வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்…
14/04/2013 இல் 22:30 (இசை, கண்ணதாசன், விஸ்வநாதன் / ராமமூர்த்தி, P.B.ஸ்ரீநிவாஸ்)
நிலோஃபர் தீட்டிய சித்திரங்கள் , நீங்கள் விரும்பும் பாடலோடு…
25/07/2011 இல் 12:00 (இசை, ஓவியம், தாஜ், விஸ்வநாதன் / ராமமூர்த்தி)
இந்த நிலோஃபர் , ஸ்கேல் கொண்டு நேர்க்கோடு வரையும் என் செல்லமகள் அனீகா நிலோஃபர் அல்ல. (சும்மா கிண்டல்; அருமையாக வட்டம் வரைவாள் அனீகா – என் முகம் பார்த்து.) இது வேறு நிலோஃபர். கர்ப்பமாக இருக்கும் நண்பர் தாஜின் – ஊஹூம், இப்படி எழுதினால் அர்த்தம் வேறுமாதிரி வருகிறது 😉 – நண்பர் தாஜின் இளையமகளான , தற்போது நிறைமாத சூலியாக இருக்கிற , நிலோஃபர் நிஷா. நட்பு வட்டத்தில் இன்னொரு தேவதையும் நிலோஃபர் என்ற பெயரோடு இருக்கிறாள். அவளைப் பற்றி அப்புறம்.
சரி, மகளார் வரைந்த சித்திரங்களை மறக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார் மகள் கவிஞர், சாரி, மஹா கவிஞர் தாஜ் . நிலோஃபரை நிறைய பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன் – மேலும் (வி)சித்திரங்கள் வரையவும் ’பக்தி நிறைந்த ஞானி -cum – பாடித் திரியும் தேனி’யாக பிள்ளையொன்று பெற்றுத்தரவும். சந்தோஷம் காரணமாக , ‘இது சத்தியம்’ படத்தில் வரும் ’குங்குமப்பொட்டு குலுங்குதடி’யை இங்கே சேர்க்கிறேன். எனக்குப் பிடித்த பாட்டு. நிலோஃபருக்கும் பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன். உம்மா, இது சுசீலாம்மாவும் ஜானகியம்மாவும் அபூர்வமாகம்மா சேர்ந்தும்மா பாடியதும்மா (இன்னொரு பாடல் : ’நானொரு பொன்னோவியம்…’. வேறு இருக்காமா?).
கேட்டாச்சா? பழைய ’சீசன்’ ரிகார்டிங்க… எப்படி? நண்பர் அசனாதான் கொடுத்தார். நன்றி. ‘முஸ்லிம் பாட்டு போட்டா என்னாவாம்?’ என்று முணுமுணுக்காமல் நீங்களும் வாழ்த்துங்கள் , முழுமனதோடு.
கவிஞர் தாஜின் பேரப்பிள்ளைகளாவது கவிதை எழுதாமலிருந்து , கவலையற்ற வாழ்வு நடத்த கடவுள் உதவட்டும்! – ஆபிதீன்
***
அன்புடன்
ஆபிதீன்….
உங்களது
கடிதம் பார்க்க
அபூர்வமாகப் போய்விட்டது.
எந்தக் கோவிலில்
வேண்டிக் கொண்டு
கயிறு கட்டிக் கொண்டால்…
நீங்கள் கடிதம் எழுதக் கூடும்?
எழுதி தெரிவியுங்கள்
சித்தமாக இருக்கிறேன்.
*
சென்ற வாரம் முழுமையும்
ஆபிதீன் பக்கத்தில்
நல்ல இலக்கியம்
வெளிப்படுவதைக் கண்டு
பயமாக இருக்கிறது.
தேடி வைத்திருக்கும்
வாசகர்கள் எல்லாம்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவிடுவார்களே என்கிற
பயம்தான் அது.
*
ஆபிதீன் பக்கங்களில்
இன்னும்
சித்திரம் வெளியாவது மட்டும்தான்
பாக்கியாக இருந்தது…
அதனை நிவர்த்தி செய்ய
சித்திரம் சிலவற்றை
அனுப்பியுள்ளேன்.
தேறுமா பாருங்கள்.
அடுத்த மாத இறுதியில்
குழந்தையைக் காண
பிரசவ வலியோடு
வீட்டில் வலம் வரும்
என் சின்ன மகள்
நிலோஃபர் வரைந்த
படங்கள்தான் இவை.
அவள்
பி.எஸ்.சி.,
விசுவல் கம்யூனிகேசன்
படித்ததை
எப்பவாவது இப்படி
கம்யூட்டரில் கிறுக்கி
நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருப்பாள்.
-தாஜ்
***
நிலோபர் தீட்டிய சித்திரங்கள் :
நன்றி : மகள் நிலோஃபர், நண்பர் தாஜ்
*
last updated on 04.08.2019