அண்டர்கள் போற்றும் பெருமானடி!

ஹந்திரி ஸ்பெஷல். நாகூர் தர்ஹா முன்னாள் சங்கீத வித்வான் S.M.A. காதர் அவர்கள் பாடியது.
 

 

சாஹூல்ஹமீதே நாகூரி…

இன்று நாகூர் கந்தூரி ஆரம்பம். எவ்வளவோ முயன்றும் போக இயலவில்லை. இந்த ஏழை மேல் என்ன கோபம் எஜமானுக்கு என்றுதான் தெரியவில்லை. எனக்குப் பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டைப் பகிர்கிறேன். (பாடியவர் : – மர்ஹூம் ஈ.எம் ஹனீபா).  தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் – லத்தீஃப் மாமாவாக – வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.
*

*

சலுகை ஏன் காட்டவில்லை?

எஜமானின் கந்தூரி தினத்தில் எனக்குப்பிடித்த புலவர் ஆபிதீன்காக்காவின் பாட்டு – அண்ணன் ஹனீபாவின் குரலில். ‘சலுகை ஏன் காட்டவில்லை, சாஹூல்ஹமீதே நாகூரி’. தமிழ் முஸ்லீம்களுக்கு என் சின்னமாமா நிஜாம் (‘கடை‘ குறுநாவலில் வருபவர்) ரிகார்டிங் செய்து கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. அனுப்பிவைத்த அசனாமரைக்காயருக்கு நன்றி.

Download

‘நாகூருக்கு வாருங்கள், நாதாவைக் கேளுங்கள்..’ – H. M. ஹனீபாவின் அழைப்பு

இன்றைய கந்தூரி ஸ்பெஷலாக குசும்பன் குஞ்ஞப்துல்லாவின் ‘உலக முடிவு’ என்ற மலையாளைச் சிறுகதையை பதிவிடலாம் என்று நினைத்தேன்.  தட்டச்சு செய்ய நேரமில்லை,  ஷார்ஜா அவுலியாவும் உதவவில்லை. எனவே மர்ஹூம் ஹெச்.எம். ஹனீபா பாடிய பாடலுக்கான சுட்டியைத் தருகிறேன். கூகுள் ப்ளஸ்-ல் ஷேர் செய்திருந்தார்  நண்பர் அசனா மரைக்காயர்.  ஃபோட்டோஷாப்பில் நான் உருவேற்றிய இமேஜை க்ளிக் செய்து கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்

dargah_oilred1

 Photo courtesy : Abul Kassim

« Older entries