‘தீண்டாய் மெய் தீண்டாய்’

புதுவருட வாழ்த்துகள்! 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில்,  ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.

குறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்! நன்றி.

*

Bonus : ‘Devaanganagal’ by Thushar

தெய்வங்களில் நீ அழகு கதிர்வேலனே!

தலைப்பிற்காக என்னைத் தள்ளிவைத்து விடாதீர்கள் 😉  ‘தெய்வமய்யா இந்த தெய்வநாயகம்‘ என்று சொன்னதற்கே , ‘ஷிர்க்’ என்று சீறியவர்கள் நீங்கள். ஆமா, ‘தெய்வ’நாயகத்தை எப்படிங்க சொல்வது, ஷிர்க்நாயகம் என்றா? எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று இது. முன்பு பதிவு செய்ததை யூடியூபில் போடனும் என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். இயலவில்லை. இன்று ‘sarath music’ என்று கூகுளில் அடித்தபோது நல்வாய்ப்பாக வந்து விழுந்ததைப் பதிகிறேன் . சென்றவருடமே சில நண்பர்கள் இதைப் பதிந்துவிட்டாலும் என் பக்கத்திலும் இருக்கவேண்டும் என்பதற்காக மீண்டும் இங்கே. செங்கதிரின் ஒளி அழகு , செந்தமிழின் சொல் அழகு , தெய்வங்களில் நீ அழகு ,கதிர்வேலனே! நாதங்களில் ஓம் அழகு , மாதங்களில் தை அழகு , கூர்மையிலும் வேல் அழகு, சிவமைந்தனே!

என்ன மணி சார், இப்போது திருப்தியா? ‘சரவணப் பொய்கையில் நீராடி’ஐ கேட்பதுபோலவே இதையும் மொபைலில் கேட்பேன் -தினமும். இசைக்கு முன் மதமாவது மண்ணாங்கட்டியாவது! இப்போதைய விருப்பம் , ஆசியாநெட்டின் ‘ஐடியா ஸ்டார் சிங்கர்’ அல்ல; கைரளியின் ‘கந்தர்வ சங்கீதம்’தான். ப்ளஸ் 1 படிக்கிற ஒரு பொடியன் , சோனுநிகாமின் ‘ஸூனா ஸூனா‘வை ரகளை செய்தான் போன வாரம். 99 மார்க்!

திருவனந்தபுரம் , கொச்சின் ஏர்போர்ட்டில் இறங்கினால் மலையாளிகளை ‘மைக்’ஓடுதான் பார்க்க முடியும் போலிருக்கிறது!

முக்கிய குறிப்பு : பதிவிட்ட மறு நிமிடமே அந்த யூடியூப் அழிக்கப்பட்டு விட்டது! (என்னே தெய்வத்தின் கருணை!). எனவே என்னிடமுள்ள சிறிய 3Gp கோப்பை MediaFire-ல் ஏற்றியிருக்கிறேன்.  இந்தச் சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து மொபைலில் கேளுங்கள். நன்றி.

*

பிற்சேர்க்கை  : தெய்வத்தின் கருணையே கருணை! வேறொரு சுட்டி மூலம் காணொளி கிடைத்தது . கண்டு மகிழ்வீராக!