அண்டர்கள் போற்றும் பெருமானடி!

ஹந்திரி ஸ்பெஷல். நாகூர் தர்ஹா முன்னாள் சங்கீத வித்வான் S.M.A. காதர் அவர்கள் பாடியது.
 

 

ஹத்தம் ஸ்பெஷல் : கூடு வருது பாருங்கடி!

நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் அவர்கள் மர்ஹூம் சேத்தநானாவுடன் பாடியது…

https://soundcloud.com/zainulahbudeen-hussain/sma-kader-vararo-vararo-gnanakiliye

போனஸ் :

கவிஞர் இஜட். ஜபருல்லாவின் கவிதை , நண்பர் இதயதாசன் தொகுத்த கந்தூரி சிறப்பு மலரிலிருந்து…

நாகூரின் நாயகரே…!
நாதனொளி மெய்ச்சுடரே…
நம்பிவரும் மக்களுக்கு
நலமளிக்கும் தூயவரே…

பாகூறும் புகழனைத்தும்
பத்தியத்து வாழ்க்கையினால்
நாகூறும் நன்னெறியாய்
நாட்டுக்குத் தந்தவரே..!

“ஆதிபிதா ஆதத்தின்
வழிவந்த மக்கள் எல்லாம்
சோதரர்கள்” என்ற நபி
சொல்லுக்கு நிரூபணமாய்
சாதிமத இனபேதம்
சாய்த்த உங்கள் சமத்துவத்தால்
மேதினியே உங்களிடம்
தேடி வந்து சூழ்கிறது…!

எழும் துயர் போக்கும் எங்கள் S.M.A. காதர்

உஸ்தாத் தாவுத்மியானின் முக்கியமான சீடரான , என் மதிப்பிற்குரிய நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் S.M.A. காதர் மாமாவின் பாடலைப் பதிவிடுகிறேன் – கத்திக் காதறுக்கும் பல தமிழ் இஸ்லாமியப் பாடகர்கள் திருந்துவதற்காக..!.

அஜ்மீரில் வாழும் ரோஜா!

என் மதிப்பிற்குரிய , நாகூர் தர்ஹா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர் மாமா அவர்களின் ஒரு பாட்டு – ‘புஹாரி’யை விரும்பும் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க. அஜ்மீர் ரோஜா பற்றி நாகூர் ராஜா 🙂

« Older entries