!’ என்ற தலைப்பில் கவிஞர். வாலி எழுதியதை அனுப்பியிருக்கிறார். ஆனந்தவிகடனில் சுழலும் நினைவு நாடாக்கள். எத்தனை இஸ்லாமியப் பெரியவர்கள் தன் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறும் வாலி, ‘கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற கோதண்டம்!’ என்று தன்னைச் சொல்கிறார். கூன் பிறைகளால் உருவாக்கப் பெற்ற –  அதைப் பற்றி எந்த வார்த்தையும் பேசாத – ஒரு தண்டமும் அதே ஆ.வியில் (18.05.2011) இருக்கிறது. நான் எழுதக்கூடாது. நல்லதைப் பேசுவோம் புனித ரமலானில். ’நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்’ என்று ரசூல் (ஸல்) சொல்கிறார்கள்.

’என் வாழ்வு வடிவு பெற உளியாயிருந்து செதுக்கிய உள்ளங்கள் எல்லாம் முகமதியர் குலத்தில் முளைத்தவைதான்’ என்கிறார் கவிஞர். வாலி.  ’இன்று நான் – முத்தமிழ்ப் பாலருந்த, மூலக்காரணம் முஸ்லீம் பால்தான்!’ என்று அவரைச் சொல்லவைத்த மூதாட்டி முதல் ஜெயகாந்தனின் நண்பராக இருந்த ஹகீம்பாய், செய்குதம்பிப் பாவலரின் மகனாரான ஹமீதுபாய் வரை பெரிய லிஸ்ட் அது. அந்தப் பெரியவர்களில் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்களும் அடக்கம். (அஸ்மா, சந்தோஷம்தானே?!). ’அவர், தலைமை ஏற்றிருந்த சென்னைக் கம்பன் கழகத்தில்- பலமுறை என்னைப் பாட்டரங்கின் தலைவராக்கி அழகு பார்த்தவர். என்னுடைய ‘அவதார புருஷ’னை ஆய்வு செய்து, ஐநூறு பக்கத்தில் ஒரு நூலை வெளியிட்டார்கள், அமரர். திரு. டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள். அதற்கு நீண்ட அணிந்துரை அருளி – என்னைப் பெருமைப்படுத்தியவர் திரு.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்!’ என்கிறார் வாலி. இதைப் பதிவிடலாம்; நாகூர்க்காரர்களுக்கும் பெருமை. ஆனால் இதுவும் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வந்துவிட்டதே. இங்கே க்ளிக் செய்து வாசியுங்கள்.

குர்-ஆனை அழகாக ’ஃப்ளாஷ்’-ல் செய்திருக்கிறார்கள். பாருங்கள் என்று இந்த தளத்தின் முகவரியை அனுப்பியிருக்கிறார் ஒருவர்.

ஒரே இஸ்லாமிய ’தாவா’தான் போங்கள்..!

எட்டிப்பார்க்கும் இந்து சகோதரர்களுக்காக இன்று ஒரு கண்ணன் பாட்டு. இதை அனுப்பியவர் ஒரு இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல். அசனா மரைக்கார் என்று சொல்ல மாட்டேன்!

’Mindஐ ரிலாக்ஸா வச்சிக்க நான் யூஸ் பண்ணுறது ரோஜா பாக்கு’ என்று ஒரு விளம்பரம் வருகிறது – சனி டிவி.யில். பாக்கு சகிக்காது. ரிலாக்ஸ் பண்ண எனக்கு உதவுவது இந்தப் பாட்டும்தான் .  ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் இயற்றிய பாடலான ’நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும் . கேளுங்களேன். சௌம்யா பாடியது.  ’நோம்பு சமயத்தில இத போடுறதா ?’ என்று கடுப்படித்தால் ’விசுவசிக்கு மகனே’ என்ற – எனக்கு மிகவும் பிடித்த – மலையாள கிருஸ்துவப் பாடலை அடுத்து பதிவிடுவேன். ஜாக்கிரதை!  புனித ரமலான், பொறுமையின் மாதம்.

