பண்படுத்தும் பண்டிட் ராம்நாராயண்

இலக்கியம், ஓவியம்.. அப்புறமென்ன இசைதான் (Muslim, Christian, Hindu என்று பார்ப்பவர்கள் நரகத்திற்கு போவார்களாக!). விஜய் டிவி. ‘சூப்பர் சிங்கர்’ பற்றிய நாகூர் ரூமியின் பதிவுக்கு ‘Sister in Islam’ அவர்கள் சீரியதொரு சின்ன கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். ‘எல்லாப் புகழும் இசை மேதையான இறைவனுக்குத்தான்!‘ என்று நண்பர் எழுதியதற்கு ‘Has any verse in Qur’an or even one Hadith speaks whether Allah is god of music? Is it appropriate or even allowed to speak what you know not of God? Is it Islamic? What kind of message will the public get from your this post?? What will they think of Islam and Muslims??? Dont you think you have a responsibility as a Muslim?’ என்றும் கேட்டு எம் சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறார்கள்.  ஒரேயடியா பயந்துட்டேன். இந்தப் பதிவுக்கு அவர்களால் ஏதும் இடைஞ்சல் வராதென்று நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ். ’50 Glorios Classical Years’ என்ற டோரண்ட்’ தொகுப்பில் – இரண்டாம் CDயில்- இருக்கும் ‘Living Legend’ பண்டிட் ராம்நாராயனின் ( राम नारायण )  இசையை மீண்டும் எங்காவது ஏற்றி கேட்கச் சொல்வதற்கு பதிலாக ஏற்கனவே யூடியூபில் இருப்பதை இங்கே பகிர்கிறேன். அவசியம் கேளுங்கள் சிஸ்டர்ஸ். சாரங்கியிடம் மனமிறங்கிய அருமையான பதிவு ‘இசை இன்பம்’ பக்கத்தில்  இருக்கிறது. அதையும் பாருங்கள் பிரதர்ஸ். ஜெஜக்கால்லாஹூ கைர். – ஆபிதீன்

***