கிருஷ்ணா நீ பேகனே பாரோ…

பரயான் மரன்ன பரிபவங்கள் – ஹரிஹரன்

‘சொல்ல மறந்த சங்கடங்கள்’ என்று சோகமாகச் சொல்லலாமா? மலையாளத்தில் ஹரிஹரன் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ( இசை : ரமேஷ்நாராயண்). சத்யம் சிவம் சுந்தரம் – ‘Walking in the moonlight’ , அழகிய ராவணன் – ‘ஓ தில்ருபா’ எல்லாம் இதற்கு முன்னால் நிற்கவே முடியாது.   சமீபத்தில், ‘ஆசியாநெட்’-ன் ஐடியா ‘ஸ்டார் சிங்கர்’  ஃபைனலில் மூன்றாம் நிலையிலிருந்த அந்தப் பையன் ஜோபிஜான் இந்த ‘பரயான்’  பாடியபிறகுதான் ஒருகோடி ரூபாய் ஃப்ளாட் வாங்க முடிந்ததாம் (522272 SMS votes; என்ன வியாபாரம்!) . அதில் ஒரு அறை கூட ஹரிஹரனுக்கு கிடையாது.  அது போகட்டும்,  பார்க்க நேரும்போதெல்லாம் அழவைக்கும் – பல பரிசுகளை வென்ற – Garshom படத்திலிருந்து இந்தப் பாடலை ‘ஹரிப்ரியன்’ நாகூர் ரூமிக்காக பதிவிடுகிறேன். அரபி வார்த்தையான ‘கர்ஷோம்’ என்றால் பரதேசி. நானேதான்! One who is away from his Motherland என்று நாசூக்காக சொல்கிறது wiki . நஸ்ருதீன் (முரளி) மீண்டும் பயணம் போகும்போது அவனது உம்மா கேட்கும் ‘துஆ’ இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. எல்லா உம்மாக்களின் ‘துஆ’வும் அதுதான்…

நண்பர் மஜீத் ‘இசை’ என்று வாயைத் திறந்ததுமே சகோதரர் வாஞ்சூர் (இவர் எங்கள் பக்கத்து ஊர் வாஞ்சூரைத் சேர்ந்தவரா? ) அலறிக்கொண்டு ஓடோடிவந்து ‘உண்மையான‌து குர்ஆனா? பைபிளா? என்ற சுட்டி தருகிறார். ரொம்…ப முக்கியம்! என் சோதரா, சகோதர சமயங்களுடன் சண்டை போடுவதை விட சங்கீதம் கேட்பது நல்லது ; புனித ரமளான் கற்றுத்தரும் பொறுமைக்கும் உகந்தது.

ரஃபி, மேடையில் பாடுவது ரமேஷ்நாராயண்; ஹரிஹரனல்ல!

Download ‘Parayan Maranna’ (MP3)

*

Lyrics : Rafeeq Ahmed

Parayaan maranna
Parayaan maranna
Paryaaan maranna paribhavangal
Paryaaan maranna paribhavangal
Paryaaan maranna paribhavangal
Virahaardhramaam mizhikalorkke
Smaranakal thirayaay padarum jaladhiyaay
Smaranakal thirayaay padarum jaladhiyaay
Pozhiyum nilaavu pol vivashanaay
Paryaaan maranna paribhavangal
Virahaardhramaam mizhikalorkke

Alayoo nee chiranthananaay��
Alayoo nee chiranthananaay
Saadhya meghame
Nee varumapaaramee mooka veedhiyil
Piriyaathe vidaraathadarnna
Vithura susmitham

Ga� saga�nisa pa..
Panisagaga sanisa gamapa
gamapanisa saanipamaga nipamaga..

Eriyumeka thaarakayaay vazhi thelikkayo
Paryaaan maranna paribhavangal
Virahaardhramaam mizhikalorkke

Pazhayoru dhanumaasa raavin
Madha sugandandamo �.(pazha)
Thazhuki hathaashamee jaalakangal
Thazhuki hathaashamee jaalakangalil
Pala yugangal thaandi varum
Hrudhaya thaapam�..
Athilezhaam manal kadalil chirakadikkayo (parayaan)