கலைமாமணி குல்முஹம்மது

கலைமாமணி விருது பெற்ற ஹாஜி இ. குல்முஹம்மது நானா அவர்களுக்கு என் பாராட்டுக்கள். ‘காரைக்காலைச் சேர்ந்த பாடகர்’ என்ற செய்திதான் இடிக்கிறது. விருது , புதுவை அரசு அளித்ததால் இருக்கலாம். ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ விழாவில் க‌லைமாம‌ணி விருதினை புதுவை முத‌ல்வ‌ர் வைத்திய‌லிங்க‌ம் வ‌ழ‌ங்கியிருக்கிறார். விழாவில் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜ‌ஹான், அமைச்ச‌ர் க‌ந்த‌சாமி, பாண்டிச்சேரி மேய‌ர் உள்ளிட்ட‌ பிர‌முக‌ர்க‌ள் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்திருக்கிறார்கள். வாழ்க இஸ்லாமிய இசை! ஆமாம், எப்பப்பா எங்க எஸ்.எம்.ஏ. காதர் மாமாவுக்கு கொடுக்கப் போறீங்க? நெல்லையில் எனக்குப் பிடித்த உஸ்மான் வேறு காத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருந்தாலே கஷ்டம்தான்!

TAMIL MUSLIM SONG – NAGORE GUL MOHAMED (Posted by jeckriya / January 23, 2009) :