இன்று நாகூர் கந்தூரி ஆரம்பம். எவ்வளவோ முயன்றும் போக இயலவில்லை. இந்த ஏழை மேல் என்ன கோபம் எஜமானுக்கு என்றுதான் தெரியவில்லை. எனக்குப் பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டைப் பகிர்கிறேன். (பாடியவர் : – மர்ஹூம் ஈ.எம் ஹனீபா). தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் – லத்தீஃப் மாமாவாக – வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.
*
எஜமானின் கந்தூரி தினத்தில் எனக்குப்பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டு – அண்ணன் ஹனீபாவின் குரலில். ‘சலுகை ஏன் காட்டவில்லை, சாஹூல்ஹமீதே நாகூரி’. தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.
‘ஈயம்’ ஹனீபா அண்ணன் பாடிய இந்த பழைய பாடலை தம்பி இஸ்மாயிலின் முகநூலில் கண்டேன். இதை மிஞ்சும் இன்னொரு ஹனீபா (இவரை பித்தளை ஹனீபா என்பார்கள் நாகூர்வாசிகள். இயற்பெயர் : ஹெச்.எம். ஹனீபா) பாடலை – இதுவும் அஜ்மீர் ஹாஜா பற்றியதுதான் – விரைவில் பதிவிடுவேன், தப்லா ரசிகர்களுக்காக. நேற்று இங்கே விமர்சையாக நடந்த வாஞ்சூர் கந்தூரி சமயத்தில் அதை போட்டிருக்கலாம்தான். நானும் அசனாமரைக்காரும் ‘ஜியாரத்’திற்கு போய் ஆளுக்கு ஐம்பது பறாட்டா உருண்டைகளும் இருபது வாடாக்களும் தின்ற மதமதப்பில் மறந்து விட்டது!
இஸ்மாயில் : எனது பாட்டானார் ஜஸ்டிஸ் மு.மு. இஸ்மாயில் அவர்கள் கம்பனை தொடுமுன்னே கன்ஜுல் கராமத்தை தான் தொட்டார்கள், அவர்கள் எஜமானின் முழுமையான ஆற்றலை எழுத்தில் வடிக்க எண்ணினார்கள், போதுமான ரெஃபரன்ஸும் சோர்சும் அவர்களுக்கு யாரும் தர முன்வரவில்லை, கம்பனை தொட எண்ணினார்கள், காலடியில் கொண்டு வந்து கொட்டி விட்டார்கள் அத்தனை சோர்சையும் விபரமானவர்கள்.
மறுமொழி : இன்றைக்கும் அதே நிலை தான் இஸ்மாயில். அவர்கள் அணிந்த பழைய செருப்பு பத்திரமாக அங்கே இருக்கிறது. ஆனால் அவர்கள் எழுதிய நூல்களை காணவில்லை. என்ன கொடுமை இது ? எதை பாதுகாக்க வேண்டும் என அவர்களின் வாரிசுகளுக்கு தெரியாதா ? இதன் மோசமான விளைவு என்ன தெரியுமா ? சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் அன்றைய தஞ்சை மன்னருக்கு எவராலும் நிவர்த்தி செய்ய முடியாத நோயை நாகூரில் அடங்கியிருக்கும் இவர்கள் தான் நிவர்த்தி செய்தார்கள். அன்றைய மன்னருக்கே வைத்தியம் பார்த்தவர்கள். அதனால் தான் இந்த நாகூர் பகுதிகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக வழங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன ? மன்னருக்கே மருத்துவம் பார்த்த ஆற்றல் வாய்ந்த மருத்துவரான அவர்களின் வாரிசுகள் உடல்நிலை சரியில்லை எனில் தஞ்சையில் உள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுக்கிறார்கள். எதை பாதுகாப்பது என்பது தெரியாமல் போனதால் வந்த வினை இது !
இஸ்மாயில் : Wonderful… மிகச் சரியாக அருமையாக சொல்கிறீர்கள்… ஆனால் ஒரே ஒரு வேறுபாடு… அவர்களின் பழைய செருப்பும் கூட பாதுகாக்கப்பட வேண்டியவை தான் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்… அது need to preserve… இது nice to preserve
***
அக்பர் அவையில் பாடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிகின்ற தன்மையுடைய ‘தான்சேன்” என்ற பாடகரை பற்றி படித்திருக்கிறோம் அல்லவா, தான்சேன் அவர்கள் பிறப்பால் இஸ்லாமியர் அல்லர், அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர், அவருடைய ஆன்மிக வழிகாட்டியும் நமது எஜமான் அவர்களுடைய வழிகாட்டியும் ஒருவரே, அவர்களே ஹஜ்ரத் கௌது குவாலியர். (தான்சேன் அவர்களுக்கு பய்ஜு பவ்ரா என்பவருக்கும் நடந்த போட்டிகள் சுவையான வரலாற்று சம்பவங்கள்)
***
நாகூர் நாயகம் குவாலியர் எனும் நகரில் அன்னாருடைய ஆன்மிக குருவான ஹஜ்ரத் கவுஸ் (றஹ்) அவர்களுடன் 10 ஆண்டுகள் மூஸா நபியவர்கள் ஹில்ர் அவர்களிடம் கற்க விரும்பிய கல்வியை கற்று தேர்ந்தார்கள்.
***
எஜமான் அவர்கள் பிறந்த ஆண்டு: ஹிஜ்ரி 910, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1504, நவம்பர் 17) வஃபாத்தான ஆண்டு: ஹிஜ்ரி 978, ஜமாத்துல் ஆஹிர் பிறை 10 (கிபி 1570, நவம்பர் 09) – அதிகாலை சுப்ஹுடைய நேரம் 4:30 மணியளவில் வஃபாத்தானார்கள்.
***
பொதக்குடி அஹ்மது, நாகூர் ஹனீபாவைத் தொடர்ந்து சிங்கை கமால் அளிக்கும் சிறப்பு போனஸ் :