சுத்தப்பால் (கவிதை) – இஜட். ஜபருல்லாஹ்

சுத்தப்பால் – இஜட். ஜபருல்லாஹ்

————–

பாலில் ஒரு துளி
புளிப்பு கலந்தால்
பாலே கெட்டுத்
திரிவது இயற்கை..!
அன்று –
மூலவனின்
சொர்க்கப் பானையில்
பாலொடு பாலே
கலந்து போனதால்
பாவப் புளிப்பே
மிச்சம் ஆனது..!
அப்பால் –
புளிப்பு ஏறிய
அந்தப் பாலே
பூமியில் – கீழே
சொரியப்பட்டு
திரிந்தது..!
பின் –
பாவ மன்னிப்பெனும்
மூலிகை மருந்தால்
தூய்மை அடைந்து
அரை ஆடையும் பெற்றது..!
பரமனைப் போற்றி
பானையில் மீண்டது..!
இங்கு –
பாவப் புளிப்பு மட்டுமே
பூமியின் எச்சமாய்
தங்கிப் போனது..!
அருட்கொடையாக
வந்த அண்ணலே..!
நீங்கள்தான் – மறைப்
போதனைச் சூட்டால் – அதை
சுத்திகரித்தீர்கள்..!
அதனால் –
உலகில்
உறவின் நிலைகள்
உன்னதமாயின..!
பால்கள் கலப்பு
பரிசுத்தமாயின..!
திருமணம் எமக்கு
’சுன்னத்’ ஆனது..!
உங்களால் மட்டுமே
மறுமையில் நாங்கள்
சுத்தப் பாலாய்
சொர்க்கப்
பானையில் நிறைவோம்!
*
நன்றி : சடையன் அமானுல்லாஹ்

இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு!

மறைந்த அண்ணன் இஜட் ஜபருல்லா அருமையாகச் சொல்வார் ,
’இந்தியா
எனக்கு
தாய்நாடும் அல்ல
தந்தை நாடும் அல்ல.
இது –
என் நாடு..!’
என்று. அதையே இஸ்லாமியப் பாடகர் முகவை சீனி முஹம்மது வேறுமாதிரி சொல்கிறார். MP3 அனுப்பிய ’தைரியமுள்ள திராவிட முஸ்லிமுக்கு’ நன்றி. சுதந்திரம் தின்ன வாழ்த்துகள்!

Download

Thanks to : Hajeed Ibrahim

இஜட். ஜபருல்லாஹ்வின் மீலாது உரை

Please raise the volume first & listen.

தொடர்புடைய பதிவுகள் :
நம்மைவிட்டுப் பிரிந்த கவிஞர் இஜட் ஜபருல்லாஹ் அவர்கள் பற்றி…
நண்பர் அப்துல்கையூம் |  நண்பர் நாகூர் ரூமி | அண்ணன் ஹிலால் முஸ்தபா  | நண்பர் தாஜ்

கேஸ்ஸட் வழங்கிய ஹமீதுஜாஃபர் நானாவுக்கு நன்றி.

Weaving the Bridge at Q’eswachaka

நாகூர் பெரிய மினாராவில் ரொம்ப சுலபமாக பாம்பரம் ஏற்றுவதைப் பற்றி அண்ணன் ஜபருல்லா சொல்வார், ‘நம்ம இஞ்சினியர்கள்ட்ட ஏத்தச் சொன்னா மொதல்ல அலங்காரவாசலை இடி..ம்பாங்க!’ என்று. ‘இன்கா’ மக்கள் கட்டும் இந்த கயிற்றுப் பாலமும் அது போல அசத்திற்று. பகிர்கிறேன். இலக்கியத்திற்கு லீவு 🙂
*

*
Produced for the exhibition “The Great Inka Road: Engineering an Empire” (http://americanindian.si.edu/inkaroad/), on view at the National Museum of the American Indian in Washington, D.C., through June 1, 2018. Every year, local communities on either side of the Apurimac River Canyon use traditional Inka engineering techniques to rebuild the Q’eswachaka Bridge. The old bridge is taken down and the new bridge is built in only three days. The bridge has been rebuilt in this same location continually since the time of the Inka. This video is narrated by John Ochsendorf, professor of civil engineering, Massachusetts Institute of Technology, and produced by Noonday Films.

Thanks to : SmithsonianNMAI & Vaithees Kumar

« Older entries