கேட்க :

Download Song

***

நன்றி : ஜெஹபர்சாதிக் , ஷாஜஹான், பஹ்ருதீன்

செயலா சிந்தனையா?

ismail.jpg

நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களின் “கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும்” என்ற புத்தகத்திலிருந்து :

“ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு குழந்தைகள் எப்பொழுதுமே ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒன்று, உடலில் வலிவுடையதாகவும், துடிப்பு நிறைந்ததாகவும், உணர்ச்சி வயப்படக்கூடியதாகவும், எதிலுமே ஒரு திடீர் முடிவுக்கு வந்து செயலில் குதித்துவிடுவதாகவும் இருக்கும். மற்றொன்று, அவ்வளவு உடல் வலிவு இல்லாததாகவும், கூர்த்த மதியினதாகவும், நுண்ணிய உணர்வுகளை உடையதாகவும்,
எதிலும் சிந்தித்துச் செயல்படுவதாகவும் இருக்கும். இந்த இரண்டு
குழந்தைகளுடைய பொதுத்தன்மையோ, எங்கு அநியாயம் நிகழ்ந்தாலும், அந்த அநியாயத்துக்குப் பரிகாரம் தேடி நியாயத்தையும் நேர்மையையும்
நிலைநாட்டுவதற்கான ஆர்வத்தைக் கொண்ட நற்குணசீலமேயாகும். இந்தத் தன்மை இருவருக்கும் பொதுவாக இருந்தபோதிலும், இருவரும் ஒரேமாதிரியாகச் செயலில் ஈடுபடமாட்டார்கள். முதலாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை கர்மவீரனாகவும், இரண்டாவதாக விவரிக்கப்பட்ட குழந்தை ஞானாசிரியனாகவுமே விளங்கும் என்பது
தெளிவு.

இந்த வேறுபாட்டினால் உண்டாகும் விளைவுதான் என்ன? இந்த விளைவிலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதை நோக்கத் தவறக் கூடாது. தங்களுடைய கடமை என்று தங்களுக்குத் தோன்றியதை நிறைவேற்றிவிட்டோம் என்பதனாலான மனஅமைதியும்
மனநிறைவும் இருவருக்கும் பொதுவானது. இன்னொருவருக்கு இழைக்கப்படும் அநீதியினால் தான் நேரிடையாகப் பாதிக்கப்படவில்லை என்று வாளாக இருந்துவிடாமல், அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும் அது அநீதியே; அதைத் தவிர்த்து நீதியை நிலைநாட்ட வேண்டுமென்ற இலட்சியப் பாதையில் இருவருமே இறங்கிவிட்டது மற்றொரு பொதுத்தன்மை.

இந்தப் பொதுத்தன்மைகளுக்கிடையே, விளைவுகளில் வேறுபாடு இருக்கவே செய்கிறது. கர்மவீரன் சம்பந்தப்பட்ட வரையில், தன் வரையில் பிறருக்கு அநீதி இழைக்காமல் இருப்பதோடு இன்னொருவருக்கு அநீதி இழைக்கப்படுவதை எப்பொழுதெல்லாம் காண்கிறானோ, அப்பொழுதெல்லாம், அவன் திரும்பத் திரும்பச்
செயலில் இறங்கி அந்த அநீதியைத் துடைக்க முற்படுகிறான். இதன் காரணமாக, இவன் செயலின் விளைவு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட மனிதனோடு அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவத்துடன் நின்று விடுகிறது. திரும்பத் திரும்ப இவ்வாறு செயலில் இறங்கும்பொழுது பற்பல வேளைகளில் பற்பல மனிதர்கள் பயனடைவார்கள்; பற்பலச் சூழ்நிலைகளில் நீதி நிலைநிறுத்தப்
பெறும்.

ஞானாசிரியனாகச் செயல்படுபவனோ, தான் உணர்ந்த நீதியைத் துடைப்பதற்கு நிரந்தரமான ஒரு வழியை வகுத்து, அந்த வழியின்படி யார் வேண்டுமானாலும் செயற்பட்டு, அநீதியைத் துடைத்து நீதியை நிலைநிறுத்தலாம் என்ற நிலையை உண்டுபண்ணி விடுகிறான். இந்த நிலை உண்டாவதற்குக் காரணமாக அமைந்தவை அவனுடைய நுண்ணிய உணர்வும் சிந்தித்துச் செயற்படும் இயல்புமேயாம்.”

நன்றி : பி.கே. சிவகுமார்   /  ‘எழுத்தும் எண்ணமும்’ இணையக் குழுமம்

நீதிபதி மு.மு. இஸ்மாயில்

ismail.jpg 

மு.மு. இஸ்மாயில்
தினமணி – ‘தலைசிறந்த 100 தமிழர்கள்’ பகுதியில் வெளியிடப்பட்டது (Year 2000):

கம்ப ராமாயணம் என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நீதிபதி மு.மு. இஸ்மாயில் (78). அந்த அளவுக்குக் கம்ப ராமாயணத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். நாகை மாவட்டம் , நாகூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்து பின் சென்னை சட்டக் கல்லூரியில் முதல் வகுப்பில் தேறினார்.

1946 முதல் 1951 வரை வழக்கறிஞர். அப்போது விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகவும் இருந்தார். 1951 முதல் 1959 வரை சென்னை சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளர். அதன் பிறகு தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். 1967-ல் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தில்லை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி. 1979-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.

தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் கேரள மாநிலத்துக்கு மாற்றியதை ஆட்சேபித்து 1981-ல் பதவியை ராஜினாமாச் செய்தார். பள்ளி மாணவராக இருந்தபோதே கதர் ஆடை அணிந்து காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்தார். சிறுவயதிலிருந்தே உணவில் சுத்த சைவம். மேற்படிப்புக்காகச் சென்னை வந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.

சென்னையில் கல்லூரியில் படித்தபோது தந்தை ஸ்தானத்தில் இருந்து இவரை ஆதரித்த பேராசிரியர் கே.சுவாமிநாதனை நன்றியுடன் நினைவு கூர்கிறார். தமிழில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் திரு.வி.க, கல்கி, உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கலந்து கொண்டார். ‘கம்பன் கண்ட சமரசம்’, ‘கம்பன் கண்ட ராமன்’, அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்’ உள்பட 20 நூல்களை எழுதியிருக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்களைத் தொடங்கியிருக்கிறார். தற்போது சட்டக் கமிஷனின் தலைவர். “கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்” என்பவர்.

“எதிலும் நேர்மையையும் சத்தியத்தையும் பின்பற்றினால் கடவுள் அருள் தானாக வரும்” –
இளைய தலமுறைக்கு : விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

நீதிமன்றத்திற்கும், நீதித் துறைக்கும் பெருமை சேர்த்த நீதிபதிகளில் அவர் ஒருவர். ஒருமுறை மொரார்ஜி தேசாய், ‘இஸ்மாயில் போன்ற நீதிபதிகள் இந்த நாட்டில்தான் உருவாக முடியும். அவரைப் போன்றவர்கள் தோன்றுகிற இந்த பூமிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் என்ன சந்தேகம்?’ என்று என்னிடம் கூறினார். செதல்வாட் என்ற பிரபல வக்கீல்,’ எல்லா நீதிபதிகளும் இஸ்மாயில் அளவு சட்ட அறிவு படைத்தவர்களாக இருந்தால் வழக்குகளை நடத்துவது எளிதாகி விடும்’ என்று கூறியிருக்கிறார்.

இது தவிர, தனது மத நம்பிக்கைக்கு எந்த சிறு பழுதும் இல்லாமல், கம்ப ராமாயணத்தை பெரும் இலக்கியமாக மதித்து, அதில் அவர் காட்டிய புலமை பிரமிக்கத்தக்கது.
– துக்ளக் 2.2.2005 இதழில் ‘சோ’ –


Article from Indian Express ((Posted online: Thursday, March 11, 2004 )

Justice Ismail and Kamban

Our foremost Tamil Ramayana scholar
VASUDHA NARAYANAN

Justice M.M. Ismail has led a high profile life as Chief Justice of the Madras High Court and briefly acting governor of Tamil Nadu, and as a scholar of Kamban’s ‘Iramavataram’. He was born on February 8, 1921, in Nagore, a town just a little north of Nagapattinam, on the eastern coast of the state of Tamil Nadu. Nagore is an area with a high Muslim concentration.

After about three years in a madrasa, Justice M.M. Ismail joined the Nagore Municipal Muhammadan Boys High Elementary School. Because he had gone to a madrasa and then joined elementary school he was older than most boys in his class. He wanted to do well so that he would catch up with his peer group, and because of his hard work and intelligence, he was allowed to skip several grades.

Ismail recalls that all his teachers in elementary school, except the Urdu teacher, were Hindu Brahmins. His teachers took pride in his academic ability; Justice Ismail remembers their confidence in him with affection. He recalls one incident with poignancy. When the British governor of the Madras Presidency drove by their elementary school, the teachers took the students out to watch him. As the motorcade passed them, Krishnamurthi Aiyar, one of his teachers, said, ‘‘Our Ismail will one day become a governor like this and become famous.’’

Later, due to the affectionate mentoring of all his teachers at the Nagai (Nagapattinam) National High School he became interested in Tamil literature, specifically Kamban’s Iramavataram. He recalls that one of his teachers, N. Aravamudan, went out of his way to encourage the success of non-Hindu students.

When Ismail stood first in his school, he travelled forty kilometres to Kumbakonam to convey the news to his teacher, who lived in the Brahmin quarters right outside the temple. On hearing the news, the teacher, who lived in the orthodox section of Kumbakonam and who normally would not touch non-family members, joyfully embraced the student. Ismail also notes that in his youth there were no tensions between the Hindus and Muslims and that he was the favourite student of all his teachers, many of whom were Hindu Vaishnavaites.

Obituary News from :  Thatstamil.com  |  dcealumni.com