‘தீண்டாய் மெய் தீண்டாய்’

புதுவருட வாழ்த்துகள்! 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில்,  ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.

குறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்! நன்றி.

*

Bonus : ‘Devaanganagal’ by Thushar

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

நெஞ்சடைக்கும் ரூ. 2,00,000,00,00,000 ஊழலைக் கிழிக்க நம்மால் இயலாது; இசை கேட்போம்! 2007-ம் வருடம் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது நஜீம் அர்ஷாத். ஆனால் ‘தோல்வியுற்ற’ பலருள் டாக்டர் பினீதா பாடி உருக்கியதுதான் இன்றும் மனதில் நிற்கிறது. எப்போதும் மொபைலில் கேட்பது. அப்போது ரிகார்ட் செய்ததை யுட்யூபில் இட்டேன் – உங்களுக்காக. ‘போடா புண்ணாக்கு’ என்று புறம் தள்ளிவிட்டது. ஏதோ ‘malformed video’வாம்.  ஒரு எழவும் புரியவில்லை. பிறகு முயற்சிக்கிறேன், இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு இந்த 3gp கோப்பை கேட்டுப் பாருங்கள். பிரபலமான பாம்பே ஜெயஸ்ரீ இப்படி துல்லியமாகக் கூவுவதை விட பினீதா கூவியதுதான் ஏனோ பிடிக்கிறது. கந்தர் அனுபூதியின் காப்பு வரிகளை கொஞ்சம் – கொஞ்சம்தான் – மாற்றுகிறார்.  கீழேயுள்ள மீதி  வரிகள் ஜெயஸ்ரீ பாடியதிலிருந்து. எழுதிய கவிஞரை நான் அறியேன். நம்ம சோமனும் சொல்ல மாட்டார்!  முருகன் பாட்டை  கிருஸ்துவரான Amrutha Bineetha Marks பாடுவதும் அதை இந்த முஸ்லிம் வலையேற்றுவதும்கூட ஒருவகை நல்லிணக்கம்தான். என்னா  சொல்றீங்க மஜீது சார்? ஒண்ணு சொல்றேன்… முழுப்பாடலும் கேட்கும் முஸ்லிம்களுக்கு கண்ணெதிரில் தெரிவான் ‘அவன்’…! கேட்பார்களா, ‘காஃபிர்’ என்று என்னை மீண்டும் உதைப்பார்களா?

ஓ, ‘ட்யூப்’ வேலை செய்கிறது இப்போது..!

***

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (குமரன்) – பரம்
குன்றம் ஏறி நின்ற குமரா என்று

(கூவி)

பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான்

(கூவி)

தேவியர் இருவர் மேவிய குகனே
திங்களை அணிந்த சங்கரன் மகனே
பாவையர் யாவரும் பாடிய வேந்தனே
பொன்மயிலேறிடும் ஷண்முக நாதனே

(கூவி)

**

**

updated on 06.08.2019